TNPSC Current Affairs in Tamil May 2018-10

கூட்டம்

9-வது இந்திய – ஜப்பான் ஆற்றல் கூட்டம்:

  • 9-வது இந்திய – ஜப்பான் ஆற்றல் பேச்சுவார்த்தை (9-TH INDIA – JAPAN ENERGY DIALOGUE) கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது.
  • ஆற்றல் பாதுகாப்பு, ஆற்றல் பயன்படுத்தல் மற்றும் பருவநிலை மாற்ற சிக்கல்கள் தொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிட்டன.

3-வது இந்திய அமெரிக்க கடல்சார் பாதுகாப்பு கூட்டம்:

  • இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான “3-வது இந்திய – அமெரிக்க கடல்சார் பாதுகாப்பு பேச்சுவார்த்தை” (3RD INDO – US MARITIME SECURITY DIALOGUE) கூட்டம் கோவாவில் நடைபெற்றது
  • இந்திய – பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பாக இந்த கூட்டம் நடைபெற்றது

6-வது அமெரிக்க – இந்திய விமானவியல் மாநாடு:

  • 6-வது அமெரிக்க – இந்திய விமானவியல் மாநாடு (6TH US – INDO AVIATION SUMMIT), மகாராஷ்டிரா மாநிலதின் மும்பை நகரில் நடைபெற்றது. இதனை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார்
  • அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய விமான போக்குவரத்து துறையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்ற நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன.

போதை மருந்து மற்றும் இரசாயன பொருட்கள் தடுப்பு தொடர்பான 5-வது பிம்ஸ்டெக் அமைப்பின் கூட்டம்:

  • போதை மருந்து, மன பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் இரசாயன திரவியங்கள் (BIMSTEC SUB-GROUP ON PREVENTION OF ILLICIT TRAFFICKING IN NARCOTIC DRUGS, PSYCHOTROPIC SUBSTANCES AND PRECURSOR CHEMICALS) போன்றவை கடத்தப்படுவதை தடுக்க, “பிம்ஸ்டெக்” (BIMSTEC – BAY OF BENGAL INITIATIVE FOR MULTI-SECTORAL TECHNICAL AND ECONOMIC COOPERATION) அமைப்பின் 5-வது கூட்டம் நேபாளத்தில் உள்ள காத்மாண்டு நகரில் நடைபெற்றது

நான்காவது தெற்காசிய வனவாழ்வு நடைமுறைபடுத்தும் அமைப்பு:

  • “சாவென்” (SAWEN – SOUTH ASIA WILDLIFE ENFORCEMENT NETWORK) எனப்படும் தெற்காசிய வனவாழ்வு நடைமுறைப்படுத்தும் அமைப்பின் நான்காவது கூட்டம், மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற்றது
  • இந்தியாவில் முதன் முறையாக இவ்வமைப்பின் கூட்டம் நடைபெற்றது

வைப்ரன்ட் வடகிழக்கு 2018:

  • அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில், நான்காவது “வைப்ரன்ட் வடகிழக்கு 2018” (VIBRANT NORTH EAST 2018), கூட்டம் நடைபெற்றது
  • இதன் நோக்கம், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிகழ்சிகளை பொது மக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்

29-வது இந்திய – இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை கூட்டம்:

  • இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இடையேயான 29-வது சர்வதேச கடல்சார் எல்லை பேச்சுவார்த்தை கூட்டம் (29TH INTERNATIONAL MARITIME BOUNDARY LINE (IMBL) MEETING HELD ONBOARD INDIAN NAVAL SHIP ‘SUMITHRA’), இந்தியக் கப்பலான “ஐ.என்.எஸ் சுமித்ரா” வில் நடைபெற்றது

26-வது பேசிக் கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம்:

  • “பேசிக்” எனப்பும் பிரேசில், தென் ஆப்ரிகா, இந்தியா மற்றும் சீனா நாடுகளை கொண்ட கூட்டமைப்பின் சார்பில், அந்நாடுகளின் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்ட 26-வது கூட்டம் (THE 26TH BASIC MINISTERIAL MEETING OF ENVIRONMENT MINISTERS) தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது
  • BASIC = BRAZIL, SOUTH AFRICA, INDIA AND CHINA
  • இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் ஹர்ச வர்தன் கலந்துக் கொண்டார்.

71-வது உலக சுகாதார கூட்டம்:

  • 71-வது உலக சுகாதார அவைக் கூட்டம் (71ST WORLD HEALTH ASSEMBLY (WHA-2018)), ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது.
  • இந்தியாவின் சார்பில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா கலந்துக் கொண்டார்.

