TNPSC Current Affairs in Tamil May 2018-2

இந்தியா

தேசத் தந்தை காந்தியின் 15௦-வது பிறந்த தினம்:

 • வருகின்ற 2௦19ம் ஆண்டில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 15௦-வது பிறந்த தினத்தை கொண்டானட அமைக்கப்பட்டுள்ள, “தேசிய குழுவின்” (NATIONAL COMMITTEE FOR COMMEMORATION OF 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI IN 2019) முதல் கூட்டத்தை குடியரசுத் தலைவர் முன்னின்று நடத்துகிறார்
 • 2௦19 அக்டோபர் 2 முதல் 2௦2௦ அக்டோபர் 2 வரை, தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் நிகழ்சிகளை நடத்த தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது.
 • இதற்காக 114 கொண்ட “தேசிய குழு”, பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது
 • அவரின் 15௦-வது பிறந்த தினத்தை ஒரு வருடம் சிறப்பாக கொண்டாட, மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் 15௦ கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார்

தொழிலாளர் ஓய்வூதிய பாஸ்-புக், மொபைலில் பார்க்கலாம்:

 • ஓய்வூதிய பலன்களை வழங்கும், “தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம்” (EPFO – EMPLOYEE PROVIDENT FUND ORGANISATION), ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய பாஸ்-புக்கின் பக்கங்களில் மொபைல் போன் மூலமாக் பார்க்க ஏதுவாக, “உமாங் அப்ளிகேஷன்” (UMANG APP) மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 • UMANG – UNIFIED MOBILE APPLICATION FOR NEW AGE GOVERNANCE
 • ஓய்வூதியர்கள் தங்களின் மொபைல் போனில் இந்த அப்ளிகேசன் மூலம் பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லிய வேளாண்மை:

 • நிதி ஆயோக் அமைப்பு, “ஐ.பி.எம்” நிறுவனத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துல்லிய வேளாண்மை முறையினை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது
 • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், பருவநிலை மாற்ற விவரங்கள் போன்றவற்றை முன்னறிந்து தைகள் தனது வேளாண்மையை பாதுகாத்து, மகசூலை பெருக்குதலே இதன் நோக்கமாகும்.

எல்லைகள் சாலை அமைப்பு:

 • எல்லை சாலைகள் அமைப்பின் (BORDER ROADS ORGANISATION, 58TH RAISING DAY) 58-வது உதய தினம், மே 7-ம் தேதி கொண்டாடப்பட்டது. மத்திய அரசு அமைப்பான இது, நாடுமுழுவதும் உள்ள எல்லைப் பகுதிகளில் சாலைகளை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு உடைய அமைப்பாகும்
 • இந்த அமைப்பு 196௦ம் ஆண்டு மே 7-ம் தேதி உருவாக்கப்பட்டது

அருண் – 3 நீர்மின்சார உற்பத்தி நிலையம் : நேபாள் ஒப்புதல்:

 • நேபாளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள அருண் நதியில் அமைக்கப்பட்டுள்ள அணையில் இருந்து 9௦௦ மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் “அருண் – 3 “ ஆலையை அமைக்க, நேபாள அரசு, இந்திய அரசின் துணை நிறுவனமான, சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நேபாளத்திற்கு சுமார் 35௦ பில்லியன் ரோபாய் வருமானம் கிடைக்கும். உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் 21% மின்சார இலவசமாக நேபாளத்திற்கு வழங்கப்படும்.

