TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

நியமனம்

  • அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள 2-வது இந்திய அமெரிக்கர் அமுல் தாபர் ஆவார். இதற்கு முன்னர் முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் இருந்தார்
  • ஆந்திர சட்டமன்றம், தனித் தீர்மானம் மூலம், ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை முதல் நிலை (குரூப் – 1) அதிகாரியாக நியமித்து அறிவித்துள்ளது.
  • மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் புதிய செயலாளராக அனுராக் திரிபாதியை மத்திய அரசு நியமித்துள்ளது
  • அருணா சுந்தரராஜன் தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பு – அவர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐ.டி. அமைச்சகத்தின் செயலாளர் ஆகவும் உள்ளார்
  • இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய தலைவராக ப்ராஜ் பிஹாரி குமார் நியமிக்கப்பட்டுள்ளார் Indian Council of Social Science Research (ICSSR).
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதநேய பிரிவின் புதிய தலைவராக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மார்க் லவ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்
  • பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இம்மானுவல் மேக்ரான் அவர்கள், அந்த நாட்டின் புதிய பிரதமராக எட்வர்ட் பிலிப் என்பவரை தேர்வு செய்துள்ளார். இம்மானுவல் மேக்ரான் அந்நாட்டின் 25வது அதிபராவார். மேலும் அந்நாட்டின் மிக குறைந்த வயதில் அதிபரானாவர் இவராவார்
  • ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம், தந்து இந்திய வணிகத்திற்கான நிர்வாக இயக்குனராக அனுராக் மெஹ்ரோதாவை நியமித்தது
  • குஜராத் காவல்துறையின் புதிய தலைவராக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார், அவர் அம்மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை தலைவராவார்
  • இந்தியாவின் புதிய பாதுகாப்பு துறை செயலாளராக சஞ்சய் மித்ரா நியமிக்கப்பட்டார். அவர் இப்பதவியில் 2 ஆண்டுகள் இருப்பார்
  • மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முன்னாள் இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தின் தலைவரான விஜய் குமார் சரஸ்வத் அவர்களை நியமித்துள்ளது
  • ஈரான் ஜனாதிபதியாக ஹஸன் ருஹானி 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • பஹாமாஸ் நாட்டின் புதிய பிரதம மந்திரியாக ஹூபர்ட் மினிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • காலநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு அமைப்பின் புதிய துணை நிர்வாக செயலாளராக இந்தியாவை சேர்ந்த ஓவைஸ் சர்மாத் நியமிக்கப்பட்டுள்ளார்
  • மொராக்கோ நாட்டில் நடைபெற்ற சர்வதேச உரக் கூட்டமைப்பின் கூட்டத்தில், அதன் புதிய தலைவராக இந்தியாவை சேர்ந்த ராகேஷ் கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • மூன் ஜேய்ன், தென் கொரியாவின் 12 வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக ரஸ்மி ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்
  • பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக லீனா நாயர் நியமிக்கப் பட்டுள்ளார்
  • மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக ராஜீவ் குமார் நியமிக்கப் பட்டுள்ளார்
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் புதிய செயலாளராக ராகேஷ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப் பட்டுள்ளார்
  • தெலுங்கானா சாகித்திய அகடமி குழுவின் தலைவராக பிரபல எழுத்தாளர் நந்தினி சித்தி ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்
  • ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறை அலுவலக துணைத் தலைவராக பி.என்.பிரதான் நியமிக்கப் பட்டுள்ளார்
  • இந்திய தேநீர் வாரியத் தலைவராக பிரபாத் கமல் பெரோசாவும், இந்திய காப்பி வாரியத் தலைவராக போஜ் கவுடாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
  • இந்திய கலால் மற்றும் சுங்கத்துறை அமைப்பின் புதிய உறுப்பினர்களாக ஆர்.கே.மகாஜன் மற்றும் மணிந்தர் சிங் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த அமைப்பின் தலைவராக வனஜா சர்னா உள்ளார்
  • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவராக ராம் ஷங்கர் கதேரியா நியமிக்கப் பட்டுள்ளார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டுள்ளார்
  • சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் புதிய தலைவராக சையத் காயரோல் ஹசன் ரிச்சி நியமிக்கப் பட்டுள்ளார். சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக ஜார்ஜ் குரியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • பொருளாதார உறவுகள் துறையின் புதிய செயலாளராக தபன் ராய் நியமனம் செய்யப் பட்டுள்ளார்
  • உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவராக எத்தோப்பியா நாட்டை சேர்ந்த டெட்ரோஸ் அதனாம் கேப்ரெய்சஸ் நியமிக்கப் பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைமையகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ளது
  • பிரபல ட்விட்டர் நிறுவனதின் இந்திய பிரிவின் தலைவராக தரன்ஜீத் சிங் நியமனம் செய்யப் பட்டுள்ளார்
  • அமெரிக்காவின், பெடரல் ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவழியை சேர்ந்த நீல் சட்டர்ஜியை நியமித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்
  • தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஹெபாடிடிஸ் எனபப்டும் ஈரல் அழற்சி எதிரான நல்லெண்ண தூதராக அமிதாப் பச்சனை உலக சுகாதார அமைப்பு நியமித்துள்ளது

திட்டம்

  • உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், பாரத பிரதமர், “ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை தகவல் முறை” திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம், உச்ச நீதிமன்றம் முதல் முறையாக காகிதமற்ற வேலைகளை பெற முடியும்.
  • மத்தியப் பிரதேச மக்களின் வாழ்வாதரமான, நர்மதை ஆற்றை பாதுகாக்கும் வகையில், பிரதமர் மோடி அவர்கள், “நர்மதா சேவா இயக்கத்தை” துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் இறுதியில், “நமாமி தேவி நர்மதை சேவா யாத்திரை” நடைபெற்றது.
  • மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம், “பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா சஞ்சார் கவுஷல் விகாஸ் பிரதிச்தான்” திட்டத்தை துவக்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மேலும் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் செயற்கைக்கோள் போன் சேவை திட்டம், பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா தொலைதொடர்பு திறன் மேலாண்மை விருது திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டது.
  • மத்திய அரசு, வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் படிக்க ஏதுவாக, அவர்கள் சான்றிதழ் சரிபார்பை, இணையதளம் வாயிலாக எளிதாக மேற்கொள்ள, “மின் – சனத்” (online verification portal ‘e-Sanad’) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புயல்

  • வங்கக் கடலில் உருவாகிய புதிய புயலுக்கு “மோரா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வங்கக் கடல் பகுதியில் உருவான இரண்டாவது புயல் இதுவாகும். இதற்கு முன்னர் சென்ற ஏப்ரல் மாதம் மாருதா புயல் உருவானது.

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-1

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-2

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-3

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-4

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-5

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-6

TNPSC Current Affairs in Tamil May 2017-Part-7

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.