TNPSC Current Affairs in Tamil December 2017-1

இந்தியா

 • மத்திய அமைச்சரவை, “தேசிய ஊட்டச்சத்து குழு” (NATIONAL NUTRITION MISSION) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 9௦௦௦ கோடி ரூபாய், இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் குழந்தைகள் இடையே, வளர்ச்சி குன்றல், ஊட்டச்சத்தின்மை போன்ற பிரச்சனைகளை குறைத்து, அவற்றை ஆண்டிற்கு 25 என்ற அளவில் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 • “சர்வதேச கடல்சார் அமைப்பின்” கவுன்சிலில் இந்தியா மீண்டும் உறுப்பினராக (INDIA RE-ELECTED TO COUNCIL OF THE INTERNATIONAL MARITIME ORGANISATION, LONDON) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைமையகம் லண்டன் நகரில் உள்ளது.
 • ஈரான் நாட்டின் சப்பார் துறைமுகம் (ஷாஹித் பேகஸ்தி துறைமுகம்), முதல் கட்ட பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஈரான் அதிபர் இதனை துவக்கி வைத்தார். இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து இதனை உருவாக்கின. இத்துறைமுகம், பாகிஸ்தானின் அருகே அமைந்துள்ளது. பாகிஸ்தானில் சீனா கட்டமைக்கும் குவாதார் துறைமுகத்திற்கு எதிராக, இந்தியா இத்துறைமுகத்தை கட்டமைக்க உதவுகிறது.
 • யுனஸ்கோ அமைப்பு, புகழ்பெற்ற இந்தியாவின் “கும்பமேளா” திருவிழாவை, “பாரம்பரிய கலாசாரப் பட்டியலில்” சேர்த்துள்ளது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறையில், மூன்று ஆண்டுக்கு ஒரு இடத்தில என்று ஹரித்வார், அலகாபாத், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களில் கும்பமேளா நடைபெறும். கும்பமேளா பற்றி முதன் முதலில் பாகவத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • “ட்டிரக்கோமா” (கண் இமை அரிப்பு நோய்), இல்லா நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது (INDIA DECLARED FREE FROM TRACHOMA BACTERIAL EYE INFECTION). இது பாக்டீரியா தொற்றால் ஏற்படக் கூடிய கண் நோய் ஆகும். தேசிய ட்டிரக்கோமா கணக்கெடுப்பு அறிக்கையின் மூலம், இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 • “ஐ.எம்.டி மோட்டார் வாகன ஒப்பந்தத்தில்” (INDIA – MYANMAR – THAAILAND MOTOR VEHICLE AGREEMENT) உள்ள படி, இந்தியா – மியான்மர் – தாய்லாந்து வரையிலான நெடுஞ்சாலை பணிகளை, ஆசியான் அமைப்பு நாடுகளுடன் கலந்து பேசி, அதனை வியட்நாம் வரை நீட்டிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவின் மோரே முதல் தாய்லாந்தின் மே-சாட் வரை உள்ள 136௦ கிலோமீட்டர் சாலையை, வியட்நாமின் எல்லை வரை நீடிக்க உள்ளது.
 • 4-வது இந்திய – ஆஸ்திரேலிய – ஜப்பான் நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை, புது தில்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர் கலந்துக் கொண்டார்.
 • நிதி ஆயோக் அமைப்பு, அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ், அடல் மேம்படுத்து ஆய்வக சமுதாய தினம் (ATAL TINKERING’S LAB COMMUNITY DAY) எனும் திட்டத்தை துவக்கி உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவை உருவாக்குவது ஆகும்.
 • தேசிய பசுமை தீர்ப்பாயம், கங்கை நதிக்கரை நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தட்டுகள், பைகள் போன்ற எவ்வித பிளாஸ்டிக் பொருட்களையும் விற்கவே, பயன்படுத்தவோ, பதுக்கி வைக்கவோ கூடாது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
 • மிசோராம் மாநிலத்தின் ஐஸ்வால் என்னும் இடத்தில, 6௦ மெகாவாட் உற்பத்தி செய்யும் புதிய “துய்ரியால் நீர்மின் நிலையம்” (TUIRIAL HYDROPOWER PROJECT) திட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இது அம்மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதன் மூலம் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக மிசோராம் உருவெடுக்கும்.
 • சமிபத்தில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அறிக்கையில், உலகில் அதிகம் புலம் பெயர்வோர்களில், இந்தியர்களே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது (INDIA HAS LARGEST DIASPORA POPULATION IN THE WORLD). வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 16 மில்லியன் ஆகும். உலகம் முழுவதும் இடம் பெயர்ந்த்தோர்களில் 6% பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்தியாவிற்கு அடுத்தப் படியாக மெக்சிகோ நாட்டினர் இரண்டாவது இடத்தில உள்ளனர். மூன்றாவது இடத்தில ரசியா உள்ளது. இந்தியர்கள் அதிக அளவு இடம் பெயர்ந்த நாடு, ஐக்கிய அரபு எமிரகம் ஆகும். உலக மக்கள் அளவில், அதிகம் இடம் பெயர்ந்தோர் சென்ற தேசம் அமெரிக்க ஆகும்.
 • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் லோசர் திருவிழா நடைபெற்றது. இமயமலை பகுதியில், புதிய ஆண்டு துவக்கத்தை வரவேற்கும் வகையில், இந்த பாரம்பரிய திருவிழா நடைபெறுகிறது. லோசர் என்ற திபெத்திய வார்த்தைக்கு, புதிய ஆண்டு என்று பொருள்.
 • வருகின்ற மார்ச் 2018க்குள், நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் 1௦௦% எல்.இ.டி விளக்குகளை கொண்டு பராமரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், ஆண்டுக்கு சுமார் 180 கோடி ரூபாயிக்கு மின்சார கட்டணம் மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • நிதி ஆயோக் அமைப்பு, “மெத்தனால் வணிக நிதிமையத்தை” அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூல தூய்மையான, சுற்றுப்புற மாசு குறைவான எரிபொருளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்காக தனி ஆலைகளை அடுத்த மூன்று ஆண்டுக்குள் அமைக்க உள்ளது.
