TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017

 • மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம், “தரங் சஞ்சார்” என்ற புதிய இணையதள சேவையை அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட செல்போன் தவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளை அளந்து அதன் விவரங்களை கண்காணித்து விவரங்களை அளிக்கும்.
 • பிரபல நோக்கியா நிறுவனம், ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து, 5ஜி சேவை வழங்கும் சாதனங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது
 • பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்ச் நாட்டு குடியுரிமை உள்ள மக்கள், பிரெஞ்ச் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வாக்களித்தனர்.
 • கூகுல் நிறுவனம் புதிய உணவு விநியோகம் மற்றும் வீட்டு சேவைகள் வழங்கும் சேவையை “ஏரியோ” என்ற பெயரில் துவக்கி உள்ளது. இது ஏற்காணவே மும்பை மற்றும் பெங்களூருவில் செயல்படுத்தப்பட்டுள்ளது
 • 2019 பொதுத் தேர்தல்களில் பயன்படுத்த ஏதுவாக 16.15 இலட்சம் வாக்காளர் சரிபார்ப்பு காகித வாக்குபதிவு இயந்திரங்களை (வி.வி.பி.ஏ.டி) வாங்குவதற்கு தேர்தல் ஆணையம் கோரிய ஒப்புதலை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான கொள்முதல் மதிப்பீட்டுத் தொகை 3,173 கோடி ரூபாய்
 • 98 கோடி ரூபாய்க்கு தேவாபூர், மாஜூலி மற்றும் சிவாசாகர் சுற்றுப்பாதையை மேம்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது
 • 2012 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட மகாத்மா காந்தி பிரவசி சரக்ஷா யோஜனா (எம்.ஜி.பி.பி.எஸ்.ஐ) ஐ அரசு நிறுத்த முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு ஏற்படும் இடப்பெயர்வு பிரச்சனைகளை தீர்க்க இத்திட்டம் துவங்கப்பட்டது
 • ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி (IIPE) கல்வி கழகத்தை துவக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
 • மத்திய அரசு பாரத் நிலை – நான்கு ரக எரிப்பொருளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் சமிபத்தில் பாரத் நிலை – 3 ரக வாகனங்களுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. வரும் 2௦2௦-ம் ஆண்டுக்குள் பாரத் நிலை – 6 ரக எரிபொருள் மற்றும் வாகனங்களை இந்தியாவில் கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
 • தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் போன்றோருக்கு வழங்கபடும் கல்வி ஊக்கத்தொகையை, இனி டிஜிட்டல் அவர்களின் முறையில் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த அரசு முடிவு செய்துள்ளது
 • மத்திய அரசு “கிராமீன் வித்யுத்கரன்” என்ற மொபைல் அப்ளிக்கேஷன் பயன்பாட்டை மேம்படுத்தி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கிராமங்கள், வீடுகளில் மின்சார பயன்பாட்டை கண்காணிக்க இயலும்
 • உத்திரப்பிரதேச மாநில போபால் நகரில் உள்ள ஹபிப்கஞ் ரயில் நிலையம், நாட்டிலேயே முதன் முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டு மேம்படுத்தப்பட உள்ளது
 • இந்திர தூய்மை கவுன்சிலின் அறிக்கையின் படி, நாட்டிலேயே தூய்மையை பராமரிக்கும் சிறந்த துறைமுகம் என்ற சிறப்பை ஹால்தியா துறைமுகம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில விசாகப்பட்டினம் துறைமுகம் பெற்றுள்ளது
 • ஹரியானா மாநில அரசு, கருவுறும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “கிலிகரி” என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தின் பாரிதாபாத் நகரை “பால்ராம்கர்” என்று பெயர் மாற்றம் செய்துள்ளது
 • மத்திய உள்துறை அமைச்சர், “பாரத் கீ வீர்” என்ற புதிய இணையதள சேவையை துவக்கி வைத்தார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்கு மக்கள் தங்களால் ஆனா பண உதவியை இதன் மூலம் வழங்கலாம்
 • ஆகஸ்ட் 2017 முதல் ஐ.ஐ.டி கரக்பூர் பல்கலைக்கழகம் கட்டிடக்கலை மாணவர்களுக்கு வாஸ்து சாஸ்தாவை பாடமாக அறிமுகம் செய்கிறது
 • இந்திய அஞ்சல் துறை, காப்பியின் நறுமணத்தை குறிக்கும் வகையில் புதிய அஞ்சல் தலையை பெங்களூருவில் அறிமுகம் செய்துள்ளது
 • “முக்திஜோதா ஊக்கத்தொகை” திட்டத்தின் கீழ், இந்திய அரசு வங்கதேச நாட்டை சேர்ந்த சுத்திர போராட்ட வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவிற்காக ஆண்டிற்கு 35 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது
 • இந்தியாவின் முதல் சர்வதேச “கோமாரி நோய்” ஆராய்ச்சி மையம் ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் உள்ள அர்குல் பகுதியில் அமைய உள்ளது. கோமாரி நோய் என்பது கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் பகுதிகளில் ஏற்படும் நோய் தாக்குதலாகும்
 • இந்தியாவின் முதல் மைக்ரோ நாடக திருவிழா புது டெல்லியில், “தீபஸ்” என்ற பெயரில் நடைபெற்றது
 • இந்தியாவில் முதல் மின்சார டாக்சி சேவை, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அடுத்த மே மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது
 • அரேபிய கடலில் புகழ்பெற்ற எலிஃபண்டா தீவுடன் மும்பையை இணைக்க மும்பை போர்ட் டிரஸ்ட், இந்தியாவின் முதல் கடற்பகுதி ரோப்வேயை கட்டவுள்ளது. இந்த எலிபெண்டா குகை, யுனஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

Leave a Comment

Your email address will not be published.