TNPSC Current Affairs in Tamil December 2017-6

நியமனம்

 • மத்திய காபினட் குழு, “பெட்ரோலியம் மற்றும் இயற்க்கை வாயு ஒழுங்குமுறை வாரியத்தின்”, புதிய தலைவராக தினேஷ் கே சராப் என்பவரை நியமனம் செய்துள்ளது.
 • இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் புதிய பொது மேலாளராக, முன்னாள் கிரிக்கெட் வீரர், சபா கரீம் நியமிக்கப் பட்டுள்ளார்.
 • லோக்சபாவின் புதிய செகரெட்டரி ஜெனரலாக சிநேகலதா ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்
 • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனராக உமா ஷங்கர் பொறுப்பேற்றுள்ளார்.
 • “சர்வதேச புத்தமத கூட்டமைப்பின்” (INTERNATIONAL BUDDHIST CONFEDERATION – IBC) புதிய பொது செயலாளராக, திரிபுரா மாநிலத்தை சேர்ந்த புத்த துறவி, “தம்மபியா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • ஹைதராபாத் நகரில் உள்ள இந்திய ஊட்டச்சட்டு கழகத்தின் புதிய இயக்குனராக, ஆர்.ஹேமலதா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக, நீதிபதி உமேஷ் தத்தத்ராயா சல்வி, நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • தேசிய மாணவர் படையின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.ஷராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக, நரேந்திர பத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

மாநாடு

 • “11வது உயிரி வடிவமைப்பு திட்ட மருத்துவ தொழில்நுட்ப மாநாடு” (11TH ANNUAL MEDTECH SUMMIT OF BIODESIGN PROGRAMME), புது தில்லியில் நடைபெற்றது. மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை இதனை நடத்தியது.
 • “பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேசக் கருத்தரங்கம்” (INTERNATIONAL CONFERENCE ON CLIMATE CHANGE), நேபாள் நாட்டில் நடைபெற்றது. நேபாள குடியரசுத் தலைவர் பித்ய தேவி பண்டாரி துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கம் “RESILENT HINDU KUSH HIMALAYA : DEVELOPING SOLUTIONS TOWARDS A SUSTAINABLE FUTURE FOR ASIA” என்ற பெயரில் நடைபெற்றது.
 • “ஆசியான் – இந்தியா இணைப்பு மாநாடு” (ASEAN – INDIA CONNECTIVITY SUMMIT), புது தில்லியில் நடைபெற்றது. மாநாட்டின் கரு = POWERING DIGITAL AND PHYSICAL LINKAGES FOR ASIA IN THE 21ST CENTURY). ஆசியான் நாடுகளுடன் கட்டமைப்பு, சாலை, ரயில்வே போன்றவற்றில் இணைந்து வளர்ச்சியை உருவாக்குதல், இதன் நோக்கமாகும்.
 • “7-வது சர்வதேச நிலத்தடி நீர் கருத்தரங்கம்” (7TH INTERNATIONAL GROUND WATER CONFERENCE) இந்தியாவின் சார்பில் புது தில்லியில் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் கரு = GROUND WATER VISION 2030 – WATER SECURITY, CHALLENGES AND CLIMATE CHANGE ADOPTION. ரூர்க்கியில் உள்ள தேசிய நீரியல் கழகம் இதனை முன்னின்று நடத்தியது.
 • 15வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைபண்பு மாநாடு, புது தில்லியில் பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
 • உலக தெலுங்கு கருத்தரங்கம், தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது
 • 78-வது இந்திய வரலாறு மாநாடு (INDIAN HISTORY CONGRESS), கல்கக்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

 இடங்கள்

 • “22-வது சிறு விவசாயிகளின் வேளாண் – வணிக கூட்டுச் சங்கக்” (SMALL FARMERS AGRI – BUSINESS CONSORTIUM) கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது.
 • “7-வது கதாகர் : சர்வதேச கதை சொல்லும் திருவிழா” (KATHAKAR : INTERNATIONAL STORY TELLER FESTIVAL) , புது தில்லியில் நடைபெற்றது. “கதாகர்” என்பது ஒரு சிறப்பு இயக்கமாகும், இதன் மூலம் பாரம்பரிய கதை சொல்லும் வழக்கம் அழியாமல் காக்கப்படும்.
 • “6-வது சர்வதேச சுற்றுலா சந்தை மையம்” (6TH INTERNATIONAL TOURISM MART 2017), அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் நடைபெற்றது. இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா வணிகத்தை பெருக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் முடியும்.
 • 15-வது ரிக் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் (15TH RIC FOREIGN MINISTERS MEETING) புது தில்லியில் நடைபெற்றது. ரிக் அமைப்பில் ரசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் கலந்துக் கொண்டார்.
 • ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB – ASIAN INFRASTRUCTURE INVESTMENT BANK) 7-வது ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர்களின் ஆண்டு பொதுக்கூட்டம், 2018ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் கரு = MOBILIZING FINANCE FOR INFRASTRUCTURE : INNOVATION AND COLLOBORATION. இவ்வங்கி சீனாவின் யோசனையின் பேரில் ஆரம்பிக்கப் பட்டது. இதன் தலைமையகம் பீஜிங் நகரில் உள்ளது.
 • 17-வது இந்திய அறிவியல் தொலைத்தொடர்பு காங்கிரஸ் (ISCC – INDIAN SCIENCE COMMUNICATION CONGRESS) கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது.
 • 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் (NATIONAL CHILDRENS SCIENCE CONGRESS) கூட்டம், குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்றது.

