TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 19
TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 19 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19 ஜனவரி 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
இந்தியா
5 நிகழ்சிகளை இந்தியா நடத்த பிரிக்ஸ் அமைப்பு ஒப்புதல்
- 17 ஜனவரி 2022 அன்று பிரிக்ஸ் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு (STI) வழிகாட்டுதல் குழுவின் 15 வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன்படி 2022 இல் ஐந்து நிகழ்வுகளை இந்தியா நடத்தும் // INDIA WILL HOST FIVE EVENTS IN 2022 AS DECIDED IN THE 15TH MEETING OF THE BRICS SCIENCE TECHNOLOGY INNOVATION (STI) STEERING COMMITTEE ON 17 JANUARY
- இந்த சந்திப்பின் போது, இந்தியா ஜனவரி 2022 முதல் சீனாவிடம் தலைவர் பதவியை ஒப்படைத்தது.
தமிழகம்
இந்தியாவில் முதலீடுகளுக்கான சிறந்த மாநிலம் – தமிழகம்
- தமிழக அரசின் அறிக்கையின் படி, இந்தியாவில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 1,43,902 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- நாட்டிலே 2-வது இடத்தில் குஜராத் மாநிலமும், தெலுங்கானா மாநிலம் 3-வது இடத்திலும் உள்ளன.
உலகம்
புர்ஜ் கலிஃபாவை விட பெரிய சிறுகோள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது பறந்தது
- புர்ஜ் கலீஃபாவை விட பெரிய சிறுகோள் ஒன்று ஜன.18’22 அன்று பூமியை பாதுகாப்பாக கடந்து சென்றது.
- சிறுகோள் (7482) 1994 பிசி 1 என அறியப்படும், விண்வெளிப் பாறை 1.05 கிமீ குறுக்கே அளவிடப்படுகிறது // KNOWN AS ASTEROID (7482) 1994 PC1, THE SPACE ROCK MEASURES 05 KM ACROSS
- இது சுமார் 76,192 கிமீ வேகத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது பறந்தது.
முதன் முதல்
இன்ஃபினிட்டி பாலத்தை முதல் முறையாக போக்குவரத்துக்காக திறந்த துபாய்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள ஐகானிக் ‘இன்ஃபினிட்டி பிரிட்ஜ்’ 2022 ஜனவரி 16 அன்று முதல் முறையாக போக்குவரத்துக்கு முறையாகத் திறக்கப்பட்டது. இதன் வடிவமைப்பு முடிவிலிக்கான (∞) கணித அடையாளத்தை ஒத்திருக்கிறது // DUBAI OPENS ITS INFINITY BRIDGE FOR TRAFFIC FOR THE FIRST TIME
முதல் இந்தியா-மத்திய ஆசிய உச்சி மாநாடு
- பிரதமர் மோடி முதல் இந்தியா-மத்திய ஆசிய உச்சி மாநாட்டை ஜனவரி 27, 2022 அன்று மெய்நிகர் வடிவில் துவக்கி வைக்க உள்ளார் // PRIME MINISTER MODI TO HOST FIRST INDIA-CENTRAL ASIA SUMMIT
- கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துக் கொள்ள உள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம்
வெட்டல் கடலில் ஒரு மாபெரும் பனி மீன் இனப்பெருக்க காலனி கண்டுபிடிப்பு
- அண்டார்டிகாவின் தெற்கு வெட்டல் கடலில் ஜோனாஸ் ஐஸ்ஃபிஷ் (Neopagetopsis ionah) எனப்படும் ஒரு மீன் இனத்தின் பரந்த இனப்பெருக்க காலனி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது // A VAST BREEDING COLONY OF A FISH SPECIES CALLED JONAH’S ICEFISH (NEOPAGETOPSIS IONAH) HAS BEEN DISCOVERED IN THE SOUTHERN WEDDELL SEA, ANTARCTICA.
- ஜோனாவின் ஐஸ்ஃபிஷ் என்பது சன்னிச்தைடே (முதலை ஐஸ்ஃபிஷ்கள்) குடும்பத்தில் உள்ள நோட்டோதெனியாய்டு மீன் இனமாகும்.
