TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2

தமிழகம்

 • 2௦17ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் விருதில், தமிழ் மொழிக்கான விருது, மனுஷி என்னும் புனைப் பெயர் கொண்ட ஜெ.ஜெயபாரதி என்பவர் எழுதிய ஆதிக் காதலின் நினைவு குறிப்புகள் என்னும் கவிதை நூலிற்கு வழங்கப்பட்டது
 • 2௦17ம் ஆண்டின் சாகித்ய அகடமியின் பால் சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ் மொழிக்கு குழந்தை இலக்கியத்திற்காக, வேலு சரவணன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
 • கவிக்கோ எனப்படும் கவிஞர் அப்துல் ரகுமான் காலமானார்
 • திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அணைத்து கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துளளது.

சர்வதேசம்

 • ஐயர்லாந்து நாட்டின் அடுத்த புதிய பிரதமாராக, லியோ வரதராக், என்னும் இந்தியா வம்சாவழியை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் (Ireland’s Fine Gael party has elected a 38 year old Leo Varadkaras prime minister of Ireland). இவர் ஐயர்லாந்தின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் பிரதமர் ஆவார்.
 • கத்தார் நாட்டுடன் 6 அரேபிய நாடுகள், தந்து தூதரக மற்றும் ராஜாங்க ரீதியிலான உறவுகளை துண்டித்து கொண்டுள்ளன. சவூதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், லிபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேகம் ஆகிய நாடுகள் கத்தார் உடன் உறவை துண்டித்துள்ளன.
 • உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலியாவின் விவிட் சிட்னி ஒளித் திருவிழா, புதிய சாதனையை கின்னஸ் படைத்துள்ளது (The World’s largest festival of light, music and ideas, Vivid Sydney has entered into Guinness World Book of Records). 1,24,128 ஒளி விளக்குகளை ஏற்றி விவிட் சிட்னி ஒளித் திருவிழா, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
 • நேட்டோ அமைப்பில் 29-வது உறுப்பு நாடாக மாண்டங்கேரோ இணைந்துள்ளது.
 • உலகிலேயே அதிக செலவு மிக்க நகரமாக அங்கோலா நாட்டின் லுவாண்டா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில ஹாங்காங் நகரம் உள்ளது. மூன்றாவது இடத்தில ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது

முதன் முதல்

 • இந்திய மொபைல் காங்கிரஸ் 2௦17 கூட்டம், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதன் முறையாக, இந்தியா தனது சார்பில் முன்னின்று இது போன்ற மொபைல் விழாவை நடத்துகிறது (India Mobile Congress (IMC 2017) to be held in September)
 • தெலுங்கானா மாநில அரசு, டி-வாலட் என்ற பெயரில் தனி டிஜிட்டல் வாலட் முறையை அம்மாநிலத்திற்கு அறிமுகம் செய்துள்ளது (Telangana has launched a digital wallet named T-Wallet for people to make public and private financial transactions). இது அரசு மற்றும் தனியார் சார்ந்த நிதி சேவைகளுக்கும் பயன்படுத்தப் முடியும். இது போன்ற தனி வாலட் சேவையை அறிமுகம் செய்துள்ள முதல் மாநிலம் தெலுங்கானா ஆகும்.
 • நாட்டிலேயே முதல் முறையாக பேரழிவுகளுக்கான முதல் தானியங்கி கரையோர எச்சரிக்கை மையம் (Country’s First Automatic Coastal Warning for Disasters) ஓடிசாவில் துவக்கப் பட்டுள்ளது. “முன் எச்சரிக்கை தகவல் அளித்தல் மையம்” (EWDS = EARLY WARNING DISSEMINATION SYSTEM). இம்மையத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் சுற்றளவில், ஏற்படும் சுனாமி, புயல் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்யும்.
 • இந்தியாவின் மணிக்கா த்ரா மற்றும் மவுமா தாஸ் ஆகிய இணை, உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகளில், காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய இணை (India’s Manika Batra and Mouma Das has created history by becoming the first Indian pair to reach the quarterfinals of the World Table Tennis Championships) என்ற பெருமையை பெற்றுள்ளனர். இப்போட்டிகள் ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரில் நடைபெற்று வருகிறது.
 • சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பில், நடுவர்கள் குழுவிற்கு, தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முதல் இந்தியர் என்ற சிறப்பை, கணேசன் நீலன்கண்ட ஐயர் பெற்றுள்ளார் (Ganeshan Neelakanta Iyer has become the first Indian to be nominated as a member of the Umpires and Referees Committee (URC) by International Table Tennis Federation (ITTF)). இவர் இப்பதவியில் 2 ஆண்டுகளுக்கு இருப்பார்.
 • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசா, உலகின் முதல் நியுட்ரான் விண்மீன்கள் ஆய்வு விண்கலத்தை செலுத்த உள்ளது. (NASA is all set to launch the world’s first ever mission devoted for studying neutron stars. NASA will launch the Neutron Star Interior Composition Explorer, or NICER) இது சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டு, அங்கு இருந்து தந்து ஆய்வை மேற்கொள்ளும்.
 • இந்தியாவின் முதல் ஊரக எல்.இ.டி தெரு விளக்கு திட்டம், ஆந்திர மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்ற ஏதுவாக 1௦ இலட்சம் எல்.இ.டி விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் தேசிய தெரு விளக்கு திட்டத்தின் கீழ் ஊரக பகுதியில் கொண்டு வரப்படும் நாட்டின் முதல் திட்டம், இதுவாகும் (India’s first Rural LED Street Lighting Project to be implemented in Andhra Pradesh)
 • மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரத்தின் அருகே உள்ள ஹபிப்கஞ் ரயில்வே நிலையமே, நாட்டின் முதல் தனியார் ரயில் நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது (Habibganj Railway Station to become India’s First Private Railway Station). அரசு – தனியார் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தை, வரும் ஜூன் 9-ம் தேதி மதிய அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
 • உலகின் முதல் கலப்பின, காற்றுக் கப்பல்” (AEROBOAT) இந்திய – ரசிய கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, நிலம், நீர், பணி மற்றும் பாலைவன மணல் போன்றவற்றில் பயணிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது (World’s First Hybrid ‘Aeroboat’ Unveiled) இது மின்சாரம் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
 • இங்கிலாந்தின் பாராளுமன்ற அவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் சீக்கியர் என்ற சிறப்பை, “பரீத் கவுர் கில்” பெற்றுள்ளார் (Preet Kaur Gill has become the first Sikh to be elected to the British Parliament’s House of Commons)
 • இங்கிலாந்தின் பாராளுமன்ற அவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் டர்பன் தலைபாகை அணிந்த சீக்கியர் என்ற சிறப்பை, தன்மன்ஜீத் சிங் தேசி பெற்றுள்ளார் (Tanmanjeet Singh Dhesi has become the first turban-wearing Sikh to be elected to the House of Commons)
 • கடல் சட்டங்களுக்கான சர்வதேச தீர்பாயத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய பெண்மணி என்ற சிறப்பை, நீறு சதா பெற்றுள்ளார் (Law expert Neeru Chadha has been elected to the International Tribunal for the Law of the Seas (ITLOS). With this election, she has become the first Indian women to win a crucial election to a top UN judicial body). விஜயலட்சுமி பண்டிட்டிற்கு பிறகு, ஐக்கிய நாடுகள் அவையில் உயர்ந்த பொறுப்பில் அமர்ந்துள்ள இரண்டாவது இந்தியர் இவராவார்.
 • இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே விமான போக்குவரத்து முதன் முதலாக துவங்கப் படவுள்ளது. ஆப்கானிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் (India-Afghanistan Air freight Corridor to Open Up Soon) நிறுவனம், காபுல் நகரில் இருந்து டெல்லிக்கு விரைவில் விமான சேவையை வழங்க உள்ளது.
 • கட்டிட வடிவமைப்பிற்காக, “உருவ முத்திரை” உரிமையை பெற்றுள்ள இந்தியாவின் முதல் கட்டிடம் (Mumbai’s Taj Mahal Palace Hotel acquires ‘Image Trademark’) என்ற பெருமையை, மும்பையின் பிரபல தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் பெற்றுள்ளது.
