TNPSC Current Affairs in Tamil May 2018-7

விருதுகள்

2௦17 சரஸ்வதி சம்மான் விருது:

 • 2௦17ம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது (SARASWATHI SAMMAN AWARD), குஜராத்தை சேர்ந்த இலக்கியவாதி, சித்தன்சு யசஸ்சந்திரா (SITANSHU YASHASCHANDRU) அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • அவரின், “வக்கர்” (VAKHAR) கவிதை நூலிற்காக, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது

EXCELLENT WOMEN OF EXCELLENCE AWARD:

 • புது தில்லியில் நடைபெற்ற “பெண்கள் பொருளாதார கூட்டமைப்பு” (WOMEN ECONOMIC FORUM), கூட்ட நிகழ்ச்சியில், ஆன்மீக ரீதியாக பல்வேறு சேவைகளை மேற்கொண்ட “நிசா பல்லா”, அவர்களுக்கு “EXCELLENT WOMEN OF EXCLLENCE” என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கலிங்கா கழகத்தின் மனிதநேய விருது:

 • சமூக் அறிவியலுக்கான கலிங்கா மையம் (KISS – KALINGA INSTITUTE OF SOCIAL SCIENCES) சார்பில் வழங்கப்பட்ட, “11-வது மனிதநேய விருது” (KISS HUMANATARIAN AWARD), நோபல் பரிசு பெற்ற வங்கதேசத்தை சேர்ந்த பேராசிரியர் மொகமது யூனஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது
 • இவர் வங்கதேசத்தில், “கிராமிய வங்கி” சேவையை முதலில் தொடங்கியவர் ஆவார்.

நிக்கெய் ஆசியா விருது:

 • ஜப்பானில் நடைபெற்ற விழாவில், ஆசியாவின் வளர்ச்சிக்காக உறுதுணையாக உள்ள, சுலாப் இண்டர்நேசனல் நிறுவன தலைவர் பிந்தேஸ்வர் பதக், அவர்களுக்கு நிக்கெய் ஆசியா விருது (NIKKEI ASIA PRIZE) வழங்கி கவுரவிக்கப்பட்டது

ஸ்ரீ ஜெயதேவ் ராஸ்ட்ரிய யுவ பிரதிபா புரஸ்கார் 2018:

 • கதக்களி நடனத்திற்காக பெரிய பங்களிப்பை அளித்த, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவழி கதக்களி நடன ஆசிரியை, அணிந்திதா அனாம், அவர்களுக்கு 2018ம் ஆண்டின் ஸ்ரீ ஜெயதேவ் ராஸ்ட்ரிய யுவ பிரதிபா புரஸ்கார் (SHRI JAYADEV RASTRIYA YUVA PRATIBHA PURASKAR 2018) விருது வழங்கப்பட்டது.

2௦17 டி.ஆர்.டி.ஓ வாழ்நாள் சாதனையாளர் விருது:

 • இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பான டி.ஆர்.டி.ஓ சார்பில் “2௦17ம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது” (2017 DRDO LIFETIME ACHIEVEMENT AWARD), முன்னாள் இயக்குனரான வி.கே.சரஸ்வத் அவர்களுக்கு வழங்கப்பட்டது

2௦16 டி.ஆர்.டி.ஓ வாழ்நாள் சாதனையாளர் விருது:

 • 2௦16ம் ஆண்டிற்கான ஐ.ஆர்.டி.ஓ வாழ்நாள் சாதனையாளர் விருது (2016 DRDO LIFETIME ACHIEVEMENT AWARD), வாசுதேவ் கல்குந்தே அவர்களுக்கு வழங்கப்பட்டது

2018ம் ஆண்டின் டபள்யு.பி.சி ஆசிய குத்துச்சண்டை வீரர் விருது:

 • 2018ம் ஆண்டின் டபள்யு.பி.சி ஆசிய குத்துச்சண்டை வீரர் விருது (WBC ASIA BOXER OF THE YEAR AWARD 2018), இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத் அவர்களுக்கு வழங்கப்பட்டது

