TNPSC Current Affairs in Tamil August 2017-Part-3

விளையாட்டு

 • 2௦17 உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் (2017 WORLD BADMINTON CHAMPIONSHIP) போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நோசொமி ஒகுஹராவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றன. வெண்கலப் பதக்கத்தை இந்தியாவின் சைனா நேவால் வென்றார்.

 

 • இலண்டன் நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள கூட்டமைப்பு நடத்திய 1௦௦ மீ ஓட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட்டை முந்தினார் ஜஸ்டின் கடலின். உசேன் போல்ட் 3-வது இடத்தை பிடித்தார்

முதன் முதல்

 • இலங்கை கடற்படையின் முதன்மை தளபதியாக, ட்ராவிஸ் சின்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக தமிழர் ஒருவர், இலங்கை கடற்படைக்கு தலைமை ஏற்பது இதுவே முதல் முறையாகும்

 

 • விஞ்ஞானிகள், முதல் முறையாக “CRISPR-Cas9(CLUSTERED REGULARLY INTERSPACED SHORT PALINDROMIC REPEATS – ASSOCIATED PROTEIN 9 NUCLEASE) என்ற மரபணு வெட்டி பயன்படுத்தும் முறையில், மனித கரு முட்டையில் முதன் முறையாக மரபணு மாற்றத்தின் மூலம் ஜீன்களை சரி செய்துள்ளனர். பாரம்பரிய இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த டி.என்.ஏவை இம்முறை மூலம் சரி செய்துள்ளனர். இதற்காக பயன்படுத்தப்பட்ட ஜீன் = MYBPC3 gene ஆகும். இந்த ஜீன் hypertrophic cardiomyopathy என்ற இதய நோய்க்கு காரணமாக உள்ளது.

 

 • இஸ்ரேல் தனது முதல் சுற்றுச்சூழல் செயற்கைக்கோளான, “வீனசை” (VENUS (VEGETATION AND ENVIRONMENT MONITORING NEW MICRO-SATELLITE)) ஏவியது. இது இஸ்ரேல் மற்றும் பிரெஞ்ச் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. இதுவரை உலகில் செலுத்தப்பட்ட சுற்றுச்சூழல் செயற்கைக் கோள்களிலே இதுதான் மிகவும் சிறியது மற்றும் எடை குறைவானது. இது சுமார் 265 கிலோ மட்டுமே எடை கொண்டது

 

 • அரபேய கூட்டமைப்பில் உள்ள நாடுகளிலே முதன் முறையாக குடியுரிமை இல்லாதவர்களுக்கு நிரந்த குடியுரிமை அளிக்க முன்வந்துள்ள முதல் அரேபிய நாடு, கத்தார் ஆகும். இதற்காக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

 

 • இந்தியாவின் முதல் தனியார் ஏவுகணை உற்பத்தி மையம், தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் அமைய உள்ளது. “கல்யாணி ரபேல் மேம்படுத்தப்பட்ட அமைப்பு” (India’s first private sector missile sub-systems manufacturing facility Kalyani Rafael Advanced Systems (KRAS) plant) என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இது, இந்தியாவின் கல்யாணி நிறுவனம் 51% பங்குகளையும், இஸ்ரேலின் ரபேல் நிறுவனம் 49% பங்குகளையும் கொண்டதாக அமைக்கப்படும்.

 

 • “உட்செலுத்துதல் சிகிச்சை” தொடர்பான இந்தியாவின் முதல் இணையதள பாடத்திட்டம் (India’s first online course on Infusion Therapy launched by INS), முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. செவிளியர்களுக்கான இந்த பாடத்திட்டம், அவர்களின் செலுத்துதல் சிகிச்சை அளித்தல் தொடர்புடையது ஆகும்.

 

 • இந்தியா மற்றும் ரசிய நாடுகளின் ராணுவங்கள் பங்கேற்கும் “இந்த்ரா முப்படை பயிற்சி” (INDRA TRI – SERVICES EXERCISE) போர் பயிற்சி நிகழ்ச்சி ரசியாவின் விலாடிவோச்டாக் மலைப் பகுதிகளில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக “முப்படைகளும்” கலந்துக் கொண்டு பயிற்சி மேற்கொண்டன. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர்.

