TNPSC Current Affairs in Tamil May 2018-5

முதன் முதல்

இந்தியாவில் நீண்ட கால முதல்வர்:

  • சிக்கிம் மாநில முதல்வர் “பவன் சம்ளிங்”, இந்தியாவில் மிக அதிக காலம் முதல்வராக இருப்பவர் (INDIA’S LONGEST SERVING CHIEF MINISTER) என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
  • மேற்குவங்க முன்னாள் முதல்வர், ஜோதிபாசு அவர்கள், 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்ததே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது.
  • தற்போது சிக்கிம் முதல்வர், பவன் சம்ளிங் தொடர்ந்து 23 ஆண்டுகள் 4 மாதங்கள் 17 நாட்கள் முதல்வராக இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்

முதல் சிந்து நதி டால்பின் கணக்கெடுப்பு:

  • பஞ்சாப் மாநில அரசு, உலக வனவிலங்கு நிதியத்துடன் இணைந்து, சிந்து நதிப்பகுதிகளில் உள்ள சிந்து டால்பின்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
  • இது முதல் கூட்டினைவான கணக்கெடுப்பு (FIRST ORGANISED CENSUS ON INDUS DOLPHINS) ஆகும். சிந்து நதி டால்பின்களை பாதுகாக்க ஏதுவாக இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
  • சிந்து நதியின் கிளை நதிகளான பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகளில் இவை உள்ளன. இவை தூய நன்னீர் டால்பின்கள் ஆகும்.
  • இந்த டால்பின்கள், பாகிஸ்தானின் தேசிய பாலூட்டி விலங்காகும்

ஸ்மார்ட் நகரங்களின் முதன்மை நிர்வாகிகளின் முதல் கருத்தரங்கம்:

  • ஸ்மார்ட் நகரங்களை நிர்மாணிக்கும் முதன்மை நிர்வாகிகள் கலந்துக்கொள்ளும் முதல் தலைமைக் கருத்தரங்கம் (FIRST APEX CONFERENCE FOR CEOs OF SMART CITIES), மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் நடைபெற்றது
  • மத்திய நகர்புற மற்றும் வீடுகள் துறையின் சார்பில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
  • ஸ்மார்ட் நகர இயக்கம், ஜூன் 2௦15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் நகரங்களுகான இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மற்றும் கட்டளை மையம்:

  • போபால் ஸ்மார்ட் நகர மேம்பாட்டு கழகம், ஸ்மார்ட் நகரங்களுக்கான “இந்தியாவின் முதல் மேக தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது தகவல் மையம், பேரிடர் மீட்பு மையம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மற்றும் கட்டளை மையம்” (BHOPAL SMART CITY DEVELOPMENT CORPORATION LTD. (BSCDCL) HAS LAUNCHED INDIA’S FIRST CLOUD-BASED COMMON INTEGRATED DATA CENTRE, DISASTER RECOVERY CENTRE (ICCC)) அமைக்கவுள்ளது
  • இது முன்னணி மென்பொருள் நிறுவனமான, “எச்.பி”, நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

இந்திய விமானப் படையில் முதன் முறையாக இணையதள ஆன்லைன் தேர்வு:

  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படை, வீரர்கள் தேர்வுக்காக, முதன் முறையாக இணையதளம் வாயிலாக ஆன்லைன் தேர்வினை (STAR – SCHEDULED TEST FOR AIRMEN RECRUITMENT) வெற்றிகரமாக நடத்தியது
  • பாதுகாப்புத் துறையிலே முதன் முதலாக விமானப் பட, இதனை மேற்கொண்டுள்ளது. 1௦2 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது

விவசாயிகளுக்கு முதலீட்டு ஆதரவு திட்டம் – ரித்து பந்து:

  • நாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானா மாநில அரசு, அம்மாநில விவசாயிகளுக்கு முதலீட்டு ஆதரவு என்ற முறையில், “ரித்து பந்து” (விவசாயிகளின் நண்பன்) (RYTHU BANDHU – FRIEND OF FARMERS) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
  • இதன் படி வருடத்திற்கு ஒரு விவசாயிற்கு ரூ. 8000 நடவு மேற்கொள்ள இரு தவணைகளில் வழங்கப்படும். இது அரசு இலவசமாக வழங்குகிறது. இதனை திருப்பி தர வேண்டியது இல்லை.