2018ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்:

 • கால்பந்து எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும், “2018ம் ஆண்டின் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் விருது” (FOOTBALL WRITERS’ ASSOCIATION (FWA) FOOTBALLER OF THE YEAR FOR 2017/18), எகிப்தை சேர்ந்த லிவர்பூல் அணிக்காக விளையாடும் மொகமது சலாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்டது

ஸ்வர மவுலி விருது:

 • சங்கராச்சாரிய வித்யநரசிம்மா பாரதி சுவாமி அவர்களால், “ஸ்வர மவுலி” (SWARA MAULI AWARD) விருது, புகழ்பெற்ற இந்திய பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது

2018 சிவப்பு மை விருது:

 • பத்திரிக்கை துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, “வாழ்நாள் சாதனைக்கான சிவப்பு மை விருது 2018” (2018 REDINK AWARD FOR LIFETIME ACHIEVEMENT IN JOURNALISM), இங்கிலாந்து நாட்டின் சர் வில்லியம் மார்க் டுள்ளி அவர்களுக்கு வழங்கப்பட்டது

ஓ.என்.வி இலக்கிய விருது:

 • மலையாள இலக்கிய உலகிற்கு பல்வேறு சிறப்புகளை உருவாக்கிய, ஞானபீட விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களுக்கு, இந்த ஆண்டிற்கான ஓ.என்.வி இலக்கிய விருது (ONV LITERARY PRIZE) வழங்கப்பட்டது

தேசிய தொழில்நுட்ப விருது 2018:

 • இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான, “பாரத் பயோடெக்” (BHARATH BIOTECH) நிறுவனம், ரோட்டா வைரசால் பரவக்கூடிய சீதபேதி நோய்க்கு, “ரோட்டாவாக்” (ROTOVAC VACCINE) என்ற மருத்தை கண்டுபிடித்தற்காக 2018ம் ஆண்டிற்கான தேசிய தொழில்நுட்ப விருதை (NATIONAL TECHNOLOGY AWARD 2018) வென்றது

26-வது பி.சி.சந்திர புரஸ்கார் விருது:

 • 26-வது பி.சி.சந்திர புரஸ்கார் விருது (26TH P C CHANDRA PURASKAAR 2018), இந்தியாவின் பிரபல பாடகியான் ஆசா போஸ்லே அவர்களுக்கு வழங்கப்பட்டது

வி.கே.கிருஷ்ண மேனன் விருது:

 • பிஜி நாட்டின் முன்னாள் பிரதமரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவருமான “மகேந்திர சவுத்திரி”, அவர்களுக்கு வி.கே.கிருஷ்ண மேனன் விருது (V K KRISHNA MENON AWARD) வழங்கப்பட்டது

டி.கே.ராமநாதன் விருது:

 • 2017-18ம் ஆண்டிற்கான டி.கே.ராமநாதன் விருது (T.K.RAMANATHAN AWARD) டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் “நாகமணி மகாதேவன் விருது” (NAGAMANI MAGATHEVAN AWARD), பண்டாரு குண்டன ஸ்ரீ என்பவருக்கும், “முத்துக்கிருஷ்ணன் நினைவு விருது” (MUTHUKRISHNAN MEMORIAL AWARD), சந்தீப் அவர்களுக்கும் வழங்கப்பட்டது

ஐரோப்பிய தங்கக் காலணி விருது:

 • அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்ஸி, அவர்களுக்கு 2018ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தங்கக் காலணி விருது (2018 EUROPEAN GOLDEN SHOE) வழங்கப்பட்டது.
 • இவ்விருதை 5-வது முறையாக வெல்லும் முதல் கால்பந்து வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். நான்கு முறை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்

2018 மேன் புக்கர் சர்வதேச பரிசு:

