TNPSC Current Affairs in Tamil May 2018-9

கருத்தரங்கம், மாநாடு

பேரிடர் ஆபத்து தணிப்பு தரவுத்தள கருத்தரங்கம்:

  • இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம், புது தில்லியில், “பேரிடர் ஆபத்து தணிப்பு தரவுத் தளம்” (DISASTER RISK REDUCTION DATABASE) என்ற பெயரில் 2 நாள் கருத்தரங்கை நடத்தியது
  • யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நிதியம், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இது நடத்தப்பட்டது

15-வது ஆசிய ஊடக உச்சி மாநாடு:

  • 15-வது ஆசிய ஊடக உச்சி மாநாடு (15TH ASIA MEDIA SUMMIT), இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டை, “ஒலிபரப்பு மேம்பாட்டிற்கான ஆசிய – பசிபிக் கழகம்” முன்னின்று நடத்தியது
  • இம்மாநாட்டின் கரு = TELLING OUR STORIES – ASIA AND MORE

கப்பல்படை தளபதிகள் கருத்தரங்கம்:

  • இந்திய கப்பற்படை தளபதிகள் கலந்துக்கொண்ட (NAVAL COMMANDER’S CONFRENCE) கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது. இதற்கு மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்
  • இந்திய கடல்சார் பாதுகாப்பு, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் போன்றவை இதில் விவாதிக்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம்:

  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின், சுற்றுலாத் துறை அமைச்சர்கள் (SHANGHAI COOPERATION ORGANISATION TOURISM MINSTERS CONFERENCE) பங்குபெற்ற கூட்டம், சீனாவுன் வுஹான் நகரில் நடைபெற்றது. இக்கூட்டமைப்பு உருவான பின்பு கூட்டப்படும் முதல் சுற்றுலா தொடர்பான கூட்டம் இதுவாகும்
  • இந்தியாவின் சார்பில், கே.ஜெ.அல்போன்ஸ் பங்கேற்றார்.

எதிர்கால, அமைதி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பிற்கான 4-வது வட்டார கருத்தரங்கம்:

  • இந்திய நிதி அமைச்சகத்தின் சார்பில், “எதிர்கால, அமைதி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பிற்கான 4-வது வட்டார கருத்தரங்கம்” (4TH REGIONAL CONFERENCE ON FUTURISTIC, RESILENT AND DIGITAL INFRASTRUCTURE), பெங்களூரு நகரில் நடைபெற்றது
  • டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை விவாதிக்கப்பட்டது.

2018 உலக ரோபோ கருத்தரங்கம்:

  • 2018ம் ஆண்டிற்கான உலக ரோபோ கருத்தரங்கம் (2018 WORLD ROBOT CONFERENCE), சீனாவின் பீஜிங் நகரில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 5௦௦௦௦ பேர் இதில் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 பிம்ஸ்டெக் மாநாடு:

  • 2018ம் ஆண்டின் “பிம்ஸ்டெக்” அமைப்பின் மாநாடு, நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்
  • பிம்ஸ்டெக் அமைப்பு, “பாங்காக் பிரகடனத்தின்” மூலம் 1997ம் ஆண்டு ஜூன் ௬ தேதி உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ளது
  • பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள 7 நாடுகள் = இந்தியா, நேபாளம், வங்கதேசம், பூட்டான், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து

19-வது டூன்ஸ் அனிமேசன் மாஸ்டர்ஸ் மாநாடு:

  • 19-வது டூன்ஸ் அனிமேசன் மாஸ்டர்ஸ் மாநாடு 2018 (19TH EDITION OF TOONZ ANIMATION MASTERS SUMMIT 2018), கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
  • அனிமேசன் துறையை சேர்ந்த பல்வேறு நிபுணர்கள், கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.

வட்டார வளர்ச்சிக்கான இயற்பிய மற்றும் சமூக கட்டமைப்பு கருத்தரங்கம்:

  • வட்டார வளர்ச்சிக்கான இயற்பிய மற்றும் சமூக கட்டமைப்பு கருத்தரங்கம் (REGIONAL CONFERENCE ON “PHYSICAL AND SOCIAL INFRASTRUCTURE FOR REGIONAL DEVELOPMENT”) அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் நடைபெற்றது
  • ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் சார்பில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது

இஸ்லாமிய கூட்டமைப்பின் அவசர மாநாடு:

  • 57 உறுப்பு நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு (ORGANIZATION OF ISLAMIC COOPERATION (OIC) HELD EXTRAORDINARY SUMMIT IN ISTANBUL, TURKEY) நாடுகளின் சார்பில், அவசரக் கூட்டம் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது
  • பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைள் தொடர்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டது

