TNPSC Current Affairs in Tamil August 2017-Part-2

தமிழகம்

 • தமிழக அரசின் புதிய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையராக திரு.வி.கே.ஜெயக்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழக வருகையின் போது, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடையே ஆழ்கடல் மீன்பிடித்தல் ஊக்குவிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்

 

 • உவர் நீர் நிலைகளில் வலைக் கூண்டுகள் அமைத்து முத்தொடர் முறையில் மீன் வளர்க்கும் தொழில்நுட்பம் இந்திய அளவின் முதல் முதலாக காஞ்சீபுரம் அருகே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

 

 • தேங்கிய நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் நிகழ பரவுவதை தடுக்க, தமிழகத்திலே முதன் முறையாக வேலூர் மாநகராட்சி, “எண்ணெய் (ஆயில்) உருண்டைகளை வீசி தெளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

 • மத்திய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி தேசிய நிறுவனம் மதுரையில் விரைவில் அமைய உள்ளது.

சர்வதேசம்

 • மைக்ரோசாப்ட் (MICROSOFT) நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பால் ஏலன், தலைமையிலான குழு, இரண்டாம் உலகப் போரின் பொது பசிபிக் பெருங்கடல் பகுதியில் மூழ்கிய யு.எஸ்.எஸ் இந்தியானா போலிஸ் கப்பலை, 18000 அடி ஆழத்தில் கண்டுபிடித்துள்ளனர். இக்கப்பல் ஜப்பான் வீரர்களால் மூழ்கடிக்கப்பட்டது.

 

 • ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின் படி, உலக சுற்றுலாத் தளங்களில் மக்களால் மிகவும் குறைவாக பார்க்கப்பட்ட சுற்றுலாத்தளம், தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள துவாலு தீவுகள் ஆகும். 2௦16ம் ஆண்டு சுமார் 2௦௦௦ பேர் இத்தீவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

 

 • ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் அறிக்கையின் படி, உலக மக்கள்தொகையில் 39% இணையதள பயன்பாடு இந்தியா மற்றும் சீனாவில் தான் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • ஆப்ரிக்க தேசமான “சாத்”, குறைந்த அளவிலான “கிருஷ்ண பரமாத்மாவின்” உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயத்தை அறிமுகம் செய்துள்ளது (AFRICAN COUNTRY CHAD WILL RELEASE RELEASED LIMITED EDITION LORD KRISHNA SILVER COIN ON JANMASHTAMI IN COMMEMORATION OF 5,244TH BIRTH ANNIVERSARY OF HINDU GOD). கிருஷ்ணரின் 5244வது பிறந்தாஹ் தினத்தை முன்னிட்டு இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டது.

 

 • அரேபிய நாடான கத்தார் அரசாங்கம், இந்தியா உட்பட 80 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இப்போது விசா இல்லாமல் கத்தார் நகரில் நுழைய முடியும் என்று அறிவித்துள்ளது
 • ஃபோர்ப்ஸ் இதழின் படி, சீன மின்-வர்த்தக நிறுவனம் அலிபாபாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் ம, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். அவரின் சொத்து மதிப்பு $ 4 பில்லியன் ஆகும்.

 

 • இணையதள வேகத்தை அறிய உதவும், ஊக்லா சோதனையின் அடிப்படையில், உலக அளவில் அதிவேக இணையதளத்தை கொண்டுள்ள 3 நாடுகள் = நார்வே, நெதர்லாந்து மற்றும் ஹங்கேரி ஆகும்

 

 • ஆஸ்திரேலிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டுக்குள் தென் ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய ஒற்றை கோபுரம் சூரிய வெப்ப ஆலை (150 மெகாவாட் திறன்) நிறுவ உள்ளது
 • பங்களாதேஷ் நாடு ஒரு புதிய இராஜதந்திர நிலையத்தை (தூதரகம்) சென்னையில் திறந்து உள்ளது., பங்களாதேஷின் குடிமக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா மற்றும் கல்வி மையங்களில் அதிக அளவில் வருவதை ஒட்டி இது திறக்கப்பட்டுள்ளது.

 

 • ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் மற்றும் ஷெலெஸ்விக்-ஹோல்ஸ்டைன் ஆகிய நாடுகளில் ஐரோப்பிய எக்ஸ்ரே ஃப்ரீ எலக்ட்ரான் லேசர் (XFEL) (BIGGEST X-RAY LASER GUN ON EARTH NAMED, EUROPEAN X-RAY FREE ELECTRON LASER (XFEL)) என்று பெயரிடப்பட்ட பூமியில் மிகப்பெரிய எக்ஸ்-ரே லேசர் துப்பாக்கி உருவாக்கி உள்ளனர். இது 2017 செப்டம்பரில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 • கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யா நான்கு ஆண்டுகளுக்கு சிறைதண்டனையோ அல்லது அபராதங்களையோ விதிக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப் படுவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை விதித்துள்ளது.

 

 • பேஸ்புக் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான ஒஸ்லோவை கையகப்படுத்தி உள்ளது

 

 • கூகுல் நிறுவனம் தனது புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. 8.0 பதிப்பான இது, “OREO” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

 • ஹார்வே மற்றும் இர்மா ஆகிய புயல்கள் அமெரிக்காவைத் தாக்கியது

 

 • உலக சுகாதார அமைப்பு (WHO) சோமாலியா நாட்டினை போலியோ இல்லாத நாடாக அறிவித்துள்ளது., கடந்த 3 ஆண்டுகளில் எந்தவொரு போலியோ நோய் பதிவுகள் இங்கு பதியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published.