TNPSC Current Affairs in Tamil July 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-2

தமிழகம்

 • தமிழ்நாட்டின் முதல் மாற்றுதிறன் குழந்தைகளுக்கான பூங்கா மதுரையில் அமைக்கப் படவுள்ளது. மதுரை அழகர் கோவில் பகுதியில் இது அமைய உள்ளது
 • வரும் கல்வியாண்டில் அரசுத் தேர்வில் தமிழ் வழியில் பயின்று சிறப்பாக தேர்ச்சி பெறும் 96௦ மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 • தேசிய வாழைப்பழத் திருவிழா 2௦17 மதுரை, தேசிய வேளாண் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
 • தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக சிறந்த எழுத்தாளருக்கு ஆண்டு தோறும் சிங்காரவேலர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 • மதுரையில் 5௦ கோடி ரூபாய் மதிப்பில் தமிழ் கலாசார மரபு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழா அரசு அறிவித்துளளது
 • தமிழக சட்டமன்ற உறுபினர்களின் ஊதியத்தை மாதத்திற்கு 55 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சத்து ஐந்தாயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது
 • சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் வாரம் ஒரு முறையாவது தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாதம் ஒரு முறையாவது கட்டாயம் பாடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
 • 5வது ப்ரோ கபடி தொடரில், தமிழா தமிழ் தலைவாஸ் அணிக்கு, விளம்பர தூதராக பிரபல நடிகர் கமலஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் குளம், தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் 288 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது இக்குளம் ஆகும்.

சர்வதேசம்

 • லூயிஸ் போன்சி மற்றும் டாடி யாங்கி ஆகியோர் இணைந்து உருவாக்கிய “டெஸ்பாசிடோ” என்ற பாடல் உலக அளவில் இணையத்தளத்தில் அதிக அளவு ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது
 • ஒருபால் திருமணத்தை அங்கீகரித்துள்ள 15 ஐரோப்பிய ஒன்றிய நாடு மால்டா ஆகும். ஒத்து மொத்த உலக அளவில் இது 24வது நாடாகும்.
 • நிலவிற்கு சென்று வந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் பையில் இருந்து நிலவின் மாசுத் துகள்கள், சுமார் 5௦௦ கிராம் அளவுடையது, சுமார் 1.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.
 • 6௦௦௦ சதுர கிலோம்மீட்டர் பரப்பளவு கொண்ட பனிப் பாறை ஒன்று, அண்டார்டிக் கண்டத்தில் உடைந்து உருக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதுவரை இவ்வளவு பெரிய பனிப் பாறை உடைந்ததே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டு ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் பணிபுரிய அனுமதி அளிக்க முடியாது தெரிவித்துள்ளார்
 • வூதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது
 • தென் அமெரிக்க நாடான பொலிவியா, உலக வங்கி மற்றும் சர்வதிய நிதி மையத்திடம் இருந்து விடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது அணைத்து கடன்களையும் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு படுத்தல் போன்ற காரணங்களுக்காக, வரும் 2040ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
 • இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா, 99 ஆண்டுகளுக்கு வர்த்தக பயன்பாட்டிற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதன்படி வர்த்தக பயன பட்டுமே சீனாவிற்கு உண்டு. அங்கு பாதுகாப்பு, கப்பல் நிறுத்தம் போன்றவை இலங்கையில் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முதன் முதல்

 • இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பிரெண்டா மர்ஜோரி நியமிக்கப்பட்டுள்ளார்
 • அமெரிக்காவில் நடைபெற்ற முதல் உலகளாவிய ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டிகில், 7 மாணவர்களை கொண்ட இந்திய அணிக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது.
 • போலந்து நாட்டின் க்ராகோ நகரில் நடைபெற்ற உணச்கோ உலக பாரம்பரிய கூட்டத்தில், இந்தியாவின் குஜராத் மாநில அகமதாபாத் நகரை, பாரம்பரிய நகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் முதல் யுனஸ்கோ பாரம்பரிய நகரம் என்ற பெருமையை அகமதாபாத் பெற்றுள்ளது.
 • இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பயிற்சி மையம், குஜராத்தின் காந்திநகரில் அமைய உள்ளது. வரும் 2௦2௦ம் ஆண்டிற்குள் இப்பயிற்சி மாயம் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை, ஸ்காட்லாந்து நாட்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஹைவிண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், கடல் பகுதியில் உள்ள காற்று ஆற்றலை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து அருகே உள்ள சுமார் 2௦௦௦௦ இல்லங்களுக்கு மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • முழுவதும் பெண் பணியாளர்களை கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை மும்பை நகரில் உள்ள மதுங்கா ரயில் நிலையம் பெற்றுள்ளது.
 • உலகின் முதல் பசுமை மெட்ரோ ரயில்வே நிறுவனம் என்ற பெருமையை, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது
 • இணையத்தளம் வாயிலாக தகவல அறியும் வழக்கத்தை கொண்டுவந்துள்ள 2-வது மாநிலம் டெல்லி ஆகும். முதன் முதலில் இதனை அறிமுகம் செய்தது மகாராஷ்டிரா ஆகும்.
 • இந்தியா தனது முதல் பெட்ரோலிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி வசதி வளாகத்தை ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகரில் துவக்கி உள்ளது. இதில் பாரத் நிலை 6க்காண வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகிறது
 • ஜார்கண்ட் மாநில முதல்வர், இந்தியாவின் முதல் மிகப்பெரிய நண்ணீர் மீன் வளர்ப்பு மையத்தை ராஞ்சி நகரில் துவக்கி வைத்தார். சுமார் 36௦௦௦ சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது இது.
 • டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், நாட்டின் முதல் உயிர் சி.என்.ஜி (மீத்தேன்) பேருந்தை உருவாக்கி உள்ளது. இது உர்ஜா உத்சவ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது. சுற்றுச்சூளைக்கு மாசு இல்லாத செலவை குறைக்கும் மீத்தேன் வாயுவின் மூலம் இயங்கும் வகையில் இப்பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
 • அமேரிக்கா உலகின் முதல் லேசர் ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளது. லாஸ் (LAWS – LASER WEAPONS SYSTEMS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம், பாரசீக வளைகுடாவில் உள்ள நிலம் மற்றும் நீர் இரண்டிலும் பயணிக்கும் அமெரிக்க கப்பலில் நிறுவப்பட்டுள்ளது. இது அகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை விட 5௦௦௦௦ மடங்கு வேகமானது.
 • இந்தியாவின் முதல் டிஜிட்டல் மொபைல் டிக்கெட் வழங்கும் முறை, மும்பை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் அறிமுகம் செய்யபப்ட்டுள்ளது. “ON GO” என்னும் மொபைல் செயலி மூலம், இது செயல்படுத்தப் படுகிறது.
 • இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான, “எம்.ஏ.எச்.எஸ்.அர்”, (MAHSR – MUMBAI AHEMEDABAB HIGH SPEED RAIL) ஜப்பான் பிரதமரின் வருகையின் பொது, செப்டம்பர் மாதம் அடிக்கல் நாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • தனக்கென்று தனி எப்.எம் ரேடியோ சேவையை துவங்கியுள்ள இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் நிறுவனம் என்ற சிறப்பை, லக்னோ மெட்ரோ ரயில் நிலையம் பெற்றுள்ளது.
 • இந்தியாவின் முதல் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் 16௦௦ குதிரை சக்தி திறன் கொண்ட இஞ்சின், டெல்லியின் சராய் ரோகில்லா பகுதியில் இருந்து ஹரியானா மாநிலத்தின் பருக் நகர் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் மூலம் ஆண்டிற்கு சுமார் 21௦௦௦ லிட்டர் சீசல் சேமிப்பாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 • பந்த், வேலைநிறுத்த போராட்டம் போன்றவற்றை குற்றமாக அறிவித்துள்ள, இந்தியாவின் முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். இதற்காக தனி மசோதா ஒன்று அம்மாநிலத்தின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தொடர்கிறது….

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.