TNPSC Current Affairs in Tamil December 2017-3

விளையாட்டு

  • ஜப்பானின் வைகோ நகரில் நடைபெற்ற 1௦வது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியா 6 தங்கப் பதக்கம் உட்பட 21 பதக்கங்களை வென்றது.
  • தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற 13வது காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியா 29 தங்கம் உட்பட மொத்தம் 6௦ பதக்கங்களை வென்றது
  • ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற 2௦16 – 17 ஆண்கள் எப்.ஐ.எச் ஹாக்கி உலக லீக் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது. மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்தது.
  • 2௦22ம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.
  • அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் நடைபெற்ற 42-வது ஜூனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டிகள், நிறைவு பெற்றது.
  • 61வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்சிப் போட்டிகள், கேரளாவின் திருவனந்த புரத்தில் நடைபெற்றது.
  • அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் நடைபெற்ற முதல் தெற்காசிய வட்டாரப் பாட்மிண்டன் சாம்பியன் சிப் போட்டிகளில், இந்திய அணி, நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • 13வது கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள், இந்தியாவில் 2௦23ம் ஆண்டு நடைபெறுகிறது.
  • சவூதி அரேபியாவில் நடைபெற்ற உலக விரைவு செஸ் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த், ரசிய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்
  • சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், மூன்று முறை 2௦௦ ரன்களுக்கு மேல் முதல் வீரர் என்ற சிறப்பை, இந்தியாவின் ரோகித் ஷர்மா பெற்றுள்ளார்.
  • சர்வதேச ஒரு நாள் கிர்க்கெட் போட்டிகளில், 1௦௦ ஒரு நாள் போட்டிகளில் 3௦௦ ரன்களுக்கு மேல் அடித்த உலகின் முதல் கிரிக்கெட் அணி என்ற சிறப்பை இந்திய அணி பெற்றுள்ளது.
  • சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து, பிரபல் பிரேசில் அணி கால்பந்து வீரர் காகா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
  • இந்திய குத்துச்சண்டை அமைப்பின் தேசிய பார்வையாளராக இருந்து மேரி கோம், தந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்
  • 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நியுசிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணிக்கு மும்பையை சேர்ந்த ப்ரித்வி ஷா அணித் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2௦22 பீஜிங் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான, சின்னங்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு WINTER DREAM என்றும், பாரா ஒலிம்பிக் போட்டிக்கு FLIGHT என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 5-வது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான, “போலன் தோர்” விருதினை, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியான ரொனால்டோ பெற்றார்.

