TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

சர்வதேசம்

 • உலகப் புகழ் பெற்ற என்சைக்ளோபீடியாவிற்கு மாற்றாக சீனா தனது சொந்த என்சைக்ளோபீடியாவை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு “பைடு பைக்” எனப் பெயரிட்டுள்ளனர்
 • 43-வது ஜி-7 நாடுகளின் கூட்டம், இத்தாலியின் டார்மினியன் சிசிலி நகரில் இம்மாதம் 26-ம் தேதி துவங்கியது. ஜி-7 நாடுகள் = இத்தாலி, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகும்
 • ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின், 27வது உலகளாவிய காலநிலை ஆய்வுக்கூட்டம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது (27th session of the Universal Periodic Review (UPR) of the UN Human Rights Council (UNHRC))
 • 18 மாத ஜிகா வைரஸ் அவசரநிலை பிரகடனத்தை, பிரேசில் திரும்பப் பெற்றது. அந்நாட்டில் ஜிகா வைரஸ் தாக்கம் குறைந்ததை அடுத்து இந்நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
 • ஆப்ரிக்க நாடாங்க காங்கோவில் இருந்து முழுவதுமாக எபோலா நோய் தடுக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முதன் முதல்

 • தமிழகத்தை சேர்ந்த, ரிபாத் ஷாருக் என்னும் இளைஞர், உலகிலேயே மிகச்சிறிய மற்றும் உலகிலேயே மிகவும் எடை குறைவான, செயற்கைக்கோளினை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த செயற்கைக்கோளிற்கு, “கலாம் சாட்” (WORLD’S LIGHTEST & SMALLEST SATELLITE NAMED “KALAMSAT”) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கொள் மொத்தம் 64 கிராம் மட்டுமே எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் வரும் ஜூன் மாதாம் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிலையம் மூலம், விண்ணுக்கு செலுத்தப்படும். நாசாவால் அனுப்பப்படும் செயற்கைக்கோள் உருவாக்கிய முதல் இந்திய மாணவர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.
 • இந்தியாவின் முதல் நீர்வழி வானவில் தொழில்நுட்ப பூங்கா, தமிழகத்தின் சென்னை நகரில் அமைய உள்ளது. ஆபரண மீன்கள், வண்ண மீன்கள் போன்றவை இங்கு இடம்பெறும்.
 • இங்கிலாந்தின் லண்டன் நகர மாநகராட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவழியை சேர்ந்த முதல் பெண்மணி என்ற சிறப்பை ரெகானா அமீர் பெற்றுள்ளார்
 • இந்திய தொழிலக கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராக ஷோபனா காமினேனி நியமிக்கப் பட்டுள்ளார்
 • உலகளாவிய பெருநிறுவன குடியுரிமைக்காண “வுட்ரோ வில்சன் விருதை” பெறும் முதல் இந்திய பெண்மணி என்ற சிறப்பை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தலைவர் சாந்தா கோச்சார் பெற்றுள்ளார்
 • முதல் பைர்ரோன் சிங் செகாவத் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிக்கிம் மாநில முதல்வர் பவன் குமார் சம்ளிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • விவசாயிகளுக்காக, பருவநிலை மாற்றங்களை அறிந்து கூறும் தானியங்கி வானிலை மையத்தை துவக்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை மகராஷ்டிரா மாநிலம் பெற்றுள்ளது. நாக்பூர் மாவட்டத்தின் டான்கர்கான் பகுதியில் இது அமைக்கப்படவுள்ளது
 • தனக்கென்று தனி எழுத்துரு (font) உருவாக்கியுள்ள உலகின் முதல் நகரம் என்ற சிறப்பை துபாய் நகரம் பெற்றுள்ளது
 • இந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ள நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றி அமைத்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் = மத்தியப் பிரதேசம் ஆகும்
 • இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு ஆலை (First Integrated Bio‐refinery for Renewable Fuels & Chemicals), மகாராஷ்டிராவின் புனே நகரில் துவக்கி வைக்கப்பட்டது. எத்தனால் உற்பத்தி செய்யும் இந்த ஆலை, உயிரி எரிப்பொருள் மற்றும் ரசாயனங்களை தயாரிக்கும்.
 • ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் என்பவருக்கு, “முதல் பாலினமற்ற விருது” வழங்கப்பட்டது. எம் டி.வி. சாரில் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான விருது, ஆண் பெண் வித்தியாசம் இன்றி சிறந்த நடிப்பு என்ற பிரிவில் முதன் முறையாக வழங்கப் பட்டது
 • இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான, “ஹன்சா – 3”, முதன் முறையாக வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 • இந்தியாவில் முதன்முறையாக, அரசு நிறுவனங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள், வேலையில் அமர்த்தப்பட்டனர். கொச்சி மெட்ரோ நிறுவனத்தில் 23 திருநங்கைகள் வேலையில் சேர்க்கப்பட்டனர்.
 • மோட்டார் பந்தயமான, “கிராண்ட் பிரிக்ஸ் – 3” யில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை, அர்ஜுன் மைனி பெற்றுள்ளார்.
 • அமெரிக்கா, முதன் முறையாக, “ஜெ.எஸ்.லிஸ்ட்” எனப்படும் “ஒருங்கிணைந்த எடைகுறைவான ஆடை தொழில்நுட்பத்தை” (Joint Service Lightweight Integrated Suit Technology – JSLIST) இந்தியாவிற்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்த எடைகுறைவான ஆடை, போர் வீரர்கள் பயன்படுத்தும் பொழுது, அவர்களுக்கு ரசாயின, உயிரியல், ரேடியோ கதிர்வீச்சு, அணு கதிர்வீச்சு போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.