TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3

நியமனம்

 • பிரசார் பாரதி நிறுவனத்தின், முதன்மை தலைமை அதிகாரியாக சசி சேகர் வேம்பதி நியமனம் (Shashi Shekar Vempati has been appointed as the CEO of Prasar Bharati) செய்யப்பட்டுள்ளார். துணைக் குடியரசுத் தலைவரை தலைவராக கொண்ட 3 பேர் கொண்ட குழு, இவரை வழிமொழிந்துள்ளது.
 • நேபாள நாட்டின் புதிய பிரதமராக, ஷேர் பகதூர் தூபா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் நான்காவது முறையாக நேபாளத்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் (Sher Bahadur Deuba elected as 40th Prime Minister of Nepal)
 • மத்திய அரசு, “இந்திய பதிப்புரிமை பதிவாளராக”, ஹோசியார் சிங் என்பவரை நியமித்துள்ளது. (Hoshiar Singh Appointed as Chief of Copyrights office)
 • ஐக்கிய நாடுகள் அமைப்பில் புதிதாக உருவாக்கப் பட்ட “ஐக்கிய நாடுகளின் தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு” (The UN Secretary General Antonio Guterres has appointed Russian diplomat Vladimir Voronkov to head the newly established UN Counter-Terrorism Centre (UNCCT)), ரசியாவை சேர்ந்த விளாடிமிர் வோர்ந்கா, தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான பிரச்சனைகளை தணிக்கவே இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் அவை எடுத்துள்ளது.
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணைத் தலைவராக, இம்ரான் குவாஜா என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
 • புதிய பொருளாதார விவகாரத் துறை செயலாளராக தபன் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • இந்தய ரிசர்வ் வங்கியின் புதிய தலைமை நிர்வாக இயக்குனராக திரு கணேஷ் குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் புதிய தலைவராக சஞ்சீவ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக கென்னெத் லஸ்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • மத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கவுபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 • மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய சிறப்பு செயலாளராக ராஜேஷ் கோட்சா நியமிக்கப் பட்டுள்ளார்

