TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

ஒருங்கிணைந்த அவசரகால நெருக்கடி மேலாண்மை மையம்:

 • மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள, “பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்” (BARC – BHABHA ATOMIC RESEARCH CENTRE) நடைபெற்ற விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “ஒருங்கிணைந்த அவசரகால நெருக்கடி மேலாண்மை மையத்தை” (ICCM – INTEGRATED CENTRE FOR CRISIS MANAGEMENT) துவக்கி வைத்தார்
 • வேதியியல், உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுவினால் (CHEMICAL, BIOLOGICAL, RADIOACTIVE AND NUCLEAR) ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக இம்மையம் துவக்கப்பட்டுள்ளது.

புதிய ஆந்திர மத்தியப் பல்கலைக்கழகம்:

 • ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஜந்தளுரு கிராமத்தில், புதிய மத்தியப் பலகலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
 • இப்பல்கலைக்கழகம், “ஆந்திரப் பிரதேஷ் மத்தியப் பல்கலைக்கழகம்” (CENTRAL UNIVERSITY OF ANDHRA PRADESH) எனப் பெயரிடப்பட்டுள்ளது

புதிய எய்ம்ஸ் மருத்துவமனை:

 • பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஸா யோஜனா (PMSSY – PRADHAN MANTHRI SWASTHIYA SURAKSHA YOJANA) திட்டத்தின் கீழ், புதிய எய்ம்ஸ் (AIIMS – ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES) மருத்துவமனை ஜார்கண்டு மாநிலத்தின் தியோகார் பகுதியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சாகர் புயல்:

 • இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில், “சாகர்” (CYCLONE SAGAR) புயலின் பாதிப்பு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது
 • “சாகர்” புயலுக்கு இந்தியாவின் சார்பில் பெயர் வைக்கப்பட்டுள்ளது

சரக்கு பெட்டக எக்ஸ்ப்ரெஸ் ரயில்

 • வடகிழக்கு எல்லை பகுதிகளில் இருந்து, இந்தியாவில் மேற்கு கடற்கரை

:பகுதிகள் வரை சரக்கு பெட்டக எக்ஸ்ப்ரெஸ் ரயில் (PCET – PARCEL CARGO EXPRESS TRAIN) இயக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது

 • இந்த ரயில், தற்போது அஸ்ஸாமின் குவஹாத்தி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் நகர் வரை நீடிக்கப்பட்டுள்ளது

1௦௦௦௦௦ பேரில் 211 பேருக்கு இந்தியாவில் காசநோய் பாதிப்பு – உலக சுகாதார அமைப்பு அறிக்கை:

 • உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒரு லட்சம் (1௦௦௦௦௦) பேரில் 211 பேர் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 • 2௦25ம் ஆண்டிற்குள், இந்தியாவில் இருந்து காசநோயை விரட்ட, இந்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“ஸ்டார் கேள் மகாகும்ப்”:

 • ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற விளாயாட்டு இயக்க விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பங்கேற்று, “ஸ்டார் கேள் மகாகும்ப்” (THE SPORTS INITIATIVE ‘STAR KHEL MAHAKUMBH’) என்ற விளையாட்டு இயக்கத்தை துவக்கி வைத்தனர்

இளம் வயதில் இமயமலை ஏறிய பெண்மணி:

 • நேபாளா நாட்டின் பக்கம் இருந்து, மிக இளம் வயதில் இமயமலை ஏறிய இந்தியப் பெண்மணி (INDIA’S YOUNGEST WOMEN TO SCALE MT EVEREST FROM NEPAL SIDE) என்ற பெருமையை 16 வயது சிவங்கி பதக் பெற்றுள்ளார்
 • இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்

இந்தியாவின் 2-வது மிகப்பெரிய விமான நிலையம்:

 • இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம், கோவா மாநிலத்தின் மொபா பகுதியில் விரைவில் அமைய உள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

உத்திரப் பிரதேச அரசின் “கரும்புச் சாலைகள்”:

 • நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான, உத்திரப் பிரதேசத்தில் உள்ள கரும்பு ஆலைத் துறை, அம்மாநிலத்தில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சாலை அமைக்க உள்ளது. இந்த சாலைகளுக்கு “கரும்பு சாலைகள்” (MAKE USE OF PLASTIC WASTE FOR CONSTRUCTION OF ‘SUGARCANE ROADS’ FOR CUTTING COSTS AND PROMOTING GREEN TECHNOLOGY) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சாலைகள், நெடுஞ்சாலைகளில் இருந்து கரும்பு அரைக்கும் ஆலை வரை உள்ள சாலிகளாக மாற்றப்படும்.

மிரிநாளினி சாராபாய் அவர்களின் 1௦௦-வது பிறந்த தினம்:

 • இந்திய நடனத் துறையில் பிரபலமாக இருந்து, மிரிநாளினி சாராபாய், அவர்களின் 1௦௦-வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் (GOOGLE DOODLE ON 11TH MAY CELEBRATED THE 100TH BIRTH ANNIVERSARY OF MRINALINI SARABHAI), கூகுல் நிறுவனம் தனது கூகுல் டாடில் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு கவுரவப்படுத்தியது
 • இவர் இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை (FATHER OF INDIAN SPACE PROGRAM) எனப்படும் விக்ரம் சாராபாய் அவர்களின் மனைவி ஆவார். இவர் இஸ்ரோவை நிறுவியர் ஆவார்

இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலைப் பாலம்:

 • இந்தியாவின் மிக நீளமான சாலை மற்றும் ரயில் பாலமான, “போகிபீல் பாலம்”, இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 • இப்பாலம் பிரமபுத்திரா நதியின் மேல் அமைக்கப்பட்டு, அஸ்ஸாமின் திப்ருகார் பகுதியை, அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட் பகுதியை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது (INDIA’S LONGEST ROAD AND RAILWAY BRIDGE CONNECTING DIBRUGARH IN ASSAM TO PASIGHAT IN ARUNACHAL PRADESH)
 • இப்பாலம் செயல்பாட்டிற்கு வந்தால், ஆசியாவின் 2-வது நீளமான சாலை மற்றும் ரயில் பாலமாக இருக்கும். இதில் மேல் பகுதியில் சாலை பயன்பாட்டிற்கும் (COUNTRY’S LONGEST RAIL-CUM-ROAD BRIDGE AND SECOND LONGEST IN ASIA, WITH THREE LANE ROADS ON TOP AND DOUBLE LINE RAIL BELOW), கீழ் பகுதியில் ரயில் போக்குவரத்தும் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

கிஷன்கங்கா நீர்மின்சார திட்டம்:

 • 3௦௦ மெகாவாட் மின்சார உற்பத்திக்கான கிசன்கங்கா நீர்மின்சார உற்பத்தி ஆலைக்கான துவக்க விழாவை பிரதமர் ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் பந்திபூரா மாவட்டத்தில் துவக்கி வைத்தார் (300 MW KISHANGANGA HYDROELECTRIC PROJECT IN BANDIPORA DISTRICT OF JAMMU & KASHMIR)
 • மேலும் 1௦௦௦ மெகாவாட் உற்பத்தி கொண்ட பகல் துள் மின்சார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்

ஆசியாவின் மிகநீளமான சுரங்க சாலைப் பாதை:

 • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் லே பகுதியில் 6809 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, ஆசியாவிலேயே மிகநீலமான சுரங்க சாலைப் பாதையான, “ஜோஜிலா சுரங்க சாலையை” (RS 6,809 CRORE ZOJILA TUNNEL PROJECT), பிரதமர் துவக்கி வைத்து நாட்டிற்கு அர்பணித்தார்.
 • இது இருவழி போக்குவரத்திற்கும், எல்லா காலநிலைகளையும் தாங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
 • 150 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை, 11578 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆசியிவிலேயே மிக நீளமான இருவழி சுரங்க சாலைப் (INDIA’S AND ASIA’S LONGEST AND STRATEGIC BI-DIRECTIONAL ROAD TUNNEL) பாதையாகும்

