TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

விளையாட்டு

 • இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி உடன் சேர்ந்து அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் நடைபெற்ற தள்ளஹாச்சி ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார்
 • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான, “பிபா” வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில், இந்தியா 21 ஆண்டுகளுக்கு 1௦௦ வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
 • இந்தியாவின் முதல் தனியார் சிறு ஆயுதங்கள் தயாரிப்பு ஆலை, மத்தியப் பிரதேச மாநிலத்தில், இந்தியப் பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
 • பெண்கள் கிரிக்கெட்டின் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில், உலகில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீராங்கனை என்ற பெருமையை, இந்தியாவை சேர்ந்த வேகப்பந்து வீராங்கனை ஜூலியன் கோஸ்வாமி பெற்றுள்ளார். இவர் 153 போட்டிகளில் 181 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேதரின் பிட்ஸ்பேட்ரிக் என்பவர் 18௦ விக்கெட்டுகளை சாய்த்தே உலக சாதனையாக இருந்தது. இவர் 181-வது விக்கெட்டாக, தென் ஆப்ரிக்காவின் ரைசபே நிடோசகேவை வீழ்த்தினார்.
 • புது தில்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில், இந்தியாவின் ஹர்ப்ரீத் சிங், வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
 • ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஸ்பானிஸ் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தய போட்டியில், பிரிட்டனின் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.
 • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.
 • இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒட்டுமொத்த 1௦ தங்கப் பதக்கங்களையும் இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.
 • 15வது சுதிர்மன் பாட்மிண்டன் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தென் கொரியா, சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றியது. இதுவரை நான்கு முறை தென் கொரியா இக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 • 2௦17 உலக ஐஸ் ஹாக்கி சாம்பியன்சிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், ஸ்வீடன் அணி கனடா அணியை வீழ்த்தி, உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பை போட்டிகள் பிரான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளில் நடைபெற்றது.
 • 2௦17 ஆண்கள் மகதி ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்து, மலேசிய வீரரை தோற்கடித்து சாம்பியன் பட்டதை கைப்பற்றினார். இப்போட்டிகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் மகதி நகரில் நடைபெற்றது.
 • 2௦17 ஆசிய ப்ளிட்ஸ் சதுரங்க சாம்பியன்சிப் போட்டிகளின் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார். அவர் இறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
 • 26வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பையின் இறுதி ஆட்டத்தில்ல், பிரிட்டன் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இப்போட்டிகள் மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்றது. இப்போட்டிகளில் இந்தியா, நியுசிலாந்து அணியை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது

இடங்கள்

 • நிதி ஆயோக் அமைப்பின் முதல் சமவேஸ் கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது.
 • இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையத்தின் சார்பில் புதிய விமானவியல் சோதனை மையம், கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை சோதனை மையம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
 • 2௦17 உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஜெர்மனியின் டசுல்டாப் நகரில் இம்மாதம் 29ந் தேதி முதல் துவங்குகிறது.
 • 53-வது ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் கூட்டம், 2018-ம் ஆண்டு, தென் கொரியாவின் பூசன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 52-வது ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் கூட்டம் இந்தியாவின் குஜராத்தில் நடைபெற்றது.
 • 2௦17 ஜி-2௦ நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் பங்குபெறும் மாநாடு, ஜெர்மனியின் பேட் நிய்நகர் என்னும் இடத்தில நடைபெற்றது. இதில் இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், பண்டாரு தத்தாராயா கலந்துக் கொண்டார்.
 • ஜெய்பூர் இலக்கியத் திருவிழா 2௦17, இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்றது.

குழு

 • கங்கை நதியை தூர் வருவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட “மாதவ் சிட்டல்” தலைமையிலான குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது
 • பாரத சாரணர் அமைப்பு மற்றும் இந்துஸ்தான் சாரணர் அமைப்பு ஆகியவற்றை சீரமைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை ஆராய “ஹர்ஷ் மல்ஹோத்ரா” தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது
 • நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தேவையான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய அரசு, நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பணகாரியா தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது
 • உதிரப் பிரதேச மாநில அரசு, “மா குழு” (“Maa committee” to check mid day meal quality in) schoolsஎன்னும் பெயரில் புதிய குழு ஒன்றை அமைத்து, அரசு தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை நேரடியாக சென்று ஆராய்ந்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

 குறியீடு

 • உலக வங்கியின் மின்சார ஆற்றல் பயன்பாட்டு குறியீட்டில், இந்தியா உலக அளவில் 26-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2014ம் ஆண்டில் 99-வது இடத்தில இருந்த இந்தியா, 73 இடங்கள் முன்னேறி தற்போது 26வது இடத்தில உள்ளது.
 • பெங்களூருவில் உள்ள, பொது விவகார மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், “பொது விவகார குறியீடு 2௦17” வெளியிடப் பட்டது. இதன் படி முதல் இடத்தில கேரளாவும், இரண்டாம் இடத்தில தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில குஜராத்தும் உள்ளது.
 • இந்தியாவின் அதிகம் மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில டாடா நிறுவனம் உள்ளது. இரண்டாவது இடத்தில ஏர்டெல் நிறுவனமும், மூன்றாவது இடத்தில எல்.ஐ.சி நிறுவனமும் உள்ளது.
 • உலக வங்கி வெளியிட்டுள்ள, “இந்தியா வளர்ச்சி அறிக்கை 2௦17”ல் இந்தியாவில் படித்த பெண்கள் வேலைக்கு செல்வதில், 131 உலக நாடுகளில் இந்தியா 12௦ வது இடத்தில உள்ளது. இந்தியாவில் கல்வி அறிவு பெறும் பெண்களில் பெரும்பான்மை ஆனர் வேலைக்கோ, தொழில் நடத்துவதோ இல்லை, அவர்கள் வருமானம் மேற்கொள்ளும் வழிமுறைகளை செயல்படுத்துவது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
 • பிரபல லேன்சென்ட் நிறுவனம் வெளியிட்ட, “உலகளாவிய நோய் என்னும் சுமை” என்னும் தலைப்பின் உட்பிரிவில், “சுகாதார அணுகல் மற்றும் தர குறியீட்டு” (2017 Healthcare Access and Quality Index (HAQI)), பிரிவில், இந்தியா, 195 நாடுகளில் 154-வது இடத்தையே பிடித்தது. சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம், இந்தியாவில் மருத்துவ சுகாதாரத்திற்கு அளிக்கப்படவில்லை என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • எர்னஸ்ட் மற்றும் யங் நிறுவனம் வெளியிட்ட, “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாடு கவரும் குறியீட்டில்” (Renewable Energy Country Attractiveness Index), சீனா முதல் இடத்தில உள்ளது. இந்தியா 2-வது இடத்தில உள்ளது. அமேரிக்கா 3-வது இடத்தில உள்ளது. புதுபிக்கத்தக்க ஆற்றலுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், முதலீடுகள் மூலம், பிற நாடுகளை முதலீடு மேற்கொள்ள கவரும் நாடுகளை கொண்டது இப்பட்டியல்.
 • 2௦17 சவில்ஸ் தொழில்நுட்ப நகரங்கள் குறியீடு (2017 Savills Tech Cities Index) வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தில் முதல் இடத்தில், அமெரிக்காவின் ஆஸ்டின் நகரம் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியுயார்க் நகரங்கள் உள்ளன. இப்பட்டியலில் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம் எனப்படும் பெங்களூரு, 2௦வது இடத்தில உள்ளது.

 

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.