TNPSC Current Affairs in Tamil June 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-4

விருதுகள்

 • உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குனர் ஜெனெரல் அவர்களின் சிறப்பு அங்கீகார விருது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது (Union Health Minister Conferred WHO Director-General’s Special Recognition Award for Global Tobacco Control). புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை பெருமளவு குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது.
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்ட நீர் பாதுகாப்பு தொடர்பான, பீகார் அரசின், “ஜல் சஞ்சய் திட்டத்திற்கு, சிறந்த மேலாண்மைக்கான தேசிய விருதை மத்திய அரசு வழங்கி உள்ளது. (‘Project Jal Sanchay’, a water conservation model which is successfully adopted in Nalanda district of south-central Bihar, has been chosen for the national award for excellence in the Mahatma Gandhi national rural employment guarantee programme (MGNREGP))
 • 2௦17ம் ஆண்டிற்கான மேன் புக்கர் சர்வதேச விருது, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த, டேவிட் கிராஸ்மேன் என்பவருக்கு (Israeli author David Grossman has won the Man Booker International Prize) வழங்கப் படவுள்ளது. A Horse Walks Into a Bar என்ற நாவலுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
 • மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சர்ஹாத் அமைப்பால் வழங்கப்படும், “பூபன் ஹசரிகா விருது, இந்த ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த “யசி டோர்ஜி டோங்க்சி”க்கு வழங்கப்பட்டது (The Bhupen Hazarika National Award, 2017 has been conferred upon the noted writer Yeshe Dorjee Thongshi)
 • நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை விழாவில், மேற்கு வாங்க மாநில அரசின், பெண் குழந்தைகள் திட்டமான, “கண்யஸ்ரீ பிரகல்பா” திட்டத்திற்கு, “ஐக்கிய நாடுகள் பொது சேவை விருது” வழங்கப்பட்டது. (West Bengal Chief Minister Mamata Banerjee has received the highest prize in United Nations Public Service Award for the state government’s Kanyashree Prakalpa (Girl Child) scheme in The Hague, Netherlands)
 • இங்கிலாந்தின் புகழ் பெற்ற, ஆர்வெல் விருது”, “ஜான் பேவ்” என்பவருக்கு வழங்கப்பட்டது. க்லேமன்ட் அட்லி என்பவற்றின் வாழ்க்கை வரலாறு நூலை படைத்ததற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது
 • 2௦16ம் ஆண்டிர்கான் கேந்திர சங்கீத நாடக அகாடெமி விருது, ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த ரதிகந்த் மொகபத்ரா, சத்யப்ரதா ரவுட் மற்றும் லக்ஷ்மிதவுர் ரவுட் என்பவர்களுக்கு வழங்கப்பட்டது
 • பிரான்ஸ் நாட்டின் உயரிய லீஜியன் விருது, வங்க நடிகரான சவுமித்ரா சட்டர்ஜி என்பவருக்கு வழங்கப்பட்டது
 • சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட திருவிழாவில், சிறந்த படத்திற்கான விருதை, இந்தி திரைப்படம், “சுல்தான்” பெற்றது. இதில் சல்மான் கான் நடித்துள்ளார்
 • சங்கீத நாடக அகாடெமி சார்பில் வழங்கப்படும், “அகடமி ரத்னா” விருது, சுனில் கோதாரி என்பவருக்கு வழங்கப்பட்டது.
 • இந்திய அழகிப் போட்டியில், ஹரியானா மாநிலத்தை மனுஷி சில்லர், அழகிப் பட்டதை வென்றார். இரண்டாவது இடத்தை ஜம்மு காஸ்மீர் மாநிலத்தை சேர்ந்த சனா தாவு பிடித்தார்
 • ரசியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற இந்திய – ரசிய பொருளாதார நிகழ்ச்சியில், “சிறந்த ஜோதிடர்” விருது, ஹைதரபாத் நகரை சேர்ந்த டி.எஸ். வினீத் குமார் என்பவருக்கு வழங்கப்பட்டது
 • 2௦17ம் ஆண்டிற்கான சர்வதேச டப்ளின் இலக்கிய விருது, அங்கோலா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர், ஜோஸ் எடுவர்டோ அங்குலசா என்பவருக்கு வழங்கப்பட்டது.
 • ஓடிஸா அரசால் வழங்கப்படும் சர்வதேச கலிங்கா இலக்கிய விருது, ஆனந்த் நீலன்கந்தன் என்பவருக்கு வழங்கப்பட்டது
 • அறிவியல் மாற்றும் ஆராய்சிக்காக வழங்கப்படும் ஓடிஸா அரசின் “பிஜூ பட்நாயக் அறிவியல் மேலாண்மை விருது”, லலித் மோகன் தாஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது
 • 2-வது உலகளாவிய திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டில், இளைய தலைமுறையினரிடம் தகவல் தொழில்நுட்ப திறன் வளர்த்ததற்காக, சிறந்த மேலாண்மை விருது, உத்திரகாண்டு மாநிலத்திற்கு வழங்கப்பட்டது
 • முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் தன்ராஜ் பிள்ளை அவர்களுக்கு, மேற்கு வாங்க மாநிலத்தின் விளையாட்டு விருதான, “பாரத் கவுரவ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