241 பஸ்டரியா பட்டாலியன் படை:

 • சத்தீஸ்கர் மாநிலத்தின் நக்சல் பாதிப்பு மிகுந்த பஸ்டர் பகுதியில், நக்சல் ஆதிக்கத்தை ஒழிக்க, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, “241 பஸ்டரியா பட்டாலியன்” என்ற புதிய படையை உருவாக்கி உள்ளது (CENTRAL RESERVE POLICE FORCE (CRPF) HAS COMMISSIONED SPECIAL UNIT CALLED BASTARIYA BATTALION (NUMBERED 241) TO COMBAT NAXALS ACTIVITIES IN BASTAR REGION)
 • இதில் 739 பேர் உள்ளனர். இதில் 33% பெண்கள் அடிப்படையில் 198 பெண்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் உள்ளூர் வாசிகள் ஆவர்.

நிபா வைரஸ் நோய்:

 • கேரள மாநிலத்தை தற்போது தாக்கியுள்ள நிபா வைரஸ் நோய் (NIPAH VIRUS (NIV)), அங்கு முதல் முறையாக கோழிக்கோடு மாவட்டத்தில் தான் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
 • இந்நோய் அங்கு பாதிக்கப்பட்ட இருவரின் இரத்த மாதிரிகளை, புனேவில் உள்ள தேசிய வைரஸ் நோய் ஆராய்ச்சி மையம் ஆராய்ந்து உறுதி செய்துள்ளது
 • இந்நோய் மனிதன் மற்றும் விலங்கு இரண்டையும் தாக்க வல்லது.
 • இந்த வைரஸ் நோய் முதன் முதலில் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோயை பரப்புவது வவ்வால் ஆகும். இந்நோய்க்கு மருந்து இல்லை

கருப்பு சிறுத்தை:

 • சட்டிஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதிப்பு மிகுந்த பகுதிகளில், “கருப்பு சிறுத்தை” (CHHATTISGARH WILL GET SPECIALISED ANTI-NAXAL COMBAT FORCE CALLED BLACK PANTHER) என்ற பெயரில் நக்சல் எதிர்ப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது
 • இவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து, விரைவில் நக்சல் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்வர்.

உலகை சுற்றிய பயணம் – நவிகா சாகர் பரிக்ரமா:

 • இந்திய கப்பல் படையை சேர்ந்த 6 பெண் வீராங்கனைகள் மேற்கொண்ட உலகம் சுற்றும் பயணம், வெற்றிகரமாக கோவா மாநிலத்தின் பனாஜி நகரில் முடிவடைந்தது (NAVIKA SAGAR PARIKRAMA: INDIAN NAVY’S ALL-WOMEN CREW COMPLETES CIRCUMNAVIGATING GLOBE EXPEDITION)
 • 2௦17ம் ஆண்டு செப்டெம்பர் 1௦ம் தேதி துவங்கிய இப்பயணம், 254 நாள் இடைவிடா பயணத்தின் முடிவில் வெற்றிகரமாக மீண்டும் இந்தியா வந்தடைந்தது
 • ஐ.என்.எஸ்.வி தாரிணி என்ற கப்பலில் பயணம் மேற்கொண்ட இவர்கள், 216௦௦ நாட்டிக்கல் மைல் தொலைவு பயணம் செய்துள்ளனர்
 • இது இந்தியாவின் மற்றும் ஆசியாவின் முதல் பெண்கள் உலகம் சுற்றும் பயணம் ஆகும்

ராஜஸ்தான் அரசின் “நிதான்” மென்பொருள்:

 • ராஜஸ்தான் மானில் அரசு, அம்மாநில அரசு மருத்துவமனைகளில், நோய் கண்காணிப்பு மற்றும் தொலைத்-மருத்துவ முறையை மேம்படுத்த ஏதுவாக, “நிதான்” என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது (RAJASTHAN GOVERNMENT HAS LAUNCHED NEW SOFTWARE CALLED NIDAAN FOR DISEASE MONITORING AND STRENGTHENING TELE-MEDICINE SERVICES IN THE GOVERNMENT HOSPITAl)
 • இந்த மென்பொருள் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டு தேவையான மருத்துவ மற்றும் சிகிச்சை முறைகள் வழங்கப்படும்

சப்யதா த்வார்;

 • பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள சாம்ராட் அசோகா மாநாட்டு திடலில், 32 மீட்டர் உயரமுள்ள புதிய “மவுரிய பேரரசு கால வடிவில் நுழைவாயில்” கட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது. இதற்கு சப்யதா த்வார் (SABHYATA DWAR AT ASHOK CONVENTION CENTRE AT PATNA, BIHAR) எனப் பெயரிடப்பட்டுள்ளது
 • இது மும்பை கேட்வே போன்றது ஆகும்

அஸ்ஸாம் அரசின் முதியோர் ஓய்வூதியம்:

 • அஸ்ஸாம் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள 16 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது
 • இதன்படி ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.25௦ ரூபாய் ஆன்லைன் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்

எல்லை தாண்டும் ஒப்பந்தம்:

 • இந்தியா மற்றும் மியான்மர் நாடுகள் இடையே, இரு நாட்டு மக்களும் நிலம் வழியாக எல்லை கடந்து வந்து செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
 • விசா மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை கொண்டு இந்த எல்லை தாண்டுதலை மேற்கொள்ளலாம்

உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் “ஜடாயு”, கேரளாவில் விரைவில் திறப்பு:

 • கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் நகரில், உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம், “ஜடாயு” புவி மையம் விரைவில் திறக்கப்படவுள்ளது (KERALA WILL SOON INAUGURATE THE WORLD’S LARGEST BIRD SCULPTURE, JATAYU EARTH’S CENTRE IN THIRUVANANTHAPURAM)
 • ஜடாயு என்பது இராமாயணத்தில் வரும் பறவை கதாப்பாத்திரம் ஆகும்
 • 65 அடி உயர இந்த சிற்பம், கடல் மட்டத்தில் இருந்து 1௦௦௦ உயர மலைப்பகுதியில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது
 • இராமாயண இதிகாசப்படி, இலங்கை வேந்தன் இராவணனால், ஜடாயுவின் இறக்கை துண்டிக்கப்பட்ட இடம் இதுவென கூறப்படுகிறது

ரயில்வேயில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:

 • இந்திய ரயில்வே துறையில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் இருந்து ஜிரிபம் நகர் செல்லும் வழிப்பாதையில் உள்ள 10.28 கிலோமீட்டர் நீல சுரங்கப் பாதையில் செயல்படுத்தப்பட்டுள்ளது

நிதி ஆயோக்கின் “பெண் தொழில் முனைவோர் தளம்”:

 • மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, “பெண் தொழில் முனைவோர்களுக்கான தளத்தை” (NITI AAYOG’S ‘WOMEN ENTREPRENEURSHIP PLATFORM (WEP)) அறிமுகம் செய்துள்ளது. இதனை முன்னிலைப்படுத்தி பிரபலப்படுத்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார்
 • பெண் தொழில் முனைவோர் தளம், மூன்று தூண்களை உள்ளடக்கியது, அவை
  • இச்சா சக்தி = ஊக்கப்படுத்தி, அவர்களை தொழில் துவங்க வைக்குதல்
  • கியான் சக்தி = தகுந்த அறிவு மற்றும் சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களை வேகப்படுத்துதல்
  • கர்மா சக்தி = அவர்களின் தொழில்களில் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை உயர்த்துதல்

பட்ரத்து சூப்பர் அனல்மின் நிலையம்:

 • ஜார்கண்டு மாநிலத்தில், நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பட்ரத்து சூப்பர் அனல்மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி பிரதமர் துவக்கி வைத்தார் (PRIME MINISTER NARENDRA MODI LAID FOUNDATION STONE FOR FIRST PHASE (2400MW) OF NTPC’S COAL BASED PATRATU SUPER THERMAL POWER PROJECT IN JHARKHAND)
 • 4000 மெகாவாட் உறபத்தி செய்யும் அளவில் காட்டப்படும் இந்த நிலையம், முதல் கட்ட பணிகள் வரும் 2௦22ம் ஆண்டு நிறைவு பெறும். முதல் கட்டமாக 2400 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில் கட்டப்படும்

தூய காற்று இந்தியா இயக்கம்:

 • இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து, புது தில்லியில் “தூய காற்று இந்தியா இயக்கத்தை” துவக்கின
 • நெதர்லாந்து நாட்டினை சேர்ந்த நிறுவனங்கள், இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து, இந்திய நகரங்களில் பெருகி வரும் காற்று மாசுவை குறைத்து தூய காற்றினை அதிகப்படுத்துதலே இதன் முக்கிய இலக்காகும்

9-வது ராஸ்ட்ரிய சன்ஸ்கிருதி மகோற்சவம்:

 • மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் சார்பில், “9-வது ராஸ்ட்ரிய சன்ஸ்கிருதி மகோற்சவ” விழா உத்திரகாண்டு மாநிலத்தின் தெக்ரி என்னுமிடத்தில் நடைபெற்றது (9TH EDITION OF ‘RASHTRIYA SANSKRITI MAHOTSAV’ UNDER THE MINISTRY OF CULTURE, HAS STARTED IN TEHRI, UTTARAKHAND)
 • நாட்டின் கலாசார பெருமைகளை கூறும் வகையில் பாரம்பரிய நடனங்கள், நிகழ்சிகள் போன்றவை நடத்தப்பட்டன

பான்டணி கோட்டை:

 • ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தில் பாரம்பரியமிக்க ஆங்கிலேயார் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, “பான்டணி கோட்டையை” (BANTONY CASTLE), 25 கோடி ரூபாயில் புனரமைத்து சுற்றுலாத் தளமாக மாற்ற முடிவு செய்துள்ளது

இந்தியா ஸ்பென்ட் நிறுவனத்தின் அறிக்கை:

 • இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக ஆளவு இறைச்சி உண்ணும் மாநிலமாக கேரளாவும், குறைந்த அளவு இறைச்சி உண்ணும் மாநிலமாக பஞ்சாப் மாநிலமும் உள்ளன.

15-வது நிதிக் குழு கேரளா செல்கிறது:

 • 15-வது நிதிக் குழு தனது முதல் தென்னிந்திய பயண மாநிலமாக கேரளா செல்கிறது
 • என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக் குழு, கேரள மாநிலத்தின் பொருளாதார மேம்பாடுகள் மற்றும் நிதித் தேவைகள் தொடர்பாக ஆராய கேரளா செல்கிறது

மணிப்பூர் மாநிலத்தின் முதல் சூரிய கழிப்பறை:

 • மணிப்பூர் மாநிலம், அம்மாநிலத்தின் முதல் சூரிய ஆற்றல் செயல்படும் முதல் கழிப்பறையை திறந்து வைத்துள்ளது. சூரிய ஆற்றல் கழிப்பறையை கொண்டுள்ள முதல் வடகிழக்கு மாநிலம் மணிப்பூர் ஆகும்
 • சூரிய ஆடல் கழிப்பறை கொண்டுள்ள இந்தியாவின் 3-வது மாநிலம் மணிப்பூர் ஆகும்

இமயமலையை ஏறிய இந்தியாவின் முதிய பெண்மணி:

 • 53 வயதில் இமயமலையை ஏறிய இந்தியாவின் முதிய பெண்மணி (SANGEETA BAHL, A 53-YEAR-OLD FORMER MODEL, HAS BECOME THE OLDEST INDIAN WOMAN TO CONQUER MOUNT EVEREST) என்ற சிறப்பை, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த “சங்கீதா பால்” பெற்றுள்ளார்