வங்கதேசத்தின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் – பங்கபந்து-1 :

  • வங்கதேச நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள், “பங்கபந்து – 1” (BANGLADESH’S FIRST COMMUNICATION SATELLITE, BANGABANDHU – 1), அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஏவுமையத்தில் இருந்து, பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • இதன் மூலம், தொலைத்தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பு போன்றவற்றில் புதிய மேம்படுத்தப்பட்ட சேவையை, வங்கதேசம் பெறும்
  • வங்கதேசத்தின் தந்தை எனப்படும், “பங்கபந்து ஷேக் முஜிபிர் ரகுமான்” அவர்களின் நினைவாக, இந்த செயற்கைக்கோளிற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கையொப்பத்துடன் நில ஆவண ரசிது – மகாராஷ்டிரா:

  • விவசாயிகளுக்கு, டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய நில ஆவண ரசிது (DIGITALLY SIGNED LAND RECORD RECEIPTS) வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம், மகாராஷ்டிரா ஆகும்
  • இந்த ரசிது மூலம், விவசாயிகள் கடன் பெற இயலும்,

முதல் முனிசிபல் தேர்தல் – துனிசியா:

  • துனுசியா நாட்டில் முதல் முறையாக முனிசிபாலிட்டி தேர்தல் நடைபெற உள்ளது. இது அந்நாடு ஜனநாயகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் முதல் நடவடிக்கையாக கருதப்படுகிறது
  • உள்நாட்டு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது தான் தேர்தல் நடத்தப்படுகிறது

இந்த்யாவின் முதல் லித்தியம் அயணி சார்ஜர்:

  • புது தில்லியை சேர்ந்த ஆம்பியர் வாகன நிறுவனம், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் லித்தியம் அயனி பேட்டரி சார்ஜரை (INDIA’S FIRST LITHIUM ION CHARGER) அறிமுகம் செய்துள்ளது. இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிமுகம் செய்து வைத்தார்.
  • இந்தியாவிலேயே தயாரிப்போம் திட்டத்தின் ஒரு பகுதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது

உலக சுகாதார அமைப்பின், முதல் “அத்தியாவசிய நோய் கண்டறியும் பட்டியல்”:

  • உலக சுகாதார அமைப்பு, தனது முதல் “அத்தியாவசிய நோய் கண்டறியும் பட்டியலை” (WHO’S ESSENTIAL DIAGNOSTICS LIST)வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் தற்போது பொதுவாக உள்ள 55 நோய்களுக்கும் நோய் கண்டுபிடிப்பு முறைகளும், 58 முக்கிய நோய்களுக்கான மருத்துவ முறைகளும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன

இந்தியாவின் முதல் பெண்கள் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம்:

  • மகளிர் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் முதல் மகளிர் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் (ALL WOMEN POST OFFICE PASSPORT SEVA KENDRA (POPSK)), பஞ்சாப் மாநிலத்தின் பக்வாரா பகுதியில் துவக்கப்பட்டுள்ளது
  • இம்மையம் இந்தியாவின் 192 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் ஆகும்

சீனாவின் முதல் விமானத்தாங்கி உள்நாட்டு தொழில்நுட்ப போர்க் கப்பல்:

  • சீனா, அதன் தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலே முதல் முறையாக (CHINA’S FIRST HOMEBUILT AIRCRAFT CARRIER – TYPE 001A) தயாரித்துள்ளது. “௦௦1A” என்ற வகையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இவ்வகை கப்பல், அதன் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் முதல் பெண் இயக்குனர்:

  • புகழ்பெற்ற அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (FIRST FEMALE DIRECTOR OF CENTRAL INTELLIGENCE AGENCY (CIA)) முதல் பெண் இயக்குனராக, கினா ஹஸ்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • அமெரிக்க செனட் அவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது

மல்ட்னோமா மாகாண வாரியத்தின் முதல் தெற்காசிய உறுப்பினர்:

  • அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள மல்டினோமா மாகாணத்தின் ஆணையர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள (FIRST SOUTH ASIAN TO BE ELECTED AS A MEMBER OF THE BOARD OF COMMISSIONERS OF MULTNOMAH COUNTY IN OREGON) முதல் தெற்காசிய உறுப்பினர் என்ற பெருமையை, இந்திய வம்சாவழியை சேர்ந்த சுசீலா ஜெயபால் பெற்றுள்ளார்

இந்தியாவின் முதல் சூரிய ஆற்றலில் செயல்படும் ரயில்வே நிலையம்:

  • சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் ரயில்வே நிலையம் (INDIA’S FIRST SOLAR POWERED RAILWAY STATION), அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது
  • இதன் மூலம் வருடத்திற்கு 67 லட்ச ரூபாய் மின்சாரம் மிச்சமாகும்.