அறிவியல்

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி – மார்க் 3 என்ற புதிய ராக்கெட்டை ஜூன் 5-ம் விண்ணில் செலுத்தியது. இது வரை இஸ்ரோ மையத்தால் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகளிலே அதிக எடை கொண்ட ராக்கெட் இதுவாகும்.
 • இஸ்ரோவால் அனுப்பப்பட்ட மங்கல்யான் செவ்வாய் கிரக ஆராய்ச்சி செயற்கைக்கோள், 1௦௦௦ புவி நாட்களை (ISRO’s Mars Orbiter Mission completes 1000 Earth Days in Orbit), செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டாரப் பாதியில் வெற்றிகரமாக முடித்துள்ளது. இதில் 388 முறை செவ்வாய் கிரகத்தை சுற்றியுள்ளது. மேலும் 715 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
 • நாசாவின் சூரிய ஆய்வு விண்கலம், “பார்கர் விண்கலம்”, அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இது சூரியனின் வளிமண்டலத்தை ஆராயும் (NASA’s Parker Solar Probe will be launched in the summer of 2018 to explore the sun’s atmosphere). முதன் முறையாக நாசா வாழும் ஒருவரின் பெயரில் விண்கலத்தை செலுத்த உள்ளது. யுஜின் பார்கர் என்னும் விண்வெளி ஆராய்ச்சியாளரை கவுரவப் படுத்தும் விதத்தில் இந்த விண்கலத்திற்கு அவரின் பெயர் வைக்கப் பட்டுள்ளது.
 • தெலுங்கானா மாநில அரசு, “டி-வாலட்” என்ற பெயரில் தனி டிஜிட்டல் வாலட் முறையை அம்மாநிலத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. இது அரசு மற்றும் தனியார் சார்ந்த நிதி சேவைகளுக்கும் பயன்படுத்தப் முடியும்.
 • கரக்பூர் அகில இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், “ஆம்புசென்ஸ்” (Researchers at IIT Kharagpur Develops ‘AmbuSens’ for monitoring Hospitalbound Patients) என்ற புதிய கம்பியில்லா தொழில்நுட்ப வசதியை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம், அவசர சிகிச்சை வண்டியான ஆம்புலன்சில் மருத்தவமனைக்கு வந்துக் கொண்டிருக்கும் நோயாளிகளின் நிலையை கண்காணிக்க முடியும். இணையதள வசதியுடன் இணைக்கப்படும் வண்டி, அதன் மூலம் மருத்துவர்கள் வண்டியில் வரும் நோயாளிகளின் மருத்துவ நிலையை அறிந்துக் கொள்ள முடியும்.
 • அமெரிகாவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செயற்கை மேகங்களை உருவாக்க, புதிய ஒலி எழுப்பும் புதிய ராக்கெட்டை ஏவ உள்ளது. நீல, பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் மேகங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக Terrier-Improved Malemute sounding rocket என்ற ராக்கெட் ஏவப் பட உள்ளது.
 • தெற்கு அந்தமான் தீவுகளில் உள்ள ரத்லாந்து தீவுகளில், இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ள ஏவுகணை சோதனை மையத்திற்கு இந்திய தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது (National Board of Wildlife Clears Rutland Island for DRDO’s Missile Testing Project)
 • இதுவரை நமது அண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலே அதிக வெப்பம் கொண்ட கோளினை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு “கெல்ட்-9பி” எனப் பெயரிட்டுள்ளனர் (Scientists have discovered the hottest known exoplanet, designated KELT-9b). இது 4326 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாகும்.
