TNPSC Current Affairs in Tamil June 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-1

இந்தியா

 • ஏர்டெல் மற்றும் டெலினார் நிறுவனங்கள் இணைப்பிற்கு, பங்குச்சந்தை கட்டுபாட்டு அமைப்பான செபி ஒப்புதல் (SEBI Approves Airtel and Telenor Merger) அளித்துள்ளது. இதன் மூலம், டெலினார் நிறுவன பங்குகள், வாடிக்கையாளர்கள் போன்றவை இனி ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் செயல்படும்.
 • கேரள மாநில அரசு, அம்மாநிலத்தில் திருமண ஏற்பாடுகளில், இயற்கை முறைகளை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக, “பசுமை நெறிமுறையை” அறிமுகம் செய்துள்ளது. இதன் படி திருமண நிகழ்சிகளில் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும் சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத கண்ணாடி, இயற்கை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியுள்ளது.
 • புது தில்லியில் உள்ள லேடி ஹார்டிஞ்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இந்தியாவின் மிகப்பெரிய மனித பால் வங்கி மற்றும் துவங்கப்பட்டுள்ளது.  பாலூட்டுதல் ஆலோசனை மையம் துவக்கப்பட்டுள்ளது (National Human Milk Bank and Lactation Counselling Centre Inaugurated). இதற்கு, “வத்சல்யா – மாத்ரி அம்ரித் கோஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், தனது விண்வெளி ஆராய்சிக்காக 12 பேரை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் இந்திய வம்சாவழியை சேர்ந்த லெப்டினன்ட் கலோனல் ராஜா கிரைண்டர் சாரி ஆவார்.
 • வரும் ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள், நாள் தோறும் விலையை நிர்ணயம் செய்துக் கொள்ளும் முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • பெங்களூருவை சேர்ந்த சாஹிதி பிங்கலி என்ற 12ம் வகுப்பு மாணவி, நீர் நிலைகளில் மாசு ஏற்படுதல் தொடர்பான ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷனை கண்டுபிடித்ததற்காக, அவரை பாராட்டி பாலண்டத்தில் உள்ள ஒரு சிறிய கோளுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது (Sahithi Pingali, a twelfth grader from Bengaluru will get a minor planet in Milky Way named after her as a reward for developing an integrated mobile phone app and lake monitoring kit to monitor pollution in water bodies).
 • இந்திய குடியரசுத் தலைவர், “மகளுடன் செல்பி” என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்தார். இதன் முக்கிய நோக்கமானது, மக்களிடம் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் ஆகும் (President launches ‘Selfie with Daughter’ Mobile App)
 • வருமான வரி கட்டுவோர், தங்களின் பாண் என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் மற்றும் கட்டாயமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது (Supreme Court: Linking of Aadhaar with PAN Mandatory)
 • ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் ஆகிய நாடுகள், இந்தியாவில் 3 முக்கிய நகரங்களில் காற்று மாசை குறைக்க ஏதுவாக 3.5 மில்லியன் யூரோக்கள் தர ஒப்புதல் அளித்துள்ளன (EU, France give 3.5 Million Euros as Grant to Curb Emissions in India). இதன்படி நாக்பூர், கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் புகை வெளியேற்றம், காற்று மாசுபடுதல், புவி வெப்பமயமாதல் ஆகியவை தடுக்க இது உதவும்.
 • சமிபத்தில் வெளியிடப்பட்ட சி.ஆர்.யை அறிக்கையின் படி, இந்தியாவின் எட்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக உத்திரப் பிரதேசம் விளங்குகிறது (CRY Report: Uttar Pradesh ranks First in Number of Child Labourers). முதல் 3 இடங்கள் = உத்திரப் பிரதேசம், பீகார், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
 • பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு பெட்ரோ இரசாயன ஆலையை, மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளன (the world’s largest refinery and petrochemical complex in Ratnagiri district of Maharashtra). சுமார் 3 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், 2௦22ம் ஆண்டு முடிவிற்கு வரும்.
 • ஐக்கிய நாடுகளின் வேளாண் மேம்பாட்டு நிதியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிற நாடுகளில் பணிபுரிந்து தாய் நாட்டிற்கு பணத்தை அனுப்பும் வகையில், உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது (Indians working across the world had sent home USD 62.7 billion in 2016 making India the top remittance-receiving country surpassing China). பிற நாடுகளில் இருந்து அதிக அளவில் பணத்தை பெறும் நாடுகள் = இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ். அதிக அளவு ஊழியர்களால் பணம் வெளியேறும் நாடு = அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா.
