TNPSC Current Affairs in Tamil May 2018-6

பொருளாதாரம்

பிலிப்கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியது வால்மார்ட் நிறுவனம்:

  • இந்திய ஆன்லைன் பொருள் விற்பனை சந்தையில் முதல் இடத்தில உள்ள பிலிப்கார்ட் நிறுவனத்தை, அமெரிக்காவை சேர்ந்த பிரபல வால்மார்ட் நிறுவனம், 16 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதன் 77% பங்குகளை வாங்கி, அந்நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது
  • இதன் மூலம் இந்திய ஆன்லைன் நுகர்வோர் சந்தையின் வால்மார்ட் நுழைகிறது

சர்வதேச நிதி அமைப்பின் கணிப்பு:

  • சர்வதேச நிதி அமைப்பு, வருகின்ற 2018ம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆகவும், 2௦19ம் ஆண்டு 7.9% ஆகவும் உயரும் என தெரிவித்துள்ளது

வங்கி

உரையாடும் ரோபோ உதவியாளர் (INTERACTIVE ROBOT ASSISTANT):

  • எச்.டி.எப்.சி வங்கி, கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள தனது கோரமங்கலா கிளையில் வாடிக்கையாளர்களுடன் உரையாடும் ரோபோ உதவியாளர் (INTERACTIVE ROBOT ASSISTANT 2.0) சேவையை துவக்கி உள்ளது
  • இந்த ரோபோ வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப உரையாடி, அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும்

ராணுவம்

அமைதி இயக்கம் (PEACE MISSION):

  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (SCO – SHANGHAI COOPERATION ORGANISATION) சார்பில் நடத்தப்பட்ட கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம், ரசியாவில் “அமைதி இயக்கம்” (PEACE MISSION) என்ற பெயரில் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது
  • இதில் முதல் முறையாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பயிற்சியில் கலந்துக் கொள்கின்றன
  • இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்
  • ரசியாவின் உரால் மலைப் பகுதியில், இந்த தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி நடத்தப் படவுள்ளது
  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் சீனாவின் பீஜிங் நகரில் உள்ளது
  • இக்கூட்டமைப்பில் முழு நேர உறுப்பினர்களாக உள்ள நாடுகள் = 8 (சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரசியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்)
  • இக்கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் = உறுப்பு நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பை நல்குதல்

ஹரிமவ் சக்தி 2018 (HARIMAU SHAKTI 2018):

  • இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் ராணுவங்கள் இணைந்து முதல் முறையாக மேற்கொள்ளும் போர் பயிற்சி நிகழ்ச்சியான, “ஹரிமவ் சக்தி 2018” (HARIMAU SHAKTI 2018), மலேசியாவின் ஹுலு லங்காட் பகுதியில் உள்ள காடுகளில் நடைபெற உள்ளது
  • இரு நாடுகளின் ராணுவ உறவை மேம்படுத்தும் நோக்கில் இப்போர் பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது

விஜய் பிரகார் பயிற்சி (EXERCISE VIJAY PRAHAR)

  • இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்டோ படைபிரிவு சார்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் “விஜய் பிரகார்” (EXERCISE VIJAY PRAHAR, A SOUTH WESTERN COMMANDO EXERCISE) என்ற பெயரில் போர் பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது
  • இந்திய விமானப் படை வீரர்களுடன் இணைந்து, கமாண்டோ படை வீரர்கள் இப்பயிற்சியை மேற்கொண்டனர்
  • தென்மேற்கு கமாண்டோ படை பிரிவு 2௦௦5 ஏப்ரல் மாதம் துவக்கப்பட்டு, முழுமையாக ராணுவத்தில் செயல்பாட்டிற்கு 2௦௦5ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வந்தது
  • இதன் தலைமையகம் = ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் உள்ளது

“வருணா – கடல் பயிற்சி”:

  • இந்தியா மற்றும் பிரெஞ்ச் கடற்படைகள் இணைத்து மேற்கொள்ளும் இறுதி மற்றும் 3-வது “வருணா” (VARUNA – A NAVAL EXERCISE) கடல் போர் பயிற்சி நிகழ்ச்சி, இந்தியப் பெருங்கடலின் ரீயூனியன் தீவு அருகே நடைபெற்றது
  • இதன் முதல் பயிற்சி அரபிக் கடல் பகுதியில் கோவா அருகேவும், இரண்டாவது பயிற்சி வங்கக் கடல் பகுதியான சென்னை நகருக்கு அருகேவும் நடைபெற்று முடிந்துள்ளது
  • பிரெஞ்ச் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த ரீயூனியன் தீவு.

