TNPSC Current Affairs in Tamil August 2017-Part-5

விருது

 • போர்த்துகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் (UEFA) யூனியன் கால்பந்து சங்கம் சார்பில் வழங்கப்படும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

 

 • 2௦17, “இந்து எழுத்தாளர் விருது”, கேரீஸ் கேமணி மற்றும் அக்சத் நிகாம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.

 

 • குஜராத்தில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் 7-அங்குல ‘நமோ மின் டேப்’ டேப்லட் போன்கள் மாநில அரசுத் திட்டத்தின் கீழ் ரூ. 1,000 க்கு மானிய விலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மாத்திரைகள் சந்தை விலை ஒரு அலகு ரூ 8000 ஆகும்

 

 • கிழக்கு வங்க கால்பந்து சங்க விருதுகள்
  • பாரத் கவுரவ் விருது = ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை
  • வாழ்நாள் சாதனையாளர் விருது = சுபாஸ் பவ்மிக் மற்றும் சையத் நயமுதின்
  • ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் = குர்விந்தர் சிங்
  • ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் = போடுபள்ளி அமித்

 

 • பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகரில் நடைபெற்ற, “உலக அறிவியல் கற்பனைக் கழகத்தின்” சார்பில் வழங்கப்படும், “ஹுகோ விருது”, இந்த ஆண்டு The Obelisk Gate என்ற நாவலுக்காக அமெரிக்காவை சேர்ந்த நோரா ஜெ.ஜெமிசின் என்பவருக்கு வழங்கப்பட்டது

 

 • இந்திய மருத்துவ துறையை சேர்ந்த பிரபல மருத்துவரான நந்த குமார் ஜெயராம் அவர்களுக்கு, இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தொழில் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு சார்பில், இந்த ஆண்டின் சிறந்த சுகாதார நலம் காப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டது

 

 • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, இமாச்சலப் பிரதேச சுற்றுச்சூழல் தலைமை விருது 2017, மது சித்காரா அவார்களுக்கு வழங்கப்பட்டது.

 

 • ஐக்கிய நாடுகளுடன் இணைந்து, நிதி ஆயோக் அமைப்பு, 2௦17ம் ஆண்டின் மாற்றத்திற்கான பெண்கள் இந்தியா விருதை 12 பெண்களுக்கு வழங்கியது.
  • லட்சுமி அகர்வால் (உ.பி)
  • சுபாசினி மிஸ்ட்ரி (மேற்கு வங்கம்)
  • சபீனா ஹுசைன் (மகாராஷ்டிரா)
  • அருணிமா சின்கா (உ.பி)
  • கமல் கும்பார் (மகாராஷ்டிரா)
  • ஜமுனா துடு (ஜார்கண்ட்)
  • ராஜலக்ஷ்மி போர்தகுர் (கர்நாடகா)
  • கிரண் கனோஜி (ஹரியானா)
  • ஹர்ஷினி கநேகர் (மகாராஷ்டிரா)
  • ஷிமா மொடக் (மேகாலயா)
  • சுனிதா கம்ப்ளே (மகாராஷ்டிரா)
  • கனிகா தெர்கிவால் (மத்தியப் பிரதேசம்)

 

 • வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியான நபார்டு (NABARD – NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT) வங்கி, 2015-16, 2016-17ம் ஆண்டுக்கான சிறந்த செயல்பாட்டிற்கான விருதை, கர்நாடகா விகாஸ் கிராமிய வங்கிக்கு வழங்கியது.

 

 • 2௦16ம் ஆண்டிற்கான ரஸ்வதி சம்மான் விருது, பிரபல கொங்கனி மொழி எழுத்தாளரான, மகாபலேஸ்வர செயில் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கோவா மானியால்தில் உள்ள பாரம்பரிய பானைத் தொழில் செய்பவர்களை பற்றி விவரித்த அவரின் Hawthan என்ற நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது

 

 • 2௦17ம் ஆண்டிற்கான பிரேம் நசிர் விருது, பிரபல கேரள நடிகை சாரதா அவர்களுக்கு வழங்கப்பட்டது

 

 • முதல் கேசரி ஊடக விருது, பிரபல பத்திரிக்கை எழுத்தாளரான டி.ஜெ.எஸ்.ஜார்ஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

 • ஓடிஸா மாநில அரசின், பிஜு பட்நாயக் அறிவியல் மேலாண்மை விருது, சண்டிகர் நகரை சேர்ந்த திகம்பர் பெகரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

 • 2௦17 கல்பனா சாவ்லா தைரிய விருது, ப்ரீத்தி ஸ்ரீநிவாசன் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டது. முதுகுத் தண்டு பிரச்சனையால் அவதிப்பட்டும் வருபவர் இவர்.

 

 • விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
  • உடல் ஊனமுற்ற தடகள வீரர், தேவேந்திர சிங் ஜஜாரியா
  • ஹாக்கி வீரர் சர்தார் சிங்

 

 • 2௦17ம் ஆண்டிற்கான துரோணாச்சாரியார் விருது,
  • தடகள வீரர் ஆர்.காந்தி
  • கபடி வீரர் ஹீரா நந்த கட்டாரியா
  • பாட்மிண்டன் வீரர் பிரசாத்
  • குத்துச்சண்டை வீரர் பிரிஜ் பூசன் மொகந்தி
  • ஹாக்கி வீரர் ரபேல்
  • துப்பாக்கி சுடுதல் வீரர் சஞ்சய் சக்ரவர்த்தி
  • மல்யுத்த வீரர் ரோசன் லால்

 

 • இந்திய பசுமை புரட்சியின் தந்தை எனப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, “வேளாண் தலைமை பண்பு விருது 2௦17”க்கு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை தேர்வு செய்துள்ளது.

