TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

இராணுவம்

 • அமெரிக்கா, “தாட்” (Terminal High Altitude Area Defense (THAAD)) என்ற புதிய வான்வழி அணுஆயுத தாக்குதலை தடுக்கும் பாதுகாப்பு கவசத்தை தென் கொரியாவில் நிறுவி உள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஏதுவாக, இதனை அமெரிக்க தென் கொரியாவில் நிறுவி உள்ளது.
 • இந்தியா, இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான கடற்படை போர் பயிற்சியான, “கோர்பட்”, நிகழ்ச்சியின் 29-வது நிகழ்ச்சி, அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளைர் தீவுகளில் நடைபெற்றது. (CORPAT = CO-ORDINATED PATROL)
 • இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் கடற்படை மேற்கொள்ளும் போர் பயிற்சி நிகழ்ச்சியான, “சிம்பெக்ஸ்” (SIMBEX stands for “Singapore-India Maritime Bilateral Exercises), தெற்கு சீன கடல்பகுதியில் நடைபெற்றது.
 • இந்திய – தாய்லாந்து விமானப் படை வீரர்கள் மேற்கொண்ட பேரிடர் மீட்பு மற்றும் மனிதநேய உதவிக்கான பயிற்சி, “சியம் பாரத் 2௦17”, தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் நகரில் நடைபெற்றது.
 • இந்திய கப்பல் பாடல் வீரர்கள் மேற்கொண்ட மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கை பயிற்சி, “காரவளி காருண்யா(Humanitarian Assistance and Disaster Relief (HADR) Exercise “Karavali Karunya”), கர்நாடகா மாநிலத்தின் கார்வார் பகுதியில் நடைபெற்றது.
 • அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் ராணுவங்கள் மேற்கொண்ட கூட்டு போர் ஒத்திகை பயிற்சி, “பலிகத்தான்” (joint military exercise “Balikatan ( or Shoulder-to- Shoulder)”) பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றது.
 • பல நாடுகளை சேர்ந்த இராணுவங்கள் சேர்ந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவ போர் பயிற்சி நிகழ்வான, “ஆர்வமிகு சிங்கம்” (multinational military exercise “Eager Lion”), நிகழ்ச்சி ஜோர்டான் நாட்டில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 7400 வீரர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.

மாநாடு

 • குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற 52வது ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் பொதுக் கூட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.
 • மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில், “தார்வாசா பான்ட்” (toilet usage campaign “Darwaza Band”) என்ற பெயரில் புதிய பிரச்சார இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், பொது மக்களிடம் கழிவறை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், நாடு முழுவதும் கிராமங்களில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா நிலையை அடைய வேண்டும் என்பதாகும். உலக வங்கி செயல்பாட்டில் நடைபெறும், இந்த இயக்கத்தை தலைமை ஏற்று நடத்துபவர், அமிதாப்பச்சன் ஆவார்.
 • இந்திய மொபைல் காங்கிரஸ் 2௦17 வரும் செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடைபெறும் என அறிவிவிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக இந்தியா, இது போன்று பெரிய மொபைல் நிகழ்ச்சியை நடத்துவது ஆகும்.
 • “2௦17 உலக தெரு உணவு கூட்ட விழா”, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. World Street Food Congress (WSFC17)
 • 2௦17ம் ஆண்டில் நடைபெறவுள்ள 28-வது நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு, பெல்ஜியம் தலைநகர் ப்ருசல்ஸ் நகரில் நடக்க உள்ளது. அடுத்த ஆண்டிற்கான நேட்டோ உச்சி மாநாடு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற உள்ளது.
 • 7௦-வது “உலக சுகாதார மன்றத்தின்” கூட்டம், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது. (World Health Assembly (WHA70))
 • ஒரே பாலினத்தவர்களின் திருமணத்தை அங்கீகரித்த முதல் ஆசிய நாடு தைவான் ஆகும். மேலும் ஆப்ரிக்க கண்டத்தில், ஒரே இனத்தவர்களின் திருமணத்தை அங்கீகரித்த ஒரே நாடு தென் ஆப்ரிகா ஆகும்.
 • “பேரிடர் ஆபத்து தடுப்பிற்கான தேசிய அடித்தளம்”, அமைப்பின் 2-வது கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கான கரு = Disaster Risk Reduction for Sustainable Development: Making India Resilient by 2030
 • சீனா, “ஒரு பட்டை, ஒரு சாலை” என்ற பெயரில் முதல் உச்சி மாநாட்டை, பீஜிங் நகரில் நடத்தியது (first-ever One Belt One Road (OBOR) Summit)
 • 2௦17 ஆர்க்டிக் ஆற்றல் உச்சிமாநாடு (2017 Arctic Energy Summit (AES)), வரும் செப்டம்பர் மாதம் பின்லாந்தின், ஹெல்சின்கி நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 2௦17 இந்திய ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் சரக்கு சேவை மாநாடு (2017 India Integrated Transport and Logistics Summit), புது தில்லியில் நடைபெற்றது
 • “தேசிய தரநிலை மாநாடு”, புது தில்லியில் நடைபெற்றது.

