TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

நாட்கள்

 • மே 1 = சர்வதேச தொழிலாளர் தினம்
 • மே 1 = மகராஷ்டிரா மாநிலம் உதித்த தினம்
 • மே 2 = உலக ஆஸ்த்மா தினம். இந்த ஆண்டிற்கான கரு = Better air better breathing
 • மே 3 = ஐக்கிய நாடுகள் உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
 • மே 8 = உலக செஞ்சிலுவை தினம்
 • மே 8 = உலக தாலச்சீமியா நோய் தினம், இந்த ஆண்டிற்கான கரு = Together for Humanity
 • மே 1௦ = உலக இடப்பெயரும் பறவைகள் தினம்
 • மே 11 = தேசிய தொழில்நுட்பத் தினம். 1998ம் ஆண்டு நடத்தப்பட்ட, “ஆப்பெரேசன் சக்தி” (பொக்ரான் சோதனை – 2) வெற்றி தின நினைவாக, இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கரு = Technology for inclusive and sustainable growth.
 • மே 12 = சர்வதேச செவிலியர்கள் தினம். இந்த ஆண்டிற்கான கரு = Nursing: A voice to lead – Achieving the sustainable development goals
 • மே 12 = ஐக்கிய நாடுகள் வெசாக் தினம்
 • மே 15 = சர்வதேச குடும்ப தினம். இந்த ஆண்டிற்கான கரு = Families, education and well-being
 • மே 16 = தேசிய டெங்கு நோய் தினம்
 • மே 17 = சர்வதேச உயர் இரத்த அழுத்தத் தினம்
 • மே 17 = உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம். இந்த ஆண்டின் கரு = Big data for big impact
 • மே 18 = சர்வதேச அருங்காட்சிய தினம்
 • மே 18 = உலக எயிட்ஸ் நோய்க்கான மருந்து தினம்
 • மே 2௦ = உலக அளவியல் தினம்
 • மே 21 = சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு தினம்
 • மே 22 = சர்வதேச வனஉயிரி தினம். இந்த ஆண்டிற்கான கரு = Biodiversity and Sustainable Tourism
 • மே 23 = உலக ஆமைகள் தினம்
 • மே 28 = பெண்கள் உடல்நலத்திற்கான சர்வதேச செயல் தினம்
 • மே 29 = ஐக்கிய நாடுகள் அமைதி படையினர் தினம். இந்த ஆண்டிற்கான கரு = Investing in peace around the world
 • மே 31 = சர்வதேச புகையிலை இல்லா தினம். இந்த ஆண்டிற்கான கரு = Tobacco – a threat to development

மறைவு

 • இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதியான லீலா சேத் காலமானார். அவருக்கு வயது 86.
 • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், அணில் மாதேவ் தவே காலமானார். அவருக்கு வத் 6௦.
 • ஜேம்ஸ்பாண்ட் புகழ் ரோஜர் மூர் காலமானார். 7 படங்களில் இவர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார்.
 • “ஆப்பெரேசன் பிளாக் தண்டரை” தலைமை ஏற்று நடத்திய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கே.பி.எஸ்.கில் காலமானார். அமிர்தசரஸ் பொற்கோவிலில் நுழைந்த தீவிரவாதிகளை அழிக்க மேற்கொள்ளப் நடவடிக்கை இதுவாகும்.
 • முன்னாள் மத்திய அமைசாரும், தெலுங்கு பட தயாரிப்பாளரும் ஆன தாசரி நாராயண ராவ், ஹைதராபாத் நகரில் காலமானார்

புத்தகம்

 • கலித் முகமது = AshaParekh: The Hit Girl
 • ஹவுளினால் கிட்டி = Confessions of a dying mind: the blind faith of atheism. இது “கடவுளுக்காக எழுதப்பட்ட உலகின் முதல் தத்துவ நாவல் ஆகும்
 • ஆனந்த் ஷர்மா = India’s Indira A Centennial Tribute
 • ராஜேஷ் ஜெயின் = Mann Ki Baat: A Social Revolution on Radio
 • உதய் மதுர்கார் = Marching with a Billion Analysing Narendra Modi’s Government at Midterm
 • பேராசிரயர் அமல் குமார் = Metaphysics, Morals and Politics
 • அமிஸ் திரிபாதி = Sita, Warrior of Mithila
 • அபிருப் பட்டாசாரியா = Winning Like Virat Think and Succeed Like Kohli
 • இந்திய பசுமை புரட்சியின் தந்தை எனப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்களை பிரதமர் வெளியயார். அதன் பெயர் = S. Swaminathan: The Quest for a world without hunger