 • வாசினியார் கூட்டமைப்பில் (WASSENAAR ARRANGEMENT) இந்தியா, 42-வது நாடாக இணைந்துள்ளது. பொதுமக்கள் நலத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது தொழில்நுட்பம் போன்றவற்றை, ராணுவத்திலும் பயன்படுத்துவது தொடர்பான ஒழுங்குமுறையை உருவாக்கும் அமைப்பே, வாசினியார் கூட்டமைப்பு ஆகும்.
 • இந்திய கடற்படை இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்ட இரண்டாவது கட்ட, கடலின் புவியியல் (joint oceanographic survey) சார்ந்த கணக்கெடுப்பை, இலங்கையின் தெற்கு பகுதியில் நடத்தியது. கடலுக்கு அடியில் 2௦௦ மீட்டர் ஆழம் வரை சென்று இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
 • கர்நாடகா மாநிலத்தில் உள்ள தீர்த்தஹள்ளி தாலுக்காவில், “குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசநூர் காட்டு நோய்” (MONKEY FEVER (OR) KYASANUR FOREST DISEASE) எனப்படும் நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வைரஸ் நோயாகும். இது முதன் முதலில் 1957மக் ஆண்டு கர்நாடகத்தின் கியாசநூர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
 • சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகம் செய்யப்பட்ட் 5 மாதங்களில், மகாராஷ்டிரா மாநிலம் அதிக வரியை ஈட்டி, இந்தியாவில் முதல் மாநிலமாக உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில, தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளன.
 • 2௦17 கோனார்க் நடனத் திருவிழா, கோனார்க்கின் சூரியக் கோயில் வளாகத்தில் நடைபெற்றது
 • இந்திய தேசிய தலைநகர் பகுதியுடன், உத்திரப் பிரதேசத்தின் ஷமாளி மாவட்டம் சேர்க்கப் பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தேசிய தலைநகர் பகுதியில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
 • இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் ஆலை, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் உள்ள பானாசுரா சாகர் அணையில் நிறுவப்பட்டுள்ளது. 5௦௦ கிலோவாட் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது இந்த ஆலை.
 • ராஜஸ்தான் மாநில அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், “குரு – சிஷ்யன்” திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதாவது, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழக நிர்வாகம் போன்ற தொடர்புடைய பிரச்சனைகளை ஆசிரியர்களுடன் கலந்துரையாட வைத்தாலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
 • பிரதமர் மோடி அவர்கள், புது தில்லியில் “பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை” (B.R. AMBEDKAR INTERNATIONAL CENTRE) துவக்கி வைத்தார். இளைஞர்கள் இடையே ஆராய்ச்சி மற்றும் சுய சிந்தனை மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.
 • சர்வதேச சுற்றுலா நிறுவனமான, “ட்ரிப் அட்வைசர்” நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகம் விரும்பப்படும் 2-வது யுனஸ்கோ பாரம்பரிய இடம், தாஜ் மகால் ஆகும். முதல் இடத்தில கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலான அங்கோர் வாட் உள்ளது.
 • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட முகமை வெளியிட்டுள்ள திடக் கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் உலகின் சிறந்த 5 நகரங்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து கேரள மாநிலத்தின் ஆலப்புழா நகரம் இடம் பெற்றுள்ளது. கிழக்கின் வெனிஸ் எனப்படும் நகரம் ஆலப்புழா ஆகும்.
 • வேதங்கள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் (WORLD CONFERENCE ON VEDAS), “விஸ்வ வேத சம்மேளனம்” என்ற பெயரில், புது தில்லியில், துணைக் குடியரசுத் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
 • உத்திரப் பிரதேசத்தின் மதுரா நகரில், “கீதை ஆராய்ச்சி கழகம்” (GITA RESEARCH INSTITUTE) அமைக்கப்பட்டுள்ளது. இது பாகவது கீதை தொடர்பான ஆய்வை மேற்கொள்கிறது.
 • “2௦17 இந்திய அமெரிக்க அழகியாக” (2017 MISS INDIA USA), அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஸ்ரீ சாய்னி, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • 7-வது இந்திய சர்வதேச காபி திருவிழா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கர்நாடகத்தின் பெங்களூரு நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • தாய்லாந்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசியாவிலேயே அதிக வேலையின்மை நிலை, இந்தியாவில் தான் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் வேலையின்மை நிலை 8% உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இது 1.3% உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

TNPSC Current Affairs in Tamil December 2017-1

TNPSC Current Affairs in Tamil December 2017-2

TNPSC Current Affairs in Tamil December 2017-3

TNPSC Current Affairs in Tamil December 2017-4

TNPSC Current Affairs in Tamil December 2017-5

TNPSC Current Affairs in Tamil December 2017-6

TNPSC Current Affairs in Tamil December 2017-7

Leave a Comment

Your email address will not be published.