இந்தியாவின் முதல் மனநல மறுவாழ்வு மையம்;

  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில், இந்தியாவிலேய மூதல் முறையாக “தேசிய மனநல மறுவாழ்வு மையம்” (NATIONAL INSTITUTE OF MENTAL HEALTH REHABILITATION (NIMHR) AT BHOPAL, MADHYA PRADESH) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மனநல மறுவாழ்வு மையம் அமைக்கப்படுவது, இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

முதல் இந்திய – தென்னாப்ரிக்க வணிக மாநாடு:

  • முதல் இந்திய – தென்னாப்ரிக்க வணிக மாநாடு (ISABS 2018 – INDIA SOUTH AFRICA BUSINESS SUMMIT), தென்னாப்ரிகாவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
  • இம்மாநாட்டிற்கான தலைப்பு = UNITED BY LEGACY, UNIFIED FOR PROSPERITY
  • இந்திய, தென்னாப்ரிக்க 2௦ வருட கூட்டு நட்பு நடவடிக்கையை எடுத்துரைக்கும் வகயில், பாகிர் ஹசைன் என்பவர் எழுதிய “THE RED FORT DECLARATION – LEGACY 20 YEARS” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது

இந்திய கலால் துறை – அஞ்சல்துறையின் முதல் கூட்டு கருத்தரங்கம் :

  • இந்திய கலால் துறை மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து மேற்கொண்ட இந்தியாவின் முதல் கூட்டு கருத்தரங்கம் (FIRST-EVER JOINT CONFERENCE OF INDIAN CUSTOMS AND DEPARTMENT OF INDIA POSTS), புது தில்லியில் நடைபெற்றது
  • அஞ்சல்துறையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது

முதல் பிம்ஸ்டெக் கலால் கூட்டிணைவு வேலைக்குழு கூட்டம்:

  • முதல் முறையாக பிம்ஸ்டெக் அமைப்பின் கலால் கூட்டிணைவு வேலைக்குழு கூட்டம் (FIRST MEETING OF THE BIMSTEC WORKING GROUP ON CUSTOMS COOPERATION) புது தில்லியில் நடைபெற்றது
  • பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளின் வர்த்தக பிரிவு அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர்

அந்தமான் தீவுகளில் முதல் முறையாக போர் விமான தளம்:

  • இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதன் முறையாக, அந்தாமான் தீவுகளில் முதன் முறையாக இந்தியாவின் சார்பில் போர் விமானங்கள் தளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது (STATION FIGHTER AIRPLANES IN ANDAMAN & NICOBER ISLANDS TO STRENGTHEN INDIA’S HOLD)
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இது உதவும்

இந்தியாவின் முதல் அறிவுரை – ஒழுங்குமுறை ஆற்றல் மையம்:

  • கான்பூர் அகில இந்திய தொழில்நுட்ப கழகம், மின்சார மற்றும் ஆற்றல் துறைக்கான இந்தியாவின் முதல் அறிவுரை மற்றும் ஒழுங்குமுறை மையத்தை (INDIA’S FIRST CENTRE FOR ENERGY REGULATION (CER)) அமைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசுடன் இணைந்து இம்மையம் துவக்கப்பட்டுள்ளது
  • ஆற்றல் மற்றும் மின்சார துறை சார்ந்த அறிவுரைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பாக விவரங்களை அளிக்கும், இம்மையம்

உலகின் முதல் மிதக்கும் அணு உலை ஆலை;