செபியின் “சார்தி” மொபைல் செயலி
- இந்திய பங்குச்சந்தை அமைப்பான “செபி” முதலீட்டாளர்களின் கல்விக்காக “சார்தி” என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது // SEBI LAUNCHES ‘SAA ₹THI’ MOBILE APP FOR INVESTOR EDUCATION
- பத்திரச் சந்தையின் அடிப்படைக் கருத்துக்கள், KYC செயல்முறை, வர்த்தகம் மற்றும் தீர்வு, பரஸ்பர நிதிகள், சமீபத்திய சந்தை மேம்பாடுகள் போன்ற விவரங்களை அறிய இது பயன்படும்.
புத்தகம்
சுபாஷ் சந்திரபோஸின் புதிய வாழ்க்கை வரலாறு புத்தகம்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய புதிய புத்தகம், “BOSE: THE UNTOLD STORY OF AN INCONVENIENT NATIONALIST” என்ற பெயரில் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட ஊள்ளது
- இப்புத்தகத்தை “நேதாஜி மிஷன்” அமைப்பின் நிறுவனரான சந்திரச்சூர் கோஸ் எழுதியுள்ளார்
விருது
பைசர் மருந்து நிறுவன அதிபருக்கு 10 லட்சம் டாலர் மதிப்பிலான ஜெனிசிஸ் விருது
- 1 மில்லியன் டாலர் (10 லட்சம் டாலர்) மதிப்பிலான ஜெனிசிஸ் விருது, பிரபல மருந்து நிறுவனமான பைசர் நிறுவனத்தின் தலைவரான Albert Bourla அவர்களுக்கு வழங்கப்பட்டது // PFIZER CHIEF ALBERT BOURLA WINS $1 MILLION GENESIS PRIZE
- கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது
- 2021 ஆம் ஆண்டில் இவ்விருதை பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பெற்றார்.
ஐபிஎஸ்ஐ கண்டுபிடிப்பு விருது
- Axis Bank & CRMNEXT சொல்யூஷன் “சிறந்த CRM (வாடிக்கையாளர் உறவு மேலாண்மை) சிஸ்டம் அமலாக்கத்திற்காக” IBS இன்டலிஜென்ஸ் (IBSi) குளோபல் ஃபின்டெக் கண்டுபிடிப்பு விருதுகள் 2021 ஐ வென்றது // AXIS BANK & CRMNEXT WON IBSI INNOVATION AWARDS 2021
2021 ஆம் ஆண்டிற்கான சைபர் க்ரைம் புலனாய்வு விருது
- 2021 ஆம் ஆண்டிற்கான சைபர் க்ரைம் புலனாய்வு விருது, திருப்பதி காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
- திருப்பதி சைபர் க்ரைம் எஸ்.ஐ. சுப்பிரமணியம் தேசிய அளவில் சிறந்த சைபர் க்ரைம் துப்பரிவாளராகவும், தேசிய அளவில் சிறந்த வழிகாட்டியாக திருப்தி எஸ்.பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்கள்
தேசிய பேரிடர் மீட்புப் படை துவக்க தினம்
- தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF – NATIONAL DISASTER RESPONSE FORCE) துவக்கத் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 19 அன்று கொண்டாடப்படுகிறது // NATIONAL DISASTER RESPONSE FORCE RAISING DAY: 19 JANUARY
- NDRF 2006 இல் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த, பல திறன் கொண்ட, மனிதாபிமானப் படையாகும்
நியமனம்
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் புதிய தலைவராக ராபர்ட்டா மெட்சோலா நியமனம்
- ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் மூன்றாவது பெண்மணியாக மால்டாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட்டா மெட்சோலா தெரிவு செய்யப்பட்டுள்ளார் // MALTESE LAWMAKER ROBERTA METSOLA HAS BEEN CHOSEN AS ONLY THE THIRD WOMAN TO HEAD THE EUROPEAN PARLIAMENT.
- மிக இளவயதில் இப்பதவியை ஏற்கும் நபர் இவராவார்
- TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 18
- TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 17
- TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 16
- TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 15
- TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 14
- TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 13
- TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 12
- TNPSC CURRENT AFFAIRS 2022 JANUARY 11