 • 2018ம் ஆண்டிற்கான சிறந்த கற்பனை படைப்பிற்கான மேன் புக்கர் சர்வதேச விருது (2018 MAN BOOKER INTERNATIONAL PRIZE FOR FICTION), போலந்து நாட்டினை சேர்ந்த ஒல்கா டோகர்ஜக் (OLGA TOKARCZUK) என்பவருக்கு வழங்கப்பட்டது
 • அவரின் “FLIGHTS” என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. போலந்து நாட்டினை சேர்ந்த ஒருவர் இவ்விருதை பெறுவது இது முதல் முறையாகும்.
 • போலந்து நாட்டின் உயரிய இலக்கிய விருதான, “நைக் இலக்கிய விருதை” இருமுறை வென்றவர் இவர்.
 • போலந்து மொழியில் இவர் எழுதிய நாவலை, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. அம்மொழி பெயர்ப்பு செய்யபப்ட்ட நாவலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தின் மொழி பெயர்த்தவர் = ஜெனிபர் கிராப்ட்

இந்திய உயிரிய பன்முகத்தன்மை விருது:

 • 2018ம் ஆண்டிற்கான உயிரிய பன்முகத்தன்மை விருது, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த அரசுசாரா நிறுவனமான “சிங்க்சங் புகுன் சமூதாய மையத்திற்கு” வழங்கப்பட்டது (ARUNACHAL PRADESH-BASED NGO SINGCHUNG BUGUN COMMUNITY RESERVE (SBVCR) WON THE INDIA BIODIVERSITY AWARD 2018 IN THE “CONSERVATION OF WILDLIFE SPECIES”)
 • “புகுன் லியோசிச்லா” (BUGUN LIOCICHLA) என்னும் பறவை இனத்தை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அவ்வினத்தை அதிகரிக்க செய்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது
 • இந்த பறவை இனம் 2௦௦6ம் ஆண்டு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

நாரி சக்தி புரஸ்கார் விருது 2017:

 • 2௦17ம் ஆண்டிற்கான “நாரி சக்தி புரஸ்கார் விருது”, இந்திய கப்பற்படையை சேர்ந்த 6 பேர் கொண்ட தனி படகின் மூலம் உலகை சுற்றி வந்த குழுவிற்கு வழங்கப்பட்டது (NARI SHAKTI PURASKAR 2017 TO THE MEMBERS OF THE INSV TARINI TEAM)
 • “ஐ.என்.எஸ்.வி தாரிணி” என்ற கப்பலில் தனியாக பெண்கள் மட்டுமே கொண்ட குழுவானது 254 நாட்கள் பயணத்தின் மூலம் உலகை சுற்றி வெற்றிகரமாக, கோவாவின் பனாஜி நகரில் பயணத்தை முடித்தது
 • இந்த 6 பேர் கொண்ட குழுவிற்கு தலைமை ஏற்று வெற்றிகரமாக முடித்தவர் = வர்திகா ஜோசி
 • இந்திய காப்பர் படையின், “நவிகா சாகர் பரிக்ரமா” என்ற திட்டத்திற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது

சியட் சர்வதேச கிரிக்கெட் வீரர்:

 • இந்த ஆண்டின் சிறந்தாஹ் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சியட் விருது (VIRAT KOHLI HAS EMERGED AS THE INTERNATIONAL CRICKETER OF THE YEAR AT THE CEAT CRICKET RATINGS AWARDS), இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவரின் சார்பாக இவ்விருதை ரோகித் சர்மா பெற்றுக்கொண்டார்

2018 உலக பத்திரிக்கை கேலிச்சித்திர விருது:

 • 13-வது உலக பத்திரிக்கை கேலிச்சித்திர விருது 2018 (2018 WORLD PRESS CARTOON AWARDS), போர்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடைபெற்றது. 9 வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது
 • இதில் இந்தியாவின் கேரளாவை சேர்ந்த தாமஸ் ஆண்டனி (KERALA CARTOONIST THOMAS ANTONY) என்பவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது

ஒப்பந்தம்

இந்தியா – பனாமா இடையே ஒப்பந்தம்:

 • வேளாண்மை தொடர்புடைய விசா பெறுவதில், அரசியல் மற்றும் அரசு சார்பான நபர்களுக்கு விலகு அளிக்க இந்தியா மற்றும் பனாமா நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
 • இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இதில் கையெழுத்திட்டார்.
 • துணைக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் மேற்கொள்ளும் முதல் அரசு முறை பயணத்தில் இரண்டாவது நாடாக பனாமா சென்றுள்ளார். முதல் நாடாக அவர் கவுதமலா சென்றார்

இந்தியா – பெரு நாடுகள் இடையே ஒப்பந்தம்:

 • இந்தியா மற்றும் தென் அமெரிக்க நாடான பெரு இடையே, புதுபிக்கத்தக்க ஆற்றல் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இதனை முன்னின்று மேற்கொண்டார்.

குழு

முரளி மனோகர் ஜோசி குழு:

 • பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மற்றும் கருப்பு பணம் மீட்பு தொடர்பான (RECOVERY OF BLACK MONEY AND PERFORMANCE OF PUBLIC SECTOR BANKS) விரிவான ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை அளிக்க, பாராளுமன்ற உறுப்பினர் முரளி மனோகர் ஜோசி தலைமையில் குழு ஒன்றினை மத்திய அரசு நியமித்துள்ளது

பி.என். ஸ்ரீகிருஷ்ணா குழு:

 • இந்தியாவின் தகவல் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு தொடர்பான் விதிகளை வகுக்க, மத்திய அரசு “நீதிபதி பி.என்.ஸ்ரீ கிருஷ்ணா” தலைமையில் உயர்மட்ட குழுவினை அமைத்துள்ளது. இக்குழு, “எதிர்கால ஆளுமை” (FUTURE OF GOVERNANCE) என்ற தலைப்பல் இதற்கான் விதிகளை வகுக்க உள்ளது

ரந்தீப் குலேரியா தலைமையிலான உயர்மட்ட குழு:

 • சுகாதாரத் துறையில் விரிவாக்க செயக்கூடிய வழிமுறைகளை பரிந்துரைக்க ஏதுவாக, 15-வது நிதிக் கமிசன் ரந்தீப் குலேரியா தலைமையில் உயர்மட்ட குழுவினை அமைத்துள்ளது (THE FIFTEENTH FINANCE COMMISSION HAS CONSTITUTED HIGH LEVEL GROUP TO EXPLORE AND GIVE RECOMMENDATIONS FOR A BALANCED EXPANSION OF THE HEALTH SECTOR. IT WILL BE HEADED BY DR. RANDEEP GULERIA)
 • வளர்ந்து வரும் இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப, சுகாதாரத் துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரை செய்யும்.

குறியீடு

அந்நிய நேரடி முதலீடு நம்பிக்கை குறியீடு:

 • ஏ.டி. கியர்னே சர்வதேச நிறுவனம் “2018 அந்நிய நேரடி முதலீடு நம்பிக்கை குறியீட்டை” (2018 FDI CONFIDENCE INDEX REPORT) வெளியிட்டுள்ளது. அந்நிய நேரடி முதலேட்டு மேற்கொள்ள உகந்த நாடுகளை இப்பட்டியல் குறிக்கிறது
 • முதல் 3 இடங்களில் உள்ள நாடுகள் = அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி
 • இப்படியல் இந்தியா 11-வது இடத்தை பிடித்துள்ளது. சென்ற ஆண்டு 2௦17ல் இந்தியா 8-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 3 இடங்களை இழந்து 11-வது இடத்திற்கு சென்றுள்ளது.
 • ஜி.எஸ்.டி வரி மற்றும் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை காரணமாக இந்த இறக்கம் ஏற்பட்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வணிக நன்னம்பிக்கை குறியீடு:

 • 2018ம் ஆண்டின் முதல் காலாண்டின் அடிப்படையில் “கிரான்ட் தார்டன் சர்வதேச வணிக அறிக்கை” வெளியிடப்பட்டுள்ளது. இது 6-வது “உலகளாவிய வணிக நன்னம்பிக்கை குறியீடு” (GLOBAL BUSINESS OPTIMISM INDEX) ஆகும்
 • முதல் 3 இடங்கள் = ஆஸ்திரியா, பின்லாந்து மற்றும் இந்தோனேசியா
 • 89 புள்ளிகளை பெற்ற இந்தியா, 6-வது இடத்தை பிடித்துள்ளது.