நாட்கள்

 • ஆகஸ்ட் 1 = இந்திய ஒத்துழையாமை தினம் (NON COOPERATION MOVEMENT DAY). காந்தியின் தலைமையில் 192௦ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, நாடு முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை தினம் கொண்டுவரப்பட்டது

 

 • ஆகஸ்ட் 7 = தேசிய கைத்தறி தினம் (NATIONAL HANDLOOM DAY). இந்திய அரசால் 2௦15ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் பட்டுவருகிறது. முதல் கைத்தறி தினம், பிரதமர் மோடி அவர்களால் சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது.

 

 • ஆகஸ்ட் 1 – 7 = உலக தாய்பாலூட்டும் வாரம் (WORLD BREAST FEEDING WEEK). குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தாய்ப்பால் ஊட்டும் பழக்கத்தினை ஊக்குவிக்கவும் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.

 

 • ஆகஸ்ட் 8 = வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது வருட தினம். இந்தியாவின் ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர, இரண்டாம் உலகப் போரின் போது, காந்தி தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதை போலவே தற்போது புதிய இந்திய இயக்கம் (NEW INDIA MOVEMENT) துவக்கப்பட்டுள்ளது. இதன்படி 2௦17 – 2௦22ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இருந்து வறுமை, இலஞ்சம், ஊழல், தீவிரவாதம், சாதியம், தூய்மையின்மை ஆகியவற்றை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

 • ஆகஸ்ட் 9 = உலகின் உள்நாட்டு குடிமக்கள் சர்வதேச தினம் (International Day of World’s Indigenous Peoples)

 

 • ஆகஸ்ட் 9 = நாகசாகி தினம். ஜப்பானின் நாகசாகி நகரம் மீது, அமெரிக்க இரண்டாவது அணுகுண்டை வீசிய தினம்.

 

 • ஆகஸ்ட் 1௦ = சர்வதேச உயிரி எரிபொருள் தினம் (International Biodiesel Day (IBD)). பசுமை எரிபொருள் என்னும் படிமங்களற்ற எரிபொருளை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம்.

 

 • ஆகஸ்ட் 1௦ = தேசிய குடற்புழு நீக்க தினம் (NATIONAL DEWORMING DAY). 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடைபிடிக்கப்படும் இத்தினம், 1 – 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் இளையவர்கள் ஆகியோருக்கு குடற்புழு நீக்க மருந்து அரசால் வழங்கப்படுகிறது.

 

 • ஆகஸ்ட் 12 = சர்வதேச இளையோர் தினம் (INTERNATIONAL YOUTH DAY). இந்த ஆண்டிற்கான கரு = Youth Building Peace

 

 • ஆகஸ்ட் 12 = உலக யானைகள் தினம் (World Elephant Day). மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் “கஜ யாத்திரை” (Gaj Yatra) என்ற பெயரில் யானைகள் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தியது.

 

 • ஆகஸ்ட் 13 = சர்வதேச இடது கை பழக்கம் கொண்டவர்கள் தினம் (International Left-Handers Day)

 

 • ஆகஸ்ட் 13 = உலக உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் தினம் (World Organ Donation Day)

 

 • ஆகஸ்ட் 14 = சர்வதேச சமூக பாதுகாப்பு தினம் (Global Social Security day)

 

 • ஆகஸ்ட் 15 = 71வது இந்திய சுதந்திர தினம். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 112 வீரதீர விருதுகளை வழங்கினார்.

 

 • ஆகஸ்ட் 19 = உலக தேனீக்கள் தினம் (World Honey Bee Day)

 

 • ஆகஸ்ட் 19 = உலக புகைப்பட தினம் (WORLD PHOTOGRAPHY DAY)

 

 • ஆகஸ்ட் 19 = உலக மனிதாபிமான தினம் (WORLD HUMANITARIAN DAY). இந்த ஆண்டிற்கான கரு = # NOT A ATARGET

 

 • ஆகஸ்ட் 2௦ = நல்லிணக்க தினம் (சத்பாவனா தினம்), முன்னால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினம்

 

 • ஆகஸ்ட் 23 = அடிமை வணிகத்தையும், அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் சர்வதேச தினம் (INTERNATIONAL DAY FOR REMEMBERANCE OF THE SLAVE TRADE AND ITS ABOLITION). அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தை நினைவு கூறும் வகையில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு  நிறுவனம் நியமித்த நாள் ஆகும்.

 

 • ஆகஸ்ட் 29 = தேசிய விளையாட்டு தினம் (NATIONAL SPORTS DAY). இந்தியாவின் தலைசிறந்த அஹாக்கி வீரரான தயான்சந்த் அவர்களின் பிறந்த தினத்தை கடைப்பிடிக்கும் வகையில், இத்தினம் கொண்டாடப்படுகிறது. இவர் அலகாபாத்தில் பிறந்தவர்.

 

 • ஆகஸ்ட் 29 = சர்வதேச அணு ஆயுத சோதனைக்கு எதிரான தினம் (INTERNATIONAL DAY AGAINST NUCLEAR TESTS)

Leave a Comment

Your email address will not be published.