TNPSC Current Affairs in Tamil August 2017-Part-7

திட்டம்

 • மத்திய அரசு, “இ-ரகம்” (இ – ராஸ்ட்ரிய கிசான் அக்ரி மண்டி) (e-Rashtriya Kisan Agri Mandi (e-RaKAM)) என்னும் பெயரில் புதிய இணையதள இயங்கு தளத்தை துவக்கி வைத்து, அதன் மூலம் விவசாயிகள் தங்களின் வேளாண் பொருட்களை விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளது. இணையத்தளம் வாயிலாக இந்தியாவின் சிறு விவசாயி கூட, தங்களின் பொருட்களை பெரிய நகரங்களின் விற்பனை செய்யலாம். இது போன்ற திட்டங்கள், இந்தியாவில் கொண்டுவரப்படுவது இதுவே முதன் முறையாகும்.

 

 • மத்திய அரசு, வேளாண்மைத் துறையில், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர்கள் போன்றவற்றை ஊக்கப்படுத்த ஏதுவாக, “அக்ரி உடான் – உணவு” மற்றும் “வேளாண் வணிக துரிதப்படுத்தி 2.௦(The Union Government is going to launch AGRI-UDAAN Food and Agribusiness Accelerator 2.0 programme in an attempt to promote innovation and entrepreneurship in agriculture) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் ஊரகப் பகுதியில் உள்ள இளைஞர்களின் கனவுகள், கண்டுபிடிப்புகள் போன்றவை இதன் மூலம் உலகிற்கு வெளிக்கொணரப்படும்.

 

 • வேலையில்லா இளைஞர்களுக்கு மானிய விலையில் வணிக ரீதியிலான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழங்கக்கூடிய வகையில், APNI GAADI, APNI ROJGAR என்ற திட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

 

 • உத்திரப் பிரதேச அரசு, கங்கை நதியை தூய்மையாக வைத்துக் கொள்ள ஏதுவாக “நமாமி கங்கே ஜக்ரிதி யாத்திரை” என்ற பெயரில் யாத்திரையை, அம்மாநில முதல்வர் லக்னோ நகரில் துவக்கி வைத்தார்.

 

 • மத்திய அரசு, “தீன்தயாள் அந்த்யோதன யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்” (DAY-NRLM = DEENDAYAL ANTYODHANA YOJANA – NATIONAL RURAL LIVELIHOODS MISSION) திட்டஹின் கீழ் துணைத் திட்டமாக, “அஜீவிகா கிராமீன் எக்ஸ்பிரஸ் யோஜனா” (AGEY – AJEEVIKA GRAMEEN EXPRESS YOJANA) என்ற திட்டத்தை விரைவில் கொண்டவர உள்ளது. இதன் நோக்கமானது, சுயஉதவிக் குழுக்களில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அதிகப் படுத்த ஏதுவாக பின்தங்கிய ஊரகப் பகுதியில் போக்குவரத்து சேவையை அதிகப்படுத்த இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

 

 • ஓடிஸா அரசு, முகநூல் (FACEBOOK) நிறுவனத்துடன் இணைந்து, அம்மாநிலத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் “SHE MEANS BUSINESS” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தின் சுமார் 25௦௦௦ பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
 • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், யானைகளை பாதுகாப்பதற்காக, தேசிய இயக்கமாக “கஜ யாத்திரை” (GAJ YATHRA) என்ற பெயரில் புதிய இயக்கத்தை துவக்கியுள்ளது. ஆகஸ்ட் 12, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, இவ்வியக்கம் துவக்கப்பட்டது.

 

 • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், “ஹரித் தீபாவளி, ஸ்வஸ்த் தீபாவளி” (GOVERNMENT LAUNCHES HARIT DIWALI, SWASTH DIWALI CAMPAIGN) என்ற புதிய இயக்கத்தை துவக்கி உள்ளது. இதன் நோக்கமானது தீபாவளி பண்டிகை காலங்களில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிப்பதாகும்.

 

 • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், “ஸ்வஸ்த் பச்சே, ஸ்வஸ்த் பாரத்” (SWASTH BACHCHE, SWASTH BHARAT) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் உள்ள கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில் பயின்று வரும் சுமார் 12 லட்சம் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் உடல் தகுதி பற்றிய விவரங்களை விவரங்களை சேகரிக்கும் நோக்கமே இத்திட்டத்தின் இலக்காகும் (THE PROGRAMME IS AN INITIATIVE OF KENDRIYA VIDYALAYA SANGATHAN (KVS) TO PREPARE A PHYSICAL HEALTH AND FITNESS PROFILE CARD FOR MORE THAN 12 LAKHS OF KENDRIYA VIDYALAYA STUDENTS)

 

 • நிதி ஆயோக் அமைப்பு, “வழிகாட்டும் இந்தியா இயக்கத்தை” (MENTOR INDIA CAMPAIGN) அறிவித்துள்ளது. இதன் நோக்கம், தலைவர்கள், அடல் வேலை ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலையும், வழிமுறைகளையும் எடுத்துக் கூறுவது ஆகும்.