ஆசிய சக்தி குறியீடு – நான்காவது இடத்தில இந்தியா:

 • ஆஸ்த்ரேலியாவை சேர்ந்த லோவி கழகம் வெளியிட்டுள்ள, ஆசிய பசிபிப் பிராந்தியத்தில் உள்ள 25 நாடுகளை உள்ளடக்கிய “ஆசிய சக்தி குறியீட்டு” (ASIA POWER INDEX) பட்டியலில், இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
 • எட்டு துறைகளை கணக்கிட்டு, அதன் படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அவை = பொருளாதார வளம், ராணுவ பலம், அரசியல், பொருளாதார ஒத்துழைப்பு, அமைதி, எதிர்கால ஆற்றல், ராணுவ வலைக்கூட்டு, கலாசாரம்
 • இதில் முதல் இடத்தில அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில சீனாவும் உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம்:

 • “ரெமிட்ஸ்கோப்” என்ற நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து பணம் சம்பாதிப்பவர்கள், தங்கள் தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில், உலகில் அதிக அளவில் பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர்
 • சென்ற ஆண்டு மட்டும் சுமார் 69 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு, வெளிநாட்டு பணம் இந்தியாவிற்கு வந்துள்ளது

உலகின் 6-வது செல்வந்த நாடு – இந்தியா:

 • ஏ.எப்.ஆர் ஆசிய வங்கி வெளியிட்ட, “உலக செல்வ இடப்பெயர்வு ஆய்வு” (AFRASIA BANK GLOBAL WEALTH MIGRATION REVIEW) அறிக்கையின் படி, உலகின் அதிக செல்வம் மிக்க நாடாக அமேரிக்கா உள்ளது
  • உலகின் முதல் செல்வந்த நாடு = அமெரிக்கா (62584 பில்லியன் டாலர்)
  • 2-வது செல்வந்த நாடு = சீனா (24803 பில்லியன் டாலர்)
  • 3-வது செல்வந்த நடு = ஜப்பான் (19522 பில்லியன் டாலர்)
  • 6-வது செல்வந்த நாடு = இந்தியா (8230 பில்லியன் டாலர்)
 • வரும் 2௦27ம் ஆண்டிற்குள், இந்தியா ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பிடிக்கும் எனவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது

உடல்நல அக்கறை மற்றும் தரக் குறியீடு:

 • புகழ் பெற்ற மருத்துவ இதழான, லேன்சென்ட் இதழின் சார்பில் நடத்தப்பட்ட “உடல்நல அக்கறை மற்றும் தரம்” (HEALTHCARE ACCESS AND QUALITY INDEX) தொடர்பான குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 195 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
 • முதல் 3 இடங்கள் = ஐஸ்லாந்து, நார்வே மற்றும் நெதர்லாந்து
 • இந்தியா = இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 145-வது இடத்தில் உள்ளது.
 • கடைசி இடம் = மத்திய ஆப்ரிக்க குடியரசு

சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு கழகத்தின் போட்டித்தன்மை குறியீடு:

 • சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 2018ம் ஆண்டிற்கான பொருளாதார நாடுகளுக்கு இடையிலான போட்டித்தன்மை குறியீடு (2018 IMD’S (INTERNATIONAL MANAGEMENT DEVELOPMENT) COMPETITIVENESS RANKINGS) வெளியிடப்பட்டுள்ளது
 • முதல் 3 இடம் = அமேரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து
 • இந்தியா இப்பட்டியலில் 44-வது இடத்தை பிடித்துள்ளது

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

Leave a Comment