 • கேரளா மாநிலத்தின் முதல் மெட்ரோ ரயில் சேவையை, கொச்சி நகரில் பிரதமர் துவக்கி வைத்தார் (Prime Minister Narendra Modi has inaugurated Kochi Metro, which will be Kerala’s first metro line). இது நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைத்தது. இது நாட்டின் எட்டாவது மெட்ரோ ரயில் ஆகும்.
 • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அறிவோம் இந்தியா நிகழ்ச்சியை”, (External Affairs Minister inaugurates KNOW INDIA PROGRAMME for Young Overseas Indians) வெளிநாட்டு வாழ் இளைய இந்தியர்களுக்காக துவக்கி வைத்தார். நாட்டின் பெருமைகள், தொன்மைகள் போன்றவற்றை வெளிநாட்டில் உள்ள இளைய தலைமுறை இந்தியர்கள் அறிந்துக் கொள்வதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், “யோகாவை கொண்டாடுவோம்” (Mobile App “Celebrating Yoga” Launched) என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யோகாசனத்தை பிரபலப்படுத்தவும், வளமான வாழ்வை உருவாக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
 • இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான 7௦ ஆண்டுகால இருதரப்பு உறவை பிரதிபலிக்கும் வகையில் புது தில்லியில் நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 1௦ ஆண்டுகாலங்கள் (India and Russia Celebrates 10 Years of Partnership in Science and Technology) மேலாக இணைத்து செயல்படுவதையும் இதில் வெளிபடுத்தப்பட்டது.
 • சமிபத்தில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் “மக்கள் தொகை அறிக்கையில்”, வரும் 2024ம் ஆண்டிற்குள், இந்தியா மக்கள் தொகையில் சீனாவை முந்தி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் (According to the World population Prospectus: The Revision released by the United Nations, India with 1.3 billion inhabitants would surpass China’s population of 1.4 billion by 2024, to become the World’s populous country) என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் குறைந்த இறப்பு விகிதமே, இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • உத்தர்காண்டு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள், திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது (Under the Swachh Bharat Mission Gramin (SBM-G), rural Uttarakhand and rural Haryana have been declared as the 4th and 5th Open Defecation Free (ODF) States of India). இந்தியாவின் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நான்காவது மாநிலமாக உத்திரகாண்டும், ஐந்தாவது மாநிலமாக ஹரியானாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மூன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலங்கள் = சிக்கிம், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகும்.
 • இந்தியாவின் தங்க மங்கை எனப்படும் பி.டி.உஷாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி, கான்பூர் அகில இந்திய தொழில்நுட்ப கலகம் கவுரவித்துள்ளது
 • தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான “டிராய்”, Mycall, MySpeed and ‘Do not disturb (DND 2.0)‘ app என்ற 3 புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை எளிமையாக்க முடியும்
 • தெலுங்கானா மாநில அரசு, அம்மாநிலத்தில் கால்நடை வாங்குதல், விற்பனைக்கு என்று தனி இணையதளத்தை துவக்கி உள்ளது.
 • பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் அரசு பள்ளி முதல் அரசு கல்லூரி வரை படிக்கும் அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது (Punjab Government announced free education for girls in government schools and colleges from Nursery to Ph.D.)
 • குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்தின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் கலந்துக்கொண்டார். மேலும் ஜெயின் துறவியான ஸ்ரீமத் ராஜசந்திராவின் 15௦-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார்
 • மணிபூர் மாநில அரசு, அம்மாநிலத்தின் பெண்களின் தேவைக்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய 181 என்ற தொலைபேசி எண் சேவையை அறிமுகம் செய்துள்ளது (Manipur CM Biren Singh launched a toll free 24/7 helpline number 181 for women in state)
 • கீழ் நீதிமன்றங்களில் 1௦ ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மத்திய அரசு, “நியாய மித்ரா” சேவையை விரைவில் துவங்க உள்ளது.
 • இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை வரும் ஜூலை மாதம் 17ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துளளது. மேலும் துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது
 • மத்திய ரிசர்வ போலிஸ் படை, ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களுக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 14411 என்ற இலவச தொலைபேசி சேவையை துவக்கி உள்ளது
 • அருணாச்சலப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது
 • நாடு முழுவதும் 1௦௦௦ ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

Continue …

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.