TNPSC Current Affairs in Tamil August 2017-Part-1

இந்தியா

 • உச்ச நீதிமன்றம் 5 கண உலோகங்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. அவை லித்தியம் (LITHIUM), ஆண்டிமணி (ANTIMONY), பாதரசம் (MERCURY), ஆர்செனிக் (ARSENIC) மற்றும் ஈயம் (LEAD). காற்று மாசுபடுதலுக்கு இவை ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், இதனை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.

 

 • நிதி ஆயோக் துணை தலைவர் பொறுப்பில் இருந்து அரவிந்த் பணகாரியா விலகினார். அவரின் இரண்டு ஆண்டு கால பணி முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் மீண்டும் அமெரிக்காவில் உள்ள கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிய சென்றார்.

 

 • அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ள அறிக்கையில், பருவநிலை மாற்றத்தால் கடந்த 3௦ ஆண்டுகளில் சுமார் 59௦௦௦ விவச்ச்யிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • ஜீலம் மற்றும் செனாப் நதியின் ஓட்டத்தில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் படி, இந்தியா கிசன்கங்கா மற்றும் ராட்டில் நீர்மின்சக்தி உற்பத்தி மையம் அமைக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது (World Bank has allowed India to construct Kishanganga, Ratle hydroelectric power facilities on tributaries of the Jhelum and Chenab rivers with certain restrictions under the 1960 Indus Waters Treaty (IWT)). பாகிஸ்தானின் எதிர்பை மீறி,ல் உலக வங்கி இந்தியாவிற்கு இதனை ஒதுக்கி உள்ளது.

 

 • பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதிதாக 14 மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. (14 NEW AIIMS (ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCE) UNDER VARIOUS PHASES OF PRADHAN MANTRI SWASTHYA SURAKSHA YOJANA (PMSSY))

 

 • 2௦21ம் ஆண்டிற்குள் இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா மையம் ஆகியவை இனிந்து, “நிசர் இயக்கத்தின்” (NASA-ISRO Synthetic Aperture Radar (NISAR) mission) மூலம் புதிய செயற்கைக்கோளினை ஏவ முடிவு செய்துள்ளன. புதிய ரேடார் வகை செயற்கைக் கோளினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதுவரை உருவாக்கப்பட்டுள்ள புவி ஆராய்ச்சி செயற்கைக்கோளிலே மிகவும் அதிக பொருட் செலவில் உருவாக்கப்படும் செயற்கைக்கோள் இதுதான்.

 

 • மத்திய அரசு தன்வசம் உள்ள 22 பொதுத்துறை நிறுவங்களின் பங்குகளை, மாற்று வணிகம் மூலம் விற்று, சுமார் 725௦௦ கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக “பாரத் 22” என்ற சேவை வசதி துவக்கப்பட்டுள்ளது. மத்திய ராசு இரண்டாவது முறையாக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறது. முதன் முதலாக 2௦15ம் ஆண்டு இது போன்ற நடவாடிக்கையை எடுத்தது.

 

 • மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 3௦ ஆண்டுகளுக்கும் மேல் உள்ள “தேசிய குற்ற ஆவன பணியகத்தை” (NCRB – NATIONAL CRIME RECORDS BUREAU), தற்போது காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்துடன்” (BPRD – BUREAU OF POLICE RESEARCH AND DEVELOPMENT) இணைத்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் நிர்வாக செயல்திறன் அதிகமாகும் என அரசு தெரிவித்துள்ளது.

 

 • இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து, ஈரானின் சப்பார் துறைமுகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சப்பார் துறைமுகத்தை, இந்தியா பயன்படுத்துவதன் மூலம் அரபிக் கடல் பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த இது உதவும்.

 

 • ஆகஸ்ட் 9, நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கரு = “SANKALP SE SIDDHI” – “THE ATTAINMENT THROUGH RESOLVE”. பிரதமர் தனது “மான் கி பாத்” ரேடியோ பேச்சில், வரும் 2௦22ம் ஆண்டுக்குள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக தூய்மை இந்தியா, வறுமை இல்லா இந்தியா, ஊழல் இல்லா இந்தியா, தீவிரவாதம் இல்லா இந்தியா, மதவாதம் இல்லாத இந்திய மற்றும் சாதியம் இல்லா இந்தியா அமைய வேண்டும் என்று அனைவரும் சூளுரை ஏற்று பணிசெய்ய வேண்டும் என்றார்.

 

 • தேசிய திறன் வளர்ப்பு கலகம், கூகுல் இந்திய நிறுவனத்துடன் இணைந்து, “ஆண்ட்ராய்டு திறன் மேம்பாட்டு திட்டத்தை” (ANDROID SKILL DEVELOPMRNT PROGRAMME) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், நாட்டில் மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகரித்து, வேலைவாய்ப்பு உருவாகும்.

 

 • மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமான, “மெய்டி” (MEITY – MINISTRY OF ELECTRONICS AND INFORMATION TECHNOLOGY), “தேசிய ஒருங்கிணைப்பு சைபர் மையம்” (NCCC – NATIONAL CYBER COORDINATION CENTRE), தனது முதல் கட்ட பணிகளை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் இணையதள நெரிசலை ஆராய்ந்து, வைரஸ் போன்ற தேவையற்றதை கண்டுபிடிக்கும். இந்தியாவின் சைபர் பாதுகாப்பிற்கு இம்மையமே இனி முதன்மை அங்கமாகும்.

