TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017

 • இந்தியாவில் கலாசார உறவுகளை சீரமைபபதரகாக, “தாரா சிக்கோ” இந்தியாவின் ஆன்மீக மரபுரிமையை மீட்டல்” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
 • ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அம் மாநிலத்தில் 50 மைக்ரான் அளவுக்கு அதிகமான பாலிதீன் பைகள் பயன்பாடு மற்றும் உற்பத்தி தடை விதித்துள்ளது.
 • ஜார்கண்ட் மாநில போலீசார், அம்மாநிலத்தின் நக்சல் பாதித்த பகுதிகளில், “தாரே ஜமீன் பர்” என்ற திட்டத்தின் மூலம், குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
 • முன்னாள் சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க கேரள மாநில அரசு முடிவு செய்தது.
 • 123-வது சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. பிற்படுத்தப் பட்டோருக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து வழங்க இது வழிவகுக்கும். இதன் மூலம் 338B, 342A என்ற இரு புதிய விதிகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் புதிதாக இடம் பெற உள்ளது.
 • மத்தியப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில் “தீனதயாள் அந்தோதயா ரசோய் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மானிய விலையில் (ரூ. 5) உணவுகளை வழங்குவது இதன் சிறப்பாகும். இந்தியாவில் தமிழகம், ராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்களுக்கு பிறகு இவ்வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மூன்றாவது மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்.
 • மத்தியப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில் வரும் மே மாதம் முதல் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது
 • மகாராஷ்டிரா மாநில அரசு, அம்மாநிலத்தில் ஏப்ரல் 15-ம் தேதியை, “மூன்றாம் பாலினத்தவர் நாளாக” கொண்டாட முடிவு செய்துள்ளது
 • மத்திய அரசு, “ராஸ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா” திட்டத்தை ஆந்திர மாநிலந்தின் நெல்லூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் நோக்கம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முதியவர்களுக்கு அவர்களின் பயன்பாட்டிற்கு தேவையான உபகரணங்களை வழங்குதல் ஆகும்.
 • தேசிய குழந்தைகள் திரைப்படத் திருவிழா, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்றது
 • கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள பெள்ளன்தூர் ஏரிக்கு அருகே உள்ள அணைத்து தொழிற்சாலைகளையும் மூட தேசிய பசுமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
 • பள்ளிக் கல்விக்கான “தேசிய புதுமைக் கருத்தரங்கம்” (நவோன்மேஸ்) புது தில்லியில் நடைபெற்றது.
 • இந்தியாவின் முதல் உயிரி-வாயு மூலம் இயக்கப்படும் பேருந்து, கொல்கத்தா நகரில் துவக்கப்பட்டுள்ளது. இப்பேருந்தில் பயணச் சீட்டு தொகை ரூ. 1 மட்டுமே.
 • குடியரசுத் தலைவர், புது தில்லியில் “கெம்பேகவுடா” திருவிழாவை துவக்கி வைத்தார். கெம்பேகவுடா புகழ்பெற்ற விஜயநகர அரசராவார். பெங்களூரு நகரை நிர்மானித்தவர் இவராவார்
 • ரயில்வே அமைச்சகம், “ஹிந்த்ரயில்” என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. ரயில்வே துறை சார்ந்த அனைத்து சேவைகளும் இதில் பெறமுடியும்
 • ஹரியானா மாநிலத்தில் முதன் முறையாக ஆண்- பெண் விகிதம் 95௦ ஐ தொட்டுள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அங்கு பெண்களின் விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது
 • மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏதுவாக, அரியானா மாநில அரசு, “ஆப்பெரேசன் துர்கா” என்ற நடவடிக்கையை எடுத்துள்ளது
 • கணவனை பிரிந்து வாழும் மனைவிகளுக்கு, கணவன்கள் தங்களின் மொத்த ஊதியத்தில் 25% மனைவியின் மாத பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என உச்ச நீத்மன்றம் உத்தரவிட்டுள்ளது
 • வடகிழக்கு மாநிலங்களில் அதிவேக எக்ஸ்பிரஸ் சாலையை அமைக்க மத்திய அரசு 40000 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இச்சாலைகள் அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா நதி கடந்து செல்லும் விதத்தில் அமைக்கப்படவுள்ளது
 • உத்திரப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில் முக்கிய தலைவர்கள் பிறந்த /இறந்த நாட்களுக்காக விடப்படும் விடுமுறையில் 15 முக்கிய தினங்களை ரத்து செய்துள்ளது
 • உத்திரப்பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தின் கோரக்பூர் விமான நிலையத்தை, “மகாயோகி கோரக்நாத் விமான நிலையம்” என்றும், ஆக்ரா விமான நிலையத்தை “பண்டிட் தீனதயாள் விமான நிலையம்” என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது
 • ஏப்ரல் 1௦ = தேசிய கணக்கெடுப்பு தினத்தை, முன்னிட்டு மத்திய அமைச்சகம், “நக்சே” என்ற புதிய இணையதள சேவை வசதியை அறிமுகம் செய்தது
 • உலகின் மூன்றாவது பெரிய ஆற்றல் நுகர்வோர் நாடான இந்தியா,, சர்வதேச எரிசக்தி சங்கம் (IAE) இணை உறுப்பினராக இணைந்துள்ளது
 • “உதய்” திட்டத்தில் 27-வது மாநிலமாக மிசோராம் இணைந்துள்ளது
 • பாரதிய மகிலா வங்கியும், பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளும், பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

 

Leave a Comment

Your email address will not be published.