TNPSC Current Affairs in Tamil July 2017-Part-3

விளையாட்டு

  • இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற 2௦17 பாரா ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது.
    • 92 நாடுகளை சேர்ந்த 1௦74 வீரர்கள், மொத்தம் 213 வகை போட்டிகளில் பங்குபெற்றனர்
    • இந்தியா 34-வது இடம் பிடித்தது. 5 பதக்கம் வென்றது. 1 தங்கம், 2 வெள்ளிப் பதக்கம் அம்ற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்றது.
    • ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் தங்கம் வென்றார்
    • சீனா 65 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், அமெரிக்கா 59 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், இங்கிலாந்து 39 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
  • 2௦17 விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டன் நகரில் நடந்து முடிந்தது.
    • ஆண்கள் ஒற்றையர் = ஸ்விட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர் குரோசியா வீரர் மாறின சிலிக்கை வீழ்த்தி 8-வது முறையாக விம்பிள்டன் பட்டதை கைப்பற்றினார்
    • பெண்கள் ஒற்றையர் = ஸ்பெயின் நாட்டின் முகுரசா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்
  • மோகன் பாகன் கால்பந்து குழு விருது 2௦17
    • மோகன் பாகன் ரத்னா விருது = சுப்ரதா பட்டாச்சாரியா
    • இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் = பல்வந்த் சிங்
    • இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் = தேபப்ரதா தாஸ்
    • வாழ்நாள் சாதனையாளர் விருது = ஷியாம் சுந்தர் மித்ரா
    • சிறப்பு விருது, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலியான் கோஸ்வாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது
  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2௦௦ சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை எம்.எஸ்.தோணி அவரால் பெற்றுள்ளார்
  • 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரிலும், 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலும் நடைபெறும் என தெரிகிறது
  • சென்னையில் நடைபெற்ற முதல் தேசிய மாஸ்டர் ஸ்னூக்கர் சாம்பியன்சிப் போட்டிகளில், கர்நாடகாவை சேர்ந்த மனுதேவ் வெற்றி பெற்றார்
  • ஜெர்மனியில் நடைபெற்ற பார்முலா 3 கார்பந்தய போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்திய கார்பந்தய வீரர் என்ற சிறப்பை ஜெகன் தருவலா பெற்றுள்ளார்
  • 2௦22ம் ஆண்டிற்கான குறிகிய கால் அநீச்சல் சாம்பியன்சிப் போட்டிகள் ரசியாவின் கசன் நகரிலும், 2024ம் ஆண்டிற்கான குறுகிய கால் நீச்சல் விளையாட்டு போட்டிகள் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டிகளில், இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்து, ஆஸ்திரேலிய வீரரை இறுதி போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்
  • சர்வதேச ஒரு நாள் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் 6௦௦௦ ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீராங்கணை என்ற சிறப்பை, இந்தியாவின் மிதாலி ராஜ் பெற்றுள்ளார். அவர் உலகக் கோப்பை தொடரில், ஆஸ்த்ரேலியாவிற்கு எதிராக விளையாடிய பொது இச்சாதனையை படைத்தார்.
  • கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்சிப் போட்டியில், பங்கஜ் அத்வானி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றியது.
  • கரிபியன் தீவுகளின் பகாமாஸ் தீவில் நடைபெற்ற 6வது இளையோர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா 11 பதக்கங்களுடன் 7வது இடத்தை பிடித்தது. இதில் 4 தங்கம், 1 வெள்ளி, மற்றும் 6 வெண்கலப் பதக்கம் ஆகும். முதல் இடத்தை 51 பதக்கங்களுடன் இங்கிலாந்து உள்ளது.
  • ரசியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பார்க் நகரில் நடைபெற்ற பிபா கான்பெடேரேசன் கால்பந்து கோப்பை போட்டியில், முதன் முறையாக ஜெர்மனி அணி சிலி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது
  • 2௦17 ஐ.சி.சி. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டம், லண்டன்னகரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி, இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது இங்கிலாந்து பெறும் நான்காவது உலகக் கோப்பை ஆகும்.
  • இந்திய கிர்க்கெட் அணிக்கு, பந்து வீச்சு பயிற்சியாளராக, பாரத் அருண் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்
  • நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெற்ற ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளு தூக்கும் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியா 1 தங்கம் மற்றும் 3 வெண்கலம் உட்பட மொத்தம் நான்கு பதக்கங்களை வென்றது. இந்தியா சார்பில் கொன்சம் ஒர்மிலா தங்கம் வென்றார்
  • 22வது ஆசிய தடகள சாம்பியாய்ந்சிப் போட்டிகள், ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. முதல் முறையாக இந்தியா 29 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது. 12 தங்கம், 5 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கத்தை வென்றது. இரண்டாவது இடத்தை 2௦ பதக்கங்களுடன் சீனா பிடித்தது. கஜகஸ்தான் அணி மொன்றாவது இடத்தை பிடித்தது.
  • 2௦17 அமெரிக்க ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் தங்க பாட்மிண்டன் சாம்பியாய்ந்சிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றது.
    • ஆண்கள் ஒற்றையர் = இந்தியாவின் பிரணாய், இந்திய வீரர் காஷ்யாப் பருபள்ளியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்
    • பெண்கள் ஒற்றையர் = ஜப்பானின் அயா ஓஹாரி, கனடா வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்
  • இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடைபெற்ற 2௦17 பார்முலன் ஒன் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில், இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்டன், முதல் இடத்தை பிடித்தார்.

