TNPSC Current Affairs in Tamil December 2017-2

தமிழ்நாடு

 • இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி பகுதியில், “சிறப்பு மலர் வளர்ப்பு மையத்தை” (CENTRE FOR EXCELLENCE IN FLORI CULTURE) நிறுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டு உதவியுடன், அமைக்கப்படும் முதல் வேளாண் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் இதுவாகும். கிருஷ்ணகிரி மாவட்ட தளியில் மலர் வளர்ப்பு மையமும், திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறி மையமும் அமைய உள்ளன.
 • 2௦17 சாகித்ய அகாடெமி விருதுகள் அறிவிக்கப் படுல்லத்தில், தமிழ் மொழி பிரிவில், இந்த ஆண்டு, இன்குலாப் அவர்களின் “காந்தள் நாட்கள்” என்னும் கவிதை நூலிற்கு வழங்கப்பட்டுள்ளது.
 • 32-வது இந்திய பொறியியல் காங்கிரஸ் கூட்டம், தமிழகத்தின் சென்னை நகரில் நடைபெற்றது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துக் கொண்டார்.
 • தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, சமூக ஆர்வலரும் குழந்தைகள் உரிமை ஆர்வலருமான செழியன் ராமுவிற்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், “ராஜி காந்தி மனவ் சேவா விருதை” வழங்கி கவுரவித்தார்.

சர்வதேசம்

 • வெனிசுலா நாடு, அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மெய்நிகர் பணத்தை, “பெட்ரோ” (VENZUELA’S NEW CRYPTOCURRENCY, “PETRO”) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை இந்த மெய்நிகர் பணம் உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, “ஜெருசலேம்” நகரை அமெரிக்க அங்கீகரித்துள்ளது. தந்து தூதரகத்தை டெல்அவிவ் நகரில் இருந்து ஜெருசலம் நகருக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகள பல, இந்த முடிவை எதிர்த்துள்ளன. மேலும் ஐக்கிய நாடுகள் அவையும், இந்த முடிவை நிராகரித்துள்ளது.
 • ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள “கபோன்” தேசம், போலியோ நோய் இல்லாத நாடாக, உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. போலியோ வைராசால் பரவும் நோய் ஆகும்.
 • உலகின் மிகப்பெரிய நீர்-நில விமானத்தை (WORLD’S LARGEST AMPHIBIOUS AIRCRAFT), சீனா உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. AG-600 (KUNLONG) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், நிலத்தில் இருந்தும், நீரில் இருந்தும் புறப்படும் தன்மை கொண்டது. தொடர்ந்து 12 நேரம் பயணிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.
 • 2040ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு பொருட்கள் போன்ற எவ்வித உற்பத்தியும் மேற்கொள்ளக் கூடாது என பிரான்ஸ் நாடு, தடை விதித்துள்ளது.
 • உலகின் உயரமான மற்றும் நீளமான கண்ணாடி பாலம், சீனாவில் உள்ள சியாங்க்சாங் மாகாணத்தில் திறக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது 218 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 • புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி நிறுவனம், “இந்த ஆண்டின் வார்த்தையாக”, “யூத் குவாக்” (YOUTHQUAKE) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. இதன் பொருளானது, இளைஞர்கள் செயல்கள் மூலம் ஏற்படும் குறிப்பிடத்தக்க கலாச்சார, அரசியல் சமூக மாற்றங்கள் போன்றவற்றை குறிக்கிறது.
 • புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் அகராதி நிறுவனம், 2௦17ம் ஆண்டின் வார்த்தையாக, “பாப்புலிசம்” (POPULISM) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. இதன் பொருள், தேவைகளை அறிந்து அதனை கொடுத்து, அதன் மூலம் மக்களின் ஆதரவுகளை பெறும் செயல்பாடு ஆகும்.
 • “ஹீங்கா டோங்கா” என்னும் புதிய தீவு ஆஸ்திரேலியாவிற்கு அருகே, எரிமலை வெடிப்பின் காரணமாக அதன் சாம்பலில் இருந்து புதிய தீவாக உருவாகியுள்ளது. 65 கிலோமீட்டர் அகலத்திற்கு இத்தீவு உருவாகி உள்ளது.
 • இங்கிலாந்து நாட்டின் மிக உயரமான மலையாக இருந்த ஜேக்சன் மலையை காட்டிலும், ஹோப் மலை சுமார் 400 மீட்டர் உயரமாக உள்ளதை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். எனவே தற்போதைய தகவல் படி, இங்கிலாந்தின் உயரமான மலையாக மவுன்ட் ஹோப் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • போலந்து நாட்டில் நடைபெற்ற, மிஸ் சூப்பர் நேசனல் 2௦17 அழகிப் போட்டியில், தென் கொரியாவை சேர்ந்த ஜென்னி கிம் வெற்றி பெற்று, “உலக எல்லை கடந்த அழகி” என்ற பட்டத்தை வென்றார். 2௦16ம் ஆண்டு இவ்விருதினை இந்தியாவை சேர்ந்த ஸ்ரீநிதி ரமேஸ் என்பவர் வென்றிருந்தார்.
 • எதிர்காலத்திற்கு துல்லிய அளவில் நோய்களை குணப்படுத்துத் தன்மையுடைய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கென உதவி புரிவதற்காக வேண்டி ஒரு லட்சம் மக்களின் மரபணு கட்டமைப்பை ஆவணமிடுவதற்காக, உலகின் மிகப்பெரிய மனித மரபணு தொகுதியை சீனா உருவாக்கி வருகிறது.
 • யுனஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறி உள்ளதை தொடர்ந்து, இஸ்ரேலும் வெளியேற உள்ளது.
 • பாகிஸ்தான் நாடு, அந்நாட்டின் பண மதிப்பை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

TNPSC Current Affairs in Tamil December 2017-1

TNPSC Current Affairs in Tamil December 2017-2

TNPSC Current Affairs in Tamil December 2017-3

TNPSC Current Affairs in Tamil December 2017-4

TNPSC Current Affairs in Tamil December 2017-5

TNPSC Current Affairs in Tamil December 2017-6

TNPSC Current Affairs in Tamil December 2017-7

Leave a Comment

Your email address will not be published.