விருது

 • 2014-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் வளர்ச்சி விருது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “இஸ்ரோ” அமைப்பிற்கு வழங்கப்பட்டது.
 • 2015-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் வளர்ச்சி விருது, ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் அமைப்பு பெற்றுள்ளது
 • உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியில் அங்கத்தினராக இந்திய வம்சாவழியை செந்த மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த கிருஷ்ணா சட்டர்ஜி, நியுயார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுபாஸ் கோட் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த யத்விந்தர் மல்கி ஆவர்.
 • 2௦17ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் பிரபல, “மார்க் டிவைன்” விருது, டேவிட் லெட்டர்மான் என்பவருக்கு வழங்கப்பட்டது
 • லண்டனை சேர்ந்த ஹார்வார்ட் தொழில் கழகம் வழங்கும், “போர்டர் விருது 2௦17”, இந்தியாவை சேர்த்த ஐ.டி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது
 • கால்பந்து எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட “2௦17ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர்” விருது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோலோ கண்டேவிற்கு வழங்கப்பட்டது
 • சிறு கதைகளுக்காக வழங்கப்படும், “2௦17ம் ஆண்டின் பெண் / மலாமுத் விருது”, இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜும்பா லகரிக்கு வழங்கப்பட்டது
 • அமெரிக்காவில் நடைபெற்ற இன்டல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் திருவிழாவில் இந்தியாவை சேர்ந்த 5 மாணவர்கள் பரிசுகளை வென்றனர்
  • பிரசாந்த் ரங்கநாதன் = சுற்றுச்சூழல் பொறியியல்
  • பிரதிக் நாயுடு = கணினி வழி உயிரியல்
  • ஆதம் நாயக் = புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்
  • கார்த்திக் எக்னேஸ் = கணிதம்
  • ராகுல் சுப்பிரமணியன் = நுண் உயிரியல்
 • விண்வெளி ஆராய்சிக்காக வழங்கப்படும் “டன் டேவிட் விருது 2௦17” (2017 Dan David prize), இந்திய ஆராய்ச்சியாளர் ஸ்ரீநிவாஸ் குல்கர்னி அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • இங்கிலாந்தின் 7-வது ஆண்டு ஆசிய விருதுகள்
  • சிறந்த உதிக்கும் நட்சத்திர விருது = சன்னி பவார்
  • பெல்லோஷிப் விருது = சச்சின் டெண்டுல்கர்
  • இசைக்கான சிறந்தாஹ் விருது = இந்தி இசையமைப்பாளர் அத்னான் சமி
  • சினிமாத் துறைகான் ஒப்பற்ற பங்களிப்பு = ஓம் புரி
 • மகராஷ்டிரா அரசின் “ஸ்மார்ட் கிராமம்” விருது, புகழ்பெற்ற கோவர்த்தன் சுற்றுச்சூழல் கிராமத்திற்கு வழங்கப்பட்டது
 • சமுகத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக போராடியவர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் விருது, குடியரசுத் தலைவர் வழங்கினார்
  • 2௦11 = பேராசிரயர் எஸ்.கே.தொரத்
  • 2௦12 = சம்தா சைனிக் தாழ் அமைப்பு
  • 2014 = அமர் சேவா சங்கம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பாபு லால் நிர்மா
 • செந்தமிழ் மொழிக்கான தொல்காப்பியர் விருது, குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது
  • 2013-14 = எஸ்.என்.கந்தசாமி
  • 2014-15 = ஏ.தக்சினா மூர்த்தி
  • 2015-16 = ஆர். கலைக்கோவன்
 • 2௦17ம் ஆண்டிற்கான “ஸ்மார்ட் காவலர் விருது”, புனே நகரை சேர்ந்த காவல் துறைக்கு வழங்கப்பட்டது
 • “2௦17ம் ஆண்டிற்கான டிஜிட்டல் சேவைக்கான புதுமை” விருது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது
 • ரோஹன் சக்ரவர்த்தி, இந்தியாவின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் கார்ட்டூனிஸ்ட், உலக வனவிலகு நிதியத்தின் சர்வதேச அதிபர் விருது 2017 வென்றார்
 • “பசுமை ஆஸ்கர்” விருது எனப்படும் வனவிலங்கு வாழ்விற்கான பாதுகாப்பிற்கு வழங்கப்படும் விட்லே விருது, 2௦17 ம் ஆண்டிற்கு 6 பேருக்கு வழங்கப்பட்டது, ஐந்தில் இருவர் இந்தியர்கள் ஆவார். கர்நாடகாவை சேர்ந்த சஞ்சய் குப்பி மற்றும் அஸ்ஸாமை சேர்ந்த பூர்ணிமா பரமன் ஆவர்.
 • 2௦16ம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடெமி புரஸ்கார் விருது, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த சத்யாபிரதா ரூட் என்பவருக்கு வழங்கப்பட்டது
 • மேற்குவங்க மாநிலத்தின் உயரிய விருதான “பங்கா சம்மன்” விருது, தேச்பியன் சவுமியா சட்டர்ஜி மற்றும் தேவேச்வர் அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • இந்திய தேசிய அறிவியல் அகடெமி வழங்கும், இளம் விஞ்ஞானிக்காண 2௦17 “இன்சா பதக்க விருது”, அஸ்ஸாமின் தேஸ்பூர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த சஞ்சய் பிரதிகார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • இந்திய தேசிய அறிவியல் அகடெமி வழங்கும், இளம் விஞ்ஞானிக்காண 2௦17 இளம் விஞ்ஞானி விருது, புற்றுநோய் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, ஹைதராபாத் நகரை சேர்ந்த அரவிந்த் குமார் ரெங்கன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
 • 2௦16 ம் ஆண்டிற்கான “விஸ்டன் – எம்.சி.சி கிரிக்கெட் புகைப்பட”விருது, இந்தியாவின் ஜம்மு காஸ்மீர் மாநிலத்தை சேர்ந்த சஜிப் மஜீத் என்பவருக்கு வழங்கப்பட்டது
 • 2017ம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது, இந்தியாவை சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • 2௦17ம் ஆண்டிற்கான சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் விருது சுப்மான் கில் என்ற இந்திய வீரருக்கு வழங்கப்பட்டது
 • பிரான்ஸ் நாட்டின் உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த “தி ஸ்கோயர்” (THE SQUARE) என்ற திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான “Palme d’Or” விருது வழங்கப்பட்டது
 • சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை (Internationally Acclaimed Actress) என்ற பிரிவில் தாதா சாகிப் பால்கே விருது, பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்பட்டது
 • 2௦17 சர்வதேச மனிதநேய விருது, பாலிவுட் நடிகை ஜேக்கலின் பெர்னாண்டஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • 2௦17 நியுயார்க் இந்திய திரைப்பட திருவிழாவில், சிறந்த நடிகைக்கான விருது, பாலிவுட் நடிகை கொங்கனா சென் ஷர்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

Leave a Comment

Your email address will not be published.