  • ரசியா, உலகின் முதல் மிதக்கும் அணு உலை ஆலையை (RUSSIA UNVEILED WORLD’S FIRST FLOATING NUCLEAR POWER STATION) கட்டி செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதற்கு “அகடெமிக் லோமொநோசொவ்” (AKADEMIK LOMONOSOV) எனப் பெயரிடப்பட்டுள்ளது
  • இந்த மிதக்கும் ஆலை, 144 மீட்டர் நீளத்திலும், 3௦ மீட்டர் அகலத்திலும் 215௦௦ டன் எடையுடனும் கட்டப்பட்டுள்ளது.
  • இந்த மிதக்கும் ஆலையை, சுற்றுப்புற ஆர்வலர்கள், “அணு டைட்டானிக்” (NUCLEAR TITANIC) என்றும், “பணியில் செர்நோபில்” (CHERNOBYL ON ICE) என்றும் அழைக்கின்றனர்

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் வணிக விமான சேவை:

  • “உதான்” திட்டத்தின் பயனாக, அருணாச்சலப் பிரதேசத்தில் முதன் முறையாக வணிக ரீதியிலான விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது (THE FIRST COMMERCIAL FLIGHT (42-SEATER ATR AIRCRAFT OF THE ALLIANCE AIRLINES) OF ARUNACHAL PRADESH UNDER UDAN SCHEME LANDED AT PASIGHAT AIRPORt)
  • ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, “அல்லையன்ஸ் ஏர்” நிறுவனம் இங்கு முதன் முறையாக விமான சேவையை துவக்கி உள்ளது
  • அருணாச்சலப் பிரதேசத்தின் “பசிகாட்” விமான நிலையத்தில் இருந்து, கொல்கத்தா வழியாக குவஹாத்தி நகர் வரை இந்த அசெவை தற்போது துவக்கப்பட்டுள்ளது

OUMUAMUA  குறுங்கோள்:

  • வேறொரு கோள் குடும்பத்தில் இருந்து, சூரியக் குடும்பத்திற்கு வந்துள்ள புதிய குறுங்கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த குறுங்கோளிற்கு OUMUAMUA (OR (514107) 2015 BZ509) எனப் பெயரிட்டுள்ளனர். இந்த குறுங்கோள் வியாழன் கோளின் சுற்றுவட்டப் பாதையில் உள்ளது (NESTLING IN JUPITER’S ORBIT THAT HAD MIGRATED FROM ANOTHER STAR SYSTEM)
  • சூரியக் குடும்பத்திற்குள் வந்துள்ள முதல் வெளிக் குறுங்கோள் இதுவாகும் (IT MAKES IT FIRST KNOWN PERMANENT IMMIGRANT TO OUR SOLAR SYSTEM)
  • சுழற்சி = சூரியக் குடும்பத்தில் அணைத்து கோள்களும் சூரியனை மையமாக கொண்டு சுத்தும் நிலையில், இந்த குறுங்கோள் எதிர் திசையில் சுற்றுகிறது

நியுயார்க் பங்கு வர்த்தக மையத்தின் முதல் பெண் தலைமை அதிகாரி:

  • அமெரிக்காவின் புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையத்தின் முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பை, ஸ்டேசி கண்ணிங்காம் பெற்றுள்ளார் (THE NEW YORK STOCK EXCHANGE (NYSE) HAS NAMED STACEY CUNNINGHAM ITS FIRST FEMALE PRESIDENT IN THE HISTORY OF THE 226-YEAR-OLD EXCHANGE)
  • 226 ஆண்டுகால அமெரிக்க பங்குச்சந்தை வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும்

இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்:

  • மத்திய அரசு, அவசரச் சட்டத்தின் மூலம், மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில், இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது (THE UNION CABINET HAS APPROVED AN ORDINANCE TO SET UP THE COUNTRY’S FIRST NATIONAL SPORTS UNIVERSITY IN IN IMPHAL (WEST), MANIPUR)
  • இந்த மசோதா இன்னும் லோக்சபாவில் நிலுவையில் உள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் முதல் வட்டார தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு கூட்டம்:

  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சார்பில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் முதல் முறையாக, “வட்டார தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு” (RATS = REGIONAL ANTI TERRORISM STRUCTURE) கூட்டம் நடைபெற்றது (PAKISTAN HOSTED ITS FIRST EVER SHANGHAI COOPERATION ORGANISATION-REGIONAL ANTI-TERRORIST STRUCTURE (SCO-RATS) LEGAL EXPERTS MEETING IN ISLAMABAD)
  • ஷாங்காய் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும் இக்கூட்டம், முதல் முறையாக பாகிஸ்தானின் நடைபெற்றது

