TNPSC Current Affairs in Tamil July 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-1

இந்தியா

 • இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், “தேசிய கல்விக் கருவூலம்” என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதில் கல்விச் சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்றவற்றை டிஜிட்டல் மயமாக்கி சேமித்து வைத்து, தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ள முடியும். தேசிய கல்விக் கருவூலத்தின் இலக்கானது, ஒவ்வொரு இந்தியரும் கணினிமய கல்விச் சான்றிதழ் வசதியை பெற வேண்டும் என்பதே ஆகும்.
 • ஐக்கிய நாடுகளில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் முடிவின் படி, 2௦26ம் ஆண்டிற்குள், இந்தியா பால் உற்பத்தியில் முதல் இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 2௦26ம் ஆண்டிற்குள், மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்தி உலகில் முதல் இடத்தை பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • மிசோராம் மாநிலத்தில் கர்ணபுலி ஆற்றின் இடையே இந்தியா, வங்கதேசம் இடையே போக்குவரத்தை மேற்கொள்ள ஏதுவாக பாலம் கட்ட இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
 • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மிகப்பெரிய மரம் நடும் விழாவை மத்தியப் பிரதேச மாநில அரசு நடத்தியது. இதன்படி நர்மதை ஆற்றின் கரைப் பகுதிகளில் 12 மணி நேரத்தில் சுமார் 6 கோடி மரக்கன்றுகளை நடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையின் படி, இந்தியாவில் எளிதில் தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் குஜராத் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
 • அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த அப்தானி பழங்குடியின மக்களின் “ட்ரீ” திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
 • அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆரக்கிள் நிறுவனம், தனது முதல் டிஜிட்டல் மையத்தை, கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் துவக்கி உள்ளது
 • பிரபல பெல் நிறுவனம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டாப்ளர் வானிலை ராடாரை கண்டுபிடித்துள்ளது. இது எஸ்-பாண்டில் செயல்படக்கூடியது. இது சோதனைக்காக கேரளாவின் கொச்சி நகரில் அமைக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றங்களை அறிந்து கூறும் திறன் கொண்டது இது.
 • வை-பை இணைய சேவையை முழுவதுமாக கொண்டுள்ள இந்தியாவின் முதல் மாநில தலைமை செயலகம் என்ற பெருமையை அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தலைமை செயலகம் பெற்றுள்ளது.
 • இந்தியாவில் அதிக செல்வாக்கு, மதிப்பு மிக்க பிராண்டுகள் பட்டியலில் முதல் 5 இடங்களில் = கூகுல், மைக்ரோசாப்ட், பேஸ்புக், பதஞ்சலி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது
 • வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், எட்டு கோடி மரக் கன்றுகளை நடும் இலக்கை சட்டிஸ்கர் மாநில அரசு நிர்ணயித்துள்ளது
 • பறவை காய்ச்சல் நோயில் இருந்து இந்தியா முழுவதுமாக விடுபட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
 • வரும் 2018, பிப்ரவரி மாதம் 51 நாட்கள் நடைபெறும் எட்டாவது சர்வதேச திரையரங்கு ஒலிம்பிக் விழா, இந்தியா சார்பில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் அணைத்து திருநங்கைகளுக்கும் கட்டணமில்லா கல்வி வழங்கப்படும் என பலகலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
 • தெலுங்கானா மாநிலத்தில் புலிகள், கால்வாயை கடந்து செல்ல ஏதுவாக சூழியல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ததேபா – அந்தேரி புலிகள் காப்பகத்திற்கு, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குமரம் பீம் ஆசிப்பாத் மாவட்டத்திற்கும் இடையே கால்வாய் உள்ளது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வைகையில் புதிய செடிகள், ஆறஂஆளாஈஆஈ கொண்டு சூழியல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது
 • யானைகள் இடம் பெயர்வதற்கு ஏதுவாக இந்திய – வங்கதேச எல்லைப் பகுதிகளில் 13 வழிகளை உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 • ஓடிஸா மாநிலத்தின் மிக நீண்ட்பாலத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்து, அதற்கு “நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பாலம்” எனப் பெயர் சூட்டினார். சுமார் 2.81 கிலோ மீட்டர் நீளமுடைய இப்பாலம், தலைநகர் புவனேஸ்வரை, கட்டாக் நகருடன் இணைக்கிறது.
 • ஹரியானா மாநில அரசு, அம்மாநிலத்தில் உணவு மற்றும் குளிர் பானங்களில் திரவ நைட்ரஜன் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது
 • தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில், மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு மண்டபத்தை, பிரதமர் துவக்கி வைத்தார். இந்த நினைவு மண்டபத்தை, இந்திய ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயராய்ச்சி மையம் சார்பில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. சுமார் 2௦ கோடி ரூபாயில் இது கட்டப்பட்டது.
 • புதிதாக உருவாக்கப்பட்ட, “தீவுகள் மேம்பாட்டு முகமையத்தின்” (ISLANDS DEVELOPMENTS AGENCY), முதல் கூட்டம் புது தில்லியில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. முதல் கட்டமாக பத்து தீவுகள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளது. அவை = ஸ்மித், ரோஸ், ஆவேஸ், நீள அந்தமான், குட்டி அந்தமான், மினிக்காய், பங்கராம், சுஹெளி, சீரியம், டின்னகரா ஆகிய தீவுகள்.
 • மத்திய அமசிகர் கிரண் ரிஜ்ஜு, அருணாச்சலப் பிரதேசத்தில், “ரிவாட்ச்” என்னும் புதிய அருங்காட்சியத்தை துவக்கி வைத்தார் (RIWATCH = RESEARCH INSTITUTION OF WORLD ANCIENT, TRADITIONAL, CULTURE AND HERITAGE). இந்திய பண்டைய கலாச்சாரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
 • 2௦17 இந்திய உலக உணவு திருவிழா, டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய மைய மாநிலமாக “மேற்கு வாங்க மாநிலம்” தேர்வு செய்யபப்ட்டுள்ளது.

மேலும் தொடர்கிறது….

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.