சீனாவில், இந்தியாவின் 2-வது தகவல் தொழில்நுட்ப மையம்:

 • இந்திய தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் அமைப்பான “நாஸ்காம்”, சீனாவில் இந்தியாவின் 2-வது தொழில்நுட்ப மையத்தை குய்யாங் மாகாணத்தில் அமைத்துள்ளது (INDIA LAUNCHED ITS SECOND IT CORRIDOR IN CHINA)
 • முன்னதாக கடந்த 2௦17ம் ஆண்டு, இந்தியாவின் முதல் தகவல் தொழில்நுட்ப மையம், துறைமுக நகரான டலியன் நகரில் துவக்கியது குறிப்பிடத்தக்கது

“கஜ யாத்திரை:

 • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மேகாலயா மாநிலத்தின் காரோ மலைப்பகுதியில் உள்ள துரா என்னுமிடத்தில் யானைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, “கஜ யாத்திரை” (GAJ YATHRA, AN AWARENESS CAMPAIGN TO PROTECT ELEPHANTS IN GARO HILLS OF MEGHALAYA) என்னும் நிகழ்ச்சியை நடத்தியது
 • இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கான (INDIA’S NATIONAL HERITAGE ANIMAL) யானையை, பாதுகாப்பது தொடர்பாக 12 மாநிலங்களில் இந்த யாத்திரை நடத்தப்படவுள்ளது

பதஞ்சலி நிறுவனத்தின் “சுதேசி சம்ரிதி” மொபைல் சிம் கார்டுகள்:

 • நுகர்வோர் பொருட்கள் துறையில் வேகமாக வளர்ந்து வரும் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து “சுதேசி சம்ரிதி” (SWADESHI SAMRIDHI SIM CARDS) மொபைல் சிம் கார்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது
 • இந்த சிம் கார்டை வாங்குபவர்களுக்கு மருத்துவ காப்பீடும், ஆயுள் காப்பீடும் வழங்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது

நான்காவது சர்வதேச யோகா தினம், டேராடூனில் நடைபெறும்:

 • நான்காவது சர்வதேச யோகா தினம், வருகின்ற ஜூன் 21ம் தேதி, உத்திரகாண்டு மாநிலத்தின் டேராடூன் நகரில், அணைத்து முதன்மை நிகழ்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது (MAIN EVENT OF 4TH INTERNATIONAL YOGA DAY CELEBRATIONS (IDY-2018) WILL BE HELD ON JUNE 21, 2018 AT DEHRADUN IN UTTRAKHAND)
 • 2௦17ம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்றது.

“ப்ராப்தி” இணையதளம் மற்றும் மொபைல் ஆப்:

 • மத்திய மின்சாரத் துறை அமைச்சர், “ப்ராப்தி” என்ற பெயரில் இணையதள சேவையையும், புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்றையும் அறிமுகம் செய்து வைத்தார்
 • இதன் இணையதளம் = PRAAPTI.IN
 • PRAAPTI = PAYMENT RATIFICATION AND ANALYSIS IN POWER PROCUREMENT FOR BRINGING TRANSPERANCY IN INVOICING OF GENERATORS
 • இதன் நோக்கம், மின்சார உற்பத்தியாளர்களுக்கு செலுத்தப்படும் தொகையில் வெளிப்படைத்தன்மை உள்ளதாக மாற்றுதல்

ஆந்திர மாநிலத்தின் புதிய சின்னங்கள்:

 • புதிதாக உருவான ஆந்திர மாநில அரசு, அம்மாநிலத்தின் சின்னங்களை அறிவித்துள்ளது.
 • இதன்படி, அம்மாநிலத்தின் மாநில பூவாக, “மல்லிகை” (JASMINE) அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசின் மரமாக, “வேப்ப மரம்” (NEEM TREE) அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில விலங்காக, “இரலை மான்” (BLACK BUCK) அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

Leave a Comment

Your email address will not be published.