TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

இந்தியா

 • வங்கதேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகளின் குழந்தைகளின் கல்விக்காக, முக்திஜோதா ஊக்கத்தொகை என்ற திட்டத்தின் மூலம், மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 35 கோடி ரூபாய் வழங்க உள்ளது
 • மும்பை மற்றும் கோவா நகரங்கள் இடையே, “தேஜஸ் எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் புதிய ரயில் சேவையை, இந்திய ரயில்வே துறை துவக்கியுள்ளது. இந்து ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது
 • பசுமாடுகளுக்கு என்று தனி ஆம்புலன்ஸ் வசதியை உத்திரப் பிரதேச மாநில அரசு துவக்கியுள்ளது. “கவன்ஸ் சிகிஸ்தா மொபைல் வேன்” சேவை என்ற பெயரில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது
 • இந்தியாவின் 2-வது உயரமான தேசிய கோடி, மகராஷ்டிரா மாநிலத்தின் கோலாபூர் நகரில் பறக்க விடப்பட்டுள்ளது. 3௦3 அடி உயரம் கொண்டது இக்கொடிமரம். 36௦ உயரம் கொண்ட இந்தியாவின் உயரமான கொடிமரம், இந்திய – பாகிஸ்தான் அட்டாரி எல்லை பகுதியில் உள்ளது.
 • அமெரிக்காவில் செயல்படும் “உலகளாவிய நிதி நாணய” அமைப்பு, 2005ம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை, சுமார் 77௦ கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கருப்பு பணம் இந்தியாவிற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது
 • உலகின் உயரமான ரயில்வே பாலம், ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் செனாப் நதியின் இடையே அமைக்கப்படவுள்ளது. பாரிஸ் நகர ஈபில் கோபுரத்தை விட 35 அடி உயரமானதாக இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்படவுள்ளது. இப்பாலம் கட்டி முடிக்கப் பட்டால் (359 மீட்டர்), சீனாவில் உள்ள உயரமான ரயில்வே பாலத்தை (275 மீட்டர்) விட இது உலகின் உயரமான பாலமாக திகழும்,
 • ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது
 • ஆந்திராவின் பங்கனபள்ளி மாம்பழம், “தேசிய புவிசார் குறியீட்டை” பெற்றுள்ளது. இம் மாம்பழத்தின் பிறப்பிடம் கர்னூல் மாவட்டம் ஆகும்
 • ஸ்வச் சர்வேக்ஷன் 2௦17 – தூய்மை நகரங்கள்:
  • 2௦17ம் ஆண்டு தூய்மை நகரம் என்ற சிறப்பை, மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் பெற்றுள்ளது
  • 2௦17ம் ஆண்டின் தூய்மையில்லா (அசுத்த) நகரம் என, உத்திரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது
  • மேற்கு வாங்க மாநிலம் இந்த ஆய்வில் கலந்தக் கொள்ள மறுத்துவிட்டது
  • முதல் 1௦ இடங்கள்
   • 1 = இந்தூர் (மத்தியப்பிரதேசம்)
   • 2 = போபால் (மத்தியப்பிரதேசம்)
   • 3 = விசாகப்பட்டினம் (ஆந்திரா)
   • 4 = சூரத் (குஜராத்)
   • 5 = மைசூர் (கர்நாடகா)
   • 6 = திருச்சி (தமிழகம்)
   • 7 = டில்லி நகராட்சி
   • 8 = நவி மும்பை
   • 9 = திருப்பதி (ஆந்திரா)
   • 10 = வதோதரா (குஜராத்)
  • ஒட்டுமொத்த அளவில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலங்களாக ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் அறிவிக்கப்பட்டது
 • 15 ஆண்டுகளில் முதன் முறையாக, தெற்கு காஸ்மீரில் ராணுவம், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் ஒன்றிணைத்து மிகப்பெரிய தேடுதல் வேட்டையை நடத்தினர். அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளை வேரறுக்க இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்டது
 • “அப்ஸ்பா” எனப்படும் ஆயுதப்படை அதிகார சட்டத்தின் கீழ், அஸ்ஸாம் மாநில அரசு, அம்மாநிலத்தை அடுத்த 3 மாதங்களுக்கு அமைதியற்ற மாநிலமாக அறிவித்துள்ளது.
 • ரபிந்திரநாத் தாகூரில் 156-வது பிறந்த நாள் விழாவை, எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், கலாசார விழாவாக இந்தியா நடத்த உள்ளது. தாகூர் தனது இளமை காலங்களில் பண்டைய எகிப்து இலக்கியங்கள் மெது கொண்ட ஈர்ப்பால் இரு முறை எகிப்திற்கு விஜயம் செய்துள்ளார்.
 • சி.ஆர்.பி.எப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் தலைமையகம், கொல்கத்தாவில் இருந்து சத்தீஸ்கரின் ராய்பூர் நகருக்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மத்திய பாதுகாப்பு ஆயுத படை பிரிவு சி.ஆர்.பி.எப் ஆகும்.
 • ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பிரிவான, “ஐக்கிய நாடுகள் – வாழ்விடம்” அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு கிடைத்தள்ளது. 3 வது முறையாக இதனை இந்தியா ஏற்கிறது. 1988, 2007 ஆகிய வருடங்களுக்கு பிறங்கு மீண்டும் இதனை இந்தியா தற்போது ஏற்றுள்ளது.
 • இலங்கையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில், பிரதமர் கலந்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டது. வெசாக் தினம் (புத்த ஜெயந்தி), புத்தரின் பிறப்பு, வாழ்வு, அவரின் பிறப்பு பற்றியதாகும். முதன் முறையாக இலங்கை இத்தினத்தை கொண்டாடுகிறது.
