TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

 • இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள், தீப்தி ஷர்மா மற்றும் பூனம் ராவுத் ஆகியோர், முதல் விக்கெட்டிற்கு 32௦ ரன்களை கூட்டாக அடித்து புது உலக சாதனையை நிகழ்த்தி உள்ளனர். ஆண்கள் கிரிக்கெட்டில் கூட முதல் விக்கெட் இணை, 286 ரன்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஆண்கள் கிரிக்கெட்டை விட இவர்கள் முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்களை சேர்த்துள்ளனர். மேலும் இப்போட்டியில் தீப்தி ஷர்மா 188 ரன்களை கடந்ததே, இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராகும். இவர்கள் இச் சாதனையை “ஐயர்லாந்து” நாட்டிற்கு எதிராக செய்தனர்.
 • இமய மலையை நான்காவது முறையாக ஏறி சாதனை படைத்த முதல் பெண்மணி என்ற பெருமையை, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த அம்சு ஜன்சென்பா, பெற்றுள்ளார். இவர் 5 நாட்களின் இரண்டு முறை இமயமலையை ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். இவர் இரண்டு குழந்தைகளின் தாய் என்பது குறிபிடத்தக்கது.
 • அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எபோலா வைரஸ் நோய்க்கு எதிரான “உலகின் முதல் மனித உடற்காப்பு மூலங்களை” (first natural human antibodies) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். எபோலா வைரஸ் நோய்கள் முதன் முதலில் ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது
 • இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சுரங்கப்பாதை துவங்கப்பட உள்ளது. ஹூக்லி ஆற்றின் அடியில் இருந்து ஹவுரா நகரையும், கொல்கத்தா நகரையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப் படவுள்ளது. தண்ணீருக்கு அடியில் 5௦2 மீட்டர் இது பயணிக்கும்.
 • பிரபல ஆப்பில் நிறுவனம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது முதல் நேரடி கிளையை சிங்கப்பூரில் துவக்கி உள்ளது.
 • இந்தியாவின் முதல் பல்வகை மின்சார வாகன தயாரிப்பு ஆலையை (India’s first electric cab fleet), மகராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் அம்மாநில முதல்வர் துவக்கி வைத்தார் (India’s first multi-modal electric vehicle project at the Nagpur)
 • சர்வதேச கத்திச்சண்டை போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரர் என்ற சிறப்பை சி.ஏ.பவானி தேவி பெற்றுள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச கத்திச்சண்டை போட்டியில் இவர் தங்கம் வென்றார்.
 • உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த, பத்ம ஸ்ரீ விருதை பெற்ற, லவ் ராஜ்சிங் தர்மசக்து, இமய மலையை 6-வது முறையாக சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற சிறப்பை படைத்துள்ளார். இவர் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையில் உயர் அலுவலராக உள்ளார்.
 • உலகின் முதல் பெண்கள் தொலைக்காட்சி சேனல், “ஜன் தொலைகாட்ச” (பெண்கள் தொலைக்காட்சி) (“Zan TV (or Women’s TV), ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் துவக்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியில் பணிபுரியும் அனைவரும் பெண்களே.
 • உலகின் முதல் ரோபோட் காவல் அதிகாரி, “ரோபோகாப்” (The world’s first operational robot police officer “Robocop”) என்ற பெயரில், துபாய் நகர காவல் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது. 5 அடி இயரத்தில் சுமார் 1௦௦ கிலோ எடை கொண்ட இந்த ரோபோட், மனிதர்களின் முக பாவனைகள் போன்றவற்றை புரிந்து செயல்படும் தன்மை கொண்டது.
 • இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிரிட் திட்டம், இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டுள்ளது (Indian Institute of Engineering Science and Technology (IIEST) has successfully created India’s first smart grid project) இதன் மூலம், புதுபிக்கத்தக்க மூலங்களில் இருந்து ஆற்றலை உருவாக்க இயலும்.
 • இந்தியாவின் முதல் தேசிய கூடைபந்து கழக அகாடெமி, உத்திரப் பிரதேசத்தின் நொய்டா நகரில் அமைய உள்ளது (India’s first-ever National Basketball Association (NBA) academy)
 • காது கேட்டும் இயந்திரங்களை அணிந்து கண்டு வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களுக்கான தனி சின்னத்தை (first Indian state to introduce a logo for vehicles driven by persons with hearing impairment) உருவாக்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை, தெலுங்கானா பெற்றுள்ளது.
 • இந்தியாவில் முதல் கங்கை தூய்மை உறுதிமொழி நாள் (first-ever Ganga Cleanliness Pledge Day (GCPD)), மே 2-ம் தேதி அனுசரிக்கப் பட்டது. தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் சார்பில் இத்தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் நோக்கம், தூய்மையான கங்கை நதியை உருவாக்குதல் ஆகும்.
 • முதல் உலக டுனா தினம் (first-ever World Tuna Day (WTD)), மே 2ம் தேதி அனுசரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் இத்தினத்தை அனுசரித்தது. அழிந்து வரும் மீன் இனமான டுனாவை பாதுகாக்கும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • இந்தியாவின் முதல் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து வார்டு (India’s first-ever digitised Panchayat ward) என்ற சிறப்பை, கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மணம் பஞ்சாயத்தின் 15-வது வார்டு பெற்றுள்ளது. இதன் சிறப்பிக்க, மத்திய சமூக நீதி துறை அமைச்சர், “www.digitalaymanam.com” என்ற பெயரில் புதிய இணையதளத்தை துவக்கி வைத்தார். இதில் அக்கிராமத்தின் இரத்த கொடையாளிகளின் விவரம், அனைவரின் தொலைபேசி எண் விவரங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளது.
 • இந்தியாவின் முதல் கண்பார்வையற்றோருக்கான கால்பந்து அகாடெமி (India’s first-ever Blind Football Academy (BFA)), கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் விரைவில் துவக்கப்படவுள்ளது. கண் பார்வையற்றோருக்கு முழுநேர பயிற்சி அளித்தல், மற்றும் அவர்களின் மறுவாழ்விற்கு இங்கு உதவும் நோக்கில் இது துவக்கப்பட்டுள்ளது.
 • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் செயல்படும் உலகின் முதல் அகதிகள் முகாம் (Azraq became world’s first refugee camp powered by renewable energy), என்ற சிறப்பை அஸ்ரக் முகாம் பெற்றுள்ளது. சிரிய அகதிகள் இங்கு உள்ளனர்.
 • இந்தியாவின் முதல் கருப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை, புனே மருத்துவக் குழுவால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது (team of Pune doctors performed country’s first uterus transplant)
 • 2௦16ம் ஆண்டில், உலகில் அதிக அளவில் எஃகு உற்பத்தி செய்த நாடாக சீனா திகழ்கிறது. இத் தகவலை சர்வதேச எஃகு கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.