TNPSC Current Affairs in Tamil June 2017-Part-5

வங்கி

 • விஜயா வங்கி, நாடு முழுவதும் 1௦௦ கிராமங்களை, டிஜிட்டல் கிராமங்களாக மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது (Vijaya Bank Plans to develop 100 Digital Villages). கிராமங்கள் இடையே டிஜிட்டல் வங்கி பரிமாற்றங்களை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது. கிராமங்களில் டிஜிட்டல் வங்கி சேவைகளை அறிமுகம் செய்யும் ஒரே பொதுத் துறை வங்கி விஜயா வங்கி ஆகும்.

பொருளாதாரம்

 • 2௦17ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம், 7.2% வளர்ச்சியை எட்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இது சென்ற ஆண்டான 2௦16 விட ௦.4% வளர்ச்சி அதிகமாகும் (The World Bank’s Global Economic Prospects (GEP) has projected a growth rate of 2% for India in the financial year 2017 as against 6.8% growth in 2016)
 • இந்தியாவின் அன்னியசெலவானி கையிருப்பு, ஜூன் 2-ம் தேதி இதுவரை இல்லாத அளவில், 381.167 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.

இடங்கள்

 • 2௦17 உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டிகள், ஜெர்மனியின் டச்செல்டார்ப் நகரில் நடைபெற்று வருகிறது. 2௦19-ம் ஆண்டு உலக டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 2-வது ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கூட்டம், தென் கொரியாவின் ஜேசு நகரில் நடைபெற்றது. இதில் உறுப்பினராக உள்ள நாடுகளின் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பங்கு பெற்றனர்

மாநாடு

 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சார்பில் நடைபெறவுள உச்சி மாநாடு, கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் (SCO’s summit to be held in Astana, Kazakhstan) நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுபினர்களாக இனைய உள்ளனர்.
 • பிரிக்ஸ் நாடுகளின் ஊடக பிரிவு கூட்டம், சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரிக்ஸ் ஊடக பிரிவிற்காக சுமார் ஒரு மில்லியன் டாலர் அளவிற்கு (One Million Dollar Fund Established for BRICS Media), இதற்கு நிது ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்

 • பிரதமர் மோடியின் ரசிய பயணத்தின் பொது, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 5 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கூடங்குளம் அணு உலை, கலாசார பரிமாற்றம் போன்றவை இதில் முக்கியமானவை.
 • சாம்சங் நிறுவனம், மத்திய நுண், சிறு மாறும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் படி, பெங்களுரு மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகிய இரு இடங்களில், சாம்சங் தொழில்நுட்ப பள்ளியை திறக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது (Samsung India has signed a memorandum of understanding (MoU) with the Ministry of Micro, Small and Medium Enterprises (MSME) for setting up two new Samsung Technical Schools in Bengaluru and Jamshedpur.) இதில், குறிபிடத்தக்க அம்சம், இப்பள்ளி பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் ஆகியவர்கள் மட்டுமே பயில முடியும்.

இராணுவம்

 • 2-வது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி போர் கப்பல் சோதனை ஓட்டத்திற்கு தயாராகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலிற்கு, “ஐ.என்.எஸ் கண்டேரி” (INS Khanderi, the second Scorpene class submarine) என பெயரிடப்பட்டுள்ளது. இக்கப்பல் மும்பையின் மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. முதல் ஸ்கார்பியன் வகை கப்பல், “ஐ.என்.எஸ் கல்வாரி” ஆகும்.
 • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கப்பல் படை வீரர்கள் பங்கேற்கும், “ஆஸ்இன்டக்ஸ் 17” பயிற்சி (Exercise Australia-India (AUSINDEX)), ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரமான ப்ரீமேண்டில் நகரில் நடைபெற்றது.