 • தேசியி பசுமை தீர்ப்பாயம், யமுனை நதிக்கரை ஓரங்களில் திறந்தவெளி கழிப்பிடம் செல்வது மற்றும் குப்பைகளை கொட்ட தடை விதித்துள்ளது. மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் மாசுப்படுத்தல் காரணமாக ரூ.5௦௦௦ அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
 • அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கண்டுபிடித்த புதிய வகை பாக்டீரியாவிற்கு, மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பெயரை சூட்டி கவுரவித்துள்ளது. “Solibacillus kalamii” என அந்த பாக்டீரியாவிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • உலக பொருளாதார கூட்டமைப்பு சமிபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக இடநெருக்கடியில் மக்கள் வாழும் நகரமாக மும்பை மற்றும் ராஜஸ்தானின் கோட்டா நகரங்கள் உள்ளன. இப்பட்டியலில் உலக அளவில் முதல் இடத்தில வங்கதேசத்தின் டாக்கா நகரம் உள்ளது. இங்கு ஒரு சதுர கிலோமீட்டரில் 44500 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 2-வது இடத்தில உள்ள மும்பை நகரத்தில் ஒரு சதுர கிலோமீட்டரில் சுமார் 317௦௦ பேர் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் 7-வது இடத்தில உள்ள ராஜஸ்தானின் கோட்டா நகரில் 121௦௦ பேர், ஒரு சதுர கிலோமீட்டரில் வாழ்கின்றனர்.
 • இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலத்தை அஸ்ஸாமின் லோஹிட் ஆற்றில் அமைக்கப் பட்டுள்ள “தோலா – சதியா பாலத்தை” பிரதமர் துவக்கி வைத்து, அப்பாலத்தின் பெயரை, “பூபன் ஹசரிகா பாலம்” என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். இப்பாலம் 2௦56 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
 • அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்காண அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி அவர்கள், அஸ்ஸாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சங்சரி என்னும் இடத்தில துவக்கி வைத்தார். “பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா” திட்டத்தின் ஒரு பகுதியாக இது துவக்கப்பட்டது.
 • அஸ்ஸாமின் தேய்மாஜி மாவட்டத்தில் கோகமுக் என்னும் இடத்தில புதிய “இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின்” துவக்க அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் துவக்கி வைத்தார். இது நாட்டின் 3-வது இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகும். முதல் இரண்டும் புது தில்லியிலும், ராஞ்சி நகரிலும் உள்ளது.
 • இந்திய ரிசர்வ் வங்கி, புதிய ஒரு ரூபாய் நோட்டினை (காகித தாள்) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 1994ம் ஆண்டிற்கு பிறகு புதிய ஒரு ரோபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப் படவில்லை.
 • மகராஷ்டிரா மாநில அரசு, அம்மாநிலத்தின் வேலை தேடுவோர், புதிய தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு உதவும் நோக்கும், “மகாஸ்வயம்” என்ற இணையதள சேவையை அறிமுகம் செய்துள்ளது
 • மணிப்பூர் மாநில அரசு, அம்மாநிலத்தின் தமங்க்லாங் மாவட்டத்தின் டைலாங் கிராமத்தை, “பல்லுயிர் வாழும் பாரம்பரிய” (Biodiversity Heritage Site of the state) இடமாக அறிவித்துள்ளது.
 • மகாராஷ்டிரா மாநில அரசு, “காலை வணக்கம்” (“Good Morning” squad) என்ற பெயரில் புதிய பறக்கும் படையை உருவாக்கி, மாநிலத்தில் திறந்த வெளி கழிப்பிடம் இல்ல நிலையை அடைய சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
 • 2௦17ம் ஆண்டிற்கான தேசிய புவியியற் தேனீ போட்டிகளில் (2017 National Geographic Bee contest), இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க மாணவர், பிரனை வரத்தான் வெற்றி பெற்றார்.
 • முதன்மையான ரயில் நிலையங்களுக்கு இடையேயான தூய்மை பட்டியலில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையம் முதல் இடத்தை பிடித்தது.
 • கரக்பூர், அகில இந்திய தொழில்நுட்ப கழகம், பிரிட்டிஷ் புவியியல் ஆராய்ச்சி அமைப்புடன் சேர்ந்து, உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி நகரை, ஸ்மார்ட் நகராக மாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.
 • 22வது தேசிய தடகள சாம்பியன்சிப் போட்டிகள் வரும் ஜூலை மாதம் ஓடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான சின்னமாக, “ஆலி ஆமைகள்” (“Olly Turtle” has been declared the mascot of the Championship) அறிவிக்கப்பட்டுள்ளது
 • ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தின் 27வது உலகளாவிய காலநிலை ஆய்வுக்கூட்டத்தில், இந்தியாவின் சார்பில் ஆஜராகி கருத்துக்களை கூறும் நபராக, இந்திய அட்டர்னி ஜெனெரல் முகுல் ரோகித்தை மத்திய அரசு நியமித்தது.
 • இந்தியத் தேர்தல் ஆணையம், பொதுமக்களுக்காக தேசிய தொடர்பு எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இந்த எண். – 1800111950 ஆகும்.
 • 2௦17ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது, பத்மா வெங்கடராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் அவர்களின் மகளாவார்.

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.