TNPSC Current Affairs in Tamil December 2017-7

ராணுவம்

 • இந்திய மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் (இங்கிலாந்து), ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி நிகழ்ச்சி, “அஜேயா வாரியர் 2௦17” (AJEYA WARRIOR 2017), ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் பகுதியில் நடைபெற்றது. இது 3-வது பயிற்சி ஆகும். முதல் முதலில் 2௦13ம் ஆண்டு கர்நாடகத்தின் பெல்காம் பகுதியிலும், 2௦15ம் ஆண்டு இங்கிலாந்திலும் நடைபெற்றது.
 • தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து, மேற்கொண்ட “விஜிலன்ட் ஏஸ்” (VIGILANT ACE) என்ற மிகப்பெரிய போர் பயிற்சி நிகழ்ச்சி, தென் கொரியா கடல்பகுதியில் நடைபெற்றது.
 • எட்டாவது இந்திய – மாலத்தீவுகள் இராணுவங்களின் போர் பயிற்சி நிகழ்ச்சியான, “ஈகுவரின் 2௦17” (EKUVERIN 2017), கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி பகுதியில் நடைபெற்றது. தீவிரவாத திடீர் தாக்குதல்களை எதிர்கொள்வது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
 • இந்திய ராணுவத்தின் தெற்கு கம்மாண்டோ படையின் சார்பில், ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவனப் பகுதியில், “ஹமேசா விஜயீ” (HAMESHA VIJAYEE) என்ற பெயரில் போர் பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படையின் தலைமையகம் புனேவில் உள்ளது.
 • இந்தியா மற்றும் ஓமன் நாடுகளின் கடற்படை இணைந்து மேற்கொண்ட “கடல் தென்றல்” என்று பொருள்படக் கூடிய “நசீம்-அல்-பகர்” (NASEEM-AL-BAHR (SEA BREEZE)) என்ற கூட்டு போர் பயிற்சி நிகழ்ச்சி, ஓமன் நாட்டின் விடாம் என்னுமிடத்தில் உள்ள சையது பின் சுல்தான் கப்பல்படை தலத்தில் நடைபெற்றது. இது 11-வது போர் பயிற்சி நிகழ்ச்சியாகும்.
 • “ஐ.சி.ஜி.எஸ் சுஜய்” (ICGS SUJAY) எனப் பெயரிடப்பட்ட கடற்படை ரோந்து வாகனம், முறைப்படி இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டது. சுஜய் என்பதற்கு மிகபெரிய வெற்றி எனப்பொருள்

குழு

 • தேசிய சிறுபான்மையினர் கமிசன், எட்டு மாநிலங்களில் 5௦% அளவிற்கும் குறைவாக இந்துக்கள் உள்ள மாநிலங்களை ஆராய்ந்து, அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்தை வழங்க “ஜார்ஜ் குரியன்” அவர்கள் தலைமையில் குழு ஒன்றினை அமைத்துள்ளது. லக்சத் தீவுகள், மிசோராம், நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு காஸ்மீர், அருணாச்சலப் பிரதேசம், மணிபூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் 5௦% அளவிற்கும் குறைவாக உள்ளதாக 2௦11ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. ஜார்ஜ் குரியன் தலைமையிலான குழுவிற்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 • தேசிய பாசுமை தீர்ப்பாயம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மற்றும் மணாலி ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்ய குழு ஒன்றினை அமைத்துள்ளது.