 • சி.எஸ்.ஐ.ஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சென்னையை சேர்ந்த கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து, மிகக் குறைந்த விலையில், கழிப்பறை வசதியை உருவாக்கி உள்ளனர் (CSIR-Structural Engineering Research Centre (SERC), Chennai, has come up with a cost-effective toilet). இதனை 5 மணி நேரத்தில் இதனை வடிவமைத்து விட முடியும். 5௦௦ கிலோவிற்கும் குறைவான எடை கொண்டது.இதனை எங்கு வேண்டுமானாலும் உருவாக்கி பின்னர்கலைத்து விட முடியும்.
 • கடந்த 137 வருடங்களில், கடந்த மே 2௦17ம் மாதமே இரண்டாவது வெப்பமான மாதமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசா அறிவித்துள்ளது (According to NASA, May 2017 was the second hottest month in a span of 137 years when modern record-keeping of average global temperatures had commenced). 137 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக, கடந்த மே 2௦16ம் மாதம் உள்ளது.
 • இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம், விரைவில் புவி ஆய்வு செயற்க்கைக்கோள் ஒன்றினை ஏவ உள்ளது (Indian Space Research Organisation (ISRO) is all set to launch earth observation satellite Cartosat-2 series weighing 712 kg and 30 nano-satellites using Polar Satellite Launch Vehicle (PSLV)). கார்டோசாட்-2 என்னும் இந்திய செயற்கைக்கோளும், 3௦ நானோ சிறிய செயற்கைக்கோளும் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இது விண்ணில் ஏவப்பட உள்ளது. 712 கிலோ எடைகொண்டது கார்டோசாட்-2 செயற்கைக்கோள் ஆகும். 3௦ சிறிய நானோ செயற்கைக்கோள்களில் இந்தியாவுடையது 1, 29 வெளிநாட்டை சேர்ந்தது ஆகும்.
 • உலகிலேயே பழமையான காளான் படிவம், பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 115 மில்லியன் ஆண்டுகள் பழமையானது இது என தெரிவிக்கப்பட்டுள்ளது (World’s oldest fossil mushroom discovered in Brazil, dating back zpprox 115 million years)
 • ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை பறக்குமா அணிலை கண்டுபிடித்துள்ளனர். வாடா அமெரிக்க பகுதிகளில் இவை உள்ளன. இவற்றிற்கு Glaucomys Oregonensis எனப் பெயரிட்டுள்ளனர்
 • உத்திரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள சந்திர சேகர ஆசாத் வேளாண் தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள், புதிய வகை கடலை கொட்டையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். நோய் தாக்குதலை சமாளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது (A new summer variety of groundnut has been developed by agro-scientists of the Chandra Shekhar Azad Agriculture Technology University (CSA) at Khanpur in Uttarpradesh)
 • உலகிலேயே மிகச் சிறிய மற்றும் விலை குறைவான ஒற்றை ஜெட் என்ஜினை அமெரிக்க உருவாக்கி உள்ளது. “விசன் ஜெட் எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த ஜெட் எஞ்சின் 115௦ மெயில் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது

Continue …

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.