முதன் முதல்

  • உடல் ஊனமுற்றோர்கான உலகின் முதல் தகவல் தொழில்நுட்ப வளாகம் (WORLD’S FIRST INFORMATIONA ND TECHNOLOGY CAMPUS FOR DIFFERENTLY ABLED PERSONS), தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் 3, சர்வதேச உடல் குறைபாடுகள் உள்ளோர் தினத்தில், இதற்கான ஒப்பந்தத்தை தெலுங்கான மாநில அரசு, இறுதி செய்தது.
  • “ஆரோக்யா 2௦17” (AROGYA 2017 : FIRST INTER NATIONAL EXHIBHITION AND CONFERENCE ON AYUSH), ஆயுஸ் துறையின் முதல் சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் புது தில்லியில் நடைபெற்றது. ஆயுஸ் அமைப்பில் உள்ளடங்கிய சித்த, ஆயுர்வேதம், யோகா போன்றவற்றை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இக்கருத்தரங்கின் கரு = ENHANCING THE GLOBAL POTENTIAL OF AYUSH
  • மத்தியப் பிரதேச மாநில அரசு, அம்மாநில சட்டமன்றத்தில் 12 வயது மற்றும் அதற்கும் குறைவான பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கும் நபர்களுக்கு சாகும் வரை தூக்கு விதிக்கும் தண்டனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது போன்ற தண்டனையை சட்டமன்றத்தில் இயற்றிய நாட்டின் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் விளங்குகிறது.
  • “விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டு அறிவியல் தொடர்பான முதல் சர்வதேச கருத்தரங்கம், “சைக்கண் 2௦17”” (SAICON 2017), புது தில்லியில் நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் இக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் கரு = SCORING GOALS IN SPORTS WITH SCIENCE AND TECHNOLOGY
  • இந்தியாவின் முதல் ஆற்றல் திறன்மிக்க “ஏ1 ரக” ரயில்வே நிலையம் (INDIA’S FIRST ENERGY EFFICIENT RAILWAY STATION), தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள கச்சேகுடா ரயில்வே நிலையம் ஆகும். மின்சார சிக்கனம் மேற்கொண்டு, ஆண்டுக்கு சுமார் பதினான்கு இலட்ச ரூபாய் அளவிற்கான மின்சாரத்தை சேமித்துள்ளது.
  • இந்தியாவின் முதல் நடமாடும் உணவு சோதனை ஆய்வுக்கூடம் (INDIA’S FIRST MOBILE FOOD TESTING LAB), கோவா மாநிலத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மொபைல் சோதனை வாகனத்தில், உடனடியாக உணவு மாதிரிகள் சோதிக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்படும்.
  • இந்தியாவின் முதல் மின்னணுவியல் உற்பத்தி ஆலைகள் மையம் (INDIA’S FIRST ELECTRONIC MANUFACTURING CLUSTER), ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைய உள்ளது. இங்கு மொபைல் சாதனங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பிற சாதனங்கள் உற்பத்தி செய்யப்படும். ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான, அமராவதியில் இந்த ஆலைகள் அமைய உள்ளன.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே, “முதல் 2 + 2 பேச்சுவார்த்தை” (2 + 2 DIALOGUE), புது தில்லியில் நடைபெற்றது. ஆசிய பசிபிக் பகுதியில் சுதந்திரம் மற்றும் வெளிப்படை தன்மை கொண்ட உறவு முறைகள் வளரப்பட வேண்டும் நோக்கில் இது நடத்தப்பட்டது. இரு நாட்டின் வெளியுறவுத் துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.
  • இணையதளத்தின் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வசதியில் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே முகவரி இருந்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநில அரசு, இந்தி மொழியில் மின்னஞ்சல் (INDIA’S FIRST STATE TO PROVIDE E-MAIL ID IN HINDI SCRIPT) முகவரியை பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. தேவநாகிரி வரிவடிவில் உருவாக்கப் பட்டுள்ளது. உள்ளூர் வட்டார மொழியில் இணையதள பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்கார்ப்பியன் வகுப்பு கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரியை (INS KALVARI – INDIA’S FIRST SCORPENE CLASS SUBMARINE) மும்பையிலுள்ள கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு பிரதமர் அர்பணித்தார். டீசல் எலெக்ட்ரிக் எஞ்சினால் செலுத்தப்படும் ஸ்கார்பியன் வகை கப்பல்களில் “டர்பீடோ” என்னும் நீர்மூழ்கி குண்டுகள் முதன்மை ஆயுதங்களாக உள்ளன.
  • “இந்தியாவில் முதல் சமூக தணிக்கை சட்டம்” (INDIA’S FIRST SOCIAL AUDIT LAW), மேகாலயா மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்ந்து தணிக்கை செய்யும் விதத்தில், இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகத்தை (INDIA’S FIRST RAIL AND TRANSPORTATION UNIVERSITY), குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைக்க, ரயில்வே அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக தனி ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட உள்ளன.
  • இந்தியாவின் முதல் வடிவமைப்பு பல்கலைக்கழகம், ஹரியானா பணிலத்தின் சோனிபட் நகரில் துவக்கப்பட்டுள்ளது. இதற்கு WORLD UNIVERSITY OF DESIGN எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • பாரதிய நிர்தேசக் திரவியா என்ற இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் உயர்தர தங்க மதிப்பிற்கான குறியீட்டு மதிப்பு மும்பையின் இந்திய அரசு அச்சகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான குறியீடு BND – 4201 (BHARATHIYA NIRDESHAK DRAVYA) ஆகும். இது 99.99% சுத்தமானதாகும்.
  • இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட அகலப் பாதை புற நகர் ரயில் வண்டி (INDIA’S FIRST EVER BROAD GUAGE AIR CONDITIONED AC SUBURBAN TRAIN) சேவை மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இங்கிருந்து சர்ச்கேட் பகுதி வரை இது இயக்கப்படுகிறது.
  • இந்தியாவின் முதல் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகம் (INDIA’S FIRST MADAME TUSSADS WAX MUSEUM AT NEW DELHI), புது தில்லியில் துவக்கப்பட்டுள்ளது. வரலாறு, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைதவறலின் மெழுகு உருவச்சிலை இங்கு நிறுவப்பட உள்ளது.
  • மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற 2௦17 உலக பாரா நீச்சல் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரை சேர்ந்த காஞ்சனமாலா பாண்டே, தங்கம் வென்றார். இப்போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். இவர் கண் பார்வை அற்றவர் ஆவார். இந்தியாவில் இருந்து பெண்கள் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனை இவராவார்.
  • எப்.எம் எனப்படும் அதிர்வெண் அலைவரிசியில் நிகழ்சிகள் வழங்குவதை முற்றிலும் தடை செய்துள்ள உலகின் முதல் நாடு நார்வே ஆகும். டிஜிட்டல் முறைக்கு கொண்டுவருவதற்கு ஏற்ப இதனை அந்நாடு தடை செய்துள்ளது.
  • கிழக்கிந்திய மாநிலங்களின் முதல் இயற்கை வாயு நிரப்பும் இருசக்கரவாகனி எரிபொருள் மையம், ஓடிஸா மானியால்தின் புவனேஸ்வர் மற்றும் பாட்டியா நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
  • பெங்களூரு நகரம், தனக்கென்று தனி அடையாள சின்னத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், தனி அடையாள சின்னத்தை உருவாக்கியுள்ள இந்தியாவின் முதல் நகரம் பெங்களூரு ஆகும்.
  • உலகின் பிரபல் தேடுதல் பொறியான கூகுள் நிறுவனம், இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரான, ஹோமை வியரவல்லா அவர்களின் 104-வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அவருக்கு சிறப்பு டூடுளை வெளியிட்டது.

TNPSC Current Affairs in Tamil December 2017-1

TNPSC Current Affairs in Tamil December 2017-2

TNPSC Current Affairs in Tamil December 2017-3

TNPSC Current Affairs in Tamil December 2017-4

TNPSC Current Affairs in Tamil December 2017-5

TNPSC Current Affairs in Tamil December 2017-6

TNPSC Current Affairs in Tamil December 2017-7

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.