TNPSC Current Affairs in Tamil December 2017-5

குறியீடு

 • இணையதள வேகத்தை அளந்துக் கூறும் பிரபல, “ஊக்லா” நிறுவனம் “உலகளாவிய வேகச் சோதனை குறியீடு”-ஐ (2017 SPEED TEST GLOBAL INDEX) வெளியிட்டுள்ளது. மொபைல் இணையதள வேகத்தில் 122 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 1௦9-வது இடத்தை பிடித்துள்ளது. அகண்ட அலைவரிசை இணையதள வேகத்தில் 133 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா 76-வது இடத்தை பிடித்தது. மொபைல் இணையதள வேகத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த நாடுகள் = நார்வே, நெதர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகும். பிராட்பேன்ட் இணையதள வேகத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த நாடுகள் = சிங்கப்பூர், ஐஸ்லாந்து மற்றும் ஹாங்காக் ஆகும்.
 • லண்டன் நகரை சேர்ந்த “லெகாட்டம்” நிறுவனம் வெளியிட்டுள்ள, “லெகாட்டம் செழிப்புக் குறியீடு 2௦17” (THE LEGATUM PROSPERITY INDEX 2017) பட்டியலில் மொத்தம் 149 நாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டின் செழிப்பிற்கான அடிப்படை காரணத்தையும் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியா 1௦௦-வது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதார தரம், ஆட்சி முறை, வணிக சூழல், தனிநபர் சுதந்திரம் போன்ற பல்வேறு காரணிகளை கொண்டு இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் 3 இடங்களை கொண்ட நாடுகள் = நார்வே, நியுசிலாந்து மற்றும் பின்லாந்து ஆகும்.
 • பிரபல போர்ப்ஸ் இதழ், இந்த ஆண்டின் சிறந்த தொழில் நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 153 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 62வது இடத்தையும், சீனா 66-வது இடத்தையும் பிடித்துள்ளன. முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து, நியுசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

ஒப்பந்தம்

 • இந்தியா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இடையே, மருத்துவ துறையில் இணைந்து பணியாற்றிட, இரு நாட்டு அரசுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 • நீர் பயன்பாடு, சாலை மற்றும் கடல் சார்ந்த துறைகளில் இந்தியாவும் மொராக்கோவும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • மியான்மர் நாட்டில் இருந்து ரோகிங்கயா முஸ்லிம்கள் வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டின் ராகினே மாகாணத்தில், வளர்ச்சி பணிகளை செய்து தர, இந்தியா மற்றும் மியான்மர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அறிவியல்

 • பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, “நாக்சனோ” (“NOXENO”, A NASAL FOREIGN BODY REMOVAL DEVICE) என்ற கருவியை, அரசு அறிமுகம் செய்துள்ளது. இது முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. சிறு குழந்தைகளின் மூக்கினில் உள்ளேறும் வெளியுலக பொருட்களை, மிகவும் எளிதாக இதன் மூலம் எடுத்து விடமுடியும்.
 • இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், புதிய வகை பருப்பொருள் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு “எக்சிடோனியம்” (EXCITONIUM – A NEW FORM OF MATTER) எனப் பெயரிட்டுள்ளனர். இப்பெயரை முதன் முதலில் கூறியவர் பெர்ட் ஹால்பர் ஆவார்.
 • உலகின் மிகப்பெரிய தானியங்கி சரக்கு பெட்டக முனையம் (WORLD’S LARGEST AUTOMATED CONTAINER TERMINAL), சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில், செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் வேகமாகவும், துல்லியமாகவும் சரக்கினை கையாள முடியும் என்றும், 1௦% கார்பன் பயன்பாட்டை குறைக்க முடியும்.
 • ஹைதராபாத் நகரில் சர்வதேச செயல்பாட்டு கடலியல் (ITCOO – INTERNATIONAL TRAINING CENTRE FOR OPERATIONAL OCEANOGRAPHY) பயிற்சி மையத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுனஸ்கோ அமைப்பின் இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு இந்த மையம் பெறும் உதவியாக இருக்கும் என் யுனஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
 • இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள தல்லே வனவிலங்கு சரணாலயத்தில், புதிய வகை தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ODORRANA ARUNACHALENSIS எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 • விஞ்ஞானிகள் புதிய வகை “தேள்” இனத்தை திரிபுரா மாநிலத்தின் திருஷ்ணா வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு SCHALLER’S WOOD SCORPION (LIOCHELES SCHALLERI) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 • ப்ளுடோ எக்ஸ்செஞ் என்ற நிறுவனம், வணிக நோக்கத்திற்கான இந்தியாவின் முதல் பிட்காயின் செயலியை (INDIA’S FIRST BITCOIN TRADING APPLICATION) அறிமுகம் செய்துள்ளது.
 • கூகுள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சி ஆய்வகத்தை, சீனாவின் பீஜிங் நகரில் நிறுவி உள்ளது.

TNPSC Current Affairs in Tamil December 2017-1

TNPSC Current Affairs in Tamil December 2017-2

TNPSC Current Affairs in Tamil December 2017-3

TNPSC Current Affairs in Tamil December 2017-4

TNPSC Current Affairs in Tamil December 2017-5

TNPSC Current Affairs in Tamil December 2017-6

TNPSC Current Affairs in Tamil December 2017-7

Leave a Comment

Your email address will not be published.