TNPSC Current Affairs in Tamil August 2017-Part-4

அறிவியல்

 • மஞ்சளில் உள்ள வேதிப் பொருட்கள் புற்று நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து மற்றும் அதற்குமேல் வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் புற்றுநோய், மஞ்சள் மூலம் neuroblastoma tumour cells என்ற செல்களை அழிக்கிறது என்ற ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • இந்திய ராணுவம், “ஹம்ராஸ் மொபைல் செயலி” என்ற புதிய செயலியை வீரர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது (The Indian Army has developed Humraaz mobile application through which serving soldiers can track details like postings and promotions). இதன் மூலம் வீரர்கள் தங்களின் பணியிடங்கள் மற்றும் பதவி மூப்பு தகவல்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ளலாம். மேலும் தங்களின் சம்பளப் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

 

 • பெங்களூரு அகில இந்திய அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உயர் உணர்தன்மை கொண்ட, விலை குறைந்த நானோமீட்டர் ஸ்கேல் அளவுகள் கொண்ட கார்பன் மோனாக்சடு சென்சார் (HIGHLY SENSITIVE, LOW COST NANOMETRE SCALE CARBON MONOXIDE (CO) SENSOR) கருவியை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு அளவினை அறிந்து கட்டுபடுத்தலாம், கண்காணிக்கலாம். கார்பன் மோனாக்சைடு ஒரு நிறமற்ற, வாசனையற்ற வாயு ஆகும்.

 

 • மேற்கு வங்கத்தில் உள்ள ஆச்சார்யா ஜகதீஷ் சந்திர போஸ் இந்திய தாவரவியல் தோட்டத்தில், தனியாக இருந்த ஒற்றை சைக்கஸ் மரத்தில் இருந்து, ஆராய்ச்சியாளர்கள் 2 புதிய இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் உள்ள சசைக்கஸ் மர இனங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள பழமையான மரங்களில் சைக்கஸ் மரங்களும் ஒன்று. இதனை “வாழும் படிமங்கள்” என்பர்.

 

 • உலகின் மிகப்பெரிய எரிமலைப் பகுதி, அண்டார்டிக் கண்டப் பகுதியில் உள்ளதை, இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் (EARTHS LARGEST VOLCANIC REGION FOUND IN ANTARCTICA). இது அண்டார்டிகாவின் பணிமலைகளுக்கு அடியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது. ஏற்காணவே அங்கு 91 எரிமலைகள் உள்ளது அறியப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக 47 எரிமலைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 

 • கனாடவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பாதிப்படைந்துள்ள இதயத்தை சரி செய்யுன் வகையில், “செலுத்தக்கூடிய திசுக் கட்டினை” (INJECTABLE TISSUE BANDAGE) உருவாக்கி உள்ளனர். இது அஞ்சல் வில்லை அளவை விட சிறியதாகும். இதற்கு, ”ஆஞ்சியோ சிப்” (ANGIO CHIP) எனப் பெயரிட்டுள்ளனர்.

 

 • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச்சாவடிகளில், விரைவாக அனுமதி சீட்டினை பெற ஏதுவாக MyFASTag and FASTag Partner என்ற இரண்டு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

 

 • விஞ்ஞானிகள், “குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை” (Scientists develops artificial womb to save premature babies) பாதுகாக்கும் வகையில் செயற்கை கருவை உருவாக்கி உள்ளனர். இந்த செயற்கை கருவின் மூலம் குறைப் பிரசவ பிறப்பு குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

 

 • விஞ்ஞானிகள், கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் Moniligastridae என்ற குடும்பத்தை சேர்ந்த மண்புழுவின் புதிய இரண்டு வகை இனங்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த இரண்டு புதிய இனங்களுக்கு Drawida polydiverticulata and Drawida thomasi எனப் பெயரிட்டுள்ளனர்.

 

 • உலகின் மிகச்சிறிய அறுவை சிகிச்சை செய்யும் ரோபோட்டை (WORLD’S SMALLEST SURGICAL ROBOT), இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த ரோபோட்டிற்கு, VERSIUS எனப் பெயரிட்டுள்ளனர்.

 

 • கர்நாடகா மாநில அரசு, பெங்களூரு நகரில் “மேகவிதைப்பு தொழில்நுட்பத்தின்” (CLOUD SEEDING PROJECT VARSADHARI) மூலம் செயற்கை மழையை உருவாக்க, “வர்சதாரி திட்டத்தை” கொண்டு வந்துள்ளது. சில்வர் ஐயோடைடு, உறைபனி எனப்படும் திட கார்பன்டை ஆக்சைடு கொண்டு, மேங்களில் அமிலங்களை தூவதன் மூலம் செயற்கை மழையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

 

 • அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், பிறந்த குழந்தைகளில் ஏற்படும் “செப்சிஸ்” நோயை குணப்படுத்த புதிய வகை மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளனர் (SCIENTISTS DISCOVER NEW THERAPY TO PREVENT SEPSIS IN NEW BORN BABIES). இம்த மருத்துவ குழுவிற்கு இந்திய வம்சாவழியை சேர்ந்த மருத்துவர் பினாகி பணிக்ராகி தலைமை தாங்கினார்.

 

 • இந்திய ஆராய்ச்சியாளர்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், பன்றி போன்ற முக அமைப்பை கொண்ட புதிய வகை தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு Nasikabatrachus bhupathi எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது ஊதா தவளை குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இதற்கு பிரபல் இந்திய ஆராய்ச்சியாளரான எஸ்.பூபதி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

 • ஆதார் எண்ணெய், வரும் டிசம்பர் 31, 2௦17க்குள் இணைக்க வேண்டும் என நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கி

 • ஏர்டெல் பேமென்ட் வங்கி, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள இந்திஸ்தான் பெட்ரோல் நிலையங்களில் ஏர்டெல் பேமென்ட் வங்கி வசதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • கனரா வங்கி, இணையதள பணப் பரிமாற்றங்களுக்காக புதிய 2 வசதிகளை அறிமுகம் செய்துள்ளது = BHARAT QR (QUICK RESPONSE) and BHARAT BILL PAYMENT SYSTEMS (BBPS)

 

 • சுய உதவிக் குழுக்களுக்காக சிறப்பாக சேவை ஆற்றியதற்காக, சிறந்த செயல்திறன் விருது, கார்பெரேசன் வங்கிக்கு வழங்கப்பட்டது.

 

 • வங்கிகள் இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு, 3% ஜி.எஸ்.டி வரியை செலுத்த வண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published.