TNPSC Current Affairs in Tamil May 2018-4

சர்வதேசம்

கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மூடப்பட்டது:

  • பிரிட்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலில், பேஸ்புக் (முகநூல்) அமைப்பின் வாடிக்கையாளர்களின் தகவலை பெற்று, அவர்களை மணரீதியாக அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாக்களிக்க செயல்பட தூண்டியதாக புகார் எழுந்தது
  • இதனால் இந்நிறுவனத்தின் பெயர் மற்றும் தொழில் பாதிப்படைந்ததை அடுத்து, இந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு இல்லை;

  • இந்த ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு இல்லை என நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது
  • நோபல் பரிசு அகாடமி உறுபினர்களின் மீது எழுத பாலியல் புகார் பிரச்னையை அடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் வயதான சிலந்திப் பூச்சி கண்டுபிடிப்பு:

  • ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சியை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு வயது 43 ஆகும்
  • இது ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதை மருந்து மரிஜுவனா, மருத்துவ தேவைக்கு பயன்படுத்த ஜிம்பாப்வே ஒப்புதல்:

  • போதை மருந்து பொருளான மரிஜுவனா, மருத்துவ தேவைக்காக மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றிற்காக பயன்படுத்தும் சட்டத்தை கொண்டுவந்துள்ள, 2-வது ஆப்ரிக்க நாடு ஜிம்பாப்வே ஆகும்
  • இதனை கொண்டு வந்த முதல் ஆப்ரிக்க நாடு = லெசோதோ

விளாடிமிர் புதின் – நான்காவது முறையாக ரசிய அதிபராக தேர்வு:

  • ரசிய அதிபராக நான்காவது முறையாக விளாடிமிர் புதின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் அதிபராக நீடிப்பார்
  • 1999ம் ஆண்டு ரசிய பிரதமராக் பதவி ஏற்றார். அப்போது கூடுதலாக அதிபர் பதிவியையும் கவனித்து வந்தார். பின்னர் 2௦௦௦ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார்

9 ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் பொதுத் தேர்தல்:

  • 9 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக லெபனான் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் அண்டை நாடான சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு கலவரத்தால், லெபனானில் தேர்தல் நடத்தப்படவில்லை

போர்பஸ் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியல்:

  • பிரபல போர்ப்ஸ் இதழ், 2018ம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சென்ற ஆண்டு முதல் இடத்தில இருந்த ரசிய அதிபர் விளாடிமர் புதின், இந்த ஆண்டு 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சீன அதிபர் முதல் இடத்தை பிடித்துள்ளார்
    • முதல் இடம் = சீன அதிபர் சி சிங்பிங்
    • 2-வது இடம் = ரசிய அதிபர் விளாடிமர் புடின்
    • 3-வது இடம் = அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
    • 9-வது இடம் = இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
    • 32-வது இடம் = ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி
  • இப்பட்டியலில் 2 இந்தியர்கள் மட்டுமே உள்ளனர். நரேந்திர மோடி மற்றும் முகேஷ் அம்பானி ஆவர்

உலகின் வயதான பிரதமர்:

  • மலேசியாவின் 7-வது பிரதமராக பொறுப்பேற்கும் மகதிர் மொகமது, உலகின் அதிக வயதான பிரதமர் என்ற நிலையை எட்டியுள்ளார். அவருக்கு வயது 92
  • இவர் ஏற்கனவே 1981 முதல் 2003 வரை, சுமார் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர். சுமார் 15 ஆண்டுகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், தற்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் பிரதமராக தேர்வாகி உள்ளார்
  • இவரை, “மலேசியாவின் பொருளாதார புலி” என்பர்.