அறிவியல்

 • ரூர்கி அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பழங்கள் மற்றும் ஜாமுனில் இருந்து குறைந்த செலவில் சூரிய ஆற்றல் செல்களை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
 • பேஸ்புக் (முகநூல்) நிறுவனம், “எக்ஸ்ப்ரெஸ் வை-பை” சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் நான்கு மாநிலங்களில் சுமார் 7௦௦ நிலையங்களை துவக்கி வணிக நோக்கில் செயல்படுத்தி உள்ளது
 • சார்க் நாடுகளுக்காக, இந்தியா “தெற்காசிய செயற்க்கைக்கோள்” என்ற பெயரில் புதிய செயற்கைக்கோளினை ஏவியது. ஜிசாட்-௦9 என்ற இந்த செயற்கைக்கொள் சார்க் நாடுகளின் வளர்சிக்காக பயன்படுத்தப்படும்
 • புது தில்லி அகில் இந்திய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மிகக் குறைந்த விலையில், “சுவாச வடிப்பானை” (Nasofilters) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இதன் விலை ரூ. 1௦ மட்டுமே ஆகும். இது 95% அசுதக்காற்று, புகை போன்றவற்றை வடிக்கும் திறன் கொண்டது. இதனை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு குடியரசுத் தலைவர், “தேசிய ஸ்டார்ட்அப் விருதை” வழங்கி கவுரவித்தார்.
 • உலகின் மிகப்பெரிய விமானமான, “ஏர்லேன்டர் 1௦” சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது பாதி விமானம் பாதி கப்பல் போன்றதாகும். அதாவது இது ஹீலியம் வாயுவை கொண்டு பலூன் போல அந்தரத்தில் நிற்கும் தன்மையும் கொண்டது.
 • அமெரிக்காவின் நாசா மையத்தால் அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம், வியாழன் (ஜூபிடர்) கோளில் பூமி அளவில் புயல்கள் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பூமியை விட 1௦ மடங்கு கந்தத்புலம் மிக்கதாக வியாழன் கொள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 • உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி சிலி நாட்டில் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இது 2024ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கட்டி முடிக்கப்பட்டால், இதுவே உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி ஆக உருவெடுக்கும்.
 • ஈக்குவேடார் நாட்டின் அமேசான் காடுகள் பகுதியில், விஞ்ஞானிகள் புதிய வகை கண்ணாடி போன்ற தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் தோலில் ஒளி பாய்ந்து செல்கிறது. அதன் இதயம் துடிப்பது கண்கூடாக தெரிகிறது. விஞ்ஞானிகள் இத்தவளை இனத்திற்கு, Hyalinobatrachium yaku எனப் பெயரிட்டுள்ளனர்.
 • கரக்பூர் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மிக குறைந்த செலவில், தரமான, வேகமான முறையில் உயிரி எரிபொருளை தயாரித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர். “மண்ணில் இருந்து மண்” (‘soil-to-soil’ manufacturing technology) என்ற தொழில்நுட்பத்தின் மூலம், இதனை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
 • வேளாண் துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ஏதுவாக மத்திய அரசு, “இ-க்ரிஷி சம்வாத்” (e-Krishi Samvad, direct solution to problem of agriculture sector) என்ற நேரடி இணையதள சேவையை மத்திய அரசு துவக்கியுள்ளது.
 • உலகின் மிகப்பெரிய எக்ஸ்ரே லேசர் ஜெர்மனியில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. European X-ray Free Electron Laser (XFEL), எனப்படும் இந்த எக்ஸ்ரே லேசர், ஹம்பர்க் நகரில் இருந்து ஷேன்பில்த் நகர வரையிலான 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமிக்கு அடியில் ஒளியை வீசியது.
 • உலகிலேய மிக மாசடைந்த பகுதியாக, பசிபிக் பெருங்கடலில் உள்ள, “ஹென்டர்சன் தீவுகள்” பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது (Henderson Island (South Pacific Ocean) has been found to be most polluted place on the planet)

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.