5-வது இந்திய – சி.எல்.எம்.வி வணிகக் கூடுகை:

  • 5-வது இந்திய – சி.எல்.எம்.வி (கம்போடியா, லாவோஸ், மியான்மாத் மற்றும் வியட்நாம்) தொழிலக கூடுகை, கம்போடியா நாட்டின் ப்னோம் பெண் நகரில் நடைபெற்றது (THE 5TH INDIA-CLMV (CAMBODIA, LAO PDR, MYANMAR AND VIETNAM) BUSINESS CONCLAVE WAS HELD AT PHNOM PENH, CAMBODIA)
  • இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் இதில் கலந்துக் கொண்டார்

அறிவியல், தொழில்நுட்பம்

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு நாசாவின் “இன்சைட்” செயற்கைக்கோள்:

  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தின் உள்பகுதிகளை ஆராய, “இன்சைட்” (INSIGHT ) என்ற புதிய செயற்கைக்கோளினை அனுப்பி உள்ளது
  • இன்சைட் (INSIGHT ) =  INTERIOR EXPLORATION USING SEISMIC INVESTIGATIONS, GEODESY AND HEAT TRANSPORT
  • கலிபோர்னியாவில் இருந்து அட்லஸ் – 5 என்ற ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது
  • மேலும் இந்த ராக்கெட்டில் 2 சிறு விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு “மார்கோ” (MARCO – MARS CUBE ONE) எனப் பெயரிடப்பட்டுள்ளது

மாசு பாதிப்பு மிக்க 14 இந்திய நகரங்கள்:

  • உலக சுகாதார நிறுவனம், வெளியிட்டுள்ள உலகின் மோசமான மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் 103 சேர்ந்த 3௦௦௦ நகரங்கள் இடம்பெற்றுள்ளது.
  • இதன் முதல் 2௦ மோசமாக காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் 14 நகரங்கள் உள்ளன. டெல்லி, வாரணாசி, கான்பூர், பரிதாபாத், கயா, பாட்னா போன்ற நகரங்கள் உள்ளன
  • இதில் இந்திய அளவில் கான்பூர் முதல் இடத்தில அதிக பாதிப்பு உள்ள நகராக அறிவிக்கப்பட்டுள்ளது

“லெப்டோஸ்பைரோசிஸ்”:

  • குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் உள்ள உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள், “லெப்டோஸ்பைரோசிஸ்” நோயினை குணப்படுத்தக்கூடிய முக்கிய “பெப்டைட்” புரதத்தை கண்டுபிடித்துள்ளனர்
  • லெப்டோஸ்பைரோசிஸ் நோய், மனிதர்கள் மற்றும் விலங்கினை தாக்கும் பாக்டீரியா நோயாகும். இது “லெப்டோஸ்பைரா” என்ற பாக்டீரியாவால் உருவாகப்படுகிறது. இந்நோய்க்கு இதுவரை மருந்து இல்லை.

கவசவால் பாம்பு:

  • விஞ்ஞானிகள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து புதிய வகை கவசவால் பாம்பு இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இப்பாம்பிற்கு “பூபதி கவசவால் பாம்பு” (BHUPATHY’S SHIELDTAIL SNAKE) எனப் பெயரிட்டுள்ளனர்
  • இப்பாம்பின் அறிவியல் பெயர் = UROPELTIS BHUPATHYI
  • பாம்புகளை பற்றி பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்ட சுப்பிரமணியன் பூபதி என்பவரை சிறப்பிக்கும் வகையில், இப்பாம்பிற்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது.
  • இப்பாம்பு இனம் தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான ஆணைக்கட்டி பகுதியில் மட்டுமே உள்ளன.

கூகுல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு இயங்கு தளம்:

  • கூகுல் நிறுவனம், செல்போன்களுக்கான புதிய இயங்கு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர், “ப்ரில்லோ” (BRILLO) ஆகும். இது ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது
  • ஆண்ட்ராய்டு வகை செயலிகளுக்கு தேவையான உதவியாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

செம்மறியாட்டு இனப்பெருக்கத்திற்கு புதிய முறை:

  • ராஜஸ்தான் மாநிலத்தின் அவிகாநகரில் உள்ள, “மத்திய ஆடு மற்றும் கம்பிளி ஆராய்ச்சி மையத்தின்” (CSWRI = CENTRAL SHEEP AND WOOL RESEARCH INSTITUTE, AVIKANAGAR, RAJASTHAN) விஞ்ஞானிகள், செயற்கை முறை கருத்தரித்தலில் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர். “லேப்ராஸ்கோபிக்” முறையில் ஆட்டின் கருப்பையில் லேப்ராஸ்கோபி மூலம், விந்துவை உட்செலுத்தி, இனப்பெருக்கம் செய்தல் ஆகும்
  • இதன் மூல, ஆடுகளிளின் எண்ணிக்கையை எளிதாக திகரிக்க முடியும். ஒரு முறை வெளியேறும் விந்துவின் மூலம், சுமார் நாற்பது ஆடுகளுக்கு சினை முட்டைகள் செலுத்தி கருத்தரிக்க வைக்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரதம் இருப்பதால் ஸ்டெம் செல்கள், மறு உற்பத்தி ஆகின்றன:

  • அமெரிக்காவை சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், 24 மணிநேரம் உண்ணா விரதம் இருப்பதால், அவர்களின் சிறுகுடலில் உள்ள ஸ்டெம் செல்கள் தானாகவே (24-HOUR FASTING CAN DRAMATICALLY IMPROVE STEM CELLS’ ABILITY TO REGENERATE) மறு உற்பத்தி ஆகின்றன என ஆராய்ச்சியின் முடிவில் அறிவித்துள்ளனர்
  • இது எலிகளின் மூலம் மேற்கொண்ட சொதனியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் அணு கடிகாரம்:

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, வழிகாட்டும் செயற்கைகோளிற்காக (NAVIGATION SATELLITES) புதிய அணு கடிகாரத்தை (ATOMIC CLOCK) உருவாக்கி உள்ளது. இது இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டும்
  • இதனை இஸ்ரோ மையத்தின் துணை நிறுவனமான, அகமதாபாத்தை நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “விண்வெளி பயன்பாட்டு மையம்” (AHMEDABAD BASED SPACE APPLICATIONS CENTRE (SAC)) உருவாக்கியது.

தாகிர் ஹுசைன்:

  • உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சிறுநீரகத்தை காப்பது தொடர்பான ஆராய்ச்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக, அமெரிக்காவின் ஹவுஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவழி பேராசிரியர் தாகிர் ஹுசைன் அவர்களுக்கு, 1.6 மில்லியன் டாலர் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது

ஹைட்ரசைன் (HYDRAZINE):

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் “ஹைட்ரசைன்” (CONVENTIONAL HYDRAZINE ROCKET FUEL, A HIGHLY TOXIC AND CARCINOGENIC CHEMICAL) என்னும் திரவ எரிபொருளை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு மாற்றாக பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிபொருளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்

ஹைட்ராக்சில் அம்மோனியம் நைட்ரேட்:

  • திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ திரவ எரிபொருள் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், சுற்றுச்சூளைக்கு மாசு ஏற்படுத்தும், “ஹைட்ரசைன்” (HYDRAZINE) என்னும் எரிபொருளுக்கு மாற்றாக மாசில்லா திரவ எரிபொருளை உருவாக்கி உள்ளனர்.
  • ஹைட்ராக்சில் அம்மோனியம் நைட்ரேட் (HAN – HYDROXYL AMMONIUM NITRATE, A ECOFRIENDLY PROPELLANT TO REPLACE HYRDASINE) என்னும் இந்த எரிபொருள், அதிகளவு பாதிப்பில்லா வகையில் ஆற்றலை அளிக்க வல்லது.

நீரில் இருந்து ஆர்செனிக் பிரிக்க புதிய கருவி:

  • கொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக ஆராய்ச்சியாளர்கள், நீரில் கலந்திருக்கும் ஆர்செனிக் வேதியலை பிரித்து எடுத்து, தூய குடிநீரை உருவாக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்
  • இதற்கு ARSENIC SENSOR AND REMOVAL MEDIA என்ற கருவியை அவர்கள் உருவாக்கி உள்ளனர்

மங்களூரு குறுகிய வாய் தவளை:

  • ஆராய்ச்சியாளர்கள், கர்நாடக மாநிலத்தின் கடற்கரை பகுதியில் புதிய வகை தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
  • இதற்கு “MICROHYLA KODIAL அல்லது MANGALURU NARROW-MOUTHED FROG எனப் பெயரிட்டுள்ளனர்.
  • KODIAL என்ற கொங்கனி மொழி வார்த்தை மங்களூரு நகரை குறிக்கும்.

நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய செயற்கைக்கோள் – சீனா அனுப்பியது:

  • நிலவின் மறு பக்கமான இருண்ட பக்கத்தை ஆராய, சீனா QUEQIAO (MAGPIE BRIDGE) என்ற செயற்கைக்கோளினை ஏவியுள்ளது. நிலவின் மீதான தனது ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு சீனா சென்றுள்ளது

புவி நீர் சுழற்சி மற்றும் பணி உருகுதல் – ஆராய செயற்கைக்கோள்;

  • இலான் முஸ்க் தலைமையிலான “ஸ்பேஸ்-எக்ஸ்” நிறுவனம், நாசாவின் இரட்டை செயற்கைக்கோளினை (GRACE மற்றும் FO) வெற்றிகரமாக ஏவியுள்ளது.
  • GRACE – FO (GRAVITY RECOVERY AND CLIMATE EXPERIMENT FOLLOW ON) எனப்படும் இந்த செயற்கைக்கோள், புவியின் நீர் சுழற்சி மற்றும் பணி உருகுதல் (EARTH’S WATER CYCLE I.E. WATER MOVEMENT AND ICEMELT) தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளும்

மின்னலை முன்னரே அறிவிக்க மொபைல் ஆப்:

  • ஓடிஸா மாநில அரசு, மின்னலை முன்னரே கணித்து மக்களுக்கு அறிவிக்கும் புதிய சிறப்பு மொபைல் அப்ளிகேசன் ஒன்றினை அறிமுகம்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளது (THE ODISHA GOVERNMENT HAS DECIDED TO INTRODUCE A SPECIAL MOBILE APPLICATION TO PROVIDE ADVANCE INFORMATION ON LIGHTNING)
  • மின்னல் ஏற்படக்கூடிய இடத்தில இருக்கும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரை இது எச்சரிக்கும்

காந்தத் திறனை கொண்டுள்ள உலகின் நான்காவது தனிமம்:

  • மின்னெசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், “ருத்தேனியம்” (RUTHENIUM (Ru)) என்ற புதிய தனிமத்தை கண்டுபிடித்துள்ளனர். அரை வெப்ப நிலையில் இது காந்தத் தன்மையை வெளிப்படுத்துகிறது
  • ருத்தேனியத்தின் அணு எண் = 44
  • ருத்தேனியத்தை, ரசியாவை சேர்ந்த கார்ல் எர்னஸ்ட் என்பவர் 1844ம் ஆண்டு கண்டுபிடித்தார்
  • இது வரை 3 தனிமங்களே அரை வெப்ப நிலையில் காந்தத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன = இரும்பு (IRON (Fe)), கோபால்ட் (COBALT (Co)) மற்றும் நிக்கல் (NICKEL (Ni)) ஆகும்

விளையாட்டு

உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் அறிக்கை:

  • உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் அறிக்கையின் படி, ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய நாடுகளில், தொடர்ந்து ரசியா முதல் இடத்தில உள்ளது
  • இந்தியா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூன்றாவது இடத்தில இருந்தது, தற்போது இந்த வருடம் 6-வது இடத்திற்கு சென்றுள்ளது.

1௦மீ துப்பாக்கி சுடுதலில் உலகின் முதல்நிலை வீரர் – ஷாசர் ரிஸ்வி:

  • சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, இந்திய வீரர் ஷாசர் ரிஸ்வி, 1௦மீ துப்பாக்கி சுடுதலில், உலகின் முதல் இடத்தை பிடித்துள்ளார்
  • இந்திய விமானப்படை வீரரான இவர், கடந்த மார்ச் மாதம் உலக சாதனை படைத்தவர் ஆவார்.

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்சிப் போட்டிகள்:

  • தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்சிப் போட்டிகள், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 2௦ தங்கம், 22 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது.
  • தெற்காசிய தடகள போட்டிகள் அளவில் புத்தாக 5 சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

லிபரேசன் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி:

  • செக் குடியரசு நாட்டின் பில்சன் நகரில் நடைபெற்ற லிபரேசன் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பிய்னசிப் போட்டிகளின் (LIBERATION INTERNATIONAL SHOOTING COMPETITION) கலப்பு இரட்டையர் பிரிவின் 1௦மீ போட்டியில், இந்தியாவின் ககன் நரங் மற்றும் பூஜா கட்கர் இணை, வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • மேலும் இந்தியாவின் மிஹிகா பூரே, துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்

அஜெர்பெய்ஜான் பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் போட்டி:

  • அஜெர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்ற பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் (2018 AJERBAIJAN FORMUA 1 GRAND PRIX TOURNAMENT) கார் பந்தய போட்டியில், இங்கிலாந்தை சேர்ந்த மெர்சிடிஸ் அணி வீரர், லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

அபுதாபி ஸ்குவாஷ் ஓபன் போட்டி;

  • அபுதாபியில் நடைபெற்ற ஸ்குவாஷ் ஓபன் சாம்பியன்சிப் (ABUDHABI OPEN SQUASH TITLE) போட்டியில், இந்தியாவின் ரமித் தாண்டன், உலகின் முதல்நிலை வீரரான எகிப்தின் ஓமர் அப்தெல் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்.