விளையாட்டு

 • ஈ.எஸ்.பி.என் உலகின் 1௦௦ பிரபலமான விளையாட்டு வீரர்கள் (ESPN’s ranking of the 100 most famous active athletes in the world) பட்டியலில் இந்தியாவை சேர்ந்த நான்கு கிரிக்கெட் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் 13-வது யாதில் விராத் கோலியும், 15வது இடத்தில மகேந்திர சிங் தோனியும், 9௦-வது இடத்தில யுவராஜ் சிங்கும், 95-வது இடத்தில சுரேஷ் ரைனாவும் உள்ளன்னர். இப்பட்டியலில் முதல் இடத்தில கால்பந்து வீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.
 • இந்திய பாட்மிண்டன் வீரர், சாய் ப்ரநீத், பாங்காக் நகரில் நடைபெற்ற தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இறுதி ஆட்டத்தில் இந்தோனேசிய வீரர், ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தி, சாம்பியன் பட்டதை கைப்பற்றினார் (Ace Indian Shuttler B Sai Praneeth has clinched Thailand Grand Prix Gold title by defeating Indonesia’s Jonatan Christie)
 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. இது 116வது பிரெஞ்ச் ஓபன் போட்டிகளாகும்
  • ஆண்கள் ஒற்றையர் = ஸ்பெயினின் ரபேல் நடால் சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டான் வாவன்ரிக்காவை வீழ்த்தினார். 1௦வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனை படித்தார் ரபேல் நடால்.
  • பெண்கள் ஒற்றையர் = லாட்வியா நாட்டின் ஜெலினா ஒஸ்தாபென்கோ, ரோமானியா நாட்டின் சிமோனா ஹலப்பை வீழ்த்தினார்
  • ஆண்கள் இரட்டையர் = அமெரிக்காவின் ஹாரிசன் மற்றும் நியுசிலாந்து நாட்டின் மைக்கல் வீனஸ் இணை, மெக்சிகோ நாட்டின் சாண்டியாகோ கொன்சாலஸ் மற்றும் அமெரிக்காவின் டொனால்ட் யங் இணையை வீழ்த்தியது
  • பெண்கள் இரட்டையர் = அமெரிக்காவின் பெதானி சான்ட்ஸ் மற்றும் செக் குடியரசின் லூசி இணை ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டி மற்றும் கேசே தேலேக்கா இணையை வீழ்த்தியது
  • கலப்பு இரட்டையர் = இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் கனடா நாட்டின் கேப்ரியல்லா டப்ரோவிஸ்கி இணை, ஜெர்மனியின் அண்ணா லேனா மற்றும் கொலம்பியாவின் ராபர்ட் பாரா இணையை வீழ்த்தியது
 • 2௦2௦ ஜப்பானின் டோக்யோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் புதிதாக 15 விளையாட்டுகள் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 321 வகை போட்டிகள் நடைபெற உள்ளது.
 • சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டிகளில், இந்தியாவின் ஜித்து ராய் மற்றும் ஹீனா சித்து ஆகியோர் 1௦ மீ கலப்பு அணி பிரிவில், இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை வென்று தந்துள்ளனர் (Indian shooters Jitu Rai and Heena Sidhu have clinched the gold medal in mixed team 10m air pistol event of the International Shooting Sport Federation (ISSF) World Cup held at Gabala, Azerbaijan). இப்போட்டிகள் அஜெர்பெய்ஜான் நாட்டின் கபாலா நகரில் நடைபெற்றது.
 • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிகவேகமாக 8000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார் (India’s Skipper Virat Kohli has created a record by becoming the quickest batsman to score 8000 runs in one-day international cricket). அவர் இந்த ரன்களை 175 போட்டிகளில் விளையாடி அடித்துள்ளார்.
 • இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற இந்தோனேசியா சூப்பர் சீரியஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் (India’s Kidambi Srikanth has lifted the Indonesia Open Super Series badminton title), ஜப்பான் வீரரை வீழ்த்தி, சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் நாடுகளாக ஐயார்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் நாடுகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
 • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், மிக அதிகமுறை 3௦௦ ரன்களை கடந்த அணி என்ற பெருமையை, இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி 95 முறை 3௦௦ ரன்களுக்கு மேல் போட்டிகளில் அடித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் எதிரான தொடரில் இந்தியா அடித்த 31௦ ரன்கள் மூலம், இந்திய அணி ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது.
 • மங்கோலியா நாட்டில் நடைபெற்ற உலான்பாதார் கோப்பை குத்துச்சண்டை போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த அங்குஷ் தாகியா தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இந்தியாவின் தேவேந்திர சிங் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்
 • 18-59 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற, அமெரிக்காவில் 4900 கிலோமீட்டர் தொலைவு ஓட்டப் பந்தயத்தில், வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் இந்தியர் என்ற சிறப்பை ஸ்ரீநிவாஸ் கோகுல்நாத் பெற்றார், இவர் இப்பந்தயத்தில் 7வது இடத்தை பிடித்தார். மேலும் எட்டாவது இடத்தை இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான அமித் சாமார்த் பிடித்தார் (India’s Srinivas Gokulnath and Amit Samarth became first Indians to complete 4,900-km Race Across America (RAAM) in 18-59 age category)
 • ரசியாவின் ஸ்லோவாகியா நகரில் நடைபெற்ற உடல் ஊனமுற்றோருக்கான உலக சதுரங்க சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த சசிகாந்த் குட்வால், தங்கப் பதகத்தை வென்றார் (India’s Shashikant Kutwal won gold medal at 17th World Individual Chess Championship for differently-abled, held in Slovakia)
 • முதல் பிரிக்ஸ் விளையாட்டு போட்டிகள், சீனாவின் குவான்சோ நகரில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் பங்குபெற்றனர். இதில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது (India won 6 medals in Wushu competition of first ever BRICS Games, concluded in Guangzhou (China))
 • கெர்ரி வெபர் ஓபன் டென்னிஸ் போட்டியென்ரும், ஹல்லே ஓபன் டென்னிஸ் போட்டிகள் என்றும் அழைக்கப்படும் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன்சிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர், ஜெர்மனி வீரரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்
 • தென் கொரியாவில் நடைபெற்ற 2௦ வயது உட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை போட்டிகளில், முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டதை கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, வெனிசுலா அணியை வீழ்த்தியது (England won FIFA U-20 World Cup for first time ever, defeating Venezuela. It was hosted by South Korea.)
 • மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில், இந்தியாவை சேர்ந்த நிதின் குமார், மலேசிய வீரர் கிறிஸ்டியன் திடர் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தன்யா ஷா மற்றும் சனமாய் காந்தி இணை கோப்பையை வென்றது (Indian Player Nitin Kumar Sinha defeated Malaysia’s Christian Didier Chin to win boys singles title)
 • ஜெர்மனியின் சுஹுள் நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சாம்பியன்சிப் போட்டிகளில், இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. சீனா 19 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது

Continue …

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.