திட்டம்

 • மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம், “தேசிய செயல் திட்டம் 2௦17 – 24” (NATIONAL STRATEGIC PLAN 2017-24) வெளியிட்டுள்ளது. இதன்படி 2௦3௦ம் ஆண்டிற்குள், நாட்டில் இருந்து எச்.ஐ.வி / எயிட்ஸ் நோயை முற்றிலும் ஒழித்தல் முக்கிய இலக்காகும்.
 • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நாடு முழுவதும் 15 நாட்களுக்கு வீடு வீடாக சென்று காசநோய் கண்டறியும் பிரச்சார இயக்கத்தை (DOOR – TO – DOOR CAMPAIGN AGAINST TB) துவக்கி உள்ளது. இதன் முக்கிய நோக்கமானது, 2௦25ம் ஆண்டிற்குள் நாட்டில் 9௦% காசநோய் இல்லா நிலையை அடைவதே இலக்காகும். “MYCOBACTERIUM TUBERCULOSIS“ என்ற பாக்டீரியா, காசநோய் உண்டாக காரணமாக உள்ளது.
 • மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், 2௦17 – 2௦2௦ம் ஆண்டுக்குள், 1756 கோடி ரூபாயில் “கேலோ இந்தியா” (GOVERNMENT WILL SOON LAUNCH KHELO INDIA PROGRAMME) திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, தனிநபர் வளர்ச்சி, மற்றும் தேசிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நாடு முழுவதும் இருந்து 1௦௦௦ சிறந்த தடகள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு, சிறந்த பயிற்சி அளிப்பது இதன் நோக்கமாகும்.
 • டிசம்பர் 12, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மகப்பேறு அறைக்கான தர மேம்பாட்டு திட்டமான “லக்சயா” (lakshya initiative) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தங்கள் மருத்துவமனையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் சாதாரண மற்றும் சிக்கலான பிரசவங்களை கையாளும் மருத்துவப் பணியாளர்களுக்கான கைப்பேசி செயலி திட்டமே இதுவாகும்.
 • மத்திய நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக அமைச்சகம், “எம்.எஸ்.எம்.இ. சம்பந்த்” (MSME SAMBANDH) என்னும் பொது கொள்முதல் இணையவாயிலை துவக்கி உள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் பொது கொள்முதல் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த இணையவாயில் துவக்கப்பட்டுள்ளது.
 • பீகார் அரசு, “பெண்கள் பாதுகாப்பிற்கான பாதுகாப்பான நகர கண்காணிப்பு” (SAFE CITY SURVEILANCE SCHEME FOR WOMEN SAFETY) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி மாநிலத்தின் முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய சாலைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களை வெகுவாக குறைக்க முடியும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
 • வன்முறைக்கான பலதரப்பட்ட தீர்ப்புகள் அளிப்பதை வலுபடுத்தும் நோக்கில், “சாகி ஒரே சேவை மையத்தின்” (SAKHI ONE STOP CENTRE), பயிற்சி பட்டறை புது தில்லியில் நடைபெற்றது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக நடத்தப்பட்டது. இத்திட்டம் ஏப்ரல் 2௦15ம் ஆண்டு துவக்கப்பட்டது.
 • மத்திய அரசு, “வட கிழக்கு சிறப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” (NESIDS – NORTH EAST SPECIAL INFRASTRUCTURE DEVELOPMENT SCHEME) என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது 1௦௦% மத்திய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படும். 2௦2௦ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வட கிழக்கு மாநிலங்களில் குறிப்பிட்ட துறைகளில் கட்டமைபை மேம்படுத்துதல் இதன் முக்கிய நோக்கமாகும்.
 • மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம், ஊரகப் பகுதிகளில் வங்கி பயன்பாட்தில் ஈடுபடாத மக்களுக்கு தரமான வங்கி சேவைகள் மற்றும் சிறப்பு சேவைகள் போன்றவற்றை கொண்டு சேர்க்கும் வகையில், “தர்பன்” (DARPAN – THE DIGITAL ADVANCEMENT OF RURAL POST OFFICES FOR A NEW INDIA) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டமாகும். ஊரகப் பகுதியில் உள்ள அஞ்சலக அலுவலகங்களில் வங்கிகள் போன்று கணக்கை துவக்கி சேமிக்கும் வழிமுறையை கொண்டுவரப்பட்டுள்ளது.
 • இந்திய அரசு, “ஸ்டிரைவ் திட்டத்திற்காக”, உலக வங்கியுடன் 125 மில்லியன் டாலர் கடனாக பெற ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்டிரைவ் திட்டமென்பது, “தொழில் துறை மதிப்பிற்கு திறன் வலுவூட்டல் நடவடிக்கை” (STRIVE = SKILLS STRENGTHENING FOR INDUSTRIAL VALUE ENHANCEMENT OPERATION) என்பதாகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், சிறந்த மற்றும் தரமான தொழில் துறை பயிற்சி வழங்குதல் ஆகும்.
 • மத்திய அரசு, “கங்கா கிராமம்”, என்ற புதிய திட்டத்தை புது தில்லியில் நடைபெற்ற கங்கா கிராமம் சவச்சதா சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தது. இத்திட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் கங்கை நதி பாய்ந்து செல்லும், கங்கை கரையோர கிராமங்களில் இருந்து 24 கிராமங்களை தேர்வு செய்து, அவற்றை கங்கா கிராமங்களாக அறிவித்து, தரம் உயர்த்தப்பட உள்ளது. இத்திட்டமானது, கங்கா கிராமங்களை பொது மக்கள் உதவியுடன் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி ஆகும்.

விழா

 • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாகால்நாதின் புகழ்பெற்ற கிசாமா பகுதியில் உள்ள “நாகா பாரம்பரிய கிராமத்தில்”, 18-வது இருவாய் குருவி திருவிழாவை” (HORNBILL FESTIVAL) துவக்கி வைத்தார். இத்திருவிழாவை, “பண்டிகைகளின் பண்டிகை” எனப் போற்றுகின்றனர் நாகாலாந்து மக்கள்.
 • பிம்ஸ்டெக் அமைப்பின் 2௦-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, இந்தியா “போதி பர்வா : புத்த பாரம்பரிய திருவிழாவை” (BODHI PARVA : BIMSTEC FESTIVAL OF BUDDHIST HERITAGE) புது தில்லியில் நடத்தியது. பிம்ஸ்டெக் அமைப்பில் உறுபினராக உள்ள நாடுகள் = இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாள் மற்றும் பூட்டான்
 • சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில், “ஆதிவாசி மகோற்சவம் 2௦17 : பழங்குடியினர் திருவிழா” (ADIVASI MAHOTSAV 2017 : TRIBAL FESTIVAL), நடைபெற்றது. அம்மாநிலத்தின் கலாசார பாரம்பரிய பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில் திருவிழா நடைபெற்றது.

TNPSC Current Affairs in Tamil December 2017-1

TNPSC Current Affairs in Tamil December 2017-2

TNPSC Current Affairs in Tamil December 2017-3

TNPSC Current Affairs in Tamil December 2017-4

TNPSC Current Affairs in Tamil December 2017-5

TNPSC Current Affairs in Tamil December 2017-6

TNPSC Current Affairs in Tamil December 2017-7

 

Leave a Comment

Your email address will not be published.