16 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து கோப்பை:

  • இந்தியா, செர்பியா, தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து கோப்பை போட்டிகள், செர்பியாவில் நடைபெற்றது.
  • இதில் இந்திய இளம் அணி, இறுதி ஆட்டத்தில் தஜிகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

2018 இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள்:

  • 2018 இத்தாலியன் ஓபன் டென்னிஸ் (2018 ITALIAN OPEN TENNIS TOURNAMENT) போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், ஸ்பெயினின் ரபேல் நடால், அலெக்சாண்டர் என்பவரி வீழ்த்தி, 8-வது முறையாக சாம்பியன் பட்டதை கைப்பற்றினார். இதன் மூலம், ரபேல் நடால் மீண்டும் உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்

5-வது மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள்:

  • தென் கொரியாவில் நடைபெற்ற 5-வது ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளின் (5TH WOMEN’S ASIAN CHAMPIONS TROPHY 2018) இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவிடம் தோல்வியை தழுவியது. தென்கொரியா அணி 1-௦ என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

3-வது கொல்கத்தா ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் சதுரங்க போட்டி:

  • மேற்குவங்கத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற்ற 3-வது கொல்கத்தா ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் சதுரங்க சாம்பியன்சிப் (3RD KOLKATTA OPEN INTERNATIONAL GRANDMASTERS CHESS TOURNAMENT) போட்டியில், சென்னையை சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன், வெற்றி பெற்றார்

டிவில்லியர்ஸ் – ஓய்வு:

  • தென்னாப்ரிக்காவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
  • இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக விரைவாக 5௦, 1௦௦ மற்றும் 15௦ ரன்களை கடந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
  • இவர் 16 பந்துகளில் மிகவேகமான அரை சதமும், 31 பந்துகளில் மிகவேகமான சதமும், 64 பந்துகளில் மிகவேக 15௦ ரன்களை அடித்து, மூன்று உலக சாதனைக்கு சொந்தக்காரர்

3-வது தேசிய கண் பார்வையற்றோர் கால்பந்து போட்டிகள்:

  • 3-வது தேசிய கண் பார்வையற்றோர் கால்பந்து போட்டிகள் (3RD EDITION OF NATIONAL BLIND FOOTBAAL TOURNAMENT) கேரளாவின் கொச்சி நகரில் நடைபெற்றது
  • இறுதி ஆட்டத்தில் கொச்சி அணி, பெங்களூரு அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது

பாட்மிண்டன் – உபேர் கோப்பை:

  • பெண்கள் உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டிகள் எனப்படும் “உபேர் கோப்பை” (2018 UBER CUP, THE WOMEN’S WORLD BADMINTON CHAMPIONSHIP) போட்டிகள் 2018ம் ஆண்டின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணி, தாய்லாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது. 1981ம் ஆண்டிற்கு பிராக் ஜப்பான் அணி தற்போது தான் இக்கோப்பையை வேண்ருலல்து குறிப்பிடத்தக்கது`

ஐ.பி.எல் 2018 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்;

  • 2018ம் ஆண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது
  • இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை, சென்னை அணியின் சேன் வாட்சன் வென்றார்.

விகாஸ் கவுடா ஓய்வு பெறுகிறார்:

  • காமன்வெல்த் விளையட்டு போட்டிகளில் ஒன்றான தட்டு எறிதலில் தங்கம் வென்றுள்ள ஒரே இந்திய வீரரான விகாஸ் கவுடா, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

TNPSC Current Affairs in Tamil May 2018-1

TNPSC Current Affairs in Tamil May 2018-2

TNPSC Current Affairs in Tamil May 2018-2-2

TNPSC Current Affairs in Tamil May 2018-3

TNPSC Current Affairs in Tamil May 2018-4

TNPSC Current Affairs in Tamil May 2018-5

TNPSC Current Affairs in Tamil May 2018-5-2

TNPSC Current Affairs in Tamil May 2018-6

TNPSC Current Affairs in Tamil May 2018-7

TNPSC Current Affairs in Tamil May 2018-8

TNPSC Current Affairs in Tamil May 2018-9

TNPSC Current Affairs in Tamil May 2018-10

TNPSC Current Affairs in Tamil May 2018-10-2

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.