TNPSC Current Affairs in Tamil May 2018-8

நாட்கள்

மே 1 = சர்வதேச தொழிலாளர் தினம்

  • உலகம் முழுவதும் மே 1ம் தேதி, சர்வதேச தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = UNITING WORKERS FOR SOCIAL AND ECONOMIC ADVANCEMENT

மே 3 = பத்திரிக்கை சுதந்திரம் தினம்

  • மே 3 ம் தேதி, உலகம் முழுவதும் “உலக பத்திரிக்கை சுதந்திர தினம்” கடைபிடிக்கப்படுகிறது. பத்திரிக்கை சூத்திரம் மற்றும் அதன் அடிப்படை கொள்கைகளை எடுத்துரைக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = KEEPING POWER IN CHECK : MEDIA, JUSTICE AND THE RULE OF LAW

மே 8 = உலக தாலசீமியா நோய் தினம்:

  • ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8ம் தேதி, உலக தாலசீமியா நோய் (WORLD THALASSEAMIA DAY) தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = THALASSAEMIA PAST, PRESENT AND FUTURE: DOCUMENTING PROGRESS AND PATIENTS’ NEEDS 

மே 11 = தேசிய தொழில்நுட்பத் தினம்:

  • 1998ம் ஆண்டில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை தினத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 11ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = SCIENCE AND TECHNOLOGY FOR A SUSTAINABLE FUTURE

மே 12 = சர்வதேச செவிலியர்கள் தினம்:

  • நவீன செவிலியத்தின் நிறுவனர் எனப்படும், “பிளாரன்ஸ் நைட்டிங்கேள்” (FOUNDER OF MODERN NURSING – FLORENCE NIGHTINGALE), என்பவற்றின் நினைவை போற்றும் விதமாக, அவரின் பிறந்த தினமான மே 12ம் தேதி, உலகம் முழுவதும் “சர்வதேச செவிலியர் தினம்” (INTERNATIONAL NURSES DAY) கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு = NURSES : A VOICE TO LEAD – HEALTH IS A HUMAN RIGHT

மே 15 = சர்வதேச குடும்ப தினம்:

  • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதி, சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு = FAMILIES AND INCLUSIVE SOCIETIES

மே 17 = உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்:

  • உலகம் முழுவதும் மே 17ம் தேதி, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம், இணையதளம் போன்ற தகவல் தொழில்நுட்ப விவரங்களை அனைவரும் அறிந்து, சமூகத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்
  • இந்த ஆண்டிற்கான கரு = ENABLING THE POSITIVE USE OF ARTIFICIAL INTELLIGENCE FOR ALL

மே 18 =  சர்வதேச அருங்காட்சிய தினம்;

  • ஒவ்வெரு ஆண்டும் மே மாதம் 18ம் தேதி, உலக அருங்காட்சிய தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = MUSEUMS AND HYPER COMMUNICATION – NEW APPROACHES AND NEW PUBLIC

மே மாத 2-வது சனிக்கிழமை:

  • ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் 2-வது சனிக்கிழமை, “உலக இடப்பெயர்வு பறவைகள் தினம்” (WORLD MIGRATORY BIRD DAY) உலகும் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = UNIFYING OUR VOICES FOR BIRD CONSERVATION

மே மாத முதல் செவ்வாய்க்கிழமை:

  • ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதலாவது செவ்வாய்க் கிழமை, உலக ஆஸ்துமா தினம் (WORLD ASTHMA DAY) கடைப்பிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = NEVER TOO EARLY, NEVER TOO LATE. IT‘S ALWAYS THE RIGHT TIME TO ADDRESS AIRWAYS DISEASE

புத்தகம்

  • பாகிர் ஹசைன் என்பவர் எழுதிய, THE RED FORT DECLARATION – THE LEGACY 20 YEARS என்ற புத்தகம் இந்திய – தென்னாப்ரிக்க வணிக மாநாட்டில் வெளியிடப்பட்டது
  • முன்னாள் லெப்டினன்ட் ஜெனெரல் கியான் பூசன் அவர்கள் ACROSS THE BENCH – INSIGHT INTO THE INDIAN MILITARY JUDICIAL SYSTEM என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்
  • புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்பட ஆசிரியர், “லத்திகா நாத்”, தனது “HIDDEN INDIA” என்ற புத்தகத்தை, யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் வெளியிட்டுள்ளார்
  • ராஜ்யசபா உறுப்பினரான “அபிசேக் மானு சிங்வி”, “STRAIGHT TALK” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்

இறப்பு

கோட்டயம் புஷ்பநாத் காலமானார்:

  • மலையாள துப்பறியும் நாவல் ஆசிரியரான, “கோட்டயம் புஷ்பநாத்”, காலமானார்.
  • புகழ்பெற்ற பல துப்பறியும் நாவல்களை படைத்துள்ளார் இவர். இவரின் சில நாவல்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அசோக் மித்ரா காலமானார்:

  • மேற்குவங்க மாநிலத்தின் பிரபல எழுத்தாளரும், அம்மாநிலத்தின் முதல் நிதி அமைச்சராக இருந்தவருமான அசோக் மித்ரா காலமானார்

நிலவில் நான்காவதாக நடந்த ஆலன் பீன் காலமானார்:

  • நிலவில் நான்காவதாக காலடி எடுத்து வைத்து நடந்த அமெரிக்காவின் “ஆலன் பீன்”, டெக்சாஸ் மாகாணத்தில் காலமானார்

 இடங்கள்

ராணுவ அமைச்சர்கள் கூட்டம்:

  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் (SHANGHAI COOPERATION ORGANISATION DEFENCE MINISTERS MEETING) கூட்டம், சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது
  • இந்தியாவின் சார்பின், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டார்

15-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் (15TH PRAVASI BHRATIYA DIWAS):

  • வருகின்ற 2019ம் ஆண்டு, ஜனவரி மாதம் 15-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் (15TH PRAVASI BHARATIYA DIWAS), உத்திரப் பிரதேச மாநிலத்தின் “வாரணாசி”ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிகழ்ச்சியின் கரு = ROLE OF INDIAN DIASPORA IN BUILDING A NEW INDIA
  • சிறப்பு விருந்தினர் = மொருசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்
  • வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் ஜனவரி மாதம் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது
  • 1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி, தேசத் தந்தை மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வந்ததடைந்தை சிறப்பிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப் படுகிறது.
  • 14-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம், பெங்களூரு நகரில் நடைபெற்றது.

ஆப்ரிக்க நாடுகளுக்கான 3-வது ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பயிற்சி:

  • ஐக்கிய நாடுகளின் அமைதி ஏற்படுத்தும் படையில் உள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கான 3-வது ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பயிற்சி, புது தில்லியில் நடைபெற்றது (3RD UNITED NATIONS PEACEKEEPING COURSE FOR AFRICANS PARTNERS (UNPCAP))
  • இந்தியாவின் சார்பில், அமெரிக்க உதவியுடன் இப்பயிற்சி வழங்கப்பட்டது

12-வது சார்க் நிதி அமைச்சர்கள் கூட்டம்:

  • சார்க் அமைப்பை சேர்ந்த நிதி அமைச்சர்கள் பங்குபெற்ற 12-வது கூட்டம் (12TH SAARC FINANCE MINISTERS MEET), பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றது
  • இக்கூட்டத்தை நேபாள நாட்டின் நிதி அமைச்சர் யுபராஜ் கத்திவடா தலைமை ஏற்று நடத்தினார்

சர்வதேச குழந்தைகள் நாடக அரங்கு திருவிழா:

  • சர்வதேச குழந்தைகள் நாடக அரங்கு திருவிழா (INTERNATIONAL CHILDRENS THEATRE FESTIVAL), வரும் ஜூன் மாதம் மேற்குவங்கத்தின் கொல்கத்தா நகரில் நடிபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • எட்டு நாடுகளை சேர்ந்த பல்வேறு குழுக்கள் இதில் பங்கு கொள்கின்றனர்

நான்காவது சேவைகள் துறையின் கண்காட்சி:

  • சேவைத் துறையை இந்தியாவில் வளர்ச்சி பேரவைக்கும் வகையில், மும்பை நகரில் “நான்காவது சேவை துறை கண்காட்சி” (GLOBAL EXHIBHITION ON SERVICES – 2018), குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது

ஆயுஷ்மான் பாரத்:

  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதல் வட இந்திய கருத்தரங்க கூட்டம் (AYUSHMAN BHARAT NORTHERN REGIONS FIRST WORKSHOP), ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்றது
  • ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ராஸ்ட்ரிய ஸ்வஸ்திய சுரக்ஸா இயக்கம், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நடைமுறை படுத்தப்படும்

5-வது கலிங்கா இலக்கிய விழா:

  • ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் 5-வது கலிங்கா இலக்கிய திருவிழா (5TH EDITION OF KALINGA LITERARY FESTIVAL 2018) நடைபெற்றது
  • இலக்கியத்தில் சமத்துவம், மனிதநேயம் போன்றவற்றை போற்றுவது தொடர்பாக விழாவில் விவாதிக்கப்பட்டது

2018 ஸ்மார்ட் நகர இந்திய கண்காட்சி:

  • மூன்று நாட்கள் நடைபெற்ற “ஸ்மார்ட் நகரங்கள் இந்திய 2018 கண்காட்சி” (SMART CITIES INDIA 2018 EXPO), புது தில்லியில் நடைபெற்றது.
  • கண்காட்சியில் கட்டிடங்கள், சூரிய ஆற்றல், போக்குவரத்து, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் தண்ணீர் தொடர்பான ஐந்து பிரிவுகளில் காட்சிகள் இருந்தன.

ஆசியான் இந்திய திரைப்பட திருவிழா:

  • ஆசியான் இந்திய திரைப்பட திருவிழா, புது தில்லியில் நடைபெற்றது (ASEAN INDIA FILM FESTIVAL 2018)
  • 6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 11 நாடுகளின் படங்கள் திரையிடப்பட உள்ளன
  • இவ்விழாவின் மையக்கரு = FRIENDSHIP THROUGH FILMS
  • ஆசியான் அமைப்பு மற்றும் இந்தியா இடையேயான 25 ஆண்டுகால உறவுகளை எடுத்துரைக்கும் வகயில் இவ்விழா நடத்தப்படுகிறது

புவனேஸ்வர் நகரில் மேக தொழில்நுட்ப தேசிய தகவல் மையம்:

  • ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில், இந்திய தேசிய தகவலியல் மையத்தின் சார்பில் “மேக தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய தகவல் மையம்” (CLOUD ENABLED NATIONAL DATA CENTRE) அமைக்கப்படவுள்ளது
  • இது “இந்தியாவின் நான்காவது தேசிய தகவல் மையம்” (4TH DATA CENTRE IN INDIA) ஆகும். முதல் மூன்று மையங்கள் புது தில்லி, ஹைதராபாத் மற்றும் புனே நகரங்களில் உள்ளது

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.