TNPSC Current Affairs in Tamil April 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil April 2017

 இந்தியா

• மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மானவர்வர்களிடம் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் தியாகங்களை எடுத்தும் கூறும் விதத்தில், “வீரர்களுக்காக மாணவர்கள்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்

• 2017 தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு
o ஒட்டுமொத்த அளவில்
இந்திய அறிவியல் கழகம், பெங்களுரு
இந்திய தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ்
இந்திய தொழில்நுட்ப கழகம், பம்பாய்
o பொறியியல்துறை
இந்திய தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ்
இந்திய தொழில்நுட்ப கழகம், பம்பாய்
இந்திய தொழில்நுட்ப கழகம், கரக்பூர்
o மேலாண்மை
இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத்
இந்திய மேலாண்மை கழகம், பெங்களுரு
இந்திய மேலாண்மை கழகம், கொல்கத்தா
o பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கழகம், பெங்களுரு
புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
வாரணாசி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
o கல்லூரி
டெல்லி மிராண்டா கல்லூரி
சென்னை லயோலா கல்லூரி
டெல்லி ஸ்ரீராம் வணிகக் கல்லூரி

• 2௦17-ம் ஆண்டிற்கான “இந்தியத் தொடர்பு” தேசிய கருத்தரங்கம் புது தில்லியில் நடைபெற்றது

• தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2 வது பிரிவு மின் உற்பத்தி தொடங்கியது (1000 மெகாவாட்).

• 3 வது சர்வதேச மாநாடு மற்றும் எஃகு தொழில்துறை கண்காட்சி ‘இந்தியா ஸ்டீல் 2017‘ மும்பையில் நடைபெற்றது

“காரிப் பிரச்சாரத்திற்கான”, வேளாண்மை தேசிய கருத்தரங்கம் புது தில்லியில் நடைபெற்றது

• 2016 – 17 க்கான எஃகுத் துறையின் கூட்டு ஆலைகள் குழுவின் வருடாந்தர அறிக்கையின் படி, இந்தியாவில் எக்கு இறக்குமதி 36% குறைந்துள்ளதாகவும், ஏற்றுமதி 1௦2% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

• அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) புது டெல்லி, கண் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இந்தியாவின் முதல் பொது மருத்துவமனையாக மாறியுள்ளது

• ஆந்திர அரசு, “அம்மாக்கு வந்தனம்”, என்ற திட்டத்தை பள்ளிகளில் அறிமுகம் செய்துள்ளது. தாய்களுக்கான மகத்துவத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

• ஆந்திர அரசு, அம்மாநில மிளகாய் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது

• “வி.ஐ.பி” கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கை அகற்ற அரசு முடிவு செய்துள்ளது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

• 2௦15 – 16ம் ஆண்டு வரை, இந்திய காப்புரிமை அலுவலகத்தில், காப்புரிமை வேண்டி அதிக அளவில் விண்ணப்பித்தவர்கள் என்ற முறையில் சாம்சங் நிறுவனம் முதல் இடத்தில உள்ளது. இரண்டாவது இடத்தில டி.சி.எஸ் நிறுவனம் உள்ளது

• பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் வீட்டு சமையல் சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ளனர்

• அஸ்ஸாம் மாநில அரசு, அம்மாநிலத்தின் பள்ளிகளில் தரத்தை அதிகரிக்க, “உணத்சொவ் திட்டத்தை” அர்மிமுகம் செய்துள்ளது

• கேரளா மாவட்டத்தில் அய்யனமர் வார்டு இந்தியாவின் முதல் டிஜிட்டல் பஞ்சாயத்து வார்டு ஆனது.

• தெற்கு ஒடிசாவில் பெர்ஹாம்பூர் தாகுராணி யாத்ரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

• மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் பிலர் கிராமம், இந்தியாவின் முதல் ‘புத்தக கிராமம்” என்ற சிறப்பை பெற்றுள்ளது

• தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு, தமிழகத்திற்கு 1712 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது

• பசு கடத்தல் மற்றும் பாதுகாத்தலுக்காக, பசுக்களுக்கு என்று தனி அடையாள எண் வழங்க அரசு அமைத்த ஒரு நபர் குழு வழங்கிய பரிந்துரையை, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது.

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

Leave a Comment

Your email address will not be published.