TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017

 • மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், “பவர்டெக்ஸ் இந்தியா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
 • தெற்கு ஆசிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு எனப்படும் “சசக்” அமைப்பில் 7-வது நாடாக மியான்மர் இணைந்துள்ளது
 • இந்தியாவின் மிக நீளமான சுரங்கச்சாலை, ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. செனானி – நஸ்ரி ஆகிய இரு இடங்களை இணைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டது. இச்சாலை 9 கிலோமீட்டர் நீளம் உடையது
 • தமிழகத்தை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான பிரித்திகா யாசினி, இந்தியாவின் முதல் மொன்றாம் பாலினத்தவ காவல் அதிகாரி என்ற சிறப்பை பெற்றுள்ளார். இவர் தருமபுரி மாவட்டத்தில் பணியை ஏற்றார்
 • கேரள பலகலைக்கலகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீண்ட கால்களை கொண்ட புதிய வகை மரப்தவளைகளை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு Kani maranjandu எனப் பெயரிடப்பட்டுள்ளது
 • புது தில்லியை தலைமை இடமாக கொண்டு புதிய, “ரயில் மேம்பாட்டு ஆணையம்” அமைக்க மத்திய அரசு புதல் அளித்துள்ளது
 • வடஇந்தியாவின் விலங்குகளுக்கான முதல் “டி.என்.ஏ வங்கி” விரைவில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி நகரில் அமைய உள்ளது.
 • சம்பரான் சத்தியாக்கிரகத்தின் 1௦௦ ஆண்டு நினைவை ஒட்டி பிரதமர் புது தில்லியில், “ஸ்வச்க்ரஹா” என்ற கண்காட்சியை துவக்கி வைத்தார்
 • மத்திய அரசு, “உர்ஜா மித்ரா” என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்தது. இதன் மூலம், மின்சார விநியோகம் குறித்த உடனடி தகவலை எளிதாக பெறலாம்.
 • உணவு பாதுகாத்தலுக்காக, மத்திய அரசு “சம்படா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. Scheme for Agro-Marine Produce Processing and Development of Agro-Processing Clusters (SAMPADA) இதன் மூலம் உணவு வீணாவதை தடுப்பதுடன், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த முடியும் எனவும் அரசு தெரிவித்துள்ளது
 • மே 1 ம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது
 • பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் இலக்கான 1.8 லட்சம் கோடி கடன் வழங்குதல், இலக்கை தாண்டி கடன் வழங்கப்பட்டுள்ளது
 • சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு ௦.1% வட்டியை குறைத்துள்ளது அரசு.
 • மத்தியப் பிரதேச மாநில அரசு, “மகரிஷி பதஞ்சலி சமஸ்கிருத சன்ஸ்தான்” திட்டம் மூலம், “புரோஹிதம்” கற்பதற்கான ஓர் ஆண்டு டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது
 • தமிழகம், கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை வறட்சி பாதித்த மாநிலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 • கேரள மாநில அரசு, அம்மாநிலத்தின் அணைத்து வகை பள்ளிகளிலும் மலையாள மொழி கற்பதை கட்டாயமாக்கி உள்ளது
 • சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், அம்மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல் செய்துள்ளார். இதன் மூலம் பூரண மதுவிலக்கை அமுல் செய்துள்ள இந்தியாவின் 2-வது மாநிலம் என்ற சிறப்பை சத்தீஸ்கர் பெற்றுள்ளது. முதன் முதலில் பூரண மதுவிலக்கை அமுல் செய்த மாநிலம் பீகார்.
 • 2018 – 2019ம் ஆண்டு அகில இந்திய நீட் தேர்விற்கு “உருது” மொழியிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 • சத்தீஸ்கர் மாநிலம், அம்மாநிலத்தின் ஜி.எஸ்.டி மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. இதன் மூலம் ஜி,எஸ்,டி மசோதாவை ஏற்றுக்கொண்ட 5-வது மாநிலமாக சட்டிஸ்கர் திகழ்கிறது. முதன் முதலில் ஜி.எஸ்.டியை ஏற்றுக் கொண்ட மாநிலம் பீகார் ஆகும்
 • “சி.எம்.எஸ் இந்திய லஞ்சக் குறியீட்டின்” படி இந்தியாவில் மிக அதிக அளவில் இலஞ்சக் புழங்கும் இடமாக “கர்நாடகா” அறிவிக்கப்பட்டுள்ளது
 • இந்தியாவில் முதன் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான “தடகள போட்டிகள்” கேரள அரசின் சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
 • நாட்டிலேயே முதன் முறையாக ட்விட்டர் மற்றும் முகநூல் (பேஸ்புக்) பயன்படுத்துவோர் ஹரியானா மாநில முதல்வருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 • தெற்கு ஓடிசாவில், புகழ்பெற்ற, “பெர்காம்பூர் தாகுராணி யாத்திரை” விழா நடைபெற்றது
 • உத்திரப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில், “பிஸ்மில்லா கான் சங்கீத கிராமம்” என்ற பெயரில் புதிய கிராமத்தை வாரணாசியில் துவக்க உள்ளது. மறைந்த ஷேநாணி இசையமைப்பாளர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவாக இது துவக்கப் படவுள்ளது.
 • ஆந்திர மாநில அரசு, 1௦௦ கோடி ரூபாய் மதிப்பில், “டாக்டர் அப்கேதர் ஸ்மிரிதி வனம்” என்ற பெயரில் நினைவுப் பூங்கா அமைக்க உள்ளது
 • புகைப்பட பரிமாற்ற சமூக வலைத்தளமான, “இன்ஸ்டாகிராமில்”, உலக அளவில் அதிகம் பின்தொடர்போர் எண்ணிக்கையில், இந்தியப் பிரதமர் மோடி அவர்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்
 • ஹிமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் 2 நாள் “தேசிய காசநோய் மாநாடு” நடைபெற்றது. காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பாக நடைபெற்ற இம்மாநாட்டில் 2௦25ம் ஆண்டுக்குள் காசநோயை இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
 • “உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில்”, இந்தியா உலக அளவில் 136-வது இடத்தை பிடித்துள்ளது. சென்ற ஆண்டு 133 இடத்தில இருந்த இந்தியா, இந்த ஆண்டு 3 இடங்கள் பின்தங்கியது. முதல் இடத்தில பின்லாந்து உள்ளது.
 • இந்திய மைய வங்கி எனப்படும், இந்திய ரிசர்வ் வங்கியில் 82ம் ஆண்டு துவக்க (ஏப்ரல் 1, 1935) விழாவை முன்னிட்டு, புது தில்லியில் நிகழ்சிகள் நடத்தப்பட்டது.

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

Leave a Comment

Your email address will not be published.