TNPSC Current Affairs in Tamil August 2017-Part-6

புத்தகம்

 • RAGHU RAM RAJAN = I DO WHAT I DO : ON REFORM, RHETORIC & RESOLVE

இராணுவம்

 • இந்திய கடலோர காவல் படை கப்பல், “ஐ.சி.ஜி.எஸ் சௌர்யா” (ICGS SHAURYA), கப்பல், கொஆவில் வாஸ்கோ நகரில் முறைப்படி கப்பல் படையில் இணைக்கப்பட்டது.

 

 • அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்வான, Ulchi Freedom Guardian drill கொரிய கடல் பகுதிகளில் நடைபெற்றது.

மறைவு

 • பிரபல இந்துஸ்தானி இசை அமைப்பாளர் உஸ்தாத் ஹுசைன் சயதுத்தின் தாகர், புனே நகரில் காலமானார். துருபாத் வகை இந்துஸ்தானி வாசிப்பதில் வல்லவர் இவர்.

 

 • பிரபல மூலக்காறு உயிரியல் ஆராய்ச்சி விஞ்ஞானியான புஷ்ப மித்ரா பார்கவா காலமானார். இவர் ஹைதராபாத் நகில் உள்ள மூலக்கூறு மற்றும் செல்லியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக இருந்தவர் ஆவார்.

 

 • இந்தியாவின் பிரபல புகைப்பட கலைஞரான எஸ்.பால், புது தில்லியில் காலமானார். புகழ்பெற்ற இங்கிலாந்தின் பிரிட்டிஷ் புகைப்பட இதழில் பனுபுரிந்த முதல் இந்தியர் இவராவார்.

 

 • மணிபூர் மாநில முன்னாள் முதல்வர் ரிசங் கேயசிங், இம்பால் நகரில் காலமானார். இவர் இந்தியாவின் முதல் பாராளுமன்றத்தின் உருப்பினர் ஆவர்.

இடங்கள்

 • தேசிய கல்வி கொள்கை வரைவுக் குழுவுக்கான தொழில்நுட்பச் செயலகம், பெங்களூரு நாக் மைய வளாகத்தில் துவக்கப் பட்டுள்ளது

 

 • 15வது “பிம்ஸ்டெக்” (BIMSTEC – BAY OF BENGAL INITIATIVE FOR MULTI – SECTOR TECHNICAL AND COOPERATION) நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம், நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சுஸ்மா ஸ்வராஜ் கலந்துக் கொண்டார்.

 

 • 17வது “நிதிச் சமநிலை மற்றும் மேம்பட்டு கவுன்சிலின்” (FINANCIAL STABILITY AND DEVELOPMENT COUNCIL) கூட்டம் புது தில்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கம்

 • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து, “உலக தொழில்முனைவு உச்சி மாநாட்டை (GLOBAL ENTERPRENURSHIP SUMMIT)”, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் வரும் நவம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளன. இம்மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் அவர்களின் மகள் இவாங்கா ட்ரம்ப் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • “இந்திய – ஆசியான் இளையோர் உச்சி மாநாடு” (INDIA – ASEAN YOUTH SUMMIT), மத்தியப் பிரதேச மானியால்தின் போபால் நகரில் நடைபெற்றது (ASEAN – ASSOCIATION OF SOUTH EAST ASIAN NATIONS). ஆசியான் நாடுகளுடன் இந்தியாவின் 25 ஆண்டுகாள் உறவை கொண்டாடும் விதத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் கரு = SHARED VALUES, COMMON DESTINY

குழு

 • “மெய்டி” எனப்படும் இந்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.சாய் கிருஷ்ணன் தலைமையில், “தகவல் பாதுகாப்பு” (DATA PROTECTION ISSUES) தொடர்பான குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு, தகவல் பாதுகாப்பு தொடர்பான தனது அறிக்கையை விரைவில் அளிக்க உள்ளது.

 

 • பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, “நியாயமான சந்தைக் குறியீடுகளை” ஆராய்ந்து அறிக்கை அளிக்க, டி.கே.விஸ்வநாதன் தலைமையில் குழு ஒன்றினை அமைத்துள்ளது (SEBI constitutes TK Viswanathan committee on fair market conduct)

நியமனம்

 • சிண்டிகேட் வங்கியின் தலைவராக அஜய் விபின் நானாவதி அவர்களை அரசு நியமித்துள்ளது

 

 • சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் புதிய தலைவராக அனிதா கர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 • ரயில்வே வாரியத்தின் தலைவராக அஸ்வனி லோஹாணி அவர்களை மத்திய ரயில்வே அமைச்சகம் நியமித்துள்ளது

 

 • மும்பை பங்குச் சந்தையின் முதன்மை செயல் அதிகாரியான, ஆசிஸ் சவுகான், அவர்களுக்கு மீண்டும் பொறுப்பு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

 

 • “ஹான்டிகாப் இன்டர்நேஷனல்” எனப்படும் ஊனமுற்றோருக்காக பாடுபடும் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக, பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் 1992ம் ஆண்டு, பொது சேவைக்காக நோபல் பரிசை வென்றுள்ளது

 

 • ரயில்வே பாதுகாப்பு படையின் புதிய இயக்குனர் ஜெனரலாக திரு. தர்மேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 • இந்தியாவின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தீபக் மிஸ்ரா அவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார். இவர் நாட்டின் 45வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் தற்போது இவர் தான் மூத்த நீதிபதி. அடுத்த 13 மாதங்கள் இவர் இப்பதவியில் தொடர்வார்.

 

 • மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக பிரசான் ஜோஷி அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது

 

 • இந்திய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. தேர்தல் ஆணையம் 1 தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 தேர்தல் ஆணையரை கொண்டதாகும்

 

 • புதிதாக தேர்வு செய்யபப்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடின் நேரடி செயலாளராக திரு. ஐ.வி.சுப்பா ராவ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • தென் கிழக்கு ஆசிய நாடுகளில், உடல் ரீதியான செயல்பாடுகளை எடுத்துரைக்க ஏதுவாக, உலக சுகாதார அமைப்பு, முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் அவர்களை நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது

 

 • சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் முடிவுகள் வரும் வரை, இடைகால அதிபராக இந்திய பூர்வீகத்தை கொண்ட ஜோசெப் யுவராஜ் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • இந்தியாவின் 13வது துணைக் குடியரசுத் தலைவராக திரு வெங்கையா நாயுடு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறை தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரி, பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, இவர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் தலைவராக, மொகமது முஸ்தபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 • தமிழகத்தின் துணை முதல்வராக, ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
 • நிதி ஆயோக் அமைப்பின் புதிய துணை தலைவராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட உள்ளார். தற்போதைய துணைத் தலைவர் அரவிந்த் பணகாரியாவின் பதவி முடிந்த பின்பு இவர் பொறுப்பேற்பார். இவர் பொருளாதார பட்டதை லண்டன் ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்தில் பெற்றவர் ஆவார்.

 

 • இந்தியாவின் 13வது தலைமை கணக்காயராக, ராஜீவ் மேரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 12வது தலைமை கணக்காயர் = சசி காந்த் ஷர்மா

 

 • பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • உலக வங்கிக்கான இந்தியாவின் சார்பிலான “நிர்வாக இயக்குனராக”, குஜராத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.அபர்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் (Aparna appointed as Executive Director of World Bank)

Leave a Comment

Your email address will not be published.