TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

இராணுவம்

  • 12-வது இந்திய – மங்கோலிய கூட்டு இராணுவ போர் ஒத்திகை பயிற்சி “நாடோடி யானை” (Military Exercise Nomadic Elephant) வைரங்க்டில் (மிசோரம்) நகரில் நடைபெற்றது.
  • “சவுரிய சக்ரா” ராணுவ விருதை பெரும் முதல் நாகாலாந்து வீரர் என்ற பெருமையை அத்து ஜும்வு பெற்றார்
  • 500 கோடி ரூபாய் செலவில் பாரக் ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • அக்னி -3 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இந்தியா நடத்தியது. இது அணுஏவுகணை சக்தியின் இடைநிலை வீச்சு (3,000 கிமீ முதல் 5,000 கிமீ) 2 நிலைகளுடன் செயல்படக்கூடியது
  • வெலிகம பே (இலங்கை) கடல் பகுதியில் ஹைட்ரோகிராபி (நில மேற்பரப்பில் உள்ள நீர்) ஆய்வுக்கு இந்தியா, தனது நீர்மூழ்கிக் ஆய்வுக் கப்பல் ஐ.என்.எஸ். தர்ஷாக் என்ற கப்பலை அனுப்பியுள்ளது.
  • இந்திய மற்றும் பிரஞ்சு கடற்படை கூட்டு கப்பற்படை பயிற்சி, மத்தியதரை கடல் பகுதியில் “வருணா” என்ற பெயரில் நடைபெற்றது.
  • கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் சென்னை சென்னை நகரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கட்டப்பட்ட கப்பல்களிலே மிகப்பெரிய அழிக்கும் கப்பல் இதுவாகும். இது திட்டம் 15A கீழ் கட்டப்பட்ட மூன்றாவது மற்றும் கடைசி கப்பலாகும்.
  • நேபாளம் மற்றும் சீனா ஆகியவை தங்களது முதல் கூட்டு பயிற்சி “சாகர்மாதா நட்பு 2௦17” என்ற பெயரில் நடத்தியன.

பொருளாதாரம்

  • கனரா வங்கியானது பிஎஸ்என்எல் உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி கனரா வங்கியின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் இணையதள சேவை 2 மடங்க உயர்த்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
  • 2016-17 நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்) 8.65% வட்டிக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
  • அரசு, ஜி.எஸ்.டி சேவை வரியில் கல்வி, சுகாதாரம் மற்றும் புனித யாத்ரீகங்கள் போன்றவற்றிற்கு விளக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி ஜூலை 2017 ல் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. ஜி.எஸ்.டி வரியில் ஒரு சலானில் அதிகபட்சம் 1௦௦௦௦ மட்டுமே செலுத்த இயலும்
  • புதிய நிறுவனங்களுக்கு ஒரு நாளில் மின்னணு வடிவத்தில் இப்போது PAN (நிரந்தர கணக்கு எண்) மற்றும் TAN (வரி விலக்கு கணக்கு எண்) வழங்க அரசு வழிவகை செய்துள்ளது.
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்தியாவின் மிக மதிப்பு மிக்க நிறுவனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது.
  • நிதி ஆயோக் அமைப்பு தொலைநோக்கு திட்டம் 2௦31 – 32 அறிவித்துள்ளது
    • 2௦32-ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் கழிப்பறைகள், இரு சக்கர வாகனம் உள்ள வீடுகளும்,மற்றும் கார்கள், குளிரூட்டிகள், ஆற்றல் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்
    • தனிநபர் வருமானம் 2031 – 32 ல் மூன்று மடங்காக உயரும். அதாவது 2015 – 16 ஆம் ஆண்டில் 1.06 லட்சம் ரூபாய் உள்ளது 2031 – 32 ல் 3.14 இலட்சம் வரை உயரும்
    • 2015 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 137 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2031 – 32ம் ஆண்டில் ரூபாய் 469 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயரும்
    • 2௦15 – 16ம் ஆண்டு 38 லட்சம் கோடியாக உள்ள செலவினங்கள் 2௦31 – 32ல் 13௦ லட்சம் கொடியாக உயரும்
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூலை 2017 முதல், புதிய 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது

கூட்டம்

  • வங்கதேச தலைநகர் டாக்காவில், 136-வது உலக பாராளுமன்ற உறுபினர்களின் மெகா கருத்தரங்கம் நடைபெற்றது
  • டேராடூனில் (உத்தரகண்ட்) உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் 19 வது காமன்வெல்த் வனவியல் மாநாடு நடைபெற்றது. 1968 க்குப் பிறகு இந்தியா இரண்டாம் முறையாக இக்கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியது
  • ஆபிரிக்க மேம்பாட்டு வங்கியின் 52 வது வருடாந்தர கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது
  • தேர்தல் பிரச்சனைகளைப் பற்றி பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் அகில இந்திய கருத்தரங்கம் புது தில்லியில் நடைபெற்றது
  • ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரில் ஜி-2௦ நாடுகள் சார்பில் டிஜிட்டல் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
  • 2017 மே முதல் வாரத்தில் புது தில்லியில் 4 வது தேசிய தரநிலைக் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
  • சர்வதேச சாலைக் கூட்டமைப்பு, 18-வது உலக சாலை கருத்தரங்கு கூட்டத்தை இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளது
  • தெற்காசிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (SASEC) நிதி மந்திரிகள் கூட்டம் புதுடில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • சிரியா மற்றும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்களில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையை விவாதிக்க BRICS நாடுகளின் சிறப்பு தூதர்கள் கூட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்றது

முக்கிய நபர்கள்

  • அமெரிக்காவில் வழங்கப்படும், “வளர்ந்து வரும் இளம் தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள”, 1௦ நபர்களில், பாகிஸ்தானை சேர்ந்த இந்து இளைஞர் ராஜ் குமாரும் ஒருவராக உள்ளார்
  • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரீஸ் சந்திர சக்சேனா காலமானார்
  • கல்ப் இந்திய ஆயில் நிறுவனத்தின் கவுரவத் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் தோணி, ஒரு நாளுக்கு மட்டும் நியமிக்கப்பட்டார்
  • உலகப் புகழ் பெற்ற போஸ்டன் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை, நிறைவு செய்த இந்தியாவின் முதல் கண் பார்வை அற்றவர் என்ற சிறப்பை சாகர் பகதி பெற்றுள்ளார்

தமிழகம்

  • கூடங்குளம் அணு உலையின் முதலாவது ஆலையை, ரசியா இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தது. இனி முதலாவது அணு உலை சார்ந்த அணைத்து நடவடிக்கைகளும் இந்தியாவே பார்த்துக் கொள்ளும்
  • புதுச்சேரி அரசு, விவசாயிகளுக்கு வேளாண்மை பாசன வசதிக்காக இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • தமிழக அரசு, பி.பி.என்.எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 5௦ இலட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் மூலம், தமிழகத்தில் மத்தய அரசின், “பாரத் அகண்ட அலைவரிசை சேவையை” அளிக்க முடியும்.
  • இந்திய கடலோர காவல் படையில், தமிழக எல்லையில் கடந்த 27 ஆண்டுகளாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த, “ஐ.சி.ஜி.எஸ் வரத்” கப்பல் பணியில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
  • பிரபல தமிழ் நடிகர், வினு சக்கரவர்த்தி, சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. 1௦௦௦க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வினு சக்கரவர்த்தி, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் முதல் படம் 1982ல் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை.
  • கடல்சார் நடவடிக்கைகளில், சென்னை நகரை ஒரு புது மையமாக மாற்றும் ஒரு நடவடிக்கையாக, “ஐ.என்.எஸ் சென்னை” என்ற பெயரில் புதிய போர்க் கப்பல் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இக்கப்பலில் 45 அலுவலர்களும், 395 பணியாளர்களும் இருப்பர். இக்கப்பலை பிரவீன் நாயர் என்பவர் தலைமையில் இயங்க உள்ளது.

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-8

TNPSC Current Affairs in Tamil April 2017-Part-9

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.