TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

திட்டம்

கோபர் – தன திட்டம் (GOBAR – DHAN SCHEME):

  • மத்திய துப்புரவு மற்றும் குடிநீர் துறை அமைச்சரான, உமா பாரதி அவர்கள் ஹரியானா மாநிலத்தின் கர்னல் பகுதியில் உள்ள தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற விழாவில், “கோபர் – தன்” (GOBAR – DHAN) திட்டத்தை துவக்கி வைத்தார்
  • GOBAR = GALVANIZING ORGANIC BIO-AGRO RESOURCES (செயலாற்றும் கரிம உயிரி – வேளாண் மூலங்கள்)
  • தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது
  • திட்டத்தின் நோக்கம் = 1) கிராமத் தூய்மை, செல்வ மேம்பாடு மற்றும் கால்நடை, கரிம கழிவுகளில் இருந்து ஆற்றல் உற்பத்தி 2) புதிய ஊரக வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல்

பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம்:

  • பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY – PRATHAM MANTHIR VAYA VANTHANA YOJANA) திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு முதலீட்டு எல்லையை 7.5 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்த காபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • மேலும் இதற்கான காலக்கெடுவை மார்ச் 2௦2௦ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது
  • சமூக பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் இறுதியில், மூத்த குடிமக்கள் ஓய்வூதியமாக மாதம் ரூ.1௦௦௦௦ பெற முடியும்

பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா திட்டம்;

  • பிரதம மந்திரி தலைமையிலான மத்திய காபினட் அமைச்சரவை, “பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா” (PMSSY – PRADHAN MANTHRI SWASTHIYA SURAKSHA YOJANA) திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் புதிதாக 2௦ எயிம்ஸ் (AIIMS – ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES) மருத்துவமனைகளை அமைக்கவும், 73 மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது
  • 2௦2௦ம் ஆண்டுக்குள் இதனை நடைமுறை படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
  • பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா திட்டம் 2௦௦3 ஆண்டு கொண்டுவரப்பட்டது

பிரதம மந்திரி ஜன விகாஸ் கர்யகிராம்:

  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய காபினட் அவை, “பல்துறை மேம்பாட்டு திட்டத்தை” (MsDP – MULTI – SECTORAL DEVELOPMENT PROGRAMME), “பிரதம மந்திரி ஜன் விகா கர்யகிராம் யோஜனா” (PMJVK – PRADHAN MANTHRI JAN VIKAS KARYAKRAM) திட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது
  • பதினாகாவது நிதிக் குழுவில் உள்ள இத்திட்டத்தை தொடர்ந்து நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
  • பல்துறை வளர்ச்சி திட்டம் 2008-09ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம், சிறுபான்மையினர் அதிகம் உள்ள 9௦ பின்தங்கிய மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அங்கு சமூக பொருளாதார வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல் ஆகும்

பசுமை புரட்சி – க்ரிஷோனதி யோஜனா திட்டம்:

  • மத்திய பொருளாதார விவகார காபினட் அமைச்சகம், வேளாண் துறைக்கு உட்பட்ட, “குடை திட்டம்” எனப்படும் “பசுமை புரட்சி – க்ரிஷோனதி யோஜனா” (UMBRELLA SCHEME, “GREEN REVOLUTION – KRISHONNATI YOJANA) திட்டத்திற்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளது
  • குடை திட்டத்தின் கீழ் 11 திட்டங்கள் உள்ளன. அவை,
    • ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் (MIDH – MISSION FOR INTEGRATED DEVELOPMENT OF HORTICULTURE)
    • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (NFSM – NATIONAL FOOD SECURITY MISSION)
    • தேசிய நீடித்த வேளாண் இயக்கம் (NMSA – NATIONAL MISSION FOR SUSTAINABLE AGRICULTURE)
    • வேளாண்மை நீட்டித்தல் சமர்பிப்பு திட்டம் (SAME – SUBMISSION ON AGRICULTUR EXTENSION)
    • விதை மற்றும் நடவு இயந்திரங்களுக்கான துணை இயக்கம் (SMSP – SUB MISSION ON SEEDS AND PLANTING MATERIAL)
    • வேளாண்மை இயந்திரமயமாக்கல் (SMAM – SUB MISSION ON AGRICULTURE MECHANISATION)
    • பயிர் பாதுகாப்பு மற்றும் தனித் திட்டம் (SMPPQ – SUB MISSION ON PLANT PROTECTION AND PLAN QUARANTINE)
    • வேளாண் கணக்கெடுப்பு, பொருளாதாரம் மற்றும் புல்லியியலுக்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISACES – INTEGRATED SCHEME ON AGRICULTURE CENSUS, ECONOMICS AND STATISTICS)
    • வேளாண்மை ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISAC – INTEGRATED SCHEME ON AGRICULTURAL COOPERATION)
    • வேளாண் வணிகத்திற்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISAM – INTEGRATED SCHEME ON AGRICULTURAL MARKETING)
    • தேசிய மின்-ஆளுமை திட்டம் (NeGP-A – NATIONAL e-GOVERNANACE PLAN)
  • அடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் 33௦௦௦ கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது

தேசிய ஊட்டச்சத்து இயக்கம் – போஷன் அபியான்:

  • நாட்டில் உள்ள 315 மாவட்டங்களிலும், “தேசிய ஊட்டச்சத்து இயக்கம் – போஷன் அபியான்” (NATIONAL NUTRITION MISSION – POSHAN ABIYAAN) திட்டத்தை செயல்படுத்த, உலக வங்கியுடன் 2௦௦ மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடன் பெற இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது
  • POSHAN = PRIME MINSTER’S OVERARCHING SCHEME FOR HOLISTIC NUTRITION
  • இதன் மூலம், ௦ – 6 வயதுடைய குழந்தைகளிடம் உள்ள வளர்சிக் குறைபாட்டினை நீக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2௦22ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ௦-6 வயதுடைய குழந்தைகளில் வளர்சிக் குறைபாட்டினை 38.4% இருந்து 25% குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • இத்திட்டம், மார்ச் 2018 ராஜஸ்தான் மாநிலத்தின் ஜூன்ஜூனு என்னுமிடத்தில் துவக்கி வைக்கப்பட்டது
  • நோக்கம் = கர்பிணி தாய்மார்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கி, அவர்களை வளர்ச்சி பெறச்செய்வது ஆகும்

டிஜிட்டல் இந்தியா வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்:

  • மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், மாணவர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க, “டிஜிட்டல் இந்தியா வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை” (DIGITAL INDIA INTRNSHIP SCHEME) அறிமுகம் செய்துள்ளது.
  • இணையத்தளம் மூலம் மாணவர்கள் இதில் பதிவு செய்து, பயிற்சி பெறலாம். இப்பயிற்சி அவர்கள் வேலைவாய்ப்பை பெற உதவும்.
  • இதற்கான இணையத்தளம் = meity.gov.in/internship-scheme
  • மாணவர்கள் தேர்ந்த பயிற்றுனர்கள் மூலம் பயிற்சி பெறுவர்.

பசுமை திறன் வளர்ச்சி திட்டம்:

  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், “பசுமை திறன் வளர்ச்சி திட்டத்தை” (GSPD – GREEN SKILL DEVELOPMENT PROGRAMME) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் சுமார் 5.5 லட்சம் பேர் பயிற்சி பெற உள்ளனர்

ஆயுஸ்மான் பாரத் திட்டம்:

  • நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவை, மத்திய ரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், “ஆயுஸ்மான் பாரத் – பிரதம மந்திரி ராஸ்ட்ரிய ஸ்வஸ்திய சுரக்சா இயக்கம்” (AYUSHMAN BHARAT – PRADHAN MANTRI RASHTRIYA SWASTHIYA SURAKSHA MISSION) திட்டத்தை செயல்படுத்த இணைந்துள்ளன
  • வடமாநிலங்களுக்கான முதல் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் முதல் கூடம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்றது
  • இதில் இணைந்துள்ள மாநிலங்கள் = ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஸ்மீர், உத்திரகாண்டு மற்றும் சண்டிகர்
  • ஆயுஷ்மான் பாரத் தினம் = ஏப்ரல் 3௦

சமர்த் திட்டம்:

  • ஜவுளித் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாட நடத்தப்பட்ட “சமர்த் திட்ட” கூட்டமானது (SAMARTH SCHEME (SCHEME FOR CAPACITY BUILDING IN TEXTILE SECTOR) UNDER SKILL INDIA MISSION), திறன் இந்தியா இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இக்கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது

பேடிஎம் நிறுவனத்தின் “ஆஷா கிரண்” இயக்கம்:

  • பிரபல ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனமான, பேடிஎம் நிறுவனம் ஊரகப் பகுதி பெண்களிடம் நிதிச் சேவைகள் தொடர்பான கல்வியை பெருக்க “பேடிஎம் ஆஷா கிரண்” என்ற புதிய இயக்கத்தை துவங்கியுள்ளது (PAYTM ANNOUNCED A PROGRAMME CALLED PAYTM ASHAKIRAN, WHICH AIMS AT EDUCATING RURAL WOMEN ABOUT FINANCIAL SERVICES)
  • இதன் மூலம் இந்தியாவின் நகரப் பகுதிகள் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பு பெருகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது

சமக்ரா சிக்ஸா திட்டம்:

  • மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், பள்ளிக் கல்வித் துரையின் தரத்தை மேம்படுத்த “சமக்ரா சிக்ஸா அபியான்” (SAMAGRA SHIKSHA SCHEME TO IMPROVE QUALITY OF SCHOOL EDUCATION) திட்டத்தை கொண்டு வந்துள்ளது
  • தற்போது நடைமுறையில் உள்ள சர்வ சிக்ஸா அபியான், ராஸ்ட்ரிய மத்யமிக் சிக்ஸா அபியான் மற்றும் ஆசிரியர் கல்வி ஆகிய திட்டங்களை ஒன்றிணைத்து இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது (SARVA SHIKSHA ABHIYAN (SSA), RASHTRIYA MADHYAMIK SHIKSKHA ABHIYAN (RMSA) AND TEACHER EDUCATION (TE))
  • நோக்கம் = கல்வியின் தரத்தை உயர்த்துதல், கல்வியின் வெளிப்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துதல்
  • இத் திட்டத்தின் முக்கிய இலக்குகள்
    • தரமான கல்வி (PROVISION OF QUALITY EDUCATION)
    • மாணவர்களிடம் தரமான இறுதி வெளிப்பாடு (ENHANCING LEARNING OUTCOMES OF STUDENTS)
    • பள்ளிக் கல்வி மூலம் சமூக மற்றும் பாலின இடைவெளி பாலத்தை நிரப்புதல் (BRIDGING SOCIAL AND GENDER GAPS IN SCHOOL EDUCATION)
    • கல்வியின் மூலம் தொழில் கல்வியை மேம்படுத்துதல் (PROMOTING VOCATIONALISATION OF EDUCATION)
    • ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் மூலம் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துதல் (STRENGTHENING TEACHER EDUCATION INSTITUTIONS LIKE SCERTS AND DIETS TO IMPROVE QUALITY OF TEACHERS)
    • ஆண்டிற்கு ரூ.5௦௦௦ முதல் ரூ.2௦௦௦௦ வரை அளித்து பள்ளியில் நூலகத் வசதியை (PROVIDING ANNUAL GRANT OF RS 5,000 TO RS 20,000 PER SCHOOL FOR STRENGTHENING OF LIBRARIES) அடைய செய்தல்

சத்தீஸ்கர் அரசின் விகாஸ் யாத்ரா:

  • சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் அம்மாநிலத்தில் விகாஸ் யாத்திரையை துவக்கி வைத்தார். யாத்திரையின் பொழுது சுமார் 5.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக பூசிக் கொல்லி மருத்துகள் வழங்கப்பட்டன (CHIEF MINISTER, DURING HIS VIKAS YATRA, DISTRIBUTED FREE PESTICIDES TO 5.5 LAKH LABOURERS. ALSO, 50 LAKH FAMILIES WERE GIVEN SMARTPHONES AS PART OF THE CHIEF MINISTER’S DREAM PROJECT SANCHAR KRANTI YOJNA). மேலும் அம்மாநில அரசின் கனவுத் திட்டமான 5௦ லட்சம் குடும்பங்களுக்கான இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் “சஞ்சார் கிரந்தி யோஜனா” திட்டத்தை துவக்கி வைத்தார்.

ரயில்வேயின் “ரப்டர்” இயக்கம்:

  • மத்திய ரயில்வே துறை அமைச்சகம், “ரப்டர் இயக்கம்” (MISSION RAFTAAR AIMED AT RAISING AVERAGE SPEED OF FREIGHT TRAINS AND COACHING TRAINS IN NEW DELHI) என்ற பெயரில் ஒருநாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை புது துஈளியில் நடத்தியது. இதன் நோக்கம், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரித்தல்.
  • ரயில்களின் தற்போதைய வேகத்தை விட கூடுதலாக 25 கிலோமீட்டர் வேகத்தை அதிகரிக்க பயிற்சி மட்டும் திட்ட விளக்கம் வழங்கப்பட்டது

ரயில்வேயின் “விகலப்” திட்டம்:

  • இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம், “விகலப்” (IRCTC INTRODUCES VIKALP SCHEME) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி ஒரு ரயில் முன்பதிவு செய்து காத்திருப்போர், அவருக்க படுக்கை வசதி கொண்ட இருக்கை உறுதி செய்யப்படாத நிலையில், அவருக்கு மற்றொரு ரயிலில் இருக்கை உறுதி செய்யப்படுவதே இந்த திட்டமாகும்

சத்ர பரிவகன் சுரக்ஸா யோஜனா:

  • ஹரியானா மாநில அரசு, அம்மாநிலத்தில் பள்ளிப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, “சத்ர பரிவகன் சுரக்ஸா யோஜனா” (HARYANA GOVERNMENT WILL LAUNCH THE ‘CHATRA PARIVAHAN SURAKSHA YOJANA’ TO ENSURE SAFETY OF GIRL STUDENTS) என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பெண் காவல் நிலையங்களை தனியாக துவக்கவும், மாநில காவல் துறையில் பெண்களின் பங்களிப்பை 6% இருந்து 9% உயர்த்தவும் முடிவு செய்துள்ளது, பெண்களின் தேவைக்காக அவசர கால அலைபேசி வசதியையும் அறிமுகம் செய்துள்ளது ஹரியானா மாநில அரசு.

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.