கண்ணிமை அரிப்பு நோயினை விரட்டிய முதல் தெற்காசிய நாடு – நேபாளம்:

  • உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, தெற்காசிய நாடுகளிலேயே கண்ணிமை அரிப்பு நோயினை விரட்டிய முதல் நாடு என்ற சிறப்பை நேபாளம் பெற்றுள்ளது (NEPAL FIRST COUNTRY IN WHO’S SOUTH-EAST ASIA REGION TO DEFEAT TRACHOMA, WORLD’S LEADING INFECTIOUS CAUSE OF BLINDNESS)
  • CHLAMYDIA TRACHOMATIS என்ற பாக்டீரியாவால் ஏற்படும் இந்த கண் நோய், பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும்.

முதல் கூட்டு ஆராய்ச்சி

  • இந்தியா, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து முதன் முறையாக கூட்டாக “ஏயிட்ஸ் / எச்..வி” (GOVERNMENTS OF INDIA, NETHERLANDS AND SWEDEN LAUNCHED FIRST-OF-ITS-KIND COLLABORATIVE RESEARCH PROGRAMME ON HIV/AIDS) நோய்க்கு எதிரான ஆராய்ச்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன

சிறுபான்மையின இந்திய சீக்கியர் மலேசியாவில் அமைச்சரானார்;

  • மலேசியா நாட்டின் சிறுபான்மையினராக உள்ள சீக்கிய இனத்தில் இருந்து முதல் முறையாக இந்திய வம்சாவழியை சேர்ந்த சீக்கியரான, “கோபிந்த் சிங் தியோ”, அமைச்சர் பதவியை அடைந்துள்ளார் (GOBIND SINGH DEO, AN INDIAN-ORIGIN SIKH POLITICIAN IN MALAYSIA, HAS BECOME A CABINET MINISTER IN THE NATION)
  • மலேசிய வரலாற்றில் சிறுபான்மை இனத்தவர் அமைச்சராவது இதுவே முதன் முறையாகும்

நேபாளத்தின் 3 உயரமான மலைகளை ஏறிய முதல் பெண்மணி:

  • நேபாளத்தை சேர்ந்த 28 வயது பெண்மணியான, நிமா ஜங்மு ஷெர்பா, என்பவர் நேபாளத்தின் மூன்று உயரமான மலைகளை ஏறிய உலகின் முதல் பெண்மணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் (NIMA JANGMU SHERPA, A 28 YEAR OLD NEPALI WOMAN, HAS CREATED A WORLD RECORD BY SCALING THREE HIGHEST MOUNTAINS IN A SINGLE CLIMBING SEASON)
  • 25 நாட்களுக்குள் 8000 மீட்டர்களுக்கு அதிகமான மூன்று உயரமான மலைகளை ஒரே சுற்றில் ஏறி இந்த சாதனையை படைத்துள்ளார்.
  • இவர் மூன்றாவதாக, உலகின் மூன்றாவது பெரிய மலையான கஞ்சன்ஜன்காவை ஏறினார்

இமயமலையை ஏறிய இந்தியாவின் முதல் தந்தை – மகள் இணை:

  • உலகின் மிக உயரமான மலையான இமயமலையை ஏறிய முதல் இந்திய தந்தை மற்றும் மகள் என்ற சிறப்பை, அஜீத் பஜாஜ் மற்றும் அவரின் மகள் தீயா இருவரும் (AJEET BAJAJ AND HIS DAUGHTER DEEYA ALSO SCALED MT EVEREST LAST WEEK TO BECOME INDIA’S FIRST FATHER-DAUGHTER DUO TO CLIMB HIGHEST PEAK OF THE WORLD) இணைந்து பெற்றுள்ளனர்

லண்டன் நகரின் முதல் பெண் பிஷப்:

  • “சாரா எலிசபெத் முலாலி” என்ற முன்னாள் செவிலியர், இங்கிலாந்தின் லண்டன் நகரின் பிஷப் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார் (FIRST FEMALE BISHOP OF LONDON)
  • லண்டன் நகரின் பிஷப் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் பெண்மணி இவராவார்

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.