ஒப்பந்தம்

 • இந்தியா மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

 

 • இந்தியா மற்றும் இதர பிரிக்ஸ் நாடுகள் இணைந்து, “பிரிக்ஸ் – வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை” (BRICS Agriculture Research Platform (BRICS-ARP) அமைக்க புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது ரசியாவின் உபா நடைபெற்ற 7வது பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது ஆகும்.

 

 • குஜராத் மாநிலத்தின் ஊரகப் பகுதி சாலைகளை மேம்படுத்துவதற்காக, சீனாவை தலைமையாக கொண்டு செயல்படும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இந்திய கடன் பெற ஒப்பந்தம் செய்துள்ளது

 

 • இந்திய ரயில்வேத் துறை தனது முதல் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனியார் எல் & டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது (The Indian Railways has signed its first EPC (engineering, procurement, construction) contract with Larsen and Toubro (L&T) for electrification of railway lines). இதன் மூலம் இந்திய ரயில்வேயில் மின்சார ரயில் சேவையை அதிகப்படுத்தி, எரிபொருள் சிக்கனம் மேற்கொள்ளப்படும். 1௦5௦ கோடி மதிப்புள்ள இத்திட்டத்தில் கொண்கன் ரயில்வேயில் உள்ள 781 கிலோ மீட்டர் மின்சார வழித்தடமாக மாற்றப்படும்.

 

 • இந்தியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இடையே, அறிவுசார் உடைமை துறைகளில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

குறியீடு

 • மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம், தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, “ஸ்வச் சர்வேக்ஷன் கிராமின் 2௦17” (SWACHH SARVEKSHAN GRAMIN 2017) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது ஊரக பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒரு ஆய்வு அறிக்கையாகும். “இந்திய தரக் கவுன்சில்” (QUALITY COUNCIL OF INDIA), நாடு முழுவதும் சுமார் 4626 கிராமங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
  • 645% வீடுகளில் கழிப்பறை உள்ளது.
  • ஸ்வச் பாரத் கிராம இயக்கம் மூலம் நாடு முழுவதும் சுமார் 4.54 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது
  • .இதுவரை 16௦ மாவட்டங்கள், 22௦1௦4 கிராமங்கள், 5 மாநிலங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நிலையை அடைந்துள்ளன.
  • அக்டோபர் 2௦16ல் 39% ஆக இருந்த சுகாதாரம், ஆகஸ்ட் 2௦17ல் 66% ஆக உயர்ந்துள்ளது
  • வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் 95% ஊரகப் பகுதிகளில் கழிப்பறை வசதி உள்ளது
  • உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்கள் 9௦% இலக்கை எட்டியுள்ளன
  • பெரிய மாநிலங்களில் கேரள மற்றும் ஹரியான கிட்டத்தட்ட முழு இலக்கை ஊரகப் பகுதிகளில் அடைந்து விட்டன. தமிழ்நாட்டில் 79% ஊரக பகுதிகளில் கழிப்பறை உள்ளது
  • மிக மோசமாக உள்ள மாநிலங்கள் = பீகார் (3௦%), உத்திரப் பிரதேசம் (37%), ஜார்கண்ட் (37%).

 

 • பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த நடிக்சிஸ் நிறுவனம் சார்பில் “2௦17 உலகளாவிய பணி ஓய்வுக் குறியீடு” (2017 GLOBAL RETIREMENT INDEX) வெளியிடப்பட்டது. இந்தியா இப்பட்டியலில் 43-வது இடத்தில் உள்ளது. பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள நாடுகள் = நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து. சென்ற ஆண்டும் இதே இடத்தை தான் இந்தியா பிடித்தது.

 

 • ‘2௦17 உலகளாவிய வாழக்கூடிய நகரங்கள்” (2017 GLOBAL LIVEABILITY INDES REPORT) குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உலகம் முழுவதும் இருந்து 140 பெரு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. “சுகாதாரம், கல்வி, நிலைத்தன்மை, கலாசாரம், சுற்றுச்சூழல் மற்றும் கட்டமைப்பு” ஆகியவற்றை எல்லைகளாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பட்டியலில் முதல் இடத்தில, ஆஸ்த்ரேலியாவின் மெல்பர்ன் நகரம் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் வியனா நகரமும் வான்கூவர் நகரமும் உள்ளன. தொடர்ந்து 7வது ஆண்டாங்க மெல்போர்ன் நகரம் முதல் இடத்தில உள்ளது. கடைசி இடத்தில “டமாஸ்கஸ்” நகரம் உள்ளது.

 

 • போர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் புதுமையான நிறுவனங்கள் (The World’s Most Innovative Companies) பட்டியலில் முதல் 3 இடங்களில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனம், டெஸ்லா நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனம் உள்ளன. இந்திய நிறுவனங்களான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் 7-வது இடத்தில உள்ளது. ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 8-வது இடத்தில உள்ளது.

Leave a Comment

Your email address will not be published.