 • “முதல் பிரதம மந்திரி யோகா விருது”, ரமாமணி ஐயங்கார் நினைவு யோகா கழகத்திற்கு வழங்கப்பட்டது (Ramamani Iyengar Memorial Yoga Institute, Pune has become thef irst recipient of the Prime Minister’s Award for outstanding contribution to promotion and development of Yoga). யோகாவின் வளர்ச்சி மற்றும் பரப்புதல் ஆகியவற்றில் சிறப்பான பணியை மேற்கொண்டதால் இம்மையத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
 • இந்தியாவின் முதல் உள்நாட்டு மிதக்கும் கப்பல்தளம் சென்னை அடுத்துள்ள காட்டுபள்ளி என்னும் இடத்தில எல் அண்ட் டி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது (Larsen & Toubro has launched the first indigenously built Floating Dock (FDN-2) to repair Indian Navy ships at its Shipyard at Kattupalli, north of Chennai). அடுத்த நான்கு மாத சோதனைக்கு பிறகு, இந்த மிதக்கும் கப்பல் செப்பனிடும் தளம் இந்திய கப்பல் படையிடம் ஒப்படைக்கப்படும். இது இங்கிருந்து அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள இந்திய கப்பல் படை மையத்திற்கு எடுத்து செல்லப்படும். அங்கு இந்திய போர்க் கப்பல்கள், ரோந்ந்து கப்பல்கள் போன்றவற்றை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 • உலகின் முதல் மெய்நிகர் ரயில் பாதை சீனாவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது (China has unveiled world’s first train that runs on a virtual track making use of sensor technology instead of metal rails). இரும்பு பாதைக்கு பதிலாக சென்சார் தொழில்நுட்பம் மூலம் இந்த மெய்நிகர் ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்படும். பேட்டரி மூலம் இயங்கும் இந்த ரயில்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 • லண்டன் நகரில் நடைபெற்ற 7வது ஆசிய விருதுகள் விழாவில், இந்த ஆண்டிற்கான “சமூக தொழில்முனைவோர் விருது”, இந்தியாவை சேர்ந்த இன்டல்காப் நிறுவன தலைமை அதிகாரி, “நிசா தத், அவர்களுக்கு வழங்கப்பட்டது (Nisha Dutt, Chief Executive Officer of Intellecap has become the first Indian woman leader to have been honoured with the “Social Entrepreneur of the Year” award at The 7th Asian Awards in London). இவ்விருதை பெறும் முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
 • கனடா நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் டர்பன் கொண்ட சீக்கிய பெண்மணி என்ற சிறப்பை, பல்பிந்தர் கவுர் ஷெர்கில் பெற்றுள்ளார் (Palbinder Kaur Shergill has become the first turbaned Sikh woman to be appointed as Canada’s Supreme Court judge). இவர் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இவரின் நான்காவது வயதில் இவரின் குடும்பத்தார் கனாடாவிற்கு குடி பெயர்ந்துள்ளனர்.
 • இந்தியாவின் முதல் சரக்கு கிராமம்(INDIA’S FIRST FREIGHT VILLAGE), உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைக்கப்பட உள்ளது. இந்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையத்தால் அமைக்கப்பட உள்ள இந்த கிராமம், போக்குவரத்து சரக்குகள் கையாள ஏதுவாக ஆற்றுபகுதியில் அமைய உள்ளது.
 • சீன நாட்டின் பகுதியில் இருந்து, இமய மலையை ஏறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பை, ஹரியானா மாநில பெண் காவல் ஆய்வாளர், அனிதா குண்டு பெற்றுள்ளார் (FIRST INDIAN WOMAN TO CLIMB MOUNT EVEREST FROM CHINA SIDE). இவர் 2௦13ம் ஆண்டில், இமயமலையை நேபாள நாட்டில் இருந்து ஏறி சாதனை படைத்தவர் ஆவார்.
 • சமூக ஊடகமான ட்விட்டரில் 1௦௦ மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள உலகின் முதல் நபர் என்ற பெருமையை ஹாலிவுட் பாடகர் கேட்டி பெர்ரி பெற்றுள்ளார் (Hollywood Singer Katy Perry became first person to reach 100 million followers on Twitter)
 • கேளிக்கை மல்யுத்த போட்டியான, டபள்யு.டபள்யு.எப் எனப்படும் அமெரிக்காவின் பிரபல மல்யுத்த போட்டிகளில் பங்கு பெறும் முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பை விதா தேவி பெற்றுள்ளார்
 • இந்தியாவிலேயே முதன் முறையாக தெலுங்கானா மாநில அரசு, தனியாக உள்ள பெண்களுக்கு என்று மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்கும் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது (Telangana government launched single-women pension scheme across state. Under this, pension of about 1000 / month would be given to single women on humanitarian grounds)
 • கால்நடைகளுக்கு என்ற தனி இரத்த வங்கியை துவக்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை ஓடிஸா மாநிலம் பெற்றுள்ளது (Odisha became first state to open a blood bank for cattle, which is to be set up soon onpremises of Odisha University of Agriculture and Technology)
 • மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில், இந்தியாவிலேயே முதல் முறையாக போக்குவரத்து சேவையை மற்றும் சிக்கலை தீர்க்கும் வகையில் ரோபோட் உதவியுடன் போக்குவரத்து தீர்வு காணப்படுகிறது (Indore (Madhya Pradesh) became first city in India where robot is being used on an experimental basis to control its ever growing and unruly traffic)
 • இந்திய ரயில்வேயின் முதல் மனிதவள வட்ட மேசை கருந்தரங்கம் புது தில்லியில் நடைபெற்றது (Indian Railways’ 1st HR Round Table Conference held in New Delhi)
 • 2௦2௦ம் ஆண்டிற்குள், சீனா உலகின் முதல் “வன நகரத்தை(FOREST CITY) நிர்மாணிக்க உள்ளது. 175 ஹெக்டேர் பரப்பளவில் இது அமைய உள்ளது
 • உலகின் முதல் தகவல் தூதரகம், எஸ்டோனியா நாட்டில் அமைக்கப் படவுள்ளது (FIRST EVER DATA EMBASSY)

Continue …

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.