 

 • தேசிய பசுமை தீர்ப்பாயம், தேசிய தலைநகர் டெல்லி முழுவதும், 5௦ மைக்ரான் அளவிற்கும் குறைவாக உள்ள மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு 5௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

 

 • தபி இயற்கைவாயு பைப்லைன்” திட்டத்தின் “வழிகாட்டும் குழுவின்” (INDIA TO HOST STEERING COMMITTEE MEETING OF TAPI GAS PIPELINE) கூட்டத்திற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது. “துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா” ஆகிய நாடுகள் இணைந்து 1814 கிலோமீட்டர் நீளமுடைய வாயு பைப்லைன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் கட்டுமானப் பணி வரும் 2௦19 ஆண்டு முடிவடைய உள்ளது.

 

 • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, “இந்திய யானைகள் கணக்கெடுப்பில்”, இந்தியாவில் மொத்தம் 27,312 யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் முதல் ஒருங்கிணைந்த அகில இந்திய யானைகள் கணக்கெடுப்பு (INDIA’S FIRST EVER SYNCHRONISED ALL INDIA ELEPHANT POPULATION ESTIMATION CENSUS) ஆகும். அதிக அளவில் யானைகள் உள்ள 3 மாநிலங்கள் = கர்நாடகா (6049 யானிகள்), அஸ்ஸாம் (5719 யானைகள்), கேரளா (3054 யானைகள்). தமிழ்நாட்டில் 2761 யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவின் காஸ்மீர் பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் “ஹிஸ்புல் முஜாகிதீன்” அமைப்பை, அமெரிக்க வெளிநாட்டு சர்வதேச தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

 

 • இந்திய ரிசர்வ் வங்கி புதிய 5௦ ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துளளது. மகாத்மா காந்தி புகைப் படத்துடன் வெளிவர உள்ள இந்த புதிய ரூபாய் நோட்டுகள், “ஒளிரும் நீல நிறத்தில்” (FLUORESCENT BLUE) உள்ளபடி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது

 

 • மத்திய பொருளாதார விவகாரத் துறை குழு (CCEA – CABINET COMMITTEE ON ECONOMIC AFFAIRS), மத்திய அரசு ரயில்வேத் துரையின் ஒரு துணை நிறுவனமான, “பி.டபள்யு.இ.எல் எனப்படும் பாரத் வேகன் மற்றும் பொறியியல் நிறுவனத்தை” (BWEL – BARATH WAGON AND ENGINEERING COMPANY LIMITED) மூடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • மத்திய அரசு, இந்திய நேபாள எல்லையில் உள்ள மெச்சி நதியில் மேல் புதிய பாலம் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இப்பாலம் இந்திய நேபாளத்தை இணைக்கிறது.

 

 • ஓடிஸா மாநில அரசு, அம்மாநிலத்தின் தலைமை செயலக கட்டிடத்தின் மேல் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் தகடுகளை பதிக்க உத்தரவிட்டுள்ளது (ROOFTOP SOLAR PROJECT)

 

 • பொருளாதார விவகாரங்களுக்கான காபினட் அமைச்சகம், சமிபத்தில் அறிவிக்கப்பட்ட “சம்படா” (SAMPADA – SCHEME FOR AGRO – MARINE PROCESSING AND DEVELOPMENT OF AGRO PROCESSING CLUSTERS) திட்டத்தை “பிரதம மந்திரி கிசான் சம்படா யோஜனா” (PRADHAN MANTRI KISAN SAMPADA YOJANA) திட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • தனிமனித சுதந்திரம் என்பது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, “ஒரு அடிப்படை உரிமை” என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 • தென் கொரியாவில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 

 • மேற்குவங்க மாநிலத்தின் பிரசத்தி பெற்ற புர்த்வான் மாவட்ட அரிசியான, “கோபிந்தோபோக்” அரிசிக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது

 

 • மணிப்பூரின் நுன்க்தாங் டம்பக் கிராமமே, இந்தியாவில் 1௦௦% கணினி அறிவை பெற்றுள்ள 2-வது கிராமம் ஆகும். இந்தியாவில் முதன் முதலில் 1௦௦% கணினி அறிவை பெற்ற கிராமம் என்ற சிறப்பை, கேரள மாநிலத்தின் சாம்ராவோட்டம் கிராமம் ஆகும்.

 

 • மகிலா கயிறுத் திட்டத்தை கயிறு வாரியம் செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு கயிறு தயாரிக்கும் இயந்திரங்கள் வழங்குவதால் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

 • சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய மையம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைய உளது.

 

 • மாற்றுத் திறனாளிகளுக்காக மத்திய அரசு, சைகை மொழியை தேசிய கீதத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சுமார் 3.35 நிமிடங்கள் ஓடக் கூடியதாகும். இதனை இயக்கியவர் கோவிந்த் நிஹலானி ஆவார். இதற்கான கருத்துருவை உருவாக்கியவர் – சதீஷ் கபூர். இதற்கு இசை அமைத்தவர் – அதேஷ் ஸ்ரிவஸ்தாவ் ஆவார்.

 

 • உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி நிறுவனம், இணையதள அகராதியை தமிழ் மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published.