TNPSC Current Affairs in Tamil December 2017-4

நாட்கள்

  • டிசம்பர் 1 = எல்லை பாதுகாப்பு படை துவக்க தினம். எல்லை பாதுகாப்பு படை 1965ம் ஆண்டு துவக்கப்பட்டது. 52-வது துவக்க தினம், கொண்டாடப்பட்டது.
  • டிசம்பர் 1 = உலக எயிட்ஸ் தினம். உலக முழுவதும் இந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கரு = RIGHT TO HEALTH
  • டிசம்பர் 2 = சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
  • டிசம்பர் 3 = உடல் குறைபாடுகள் உள்ளோருக்கான சர்வதேச தினம். இந்த ஆண்டிற்கான கரு = TRANSFORMATION TOWARDS SUSTAINABLE AND RESILENT SOCIETY FOR ALL
  • டிசம்பர் 4 = கடற்படை தினம். 46-வது கடற்படை தினம், நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. 1971ம் ஆண்டு, “ட்ரைடன்ட் நடவடிக்கை” மூலம் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை அழித்து, பாகிஸ்தானின் நான்கு கப்பலை மூழ்கடித்த தினத்தை கொண்டாடும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • டிசம்பர் 5 = உலக மண் தினம். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் மூலம் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு, ஆரோக்ய வாழ்விற்கு, மண் தரத்தை அறிந்து கொள்வது அவசியமாகும்.
  • டிசம்பர் 7 = படை வீரர்கள் கொடி நாள் தினம். வீரர்களுக்காக “நல நிதி வாரியத்தை” அமைக்க முடிவு செய்த அரசு, 1949ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதியை கொடிநாளாக அறிவித்தது.
  • டிசம்பர் 7 = சர்வதேச உள்நாட்டு விமான போக்குவரத்து தினம். இந்த ஆண்டிற்கான கரு = WORKING TOGETHER TO ENSURENO COUNTRY IS LEFT BEHIND
  • டிசம்பர் 9 = ஊழலுக்கு எதிரான சர்வதேச தினம். ஊழல், இலஞ்சம் போன்றவற்றிற்கு எதிராக மக்களை விழிப்புணர்வை அடைய வைதல்லே இந்நாளின் நோக்கமாகும். இந்த ஆண்டிற்கான கரு = UNITED AGAINST CORRUPTION FOR DEVELOPMENT, PEACE AND SECURITY
  • டிசம்பர் 1௦ = உலக மனித உரிமைகள் தினம். இந்த ஆண்டிற்கான கரு = LET’S STAND UP FOR EQUALITY, JUSTICE AND HUMAN DIGNITY. 195௦ம் ஆண்டு முதல் மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • டிசம்பர் 11 = சர்வதேச மலை தினம்
  • டிசம்பர் 12 = சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம்
  • டிசம்பர் 14 = தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம்
  • டிசம்பர் 16 = வெற்றி தினம்
  • டிசம்பர் 18 = சர்வதேச இடம்பெயர்வோர் தினம். இடம்பெயர்வோர் தொடர்பான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்றவற்றை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இந்நாளின் நோக்கமாகும்.இந்த ஆண்டிற்கான கரு = SAFE MIGRATION IN A WORLD ON THE MOVE
  • டிசம்பர் 18 = பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு தினம்.
  • டிசம்பர் 2௦ = சர்வதேச மனித சகிப்புத் தன்மை தினம்
  • டிசம்பர் 22 = தேசிய கணித தினம்
  • டிசம்பர் 23 = விவசாயிகள் தினம்
  • டிசம்பர் 25 = நல் ஆளுமை தினம். முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், இத்தினம் அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரம்

  • பிரம்மோஸ் ஏவுகணையின், ஏரிபொருள் காற்று சட்டக உற்பத்தி ஒப்பந்தத்தை, கோத்ரேஜ் விமானதயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.
  • இந்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள், இந்த ஆண்டு 1.88 இலட்சம் வருமான வரியாக கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மறைவு

  • புகழ்பெற்ற பிரபல பாலிவுட் நடிகர், “சசி கபூர்” மும்பையில் காலமானார். அவருக்கு வயது 79. சிறுநீரக இழப்பின் காரணமாக அவர் மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • “இந்திய டி.என்.ஏ கைரேகை தடைய அறிவியலின் தந்தை” (FATHER OF DNA FINGERPRINTING IN INDIA) எனப்படும் லால்ஜி சிங் காலமானார். அவருக்கு வயது 7௦.
  • ஓடிசாவின் ஜயாபூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீராங்கனையும், காந்தியவாதியுமான சரஸ்வதி திரிபாதி, காலமானார்.

TNPSC Current Affairs in Tamil December 2017-1

TNPSC Current Affairs in Tamil December 2017-2

TNPSC Current Affairs in Tamil December 2017-3

TNPSC Current Affairs in Tamil December 2017-4

TNPSC Current Affairs in Tamil December 2017-5

TNPSC Current Affairs in Tamil December 2017-6

TNPSC Current Affairs in Tamil December 2017-7

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.