TNPSC Current Affairs in Tamil July 2017-Part-5

அறிவியல்

 • மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், கிராமப்புற சாலைகளை பராமரிப்பதற்காக “ஆரம்ப்” (AARAMBH) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்தை சாலி பயன்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்த முடியும்.
 • இந்திய ரயில்வே அமைச்சகம், “ரயில் சாரதி” (RAIL SAARTHI = SYNERGISED ADVANCE APPLICATION RAIL TRAVEL HELP AND INFORMATION) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு, உணவு பதிவு செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
 • வணிக நிறுவனங்களின் உற்பத்தியினை பெருக்கவும், நிறுவன இயக்குதலை மேம்படுத்தவும், மைக்ரோசாப்ட் இந்திய நிறுவனம், “கைசாலா” என்னும் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி குழு தொடர்பு மற்றும் பணி நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது செயலி மூலம், நிறுவனங்கள் உள்ளே அல்லது வெளியே இருக்கும் கணினி மற்றும் கைப்பேசி இடைவெளியை இணைக்க இந்த செயலி உதவும்.
 • மீத்தேன் ஹைட்ரேட்ல் இருந்து இயற்க்கை எரிவாயுவை, வெற்றிகரமாக சீனா உற்பத்தி செய்துள்ளது. எரி பனிக்கட்டி என்று அழைக்கபப்டும் மீத்தேன் ஹைட்ரேட், சோதனை அடிப்படையில் தென் சீன கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. தென்சீனக் கடல் பகுதியில், உலகின் அதிகமான மீத்தேன் ஹைட்ரேட் நிலைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

ராணுவம்

 • ரஸ்யாவால் வடிவமைக்கப்பட்ட வக்லி நீர்மூழ்கிக் கப்பல், 1974ம் ஆண்டு இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. கடந்த 2௦1௦ம் ஆண்டு இந்த நீர்மூழ்கிக் கப்பல் பணிநிறைவை பெற்றது. இக்கப்பலில் தமிழக அரசு கடல் அருங்காட்சியம் அமைக்க முடிவு செய்துள்ளது.
 • இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட “மைத்ரி” (MAITREE 2017) போர் பயிற்சி நிகழ்ச்சி, ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது
 • இந்திய ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், “முந்த்ரா” (MUNTRA = Mission UNmanned TRacked) என்னும் நாட்டின் முதல் தானியங்கி டாங்கி வண்டியை, சென்னையில் உள்ள சோதனை கூடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
 • 21வது “மலபார் கடற்பயிற்சி 2௦17”, சென்னைக்கு அருகில் வங்கக் கடல் பகுதிகளில் நடைபெற்றது. இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் கடற்படை வீரர்கள் பங்குபெற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
 • பால்டிக் கடல் பகுதியில், சீனா மற்றும் ரசிய படைகள் மேற்கொண்ட, “JOINT SEA 2௦17”, போர் பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
 • சீனா, வெளிநாட்டில் தனது முதல் ராணுவ முகாமினை, ஆப்ரிக்காவின் டிஜிபௌட்டி என்னுமிடத்தில் நிறுவி உள்ளது. இதன் மூலம் சீனா, தனது ராணுவ நடவடிக்கையை விஸ்தரிப்பு செய்யும் வேலையை வேகப்படுத்தி உள்ளது.

ஒப்பந்தம்

 • 3௦ கோடி ரூபாயில், இலங்கையின் அனுராதபுரம் மாவட்டத்தில் இந்தியா சார்பில் வீடு கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தம், இந்தியா மற்றும் இலங்கை இடையே கையெழுத்தாகியுள்ளது. புத்த துறவி சோபிதா தேரோ பெயரில், இந்த பகுதி உருவாக்கப்படுகிறது.
 • இந்திய எல்லைப் பாதுகாப்பு படை, தேசிய திறன் வளர்ச்சி கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி எல்லை பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

மறைவு

 • முன்னாள் கர்நாடகா முதல்வர் தரம் சிங் காலமானார்
 • பிரபல பேராசிரியரும், விஞ்ஞானியுமான யஷ்பால் காலமானார். காஸ்மிக் கதிர்கள் தொடர்பாக் இவர் பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்டார்.
 • கேரளாவை சேர்ந்த பிரபல சுந்ததிர போராட்ட தியாகியான கே.இ. மேமன் காலமானார், இவர் “கேரள காந்தி” என்று அம்மாநில மக்களால் அழைக்கப்பட்டவர் ஆவார்.
 • சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளரும், முன்னாள் இஸ்ரோ தலைவருமான டாக்டர் உடுப்பி ராமசந்திர ராவ், பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 85.

குழு

 • இந்தியாவின் முதன்மை துறைமுகங்களில் அரு – தனியார் பங்களிப்புடன் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட வேத்பிரகாஷ் தலைமையிலான குழு, தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
 • கார்நாடக மாநில அரசு, அம்மாநிலத்திற்கு என்று தனி கொடியை வடிவமைக்க குழு ஒன்றை அமைத்துள்ளது..

