TNPSC Current Affairs in Tamil July 2017-Part-4

நாட்கள்

 • ஜூலை 1 = பட்டய கணக்காளர் தினம்
 • ஜூலை 1 = தேசிய மருத்துவர்கள் தினம். மேற்குவங்க மாநிலத்தின் முன்னால் முதல்வரும், சிறந்த மருத்துவருமான பித்தன் சந்திர ராய் அவர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது
 • ஜூலை 2 = உலக விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்
 • ஜூலை 3 = சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம்
 • ஜூலை மாத முதல் சனிக்கிழமை = சர்வதேச கூட்டுறவு தினம். இந்த ஆண்டிர்கான் கரு = Co-operatives ensure no-one is left behind
 • ஜூலை 11 = உலக மக்கள் தொகை தினம். இந்த ஆண்டிற்கான கரு = FAMILY PLANNING – EMPOWERING PEOPLE, DEVELOPING NATIONS
 • ஜூலை 15 = சர்வதேச இளைஞர் திறன் தினம். இளைஞர்களுக்கு சிறந்த சமூக – பொருளாதார நிலை அமைய வேண்டும் என்பதும், வேலையின்மை மற்றும் தகுதிக்கு குறைவான வேலை போன்றவற்றை நீக்குதல், இத்தினத்தின் இலக்காகும். இந்த ஆண்டிற்கான கரு = SKILLS FOR THE FUTURE OF THE WORK
 • ஜூலை 17 = சர்வதேச நீதி தினம்
 • ஜூலை 18 = நெல்சன் மண்டேலா தினம்
 • ஜூலை 23 = சுத்திர போராட்ட வீரர்களான பால் கங்காதர் திலகர் மற்றும் சந்திர சேகர ஆசாத் ஆகியோரின் பிறந்த தினம்
 • ஜூலை 23 = தேசிய ஒலிபரப்பு தினம்.
 • ஜூலை 24 = வருமானவரி தினம். வாருமானவரி 1860ல் வருமானவரி விதிக்கப்பட்ட நாளாகவும் அதே நாளில் வருமான வரி ஆணையம் நடைமுறைக்கு வந்த நாளாகவும் இருப்பதால் வருமான வரித்துறை ஜூலை 24ம் தேதியை வருடாந்திர வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது.
 • ஜூலை 26 = கார்கில் தினம். இத்தினம் 1999ம் ஆண்டு நிகழ்ந்த கார்கில் போரில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேசன் விஜய், வெற்றி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.
 • ஜூலை 28 = உலக கல்லீரல் அழற்சி தினம். இது வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் = கல்லீரல் அழற்சி நோயை ஒழிப்போம்
 • ஜூலை 29 = சர்வதேச புலிகள் தினம், இத்தினம் புலிகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.

இடங்கள்

 • 36வது நபார்டு வங்கி உதய தின விழா, புது தில்லியில் நடைபெற்றது
 • 21வது இந்திய – மியான்மர் தேசிய அளவிலான கூடம், மியான்மர் நாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் உள்துறை செயலாளர் ராஜி கவுபா பங்கேற்றார்
 • 2௦17ம் ஆண்டிர்கான் ஆளாக உணவுத் திருவிழா, இந்தியா சார்பில் தலைநகர் புது தில்லியில் நடத்தப்படும் என மத்திய ஆரசு தெரிவித்துள்ளது
 • 5வது தென் இந்திய எழுத்தாளர்கள் குழு இலக்கிய திருவிழா, கேரளாவில் நடைபெற்றது.
 • 2௦21ம் ஆண்டின் உலக குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டிகள், இந்தியாவில் நடத்தப்படும் என உலக குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டில், உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மாநாடு

 • யுனஸ்கோ உலக பாரம்பரிய குழுக் கூட்டம் போலந்து நாட்டின் க்ராகோ நகரில் நடைபெற்றது. இதில் புதிதாக 21 இடங்கள், யுனஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது.
 • 17வது சார்க் நாடுகளின் ஓவியர்கள் கூட்டம், நேபால் நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது.
 • 2௦17 பிரிக்ஸ் நாடுகளின் தேசிய ஆலோசகர்கள் பங்கேற்கும் கூட்டம், சீனாவின் பீஜிங் அன்கரில் நடைபெற்றது.
 • 2௦17 பிரிக்ஸ் நாடுகளின் இளைஞர் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு, சீனாவின் பீஜிங் நகரில் துவக்கி வைக்கப்பட்டது
 • 22வது உலக பெட்ரோலிய காங்கிரஸ் கூட்டம், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் மத்திய எரிசக்தி துறை அமைகாஹ்ர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்
 • சார்க் நாடுகளின் சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொள்ளும் எட்டாவது கூட்டம், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது.
 • உலகின் மிகப்பெரிய சைபர் பாதுகாப்பு கருத்தரங்கம், இந்தியா சார்பில் புது தில்லியில் நடத்தப்பட்டது.
 • பிரிக்ஸ் நாடுகளின் கல்வித்துறை அமைகாஹ்ர்கள் பங்கு பெறும் கூட்டம், சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது
 • நான்காவது வடக்கு – கிழக்கு இனைப்பு உச்சிமாநாடு வரும் செப்டம்பர் மாதம் நாகாலாந்து மாநிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 2௦17 எவரஸ்ட் சர்வதேச மாடல் ஐக்கிய நாடுகள் வட்டார கருத்தரங்கம், நீபால் நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது (EIMUN – 2017 EVERERST INTERNATIONAL MODEL UNITED NATIONS REGIONAL CONFERENCE)

வங்கி

 • கனரா வங்கி, தனது முதல் டிஜிட்டல் வங்கிக் கிளையான, “கண்டி”யை (CANDI), பெங்களூரு நகரில் துவக்கியது
 • சத்தீஸ்கர் மாநில அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து ஒரே மாநில கூட்டுறவு வங்கியாக மாற்றி அமைத்துள்ளது
 • ஸ்நாப்டீல் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட ப்ரீசார்ஜ் நிறுவனத்தை ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது

பொருளாதாரம்

 • குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் சாலைகளை மேம்படுத்துவதற்காக, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, நான்காயிரம் கோடியை கடனாக வழங்கியுள்ளது
 • ஆசிய வளர்ச்சி வங்கியின் கணிப்பு படி, 2017-18ம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4% ஆக உயரும் என தெரிவித்துள்ளது
 • 2018 மார்ச் மாதத்திற்குள் மானிய விலை கேஸ் விலையை, மானியம் இல்லாத வகையில் மாதம் தோறும் ரூபாய் நான்கு உயர்த்த மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது
 • கூகுல் நிறுவனம், பெங்களூருவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான, ஹள்ளி லேப்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது
 • 2௦16-17ம் ஆண்டுகளில், மத்திய அரசு மானியங்களை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம், சுமார் 57௦௦௦ கோடியை மிச்சம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது
 • இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 2௦ ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
 • இந்தியா உலக அளவில் தற்போது மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இரண்டு இடங்களில் பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
 • இங்கிலாந்து நாட்டின் வணிகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள் மற்றும் தொழில் துவங்குதல் ஆகியவற்றில், இந்தியா நான்காவது இடத்தில்  உள்ளது. முதல் இடத்தில அமெரிக்கா உள்ளது.
 • இந்தியா, முதன் முறையாக அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த முறை இந்தியப் பிரதமர் அமெரிக்க சென்ற பொது ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தொடர்கிறது….

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.