விருது

 • போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2௦17ம் ஆண்டிற்கான, “தங்க கால்பந்து” விருதினை பெற்றார். பிரான் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 முறை இவ்விருதை வென்ற லியோனல் மெஸ்சியை, ரொனால்டோ சமன் செய்தார். இருவரும் இவ்விருதை 5 முறை வென்றுள்ளனர்.
 • 2௦17ம் ஆண்டிற்கான வியாஸ் சம்மன் விருது (VYAS SAMMAN AWARD 2017), எழுத்தாளரும், இந்தி மொழி அறிஞருமான, “மம்தா காலியா” என்பவருக்கு வழங்கப்பட்டது. அவரின் “துக்கம் சுக்கம்” நாவலுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், பல்வேறு விருதுகளை பெற்றவர் ஆவார்.
 • நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழாவில், அமைதிக்கான நோபல் பரிசு (ICAN – INTERNATIONAL CAMPAIGN TO ABOLISH NUCLEAR WEAPONS), அணு ஆயுத ஒழிப்பு அமைப்பிடம் வழங்கப்பட்டது.
 • 2௦17 சர்வதேச குழந்தைகள் அமைதி விருது (INTERNATIONAL CHILDREN’S PEACE PRIZE), சிரியா நாட்டை சேர்ந்த 16 வயது மொகமது அல் ஜோண்டு என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிரியா அகதிகளாக உள்ள குழந்தைகளுக்காக போராடியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
 • 2௦17 “மிஸ்டர் இந்தியா” (MR. INDIA) ஆணழகன் போட்டியில், லக்னோவை சேர்ந்த ஜிதேஷ் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
 • 2௦17ம் ஆண்டிற்கான, “31-வது மூர்த்தி தேவி விருது” (MOORTHIDEVI AWARD 2017), வாங்க மொழி எழுத்தாளரான, “ஜாய் கோஸ்வாமி” அவர்களுக்கு, அவரின் கவிதை நூலான, “து தொண்டோ போவரோ மன்றோ”, என்ற நூலிற்காக வழங்கப்பட்டது.
 • “தேசிய வடிவமைப்பு விருது” (NATIONAL DESIGN AWARD), மத்திய அரசின் அறிவியல் ஆலோசகரான, ஜி.சதீஷ் ரெட்டி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • முருகப்பா நிறுவ குழுமத்திற்கு சொந்தமான் சோழமண்டலம் எம்.எஸ். பொது காப்பீட்டு நிறுவனத்திற்கு 2௦17ம் ஆண்டின் இடர் மேலாண்மைக்கான, “தங்க மயில் விருது” வழங்கப்பட்டது.
 • 2௦17 சாகித்ய அகாடெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகள் அடுத்த ஆண்டு வழங்கப்படும்.. அரசியல் அமைப்பு அட்டவணையில் உள்ள 22 மொழிகள் மற்றும் ஆங்கிலம் மற்றும் ராஜஸ்தானி ஆகிய மொழிகளிலும் இவ்விருதுகள் வழங்கப் படுகின்றன.
  • தமிழ் = இன்குலாப் (கவிதை நூல்)
  • ஹிந்தி மொழி = ரமேஷ் குந்தாள் மேக்
 • சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது, இந்தி நதிகள் பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்பட்டது.
 • சென்னையில் நடைபெற்ற வேளாண்மை துறை விழாவில், பேராசிரயர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு, “ஏர் அறிஞர்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை தோனிக் குடியரசுத் தலைவர் அவருக்கு வழங்கினார்.
 • கேரளாவின் உயர்ந்த, “ஹரிவராசனம்” விருது, இந்த ஆண்டு, பாடகி கே.எஸ்.சித்ரா அவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
 • பண்டிட் ராமநாராயணன் ஷர்மா தேசிய ஆயுர்வேத விருது, ஜோத்பூர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பன்வாரி லால் கவுர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை குடியரசுத் தலைவர் அவர்கள் வளகினார்.

 

TNPSC Current Affairs in Tamil December 2017-1

TNPSC Current Affairs in Tamil December 2017-2

TNPSC Current Affairs in Tamil December 2017-3

TNPSC Current Affairs in Tamil December 2017-4

TNPSC Current Affairs in Tamil December 2017-5

TNPSC Current Affairs in Tamil December 2017-6

TNPSC Current Affairs in Tamil December 2017-7

Leave a Comment

Your email address will not be published.