விருது

  • 18வது சர்வதேச இந்திய திரைப்பட அகடெமி விருதுகள் விழா, அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஷாகித் கபூருக்கும், சிறந்த நடிகை விருது ஆலியா பட்டுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த படமாக நீர்ஜா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • 2௦17ம் ஆண்டிற்கான “அமெரிக்க பெருமை விருதிற்கு” இரண்டு இந்தியர்கள் உட்பட 38 பேர் த்ரேவு செய்யப்பட்டுள்ளனர். அடோப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷாந்தனு நாராயணன் மற்றும் மருத்துவர் விவேக் மூர்த்தி ஆகியோர் ஆவார்கள்
  • 2௦17ம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருது
    • பொது சேவைக்காக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த லிலியா டி லிமா என்பவருக்கு வழங்கப்பட்டது
    • கம்போடியா நாட்டின் புராதான புதையல்களை அளித்த ஜப்பானின் யோஷியாகி இசிச்வா
    • அடத் இன மக்களுக்காக போராடிய இந்தோனேசியாவின் அப்தான் நபபன் என்பவருக்கும் வழங்கப்பட்டது
    • திரைப்பட திரையரங்கு கலையை மீட்ட, பிலிப்பைன்ஸ் கல்வி திரையரங்கு கூட்டமைப்பு
    • உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடிய இலங்கையின் கேத்சே சண்முகம்
    • பசி ஒழிப்பிற்காக போராடும் சிங்கப்பூரின் டோனி தாய்
  • பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டவர் களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
    • லோக்சபாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது எல்.கே.அத்வானி அவர்களுக்கு வழங்கப்பட்டது
    • ராஜ்யசபாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சரத் யாதவ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
    • லோக்சபாவில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது என்.கே. பிரேம சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது
    • ராஜ்யசபாவில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு வழங்கப்பட்டது
  • தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 19வது உலக சுற்றுச்சூழல் மேலாண்மை காங்கிரஸ் கூட்டத்தில், சுற்றுச்சூழல் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட டான்பாஸ் இந்தியா நிறுவனத்திற்கு, “தங்க மயில் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டது
  • முன்னாள் இந்திய கால்பந்து வீரர் சுப்ரதா பட்டாச்சார்யா அவர்களுக்கு கொல்கத்தா கால்பந்து க்ளப் சார்பில் 2௦17ம் ஆண்டின் “மோகன் பாகன் ரத்னா” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது
  • இந்திய – ஜப்பான் உறவை மேம்படுத்த பல்வேறு செயல்களை மேற்கொண்டதற்காக, ஜப்பான் நாட்டின் Order of the Rising Sun’ விருது, முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது
  • ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருதான, Order of Australia விருது சமூக சேவைகளில் சிறப்பாக செயலாற்றியதற்காக இந்திய வம்சாவழியை சேர்ந்த குருசாமி ஜெயராமன் என்பவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது
  • அமெரிக்காவின் 2௦17ம் ஆண்டிற்கான மனித கடத்தலை தடுத்த நாயகன் விருது, இந்திய தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான மகேஷ் முரளிதர் பகவத் அவர்களுக்கு வழங்கப்பட்டது
  • மாருதி சுசுகி விளையாட்டு விருதுகள்
    • இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது = பி.வி.சிந்து
    • இந்த ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் = கோபிசந்த்
    • வாழும் மேதை விருது = மில்கா சிங்
    • வாழ்நாள் சாதனையாளர் விருது = அபினவ் பிந்த்ரா, 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் “நிலநடுக் கோடு விருது”, மகராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரை சேர்ந்த “ஸ்வயம் சிக்ஷான் பிரயாக்” நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. வறட்சி காலத்தின் வேளாண்மை மேற்கொள்வதின் வழிமுறைகளை கூறி வேளாண்மைக்கு வலி காட்டியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது
  • பிரதம மந்திரி கோப்பைக்கான, “ஒருங்கிணைந்த சிறந்த எக்கு ஆலை” விருது, 2014-15, 2015-16 ஆகிய இரு ஆண்டிற்கும், டாடா ஸ்டீல் நிறுவனம் வென்றது
  • 2௦17ம் ஆண்டிற்கான தேசிய புவி அறிவியல் ஆராய்ச்சி விருது விழாவில், வலநாள் சாதனையாளர் விருது, பிரபல பேராசிரியர் கே.கோபாலன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஐசோடோப்புகள் பற்றிய இவரின் ஆராய்சிக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்]பட்டது.
  • மேற்கு வாங்க மாநிலத்தின், “2௦17 மகாநாயக் சம்மான்” விருது, அம்மாநில நடிகையான சகுந்தலா பரு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் தொடர்கிறது….

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-6

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.