TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

முதன் முதல்

இந்தியாவின் முதல் தனியார் தயாரிப்பு ராணுவ ரோந்துக் கப்பல் :

 • இந்தியாவின் பிரபல லார்சன் & டோப்ரோ நிறுவனம் தயாரித்துள்ள, “ஐ.சி.ஜி.எஸ் விக்ரம்” ரோந்துக் கப்பல் செயல்பாட்டிற்கு வந்தது. சென்னை நகரில் இது தனது முதல் பயணத்தை துவக்கியது (INDIA’S FIRST DEFENCE SHIP BY PRIVATE COMPANY ICGS VIKRAM UNDER MAKE IN INDIA)
 • இது “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராணுவ ரோந்துக் கப்பல் ஆகும்

இந்தியாவின் முதல் 7 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனம்:

 • டி.சி.எஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்துள்ளது (TCS, THE COUNTRY’S MOST VALUED AND LARGEST IT OUTSOURCING COMPANY CREATED HISTORY BY BECOMING THE FIRST INDIAN COMPANY TO REACH RS. 7 LAKH CRORE MARKET CAPITALISATION (M-CAP) MILESTONE)
 • மென்பொருள் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான இது, மும்பை பங்குச்சந்தை பங்கு வணிகத்தில் தனது உயர்ந்த மதிப்பை, மே 25ம் தேதி அடைந்தது

பார்படோஸ், கரீபியன் தீவுகளின் முதல் பெண் பிரதமர்:

 • கரீபியன் தீவு கூட்டங்களில் ஒரு நாடான பார்படோஸ் தீவில், முதல் பெண் பிரதமராக “மியா மோட்லே” (MIA MOTTLEY) தேர்வு செய்யப்பட்டுள்ளார் (FIRST FEMALE PRIME MINISTER OF THE CARIBBEAN ISLAND OF BARBADOS)
 • இத்தீவு நாடு 1966ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது

வட கொரியா சென்றுள்ள முதல் இந்திய அமைச்சர்:

 • மத்திய வெளியுறவுத் துறைகளின் துணை அமைச்சர், ஜெனரல் வி.கே.சிங், வட கொரியாவிற்கு, அரசு முறை பயணமாக சென்றுள்ளார் (VK SINGH. MINISTER OF STATE FOR EXTERNAL AFFAIRS GENERAL VK SINGH BECAME THE FIRST INDIAN MINISTER TO VISIT NORTH KOREA IN TWO DECADES)
 • பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அமைச்சர் வட கொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்.

“நேட்டோ” அமைப்பில் இணைந்துள்ள முதல் லத்தின் அமெரிக்க நாடு = கொலம்பியா:

 • வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான, “நேட்டோ”வில் முறைப்படி உறுப்பினராக கொலம்பியா நாடு சேர்ந்துள்ளது (COLUMBIA, THE FIRST LATIN AMERICA NATION TO JOIN NATO)
 • இவ்வமைப்பில் உறுப்பினராக சேரும் முதல் லத்தின் அமெரிக்க நாடும், கொலம்பியா ஆகும்

முதல் உலகளாவிய காற்று மாநாடு:

 • வருகின்ற செப்டம்பர் மாதம் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் “முதல் உலகளாவிய காற்று மாநாடு” நடைபெற உள்ளது (THE FIRST EDITION OF THE GLOBAL WIND SUMMIT WILL BE HELD IN HAMBURG, GERMANY)
 • உலகின் காற்று ஆற்றலை பயன்படுத்தி மின்சார உற்பத்தி மேற்கொள்ளும் தூய புதுபிக்கத்தக்க ஆற்றலை முன்னிலைப்படுத்தி, இம்மாநாட்டில் 1௦௦க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக் கொள்கின்றன

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை:

 • இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை அதிவிரைவு சாலையை, பிரதமர் உத்திரப் பிரதேசத்தின் பக்பத் நகரில் துவக்கி வைத்தார் (PRIME MINISTER NARENDRA MODI HAS DEDICATED TO THE NATION ITS FIRST SMART AND GREEN HIGHWAY, THE EASTERN PERIPHERAL EXPRESSWAY AT BAGHPAT IN UTTAR PRADESH)
 • 11௦௦௦ கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை, 135 கிலோம்மீட்டார் நீளமுடையது
 • மேலும் இந்த சாலையில், “மழைநீர் சேகரிப்பு” வசதி செய்யப்பட்டுள்ளது (IT IS INDIA’S FIRST HIGHWAY TO BE LIT BY SOLAR POWER BESIDES PROVISIONS OF RAINWATER HARVESTING). மழைநீர் சேகரிப்பு வசதி கொண்டுள்ள இந்தியாவின் முதல் சாலை இதுவாகும்.

இந்தியாவின் முதல் 14 வழி அதிவேக சாலை:

 • டெல்லி – மீரட் (THE DELHI-MEERUT EXPRESSWAY WOULD BE INDIA’S FIRST 14-LANE HIGHWAY) இடையேயான முதல் கட்ட அதிவேக விரைவு சாலையை பிரதமர் துவக்கி வைத்தார். இதுவே இந்தியாவின் முதல் 14 வழி சாலையாகும்.

உலகின் முதல் முழுவதும் சூரிய ஆற்றலில் செயல்படும் விமான நிலையம்:

 • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட இயக்கம், உலகின் முதல் முழுவதும் சூரிய ஆற்றலில் செயல்படும் விமான நிலையமாக, இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தை அறிவித்துள்ளது (THE UNITED NATIONS ENVIRONMENT PROGRAMME (UNEP) HAS RECOGNISED COCHIN INTERNATIONAL AIRPORT LTD (CIAL) IN KERALA AS THE WORLD’S FIRST FULLY SOLAR ENERGY-POWERED AIRPORT)
 • இந்த விமான நிலையே, இந்தியாவில் முதன் முறையாக அரசு – தனியார் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் விமான நிலையமாகும்

இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் முதன்மை நிதி அதிகாரி:

 • இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் முதன்மை நிதி அதிகாரியாக (FIRST CHIEF FINANCIAL OFFICER OF RBI)சுதா பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாவரவியலுக்கான “லின்னேயன் விருதை” பெறும் முதல் இந்தியர்:

 • தாவரவியல் துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு வழங்கப்படும் “லின்னேயன் விருது”, இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த தாவர ஆராய்ச்சியாளர் “டாக்டர் கமல்ஜித் எஸ். பவா” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது (INDIAN BOTANIST DR. KAMALJIT S. BAWA HAS BEEN CONFERRED WITH THE PRESTIGIOUS LINNEAN MEDAL IN BOTANY)
 • இவ்விருதை பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்

பெண்களுக்கான இந்தியாவின் முதல் அதிநவீன தடயவியல் ஆய்வகம் – சண்டிகரில்:

 • சண்டிகர் நகரில் உள்ள, மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வக வளாகத்தில், “சகி சுரக்ஸா மேம்படுத்தப்பட்ட அதிநவீன டி.என்.ஏ தடயவியல் ஆய்வகம்” (SAKHI SURAKSHA ADVANCED DNA FORENSIC LABORATORY) என்ற பெயரில் புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது
 • இது பெண்கள் தொடர்பான குற்றங்களை கண்டறிய உதவும் (IT IS INDIA’S FIRST ADVANCED FORENSIC LAB DEDICATED FOR CRIMES RELATED TO WOMEN) இந்தியாவின் முதல் பெண்களுக்கான பிரத்யோக தடயவியல் ஆய்வகம் ஆகும்

பராகுவே நாட்டின் முதல் பெண் இடைக்கால அதிபர்:

 • பராகுவே நாட்டின் துணை அதிபராக இருந்த “அலிசியா புசெட்டா”, அந்நாட்டு அதிபர் பதவி விலகியதை அடுத்து, இடைகால அதிபராக பதவி ஏற்றுள்ளார்.
 • இவர் அந்நாட்டின் முதல் பெண் இடைகால அதிபர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

Leave a Comment