 

 • விஞ்ஞானிகள் உலகின் முதல் தாவர ஜிகா வைரஸ் மருந்தினை (WORLD’S FIRST PLANT BASED ZIKA VACCINE) கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், கொசுவினால் பரப்பப்படும் ஜிகா வைரஸ் நோய்க்கு, விலை குறைவான, எளிமுரையில், அதிக திறன் கொண்ட தாவர வகை மருந்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். “புகையிலை செடியில்” (PROTEINS FROM TOBACCO PLANT) உள்ள ஒருவகை புரதத்தை கொண்டு இம்மருந்தினை உருவாக்கி உள்ளனர்.

 

 • வங்கக் கடல் பகுதியில், “முதல் இம்சரக்ஸ் இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு பயிற்சி” (IMMSAREX: IONS’S MAIDEN MARITIME SEARCH AND RESCUE EXERCISE) வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இது சர்வதேச கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி” ஆகும். வங்கதேசம் இதனை தலைமேற்று நடத்த உள்ளது. (IONS – INDIAN OCEAN NAVAL SYMPOSIUM)

 

 • “ஐ.என்.எஸ்.வி தாரிணி” (INSV TARINI) என்ற கப்பலில் 6 பெண்களை கொண்ட இந்திய கப்பற்படையை சேர்ந்த அணி, உலகை தனியாக சுற்றிவர கிளம்பியுள்ளது. இது இந்தியாவின் முதல் பெண் கப்பட்ல்படை அதிகாரிகளை கொண்டு உலகை சுற்றி (FIRST EVER INDIAN WOMEN CIRCUMNAVIGATION) வரும் நிகழ்வாகும். இந்த பயணத்திற்கு “நவிகா சாகர் பரிக்ரமா” (NAVIGA SAGAR PARIKRAMA) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகும்.

 

 • சீனா, தனது நாட்டின் முதல் சைபர் நீதிமன்றத்தை, ஹான்க்சோ மாகாணத்தில் உள்ள மின்வணிக மையத்தில் துவக்கி உள்ளது (CHINA LAUNCHES FIRST CYBER COURT IN E-COMMERCE HUB OF HANGZHOU)

 

 • In Vitro Fertilisation (IVF) technology தொழில்நுட்பம் மூலம், வாடை தாய் பசுவின் மூலம், இந்தியாவின் முதல் கன்று பிறந்துள்ளது (INDIA’S FIRST CALF DELIVERED BY A SURROGATE OR RECIPIENT COW). இந்த கன்றுக்கு “விஜய்” (VIJAY) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய பால் ஆராய்ச்சி மையம் இதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெற்றது.

 

 • இந்தியாவின் முதல் விளையாட்டு அருங்காட்சியகத்தை (INDIA’S FIRST SPORTS MUSEUM), டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் அமைக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒப்பபுதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் விளையட்டுத் துறையை மக்களிடம் பிரபலமாக்குவதே இதன் நோக்கமாகும்.

 

 • கர்நாடகா மாநில அரசு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து, “இந்தியாவின் முதல் பண்ணை விலை முன்கணிப்பு மாதிரி” (INDIA’S FIRST FARM PRICE FORECASTING MODEL) முறையை அறிமுகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் பொருட்களுக்கு சந்தை விலையினை அறிந்து அதற்கேற்ப வணிகம் செய்ய இயலும்.

 

 • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியாவின் முதல் விதேஷ் பவனை (INDIA’S FIRST VIDESH BHAVAN), மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் துவக்கி உள்ளது. இதன் மூலம் அணைத்து வட்டார பாஸ்போர்ட் அலுவலகங்களும் இதன் கீழ் செயல்பட முடியும்.

 

 • சர்வதேச அணுசக்தி முகமையகம், உலகின் முதல் குறைவான செறிவூட்டப்பட்ட உரேனியம் வங்கியை (WORLD’S FIRST LOW ENRICHED URANIUM BANK), கஜகஸ்தான் நாட்டின் ஒச்கிமேன் பகுதியில் திறந்துள்ளது. இது எந்த நாட்டிற்கும் சொந்தமல்ல. இது சர்வதேச அணுசக்தி முகமையத்தின் கீழ் மட்டுமே செயல்படும்.

 

 • இந்தியாவின் முதல் விமானப் போக்குவரத்து பல்கலைக்கழகம், உத்திரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி நகரில் உள்ள புர்தாஸ்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய விமானப் போக்குவரத்து பல்கலைக்கழகம் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published.