உலகின் 5-வது அதிக ராணுவ செலவின நாடு – இந்தியா:

  • சிப்ரி எனப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI – STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் ராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் விவரம் இடம்பெற்றுள்ளது
  • இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள நாடு = அமெரிக்கா, சீனா, சவூதி அரேபியா
  • இப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது (INDIA, 5TH LARGEST MILITARY SPENDER). சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 5.5% நிது இந்தியாவில் ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய பட்ஜெட்டில், ராணுவத்திற்காக 2.95 லட்சம் கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது
  • சிப்ரி நிறுவனத்தின் தலைமையகம், ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ளது

இன்சனியத் நடவடிக்கை:

  • மியான்மர் நாட்டின் இருந்துவ் வெளியேற்றப்பட்டு வங்கதேசத்தில் அடிக்கலாம் புகுந்துள்ள ரோகிங்கயா முஸ்லிம்களுக்கு, இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும், “இன்சனியாத் நடவடிக்கை” (OPERATION INSANIYAT), இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டது
  • கடந்த 2௦17 செப்டம்பர் மாதம் முதல் முறையாக “இன்சனியாத் நடவடிக்கை” மூலம், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
  • இந்தியப் போர்கப்பல், “ஐ.என்.எஸ் ஐரவத்” மூலம் சுமார் 373 டன் உணவு நிவாரணப் பொருட்கள், வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகம் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டது.

ஹன்சா – 3:

  • இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்டு, வடிவமைக்கபட்ட ஹன்சா – 3 (HANSA – 3) என்ற பயிற்சி விமானம், தனது முதல் சோதனை ஓட்டத்தை, மே 11 தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு மேற்கொண்டது
  • இச்சோதனை ஓட்டம், பெங்களூருவில் நடைபெற்றது

இராணுவதில் “செயற்கை நுண்ணறிவு”:

  • அமெரிக்கா, சீனா மற்றும் ரசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து, நான்காவது நாடாக இந்தியா ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI – ARTIFICIAL INTELLIGENCE) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
  • இதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப தேவைகள் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கை அளிக்க, “என். சந்திரசேகரன்” அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

காந்திவ் விஜய்:

  • இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்டோ படையான, “X CORPS எனப்படும் CHETAK CORPS” படை பிரிவு சார்பில், 2 மாதங்கள் நடைபெறும், “காந்திவ் விஜய்” (GANDHIV VIJAY) என்னும் போர் பயிற்சி நிகழ்ச்சி துவங்கியது
  • இப்படை பிரிவின் தலைமையகம், பதின்டாவில் உள்ளது

பிரம்மோஸ் ஏவுகணை:

  • ஓடிஸா மாநிலத்தின் சந்திப்பூர் பகுதியில் உள்ள பாலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
  • மேலும் பிரம்மோஸ் ஏவுகணையின் ஆயுட்காலத்தை 1௦ வருடங்களில் இருந்து 15 வருடங்களாக வெற்றிகரமாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது

சூர்யா கிரண்:

  • இந்தியா மற்றும் நேபாள நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் போர் பயிற்சி நிகழ்ச்சி, “சூர்யா கிரண் 13” (THE JOINT MILITARY EXERCISE “SURYA KIRAN-XIII” BETWEEN INDIA AND NEPAL WILL BE CONDUCTED AT PITHORAGARH, UTTARAKHAND), உத்திரகாண்டு மாநிலத்தின் பித்ரோகார் பகுதியில் நடைபெற் உள்ளது

ப்ரஸ்தான் பயிற்சி:

  • இந்திய கடற்படையின் சார்பில், மும்பை நகரில் மேற்கு கடற்கரை பகுதியில், “ப்ரஸ்தான் பயிற்சி” மேற்கொள்ளப்பட்டது (INDIAN NAVY CONDUCTED AN EXERCISE CALLED PRASTHAN IN THE WESTERN OFFSHORE DEVELOPMENT AREA IN MUMBAI)
  • இப்பயிற்சி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் நடைபெறுகிறது. கடல் பகுதியில் மீட்டல், எண்ணெய் கசிவு தடுத்தல் போன்றவை இதில் இடம்பெறும்

ரஸ்டம்-2:

  • இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான் எ”டி.ஆர்.டி.ஓ” நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கும் “ரஸ்டம்-2” (RUSTOM-2) ஆளில்லா தானியங்கி கண்காணிப்பு விமானம் 2௦2௦ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

22-வது மலபார் போர் பயிற்சி:

  • 22-வது மலபார் போர் பயிற்சி நிகழ்ச்சி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ள குவாம் தீவுகளின் அருகே நடைபெற்றது. இதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படை வீரர்கள் கலந்துக்கொண்டனர்

ரிம்பக் 2018:

  • உலகின் மிகப்பெரிய கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சியான, “ரிம்பக் 2018” (RIM OF THE PACIFIC = RIMPAC 2018), ஹவாய் தீவுகள் மற்றும் தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டிற்கான கரு = CAPABLE, ADAPTIVE, PARTNERS
  • இந்தியா உட்பட 26 நாடுகளின் கடற்படை வீரர்கள் இதில் கலந்துக்கொண்டனர். சீனாவிற்கு இதில் கலந்துக் கொள்ள அழைப்பு அனுப்பப்படவில்லை

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.