தூய புதுபிக்கத்தக்க ஆற்றல் 7௦ ஜிகாவாட்டை எட்டியது:

 • மத்திய அரசின் அறிக்கையின் படி, இந்தியாவின் தூய புதுபிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி தற்போது 7௦ ஜிகாவாட் என்ற அளவை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 38 ஜிகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது
 • இதன் மூலம், மத்திய அரசின் இலக்கான, 2௦22ம் ஆண்டிற்குள் தூய புதுபிக்கத்தக்க ஆற்றலின் உற்பத்தி 175 ஜிகாவாட் என்ற எல்லையை விரைவில் இந்தியா அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார கார்கள் – பச்சை எண் பலகை (நம்பர் ப்ளேட்):

 • மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம், இந்தியாவில் மின்சார கார்களை எளிதில் அடையாளம் காணவும், மின்சார கார்களை ஊக்குவிக்கவும், அதற்கு, “பச்சை நிற எண் பலகையை” (நம்பர் பிளேட்) வசதியை அறிமுகம் செய்துள்ளது
 • பச்சை நிறப் பலகையில் வெள்ளை நிற எழுத்துக்கள், தனியாள் உரிமையுடைய கார்களுக்கும், பச்சை நிறப் பலகையில் மஞ்சள் நிற எழுத்துக்கள், வணிக ரீதியிலான கார்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூளைக் காச்சல் நோயினை தடுக்க அமெரிக்க பல்கலைக்கழகம் உதவி:

 • உத்திரப் பிரதேச மாநிலத்தின் அதிகரித்துவரும், “ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய்” (JAPANESE ENCHEPALITIS) மற்றும் “நீடித்த மூளைக் காய்ச்சல் நோய்” (AES – ACUTE ENCHEPALITIS SYNDROME) போன்றவற்றை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்முன்வந்துள்ளது
 • ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய், கொசுவினால் பரப்படும் ஒருவித வைரஸ் நோயாகும். இது முதன் முதலில் 1871ம் ஆண்டு ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் இரண்டாவது பழமையான் பாறை – ஓடிசாவில் கண்டுபிடிப்பு:

 • விஞ்ஞானிகள், ஓடிஸா மாநிலத்தின் கேண்டுஜர் மாவட்டத்தில், உலகின் இரண்டாவது பழமையான பாறை (WORLD’S SECOND OLDEST ROCK) ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இது சுமார் 4240 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • உலகின் முதல் பழமையான பாறை, மேற்கு ஆஸ்த்ரேலியாவின் ஜேக் மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இது சுமார் 4400 மில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும்.

நேபாளின் ஜானாக்பூர் – இந்தியாவின் அயோத்தி நகர் இடையே நேரடி பஸ் போக்குவரத்து சேவை:

 • நேபாள் நாட்டின் ஜானக்பூரில் (NEPAL’S JANAKPUR) இருந்து, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி (UP’S AYODHI) நகர் இடையே நேரடி பஸ் போக்குவரத்து வசதியை, இந்தியப் பிரதமர் மற்றும் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்
 • “ஸ்வதேஷ் தர்ஷன்” (SWADESH DHARSN) திட்டத்தின் ஒரு பகுதியான இராமாயண சுற்றுலாவின் (RAMAYAN CIRCUIT) அங்கமாக இந்த இரு இந்து புனித தளங்கள் இடையே பேருந்து போக்குவரத்து துவக்கி வைக்கப்பட்டது
 • ராமரின் மனைவியான சீதா தேவியின் பிறந்த இடம் ஜானக்பூர் ஆகும், இங்கு ஜானகி கோவில், சீதா தேவிக்காக கட்டப்பட்டுள்ளது.
 • இங்கு விஜயம் செய்த 3-வது இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.

லெய்சங் – மின்சார வசதி பெற்ற இந்தியாவின் கடைசி கிராமம்:

 • பிரதமர் மோடி, அவர்கள் இந்திய வளர்ச்சியில் ஏப்ரல் 28ம் தேதி ஒரு முக்கிய தினம் என்றும், அத்தினத்தில், இந்தியாவில் அணைந்து கிராமமும் மின்சார வசதியை பெற்றுள்ளன எனவும் தெரிவித்தார்
 • தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ், மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள லெய்சங் கிராமம் (LEISANG, A LAST VILLAGE TO RECEIVE ELECTRICITY IN INDIA), மின்சார வசதியை பெறும் இந்தியாவின் கடைசி கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது

நாதுலா கணவாய் வழியே, இந்திய – சீன வணிகம் மீண்டும் துவங்கியது:

 • மே 1 ம் தேதி முதல், இந்தியா மற்றும் சீன எல்லையில் உள்ள நாதுலா கணவாய் (INDIA-CHINA BORDER TRADE RESUMES VIA NATHU LA PASS) வழியே மீண்டும் இரு நாடுகள் இடையே வணிக போக்குவரத்து துவங்கியது. இதற்கு இரு நாடுகள் இடையேயும் பரிசுகள் மாறி வழங்கப்பட்டன
 • 2௦17 டோக்லாம் பிரச்சனையின் காரணமாக வணிகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது

வடகிழக்கு கலாச்சார மற்றும் தகவல் மையம்;

 • வடகிழக்கு கலாச்சார மற்றும் தகவல் மையம் (NORTH EASTERN CULTURAL AND INFORMATION CENTRE), விரைவில் புது தில்லியில் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 • இம்மையம் வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம்,பண்பாடு போன்றவற்றை எடுத்துரைக்கும் மையமாக இருக்கும்.

எகிப்தில் கலாச்சார திருவிழா:

 • ரபிந்த்ரநாத் தாகூரின் 157-வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகயில், எகிப்தில் உள்ள இந்திய கலாசார மையத்தில் 5-நாள் கலாச்சார திருவிழா, இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்டது
 • இவ்விழாவில், தாகூரின் புகைப்படங்கள், RABINDRANATH TAGORE : RHYTHM IN COLOURS என்ற தலைப்பில் இடம் பெற்றன.
 • ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்றவர் இவராவார். இவர் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதியவர் ஆவர்

பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு பரவும் எயிட்ஸ் நோய் தடுப்பு – சிறந்த மாநிலம் மேற்குவங்கம்:

 • பெற்றோரிடம் இருந்து அதன் பிள்ளைகளுக்கு பரவும் எயிட்ஸ் நோயினை, குழந்தைக்கு வராமல் தடுப்பதில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக, மேற்குவங்கம் திகழ்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது (WEST BENGAL WAS ADJUDGED AS THE BEST STATE IN THE COUNTRY IN THE PREVENTION OF PARENT-TO-CHILD TRANSMISSION OF HIV)
 • எச்.ஐ.வி வைரஸ் பரவாமல், தடுக்க தகுந்த நடவடிக்கையை அம்மாநில அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவி சுருல்வளை உள்வைப்பு விழிப்புணர்வு நிகழச்சி:

 • மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில், செவி குறைபாடு உடையவர்களுக்கு அவர்களின் செவியின் சுருல்வளை பகுதியில் உள்வைப்பு இயந்திரம் பொருத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி (COCHLEAR IMPLANT AWARENESS PROGRAMME), ஹரியானா மாநிலத்தின் பாரிதாபாத் நகரில் நடைபெற்றது
 • இந்த சுருல்வளை இயந்திரம் (COCHLEAR IMPLANT) ஒரு மின்சாதனம் ஆகும். இதன் மூலம் துல்லியமாக அவர்கள் கேட்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 • மணிப்பூர் அரசின், “கிராமத்தை நோக்கி இயக்கம்:
  • மணிப்பூர் மாநில அரசு, “கிராமத்தை நோக்கி” (GO TO VILLAGA MISSION) என்ற புதிய இயக்கத்தை துவக்கி உள்ளது.
  • அம்மாநிலத்தின் 6௦ சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு கிராமத்தை தேர்வு செய்து, அதனை முன்னேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளுதல் இதன் நோக்கமாகும்

  இந்திய டீ உற்பத்தி:

  • இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு இந்திய டீ உற்பத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 1325 மில்லியன் டன் டீ தூள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • இது சென்ற ஆண்டை காட்டிலும் சுமார் 75 மில்லியன் டன் அதிகமாகும்.

