TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

சர்வதேசம்

 • ஜகார்த்தா (இந்தோனேசியா) இல் முதலாவது இந்தியா இந்தோனேசியா எரிசக்தி கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கலந்து கொண்டார்
 • 2017 ஏ.டி. கியர்னி வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) நம்பிக்கைக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் – அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா சென்ற ஆண்டை காட்டிலும் ஒரு இடத்தை முன்னேறி 8 வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது.
 • 2017 ஆம் ஆண்டு பிரிக்ஸ் திரைப்பட விழா சீனாவின் செங்க்டில் நகரில் நடைபெற்றது.2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பிரிக்ஸ் திரைப்பட விழா டெல்லியில் நடைபெற்றது.
 • உலக பொருளாதார மன்றம் (WEF) 2017ம் ஆண்டின் பயணம் மற்றும் சுற்றுலா போட்டித்தன்மை குறியீடு (TTCI) வெளியிட்டுள்ளது
  • 136 நாடுகளில் இந்தியா 40 வது இடத்தில் உள்ளது
  • முதல் 5 இடங்களில் = ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ளன
 • ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பிராந்தியத்தின் போலார் நிலப்பரப்புகளின் அழகை காட்ட பிரான்சில் ஒரு புதிய , அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இது ஜீன் கிறிஸ்டோபர் விக்டர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
 • மகாத்மா காந்தியைக் உருவம் கொண்ட நான்கு அரிய ஸ்டாம்புகள் (அஞ்சல் வில்லை) இங்கிலாந்தில் ஏலத்தில் 5 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்திய தபால் தலைகளுக்கு ஏலத்தில் கிடைக்கப்பெற்ற மிக அதிக விலை இதுவாகும்.
 • ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம் (சிப்ரி) படி,
  • இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது மிகப்பெரிய இராணுவ செலவின நாடாக உள்ளது
  • முதல் 5 இடங்கள் = அமேரிக்கா, சீனா, ரசியா, சவூதி அரேபியா மற்றும் இந்தியா
 • அரசாங்கத்தின் படி, மத்திய நிதியுதவி திட்டங்கள் (CSS) எண்ணிக்கை 2016 – 17ம் ஆண்டு முதல் 66ல் இருந்து 28 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 • காந்திநகர் (குஜராத்) குஜராத் சர்வதேச நிதித் தேசியம் (GIFT City) இல் கௌரவ துணை தூதரக அலுவலகத்தை துவக்கியுள்ள முதல் நாடு பெல்ஜியம் ஆகும்
 • ஈரானின் அராக் அணுசக்தி மறுசீரமைப்பதில் சீனாவும் ஈரானும் முதல் முதலாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
 • இஸ்லாமிய, மதீனா, ஜிகாத் மற்றும் குர்ஆன் போன்ற பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பதற்கு சீன அரசு பெற்றோர்களுக்கு தடை செய்ததுவிதித்துள்ளது. இது மேற்கு சீனாவில் வாழும் முஸ்லிம்களின் மீது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
 • 37 வருட காலத்திற்கு பின்னர் இராஜதந்திர உறவுகளை கியூபாவும், மொராக்கோவும் புதுப்பித்துள்ளன
 • 2௦15 ஊக்க மருந்து சோதனை அறிக்கையில் உலக அளவில் ஊக்க மருந்து சோதனையில் அதிகமாக சிக்கிய வீரர்களில் ரசியா முதல் இடத்தில உள்ளது. இந்தியா 3-வது இடத்தில உள்ளது
 • மைக்ரோசாப்ட் நிறுவன எழுத்து மென்பொருளை தனக்கேற்றவாறு உருவாக்கியுள்ள உலகின் முதல் நகரம் என்ற சிறப்பை துபாய் பெற்றுள்ளது.
 • தொழில்களில் மோசடி நடத்தலை சுட்டிக்காட்டும் எம்.ஏய்.ஏ மோசடி அறிக்கை 2௦17 படி, உலகில் அதிக மோசடி நடக்கும் 3 நாடுகள்= உக்ரைன், சைப்ரஸ், கிரேக்கம். இப்பட்டியலில் இந்தியா 9-வது இடத்தை பிடித்துள்ளது
 • உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் ஆளை மொராக்கோ மன்னரால் துவக்கி வைக்கப்பட்டது. 137 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய ஆற்றல் ஆலை 2018ம் ஆண்டு இறுதியில் செயல்பட துவங்கும்
 • இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு முதல் சரக்கு ரயில் சேவை எசெக்ஸி நகரில் இருந்து புறப்பட்டது. இது சீனாவின் யிபு நகரை அடைய 7,500 மைல் தூரம் பயணம் செய்கிறது. இது சீனாவின் லட்சியமான ஒரு பெல்ட், ஒரு சாலை (OBOR) திட்டத்தின் ஒரு பகுதியாகும்
 • பிரெஞ்சு அரசாங்கம் அந்நாட்டின் மிக பழமையான அணுசக்தி ஆலையை Fessenheim (ஜெர்மனியின் எல்லைக்கு அருகே) மூடுவதாக அறிவித்துள்ளது
 • கூகுல் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய யு-டியுப் சேவையை வெளியிட்டுள்ளது
 • பாலின சம்பள இடைவெளியை தடை விதித்து, ஆண் பெண் இருவருக்கும் ஒரே ஊதியம் என்ற முறையை கொண்டு வந்துள்ள உலகின் முதல் நாடு என்ற சிறப்பை ஐஸ்லாந்து பெற்றுள்ளது
 • உலகின் இரண்டாவது பெரிய எல்பிஜி இயற்க்கை வாயு இறக்குமதியாளராக இந்தியா விளங்குகிறது. 2 வது இடத்தில இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா தற்போது 2-வது இடத்திற்கு வந்துள்ளது
 • ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.இ.) மற்றும் இந்திய கலாச்சார விழா கொண்டாட்டம் அபுதாபியில் நடைபெற்றது
 • தெற்காசிய நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 5 மே 2017 அன்று “தெற்காசிய செயற்கைக்கோள்” என்ற பெயரில் புதிய செயற்கைக்கோளை ஏவ உள்ளது. இது முன்னர் சார்க் செயற்கைக்கோள் என்று பெயரிடப்பட்டிருந்தது.
 • சர்வதேச நாணய நிதியம் (IMF) 2017 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரம் 3.5% ஆக உயரும் என கணித்துள்ளது
 • ஏப்ரல் 2017 முதல் ஜப்பான், சட்டப்பூர்வமாக பிட்-காயின் மற்றும் டிஜிட்டல் நாணயங்களை அங்கீகரித்துள்ளது.
 • தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை கவரும் வகையில் கஜகஸ்தான் நாடு, சென்னையில் அதன் தூதரகத்தை துவக்கி உள்ளது
 • மங்கோலியா அரசு, அந்நாட்டின் முதல் செயற்கைக்கோளை செலுத்தியுள்ளது. “மங்கோல்-சாட் – 1” என்ற பெயரில் இது ஏவப்பட்டது
 • டைம்ஸ் இதழின் உலகின் 1௦௦ செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிஜோ டுடர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பேடிஎம் அதிபர் விஜய்சேகர் சர்மா ஆகிய இருவரும் உள்ளனர்
 • அமெரிக்க பாடகரும் பாடல் ஆசிரியருமான பாப் டைலன், தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஏற்றுக் கொண்டார்
 • ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க படை, GBU-43 என்ற மிகபெரிய அணு ஆயுதமற்ற குண்டை வீசியது. GBU-43 குண்டின் எடை சுமார் 9797 கிலோவாகும். இதனை “குண்டுகளின் தாய்” (mother of all bombs) என்று அழைக்கின்றனர். இதனை Massive Ordnance Air Blast Bomb (MOAB)என்றும் கூறுவர்.
 • உலகிலேயே முதன்முறையாக “மரிஜுவனா’ என்னும் போதைப் பொருளை சட்ட ரீதியாக மருந்துக் கடைகளில் விற்க அனுமதி அளித்துள்ள நாடு = உருகுவே
 • காந்தியின் சபர்மதி ஆசிரமம் துவக்கப்பட்டு 1௦௦ ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு லண்டனில் சிறப்பு விழா நடைபெற்றது
 • தொழில் புரசிக்கு கானமாக இருந்த இங்கிலாத்தில், முதல் முறையாக ஏப்ரல் 2௦ம் தேதி முதல் நாட்டில் நிலக்கரி மூலம் ஆற்றல் தயாரிப்பதை நிறுத்தி உள்ளனர்.
 • உலோக சுரங்க தொழிலுக்கு தடை விதித்துள்ள உலகின் முதல் நாடு = எல் சால்வடோர்
 • ஸ்தானின் அபோதாபாத் நகரில் கடந்த 2௦ ஆண்டுகளாக தடை செய்யப்படிருந்த சிவா ஆலய வழிபாட்டிற்கு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அங்கு உள்ள இந்துக்கள் அக்கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி கிடைத்துள்ளது.
 • ஜி 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் இத்தாலியின் லுக்கா நகரில் நடைபெற்றது.
 • 2௦16ம் ஆண்டில் உலக அளவில் அதிக மரணதண்டனையை நிறைவேற்றிய நாடுகளின் பட்டியலில் சீனா முதல் இடத்தில உள்ளது

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

Leave a Comment

Your email address will not be published.