TNPSC Current Affairs in Tamil June 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-6

திட்டம்

 • நிதி ஆயோக் அமைப்பு, “சத்” என்ற புதிய கூட்டுறவு கூட்டாட்சி முயற்சியை மேற்கொண்டுள்ளது. (SATH = SUSTAINBLE ACTION FOR TRANSFORMING HUMAN CAPITAL) மனித மூலதனத்தை பயன்படுத்தி புதிய ஆற்றல்களை உருவாக்குதல் இதன் நோக்கமாகும்
 • மத்திய ரயில்வே துறை அமைச்சகம், ராஜதானி மற்றும் சதாப்தி எக்ஸ்ப்ரெஸ் ரயில்களை சீரமைக்க ஏதுவாக, ஆபரேசன் சவரன் (தங்கம்)” (Concerned over the complaints received from the public over the premium trains of Indian Railways like Rajdhani and Shatabdi Express, Railways have decided to launch Operation Swarn (‘gold’)). என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பொது மக்களிடம் இருந்து வந்த புகரில் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. துப்புரவு, உணவு தரம், ரயில் நேரம் சரியாக இல்லாமை போன்றவற்றை சரி செய்ய இதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 • இந்தியாவின் மிகப்பெரிய மாநகராட்சி பத்திரத் திட்டம், புனே மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டது (The Pune Municipal Corporation (PMC) became the first municipal corporation in the country to tap money through municipal bonds in 14 years.) இந்த பத்திரத் திட்டம் மூலம் மக்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு பெறப்பட்ட நிதி, வட்டியுடன் சேர்ந்து முதிர்வு காலத்தில் வழங்கும்படியாக வெளியிடப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்க்காமல், மாநகராட்சி நிர்வாகமே நிதியை வசூலித்து, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்து, மாநகராட்சி நிர்வாகத்தை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
 • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், “வஜ்ரா” (VAJRA (Visiting Advanced Joint Research) Faculty scheme that enables NRIs and overseas scientific community to participate and contribute to research and development in India) என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி படிப்புகளில் மேற்கொள்ளப்டும் வழிமுறைகளை, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், மற்றும் இந்திய குடியுரிமை உள்ள வெளிநாட்டினர் ஆகியோர் இங்குள்ள ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தங்கள் தேவைகளி தீர்த்துக்கொள்ளலாம்.
 • மணிபூர், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் “மலைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தை” மத்திய அரசு அறிவித்து துவக்கியுள்ளது
 • ஆன்லைன் மூலம் இந்திய ரயில்வே டிக்கெட்டுகளை அதிக அளவில் விற்க ஏதுவாக, ரயில்வே அமைச்சகம், BUY NOW, PAY LATER என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, 15 நாட்களுக்குள் பணத்தை செலுத்தினால் போதும்

குறியீடு

 • ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த, “பொருளாதாரம் மற்றும் அமைதி கழகம்” சார்பில் ஆண்டு தோறும் வெளியிடப்படும், உலக அமைதி குறியீட்டில், 2௦17ம் ஆண்டில் இந்தியா 137-வது இடத்தில உள்ளது (India has been ranked 137th in the Global Peace Index 2017). சென்ற ஆண்டு இந்தியா, 141-வது இடத்தில இருந்தது. முதல் மூன்று இடங்கில் ஐஸ்லாந்து, நியுசிலாந்து மற்றும் போர்சுகல் ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி இடத்தில சிரியா நாடு உள்ளது.
 • லண்டன நகரை சேர்ந்த ஏ.டி.கியர்னி நிறுவனம் வெளியிட்டுள்ள, “உலக சில்லறை வணிக வளர்ச்சிக் குறியீட்டில்”, சில்லறை வணிக துறையில், எளிதாக தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. (The 2017 Global Retail Development Index (GRDI) titled ‘The Age of Focus‘ has placed India at the top position among 30 developing countries on ease of doing businessin the retail sector) இரண்டாவது இடத்தில சீனா உள்ளது.
 • உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசை 2018 வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 2௦௦ இடங்களில் இந்தியாவை சேர்ந்த 3 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன (The Quacquarelli Symonds (QS) World University Rankings 2018 has been released. In the list, three Indian universities have featured among the top 200 universities.) பெங்களூரு, இந்திய அறிவியல் கழகம் 152வது இடத்தையும், டெல்லி அகில இந்திய தொழில்நுட்ப கழகம் 172வது இடத்தையும், பம்பாய் அகில இந்திய தொழில்நுட்ப கழகம் 179வது இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து 6வது வருடமாக அமெரிக்காவின் மசாசுட்டெஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
 • 1௦வது உலகளாவிய புதுமைக் குறியீடுகள் வெளியிடப்பட்டுள்ளது (10th edition of the Global Innovation Index 2017 (GII)). இந்தியா இந்த ஆண்டு 6௦-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது (India has moved up 6 places to reach 60th place among 130 countries emerging as the top-ranked economy in Central and South Asia). சென்ற ஆண்டு 66வது இடத்தில இருந்தது. முதல் 3 இடங்களில் உள்ள நாடுகள் = சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகம்.
 • இந்தியாவின் முதல், “நகர வாழ்க்கை திறன் குறியீடு”, மத்திய அரசால் வெளியிடப் படவுள்ளது (The urban development minister M. Venkaiah Naidu has launched its first liveability index which will rank the country’s 116 major cities on the basis of the quality of life). நாட்டின் உள்ள முக்கிய 116 நகரங்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இதில் பட்டியிலடப்பட்டன. மொத்தம் 79 தலைப்பின் கீழ் இந்த நகரங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மாசு போன்ற பல்வேறு தலைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் அடுத்த ஆன்பு வெளியிடப்படும்.
 • 2௦17 உலகளாவிய பலப் பரிமாண வறுமைக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. 1௦3 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுயல், இந்தியா 37வது இடத்தை பிடித்துள்ளது. (India has been ranked 37th out of 103 nations in the 2017 global Multi-dimensional Poverty Index (MPI), according to a new report by the Oxford Poverty & Human Development Initiative)

Continue …

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil June 2017-Part-6

Leave a Comment

Your email address will not be published.