13-வது மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் கூட்டம்:

  • 13-வது மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் நிலைக் குழு கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது (THE 13TH MEETING OF THE STANDING COMMITTEE OF INTER STATE COUNCIL WAS HELD IN NEW DELHI)
  • இக்குழுவின் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் ஆவர்

நியமனம்

“ஐ.ஆர்.டி.ஏ”வின் புதிய தலைவர்:

  • இந்திய ஆயுள்காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI = INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY OF INDIA) புதிய தலைவராக சுபாஸ் சந்திர குண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • இவர் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ஆவார்

பொது கணக்கு குழுவின் தலைவர்:

  • லோக்சபா காண்கிற கட்சி தலைவரான, மல்லிகார்ஜுன கார்கே, அவர்கள் பாராளுமன்றத்தின் பொது கணக்கு குழவின் தலைவராக (CHAIRMAN OF 22 MEMBER PUBLIC ACCOUNTS COMMITTEE) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்
  • புதிய பொது கணக்கு குழுவின் காலம், மே 1ம் தேதி முதல் துவங்கியது
  • பொது கணக்கு குழுவில், 22 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.

இரண்டாவது இந்திய வம்சாவழி பெண் நீதிபதி:

  • இந்திய – அமெரிக்கரான, “தீபா அம்பேக்கர்”, நியுயார்க் நகரத்தின் சிவில் நீதிமன்ற இடைக்கால நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
  • நியுயார்க் நகர நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இந்திய வம்சாவழி பெண் நீதிபதி (SECOND INDIAN – AMERICAN WOMEN JUDGE IN NEWYORK) இவராவார். முதலில் சென்னையை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி, நியுயார்க் நகர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்

இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர்:

  • இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த, ஹரேந்திர சிங், ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த, ச்ஜோரே மரிஜின், பெண்கள் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

“பசுமை தூதர்”:

  • சிக்கிம் மாநில அரசு, பாலிவுட் பாடகரான மோஹித் சவுகான், அவர்களை அம்மாநிலத்தின் “பசுமை தூதராக” (GREEN AMBASSADOR) நியமித்துள்ளது.
  • ஏற்கனவே, இந்த ஆண்டு, “ஏ.ஆர்.ரகுமான்” அவர்களை, அம்மாநிலத்தின் சுற்றுலா தூதராக (TOURISM AMBASSADOR) சிக்கிம் அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர்:

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இரண்டாது முறையாக ஷஷான்க் மனோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியில் நீடிப்பார்.

முகுல் ரோகத்கி:

  • பிரதமரை தலைவராக கொண்டு செயல்படும் “லோக்பால் தேர்வுக்குழு உறுப்பினர்களின் உயர்மட்ட குழுவின்” (HIGH PROFILE LOKPAL SELECTION COMMITTEE), சிறந்த நீதியாளர் பிரிவில், முன்னாள் அட்டர்னி ஜெனெரல் முகுல் ரோகத்கி, நியமனம் செய்யப்பட்டுள்ளார்

லலித் கலா அகாடமியின் புதிய தலைவர்:

  • லலித் கலா அகடமியின் புதிய தலைவராக, உத்தம் பச்சர்னே நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து, இவர் அகடமியின் பொறுப்புகளை ஏற்றார்.

இந்தியாவின் புதிய காபினெட் செகரெட்டரி:

  • புதிய காபினெட் செகரெட்டரியாக பிரதீப் குமார் சின்கா, மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இவர், 1977ம் ஆண்டு ஐ,ஏ,ஸ் ஆனவர் ஆவர்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுபாட்டு அலுவலர்:

  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு (FSSAI – FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA) அமைப்பின் முதன்மை நிர்வாக அலுவலரான, பவன் குமார் அகர்வாலின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய தலைவர்:

  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI – NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) புதிய தலைவராக, யுத்விர் சிங் மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்:

  • மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக (CHANCELLOR OF MAULANA AZAD NATIONAL URDU UNIVERSITY (MANUU)) பிரோஸ் பக்த அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்

15-வது நிதிக் குழுவின் முழுநேர உறுப்பினர்:

  • 15-வது நிதிக் குழுவின் முழுநேர உறுப்பினராக (FULL TIME MEMBER OF 15TH FINANCE COMMISSION) அசோக் லகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் ஆவார்

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர்:

  • இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக (CHAIRMAN OF PRESS COUNCIL OF INDIA), முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சி.கே.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்துணைக் குடியரசுத் தலைவரை தலைவராக கொண்ட மூன்று பேர் கொண்ட குழு, இவரை தேர்வு செய்துள்ளது

ஓடிஸா மாநில கவர்னர்:

  • ஓடிஸா மாநில ஆளுநராக, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பி.ஜே.பி தலைவர் கணேஷி லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் புதிய தலைவர்:

  • தேசிய நுகரோவோர் குறைத்தீர் ஆணையத்தின் (NCDRC – NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION) புதிய தலைவராக, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்

பாகிஸ்தானின் இடைகால பிரதமர்;

  • பாகிஸ்தானின் இடைகால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

புதிய துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:

  • பிரதமரின் புதிய தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக “பங்கஜ் சரண்” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.