நாட்கள்

 • ஜூன் 1 = சர்வதேச பால் தினம் (WORLD MILK DAY)
 • ஜூன் 1 = சர்வதேச பெற்றோர் தினம்
 • ஜூன் 2 = தெலுங்கானா மாநில உதய தினம்
 • ஜூன் 5 = உலக சுற்றுச் சூழல் தினம். இந்த ஆண்டிற்கான கரு = Connecting People to Nature, இந்த ஆண்டு நடத்தும் நாடு = சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
 • ஜூன் 6 = முதல் உலக பூசிகள் தினம் (First World Pest Day)

 

 • ஜூன் 6 = ரசிய மொழி தினம்
 • ஜூன் 8 = சர்வதேச பெருங்கடல் தினம். இந்த ஆண்டிற்கான கரு = OUR OCEANS, OUR FUTURE
 • ஜூன் 12 = சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம். இந்த ஆண்டிற்கான கரு = In conflicts and disasters, protect children from child labour

 

 • ஜூன் 13 = சர்வதேச அல்பினிச நோய் விழிப்புணர்வு தினம்
 • ஜூன் 14 = சர்வதேச இரத்த கொடையாளிகள் தினம். இந்த ஆண்டிற்கான கரு = Give Blood. Give Now. Give Often
 • ஜூன் 17 = உலக பாலைவன மற்றும் வறட்சி எதிரான தினம் (World Day to Combat Desertification and Drought). இந்த ஆண்டிற்கான கரு = OUR LAND, OUR HOME, OUR FUTURE.
 • ஜூன் 19 = பாலியல் வன்கொடுமை அகற்றுவதற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Sexual Violence in Conflict)
 • ஜூன் 2௦ = சர்வதேச அகதிகள் தினம்
 • ஜூன் 21 = உலக இசை தினம்
 • ஜூன் 21 = சர்வதேச யோகா தினம் (INTERNATIONAL YOGA DAY). 2௦15ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தி தந்தார். இந்த ஆண்டிற்கான கரு = YOGA FOR HEALTH
 • ஜூன் மாதம் 3-வது ஞாயிற்று கிழமை = சர்வதேச தந்தையர் தினம்
 • ஜூன் 23 = சர்வதேச ஒலிம்பிக் தினம்
 • ஜூன் 23 = உலக பொது சேவை தினம்
 • ஜூன் 25 – 26 = தேசிய அவசரநிலை எதிர்ப்பு தினம் (national anti emergency day)

புத்தகம்

 • முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ராமேஸ், Indira Gandhi: A Life in Nature என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்
 • கணேஷ் தேவி என்பார், The Crisis Within Knowledge and Education in India என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்
 • சூர்யா பிரகாஸ் என்பவர் The Emergency – Indian Democracy’s Darkest Hour என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்
 • இந்தியாவின் பிரபல எழுத்தாளர், அருண்ததி ராய், The Ministry of Utmost Happiness என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்
 • முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தொடர்பான, Yug Purush, Bharat Ratna, Atal Ji, என்ற புத்தகத்தை, உத்திரகாண்டு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சி.எம்.ரமேஸ் போக்ரியால் எழுதி வெளியிட்டுள்ளார்

மறைவு

 • ஞானபீட விருது பெற்ற பிரபல தெலுங்கு மொழி எழுத்தாளரான சிங்கி ரெட்டி நாராயண ரெட்டி காலமானார்.
 • முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பி.என்.பகவதி, காலமானார். அவருக்கு வயது 95 ஆகும். “பொது நல வழக்கு”, நீதிமன்றத்தில் அறிமுகம் செய்ததில் இவருக்கு மிக முக்கிய பங்காகும். இவர் இந்தியாவின் 17-வது தலைமை நீதிபதியாக இருந்தார்.
 • பிரிந்து இருந்த ஜெர்மனியை, ஒன்றுபட்ட ஜெர்மனியாக உருவாக்கிய, “ஒன்றுபட்ட ஜெர்மனியின் தந்தை” எனப்படும் ஹெல்முத் கோல் காலமானார். ஜெர்மனியின் அதிபராக 16 ஆண்டுகள் இருந்துள்ளார் இவர்.
 • ராமகிருஷ்ண மடத்தின் தலைவரான சுவாமி அஸ்தமானந்த காலமானார்

Continue …

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.