  31 பெண்கள் கல்லூரிகள்:

  • ஹரியானா மாநில அரசு, அம்மாநிலத்தில் பெண்களின் கல்வி அறிவை பெருக்கும் வகயில், அம்மாநிலத்தில் புதிதாக 31 பெண்கள் கல்லூரிகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

  திறன் மேம்பாட்டு மையம் – ஹைதரபாத்:

  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP – UNITED NATIONS DEVELOPMENT PROGRAMME), சார்பாக தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த ஆதரவு மையமாக, “திறன் மேம்பாட்டு மையம்” (SKILL DEVELOPMENT CENTRE AT BHAROSA) ஒன்றினை, “பரோசா” மையத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

  பாலின பாகுபாடு – லேன்சென்ட் நிறுவன அறிக்கை:

  • லேன்சன்ட் உலக சுகாதார இதழ் (LANCENT GLOBAL HEALTH JOURNAL) அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆண் – பெண் பாலின பாகுபாட்டின் (GENDER DISCRIMINATION) காரணமாக, சுமார் 239௦௦௦ பெண் குழந்தைகள் இறக்கின்றனர் என தெரிவித்துள்ளது
  • இது பெரும்பாலும் கிராமப் பகுதிகளிலே நடைபெறுகிறது

  அறிவுசார் சொத்துரிமைக்காண புதிய உருவ சின்னம்:

  • மத்திய வணிகத்துறை அமைச்சர், சுரேஷ் பிரபு அறிவுசார் சொத்துரிமைக்காண, புதிய உருவச் சின்னம், “ஐ.பி. நாணி” (IP NANI = A INTELLECTUAL PROPERTY MASCOT) என்பதை அறிமுகம் செய்து வைத்தார்.
  • “நாணி” என்பது ஒரு தொழில்நுட்ப ஆர்வலரான மூதாட்டி (TECH SAVVY GRANDMOTHER). இவர் தனது பேரன் “சோட்டு என்னும் ஆதித்யா” என்பவனுடன் சேர்ந்து அறிவுசார் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக் இந்த உருவ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

  தூய்மை நகர கணக்கெடுப்பு – ஸ்வச் சர்வேக்ஷன் 2018஛

  • 2018-ம் ஆண்டிற்கான தூய்மை நகர கணக்கெடுப்பான, “ஸ்வச் சர்வேக்ஷன்” (SWACH SARVEKSHAN 2018) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
   • இந்தியாவின் தூய்மையான நகரமாக (INDIA’S CLEANEST CITY – NO. 1) மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டாக இந்நகரம் முதல் இடத்தில் உள்ளது
   • 2-வது தூய்மையான நகரம் (INDIA’S CLEANEST CITY – NO. 2) = மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரம்
   • 3-வது தூய்மையான நகரம் (INDIA’S CLEANEST CITY – NO. 3) = சண்டிகர் நகரம்
   • 1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் முதல் இடத்தை பிடித்த நகரம் (INDIA’S CLEANEST BIG CITY) = ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரம்
   • 1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவின் வேகமாக முன்னேறும் நகரம் (INDIA’S FASTEST MOVER BIG CITY) = உத்திரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரம். சென்ற ஆண்டு ஓடு மொத்த அளவில் 351-வது இடத்தில இருந்த இந்நகரம் இந்த ஆண்டு 36-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
   • 1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பொதுமக்களின் கருத்து படி சிறந்த நகரம் (INDIA’S BEST CITY IN CITIZEN’S FEEDBACK) = ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா
   • புதுமையான முறையில் திட்டங்களை செயல்படுத்தி தூய்மையை கடைபிடித்த நகரம் (INDIA’S BEST CITY IN INNOVATION AND BEST PRACTICES) = மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரம்
   • திடக்கழிவு மேலாண்மையின் சிறந்து விளங்கிய தூய்மை நகரம் (INDIA’S BEST CITY IN SOLID WASTE MANAGEMENT) = மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை நகரம்
   • தூய்மையான நடுத்தர நகரம் (INDIA’S CLEANEST MEDIUM CITY) = கர்நாடகா மாநிலத்தின் மைசூரு நகரம்
   • இந்தியாவின் வேகமாக முன்னேறும் நடுத்தர நகரம் (INDIA’S FASTEST MOVER MEDIUM CITY) = மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவண்டி
   • இந்தியாவின் தூய்மையான சிறிய நகரம் (INDIA’S CLEANEST SMALL CITY) = புது தில்லி முனிசிபல் கவுன்சில்
   • இந்தியாவின் வேகமாக முன்னேறும் சிறிய நகரம் (INDIA’S FASTEST MOVER SMALL CITY) = மகாராஷ்டிரா மாநிலத்தின் புசாவால்
   • தூய்மையான மாநில தலைநகரம் (CLEANEST STATE CAPITAL) = மகாராஷ்டிரா மாநிலத்தின் கிரேட்டர் மும்பை
   • வேகமாக முன்னேறும் தூய்மையான மாநில தலைநகரம் (FASTEST MOVER STATE CAPITAL) = ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர்
   • ஒட்டுமொத்த அளவில் சிறந்த மாநிலம், முதல் இடம் = ஜார்கண்ட்
   • ஒட்டுமொத்த அளவில் சிறந்த மாநிலம், 2-வது இடம் = மகாராஷ்டிரா