திட்டம்

 • மத்திய அரசு, “கிசன் – சம்படா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது (KISAN SAMPADA YOJANA – SCHEME FOR AGRO MARINE PROCESSING AND DEVELOPMENT OF AGRO PROCESSING CLUSTERS). இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உணவுப் பூங்காக்கள், ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்குகள், உணவு பதப்படுத்துதல் மேம்படுத்துதல், வேளாண் உட்கட்டமைப்பு, உணவுப் பாதுகாப்பு போன்றவை உருவாக்கி மேம்படுத்தப்படும். இதற்காக மத்திய அரசு 6௦௦௦ கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. மாநில பாகுபாடு இன்றி, இத்திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
 • மத்திய நிதித்துறை அமைச்சகம், 6௦ வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டும் பிரத்யோகமாக, “பிரதம மந்திரியின் வய வந்தனா திட்டம்” (PMVUY – PRADHAN MANTRI VAYA VANDHANA YOJANA|) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் 1௦ ஆண்டுகளுக்கு எட்டு சதவிகித உத்திரவாத வட்டியை, அவர்கள் செய்த முதலீட்டின் அளவைப் பொருத்து பெறுவார்கள். இத்திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மேற்கொள்ளும்.
 • மத்திய சிறுபான்மை நலத்துறை அமைகாஹ்கம், “ஹமாரி தரோகர்” (HAMARI DAROHAR SCHEME) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்தல் ஆகும்.
 • சிறுபான்மை இன பெண்களுக்காக மத்திய அரசு, “புது ரோஷினி” (NAI ROSHINI SCHEME) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறுபான்மை பெண்கள் மத்தியில் தலைமைத்துவ பண்புகள் மேம்படுத்த தொடங்கப்பட்ட திட்டம் இது. இத்திட்டத்தின் நோக்கமானது, சிறுபான்மையின பெண்கள் இடையே தன்னம்பிக்கையை நிலைநாட்டுவதும், அவர்களுக்கு தேவையான நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதும் ஆகும்.
 • மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், சனல் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க JUTE-ICARE (IMPROVED CULTIVATION AND ADVANCED RETTING EXERCISE FOR JUTE) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மேம்படுத்தப்பட்ட சனல் சாகுபடி மற்றும் மிருதுவாக்கும் முறை ஆகும். இந்த திட்டம் விவசாயிகளிடையே சிறந்த வேளாண் நடைமுறைகள் மற்றும் நுண்ணுயிர் உதவியுடன் சணலை மிருதுவாக்கும் முறைகளை அறிமுகம் செய்கிறது.

குறியீடு

 • சர்வதேச டிஜிட்டல் மயக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நிதித்துறையில் அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளை உள்ளடக்கி இப்படியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தில நார்வே உள்ளது. முதல் 3 இடங்கள் = நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகும். இப்பட்டியலில் இந்தியா 17-வது இடத்தை பிடித்துள்ளது
 • பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த நடிக்சிஸ் நிறுவனம், உலகளாவிய பணி ஓய்வு குறியீட்டை வெளியிட்டது. இப்பட்டியலில் இந்தியா சென்ற ஆண்டு இருந்த அதே இடமான 43வது இடத்திலேயே இந்த ஆண்டும் உள்ளது. முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள் = நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகும்.
 • 2-வது பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சிலின் அறிக்கையின் படி, இந்தியாவில் முதலீட்டிற்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில குஜராத்தும், இரண்டாவது யாதில் டெல்லியும் உள்ளன. தமிழகம் மிகவும் பின்தங்கி 18வது இடத்தில உள்ளது
 • 2௦17 நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 157 நாடுகளை கொண்ட இப்பட்டியலில் இந்தியா 116வது இடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களில் டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வே நாடுகள் உள்ளன. கடைசி இடத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசு உள்ளது. பிரிக்ஸ் நாடுகளிலே இந்தியா தான் பின்னோக்கி உள்ளது.
 • அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் வெளியிட்ட தீவிரவாத பாதிப்பு குறியீட்டில், உலக அளவில் தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் பாதித்த 5 நாடுகள் = ஈராக் (2965 தீவிரவாத தாக்குதல்), ஆப்கானிஸ்தான் (1340 தாக்குதல்), இந்தியா (927 தாக்குதல்கள்), பிலிப்பைன்ஸ் (482 தாக்குதல்) மற்றும் நைஜீரியா (466 தாக்குதல்). இப்பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
 • 2வது உலகளாவிய சைபர் பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 165 நாடுகள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்தியா இப்பட்டியலில் 23வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள் = சிங்கப்பூர், அமெரிக்க மற்றும் மலேசியா ஆகும்.
 • பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெல், 2௦17 பெண் தொழில் முனைவோர் நகரக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் மொத்தம் 5௦ நகரங்கள் உலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் 3 இடங்கள் = அமெரிக்காவின் நியுயார்க், அமெரிக்காவின் பே பகுதி மற்றும் இங்கிலாந்தின் லண்டன் நகரம் ஆகும். இப்பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் 40-வது இடத்தையும், டெல்லி நகரம் 49-வது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் தொடர்கிறது….

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil July 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.