அமெரிக்க அதிபர் – வடகொரிய அதிபர் சந்திப்பு நிகழச்சி:

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வாகொரிய அதிபர் கிம் சாங் யுன், ஆகியோர் சந்திக்கும் நிகழ்ச்சி வரும் ஜூன் 12ம் தேதி, சிங்கப்பூரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • வார்த்தை மோதல்களால் தொடர்ந்து ஈடுபட்டு வந்து இருவர், தற்போது சந்திக்க உள்ளனர்

காற்று மாசுவை கண்காணிக்க செயற்கைக்கொள் அனுப்பிய சீனா;

  • சீனாவின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான காற்று மாசுவினை, கண்காணித்து கட்டுப்படுத்த ஏதுவாக, சீனா “கோபன்-5” என்ற செயற்கைக்கோளினை ஏவியுள்ளது.
  • இதன் மூலம் சீனாவில், காற்று மாசு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காலரா நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசி முகாம்:

  • ஏமன் நாட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, காலரா நோய் தடுப்பூசி முகாம், நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. 2௦16ம் ஆண்டு முதல் சுமார் 1 மில்லியன் காலரா நோயாளிகள் உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெருசலேம் நகரில் தூதரகத்தை திறந்த இரண்டாவது நாடு:

  • அமெரிக்காவிற்கு அடுத்து, ஜெருசலேம் நகரில் தூதரகத்தை திறந்துள்ள இரண்டாவது நாடாக கவுதமாலா நாடு விளங்குகிறது.
  • வன்முறை நிகழ்வுகள் நடைபெறும் என அறிந்தும், இஸ்ரேல் நாட்டுடன் கொண்ட நட்பின் காரணமாக இங்கு, அந்நாடு தூதரகத்தை திறந்துள்ளது.

ஜெருசலேம் நகருக்கு தூதரகத்தை மாற்றிய மூன்றாவது நாடு:

  • பராகுவே அதிபரின் உத்தரவின் படி, ஜெருசலேம் நகரில் அந்நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் இருந்து, ஜெருசலேம் நகருக்கு தூதரகம் மாற்றப்பட்டுள்ளது
  • முதல் 2 நாடுகள் தூதரகத்தை இடம் மாற்றியவை = அமெரிக்க, கவுதமாலா

உலக சுகாதார அமைப்பின், “மாற்றுதல்” (REPLACE) கையேடு:

  • உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, வரும் 2௦23ம் ஆண்டிற்குள், உலக உணவு நுகர்தலில் இருந்து, தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கொழுப்புச்சத்து மிக்க அமில (TRANS FATTY ACIDS) உணவுகளை அடியோடு நீக்க வேன்பும் என வலியுறுத்தி, “மாற்றுதல்” (REPLACE) என்ற கையேட்டை வெளியிட்டுள்ளது
  • RE = Review – கொழுப்பு அமில உணவுகளை மறுஆய்வு செய்ய வேண்டும்
  • P = Promote – தாவர கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொண்டு, தொழிற்சாலை உணவுகளை தவிர்க்க வேண்டும்
  • L = Legislate – தகுத்த சட்ட நடவடிக்கை மூலம் இந்த உணவுகளை குறைக்க வேண்டும்
  • A = Assess – உணவு நுகர்தலில் இவ்வகை உணவுகளை கண்காணிக்க வேண்டும்
  • C = Create – உடல் குறைபாடுகள் ஏற்படும் என்பதனை விழிப்புணர்வு மூலம் தெரியப்படுத்த வேண்டும்
  • E = Enforce – தகுந்த கொள்கைகள் மற்றும் வரைவு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

உலகில் பரபரப்பான விமான வழித்தடங்கள்:

  • உலகிலேயே அதிக பரபரப்பான விமான வழித்தடமாக (WORLD’S BUSIEST INTERNATIONAL AIR ROUTE), சிங்கப்பூரில் இருந்து மலேசிய தலைநகர் கோலா லம்பூர் விமா வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில ஹாங்காங்கில் இருந்து தைவான் தலைநகர் தைபெய் நகர விமான வழித்தடம் உள்ளது.

காமன்வெல்த் தலைமை கூட்டமைப்பின் “சி-டெல்டா”:

  • காமன்வெல்த் அமைப்பின் தலைமை கூட்டத்தின் (CHOGM – COMMONWEALTH HEAD OF GOVERNMENT MEETING) சார்பாக ஆன்லைன் மூலம் தலைமை பண்பு பயிற்சி அளிக்க, “சி-டெல்டா” (C-DELTA = COMMONWEALTH DIGITAL EDUCATION LEADERSHIP TRAINING IN ACTION) என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளனர்
  • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள இது உதவும்

அமெரிக்க அதிபர் – வடகொரிய அதிபர் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து:

  • வருகின்ற ஜூன் மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்து அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் (US PRESIDENT DONALD TRUMP ON MAY 24, 2018 CANCELLED THE HISTORIC SINGAPORE SUMMIT WITH NORTH KOREAN LEADER KIM JONG UN) இடையேயான பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது

“ரிம்பக்” கடல்சார் பயிற்சியில், சீனாவிற்கு அழைப்பு இல்லை:

  • பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் “ரிம்பக்” கடல்சார் பயிற்சியில், இந்த ஆண்டு சீனாவிற்கு அழைப்பு விடாமல் புறக்கணித்தது அமேரிக்கா (UNITED STATES HAD WITHDRAWN INVITATION TO CHINESE NAVY TO PARTICIPATE IN 2018 RIM OF THE PACIFIC (RIMPAC) MARITIME EXERCISE)
  • உலகின் மிகப்பெரிய கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சி, “ரிமப்க்” ஆகும். சீனா, தென்சீன கடல்பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு ராணுவ தளங்களை ஏற்படுத்தி வருவதால், அமெரிக்கா இம்முறை சீனாவை புறக்கணித்துள்ளது

ஆண், பெண் விளையாட்டு வீரர்களுக்கு சம ஊதியம்:

  • நியுசிலாந்து நாட்டின் கால்பந்து விளையாட்டு கழகம், அந்நாட்டின் ஆண் மற்றும் பெண் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சம ஊதியம், சம படிகள் வழங்க முடிவு செய்துள்ளது
  • ஆண் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அணைத்து சலுகைகளும் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும்.

ஏழு கண்டங்களில் உயரமான மலைகளை வேகமாக ஏறியவர்:

  • ஆஸ்திரேலியாவை சேர்ந்த “ஸ்டீவ் ப்ளைன்” (AUSTRALIAN STEVE PLAIN BECAME THE FASTEST CLIMBER TO SCALE THE HIGHEST PEAKS ON SEVEN CONTINENTS, TAKING 117 DAYS) என்பவர் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான மலைகளை 117 நாட்களில் ஏறு, உலகில் அதிவேக மலை ஏற்றம் செய்பவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்

இரசாயன ஆயுதங்கள் தடுப்பு கூடுகையில் 193-வது நாடு:

  • இரசாயன ஆயுதங்கள் தடுப்பு மாநாட்டில் (PALESTINE HAS BECOME THE 193RD NATION TO JOIN THE CHEMICAL WEAPONS CONVENTION), அவ்வமைப்பில் 193-வது நாடாக பாலஸ்தீனம் இணைந்துள்ளது.

சீன நாகரீகம் 5800 ஆண்டுகள் பழமையானது என அறிவிப்பு:

  • சீன அரு, அந்நாட்டின் பழைய நாகரீகங்கள் சுமார் 5800 ஆண்டுகள் பழமையானவை என தெரிவித்துள்ளது
  • மஞ்சள் நதி, யான்க்ட்சி நதி ஓரம் இந்த நாகரீங்கள் வாழ்ந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சூரியக் கூட்டமைப்பின் 64-வது உறுப்பு நாடு:

  • சர்வதேச சூரியக் கூட்டமைப்பில் 64-வது நாடாக நெதர்லாந்து இணைந்துள்ளது (THE NETHERLANDS HAS BECOME THE 64TH SIGNATORY MEMBER OF THE INTERNATIONAL SOLAR ALLIANCE). இது நெதர்லாந்து பிரதமரின் இந்திய வருகையில் நடைபெற்றது.

pH அளவிடும் முறையை கண்டுபிடித்த சாரன்சன்:

  • கூகுல் நிறுவனத்தின் முதன்மை பக்கமான கூகுல் டாடல் பக்கத்தில், pH அமிலத் தன்மை அறியும் முறையை கண்டுபிடித்த எஸ்.பி.எல் சாரன்சன் (S P L SORENSON, FOUNDER OF pH SCALE) அவர்களின் பிறந்த தினமான 29ம் தேதி, அவரின் சிறப்பை கவுரவப்படுத்தும் விதமாக அவரின் உருவப்படம் போடப்பட்டது

உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 3 நிறுவனங்கள்:

  • உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 3 நிறுவனங்கள் = 1-ஆப்பில், 2-அமேசான் மற்றும் 3-மைக்ரோசாப்ட்
  • 3-வது யாதில் இருந்த கூகுல் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் முந்தியுள்ளது

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.