  2028ல் உலக திக மக்கள் தொகை கொண்ட நகரமாக டெல்லி மாறும்:

  • 2028ம் ஆண்டிற்குள், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக புது தில்லி உருவெடுக்கும் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது (DELHI IS PROJECTED TO BECOME THE MOST POPULOUS CITY IN THE WORLD AROUND 2028)
  • தற்போது உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ஜப்பானின் டோக்கியோ நகரை விரைவில், டெல்லி முந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  நாடு முழுவதும் கூடுதலாக 3௦ புதிய ரேடார்:

  • இந்திய வானிலை ஆய்வு துறை, இந்தியாவில் புதிதாக 3௦ ரேடார் மையங்களை அமைக்க உள்ளது. தற்போது நாட்டில் செயல்பாட்டில் உள்ள 27 ரேடார்களுடன், கூடுதலாக 3௦ ரேடார்கள் அமைய உள்ளது
  • இந்தியாவில் முதல் ரேடார் மையம், 2௦௦2ம் ஆண்டு சென்னை நகரில் அமைக்கப்பட்டது

  பருவநிலை மாற்றத்தால் 2௦3௦க்குள் 3 லட்சம் வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படும் – சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை:

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு, “உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக பார்வை அறிக்கை” (INTERNATIONAL LABOUR ORGANIZATION’S (ILO’S) WORLD EMPLOYMENT AND SOCIAL OUTLOOK REPORT) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 2௦3௦ம் ஆண்டிற்குள், பெருகி வரும் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் சுமார் 3௦௦௦௦௦ வேலைவாய்புகள் இழப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளது

  பகிரதி 2 மலை:

  • இந்திய ராணுவத்தை சேர்ந்த 9 பெண் அலுவலர்கள் ஒன்றிணைந்து, இமயமலைப் பகுதியில் உள்ள பகிரதி-2 (6512 மீட்டர் உயரம் அல்லது சுமார் 21௦௦௦ அடி உயரம்) என்ற மலையில் ஏறி, இந்திய ராணுவ கொடியை நட்டு சாதனை படைத்துள்ளனர்
  • இதன் மூலம் ராணுவத்தில் உள்ள பெண்களின் மனவலிமையை எடுத்துரைத்துள்ளனர். மேலும் இந்த 9 பெண் அலுவலர்கள், வருகின்ற சர்வதேச யோகா தினத்தன்று, இம்மலையில் யோகா பயிற்சி மேற்கொண்டு புதிய உலக சாதனை நிகழ்த்த உள்ளனர்

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

Leave a Comment

Your email address will not be published.